Sunday, August 31, 2008

எப்.எம்., ரேடியோ வருவாய் அதிகரிப்பு

இந்தியாவில் எப்.எம்., ரேடியோ தொழிலின் வருவாய், கடந்தாண்டை விட அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் வருவாய், 800 கோடி ரூபாயை எட்டி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எப்.எம்., ரேடியோ ஒலிபரப்புக்கு தனியார் நிறுவனங்களை அனுமதித்ததன் மூலம், இந்தியாவில் எப்.எம்., ரேடியோ பிரபலமடைந்துள்ளது. அதன் வருவாயும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் இத்தொழிலின் வருவாய், 550 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.350 கோடியாக இருந் தது. இந்த ஆண்டு இறுதிக்குள் வருவாய் 800 கோடி ரூபாயை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, அகில இந்திய ரேடியோ ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் அபூர்வா கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் 30 நகரங்களில் மட்டுமே எப்.எம்., ரேடியோ ஒலிபரப்பானது. தற்போது, 91 நகரங்களில் ஒலிபரப்பாகிறது. நாடு முழுவதும் 65 சதவீத நகர்ப்புறங்களில் இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 'டிவி'யை விட எப்.எம்., ரேடியோ நிகழ்ச்சிகள் அதிக மக்களை சென்றடைகிறது. 'டிவி' ஒளிபரப்பை விட இதற்கு செலவு குறைவு. தற்போது, எப்.எம்., ரேடியோ, நகர்ப்புற மக்களின் மிக முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக உருவெடுத்துள்ளது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும்போதுகூட, மொபைல் போன் மூலமாக எப்.எம்., ரேடியோவை கேட்க முடிகிறது. 16 சதவீதம் பேர் மொபைல் போன் மூலமாக எப்.எம்., ஒலிபரப்பை கேட்கின்றனர்.இவ்வாறு அபூர்வா கூறினார்.
நன்றி : தினமலர்


சாண் ஏறினால் முழம் சறுக்கும் பங்குச் சந்தையில் போடுவீர் மனக்கணக்கு; தவிர்ப்பீர் மனக்குழப்பம் -சேதுராமன் சாத்தப்பன்-


''எங்கே போகும் இந்த பாதை' என்று 'காசி' விக்ரம் பாணியில் சோக ராகம் பாடிக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்கள், செய்வதறியாது முடங் கிப் போய் உள்ளனர். நோய்வாய்ப் பட்டவர்கள் எப்படி உடல் நிலையில் ஏற்படும் சிறிய மாற்றத்திற்கெல்லாம் பயப்படுவார்களோ, அப்படி பயத்திலே பங்குச் சந்தை கீழே விழுந்து கொண்டிருக்கிறது. வியாழனன்று சந்தை இவ்வளவு கீழே விழுந்ததற்கு காரணம், தொடர்ந்து சில வாரங்களாக பாடாய்படுத்தி வரும் பணவீக்கம், இன்றைக்கு எப்படி இருக்குமோ என்ற பயம் தான். மேலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டு ஜி.டி.பி., எவ்வளவு என்ற அறிக்கை எப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் ஒருவித பயத்துடன் அணுக வைத்தது. நினைப்பு தான் பொழப்பைக் கெடுத்தது எனலாம். வியாழனன்று முடிவாக சந்தை 248 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தது. கிட்டத்தட்ட 14 ஆயிரம் புள்ளிகள் என்ற விளிம்பைத் தொட்டு நின்றது.வியாழனன்று மாலை சந்தை நேரத்திற்கு மேல் வெளியான பணவீக்கம் குறைந்து இருந்தது. வெள்ளியன்று வெளியான அறிக்கையில் ஜி.டி.பி., சதவீதம் 7.9 என்ற அளவில் இருந்தது போன்றவற்றால், சந்தையில் அபரிமிதமான ஏற்றம் இருந்தது. பணவீக்கம் கூடும் போது எந்த பங்குகள் கீழே விழுந்தனவோ அவையெல்லாம் மேலே சென்றன. குறிப்பாக வங்கித் துறை, கட்டுமானத் துறை ஆகியவை ஆகும். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 516 புள்ளிகள் கூடி 14,564 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 146 புள்ளிகள் கூடி 4,360 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
ரோல் ஓவர் எப்படி?: நிப்டியில் ஆகஸ்ட் மாத ரோல் ஓவர் 75.3 சதவீத அளவில் இருந்தது. இது, கடந்த மூன்று மாத சராசரி அளவான 67.2 சதவீதத்தை விட அதிகமாகும்.இந்த வாரத்தின் பெரிய ஷாப்பிங் லிஸ்ட்: நாம் மாதக் கடைசியானால், சம்பளம் வாங்கியதும் லிஸ்ட் போட்டுக் கொண்டு ஷாப்பிங் செய்யச் செல்வோம். அதுபோல, இந்திய கம்பெனிகளும் தங்கள் கையில் அதிகமான கையிருப் புப் பணங்கள் இருப்பதாலும், உலகளவில் சந்தைகள் குறைந்து இருப்பதாலும், இது தான் சமயம் எனக் கருதி ஷாப்பிங்குக்கு கிளம்பியுள்ளன. இன்போசிஸ் கம்பெனி, லண்டனைச் சேர்ந்த அக்சான் என்ற கம்பெனியின் பங்குகளை 3,283 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் சாப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம், கையிருப்புப் பணம் அதிகமாக உள்ள கம்பெனிகள் எனக் கூறப்படுவர். அதாவது, அவர்கள் வங்கிகளிடம் கடன்கள் வாங்கமாட்டர். தங்களிடம் உள்ள உபரிப் பணங்களை வங்கிகளிடம் டெபாசிட் தான் போட்டு வைப்பர். அதுபோல் உபரிப்பணமாக, இன்போசிஸ் தற் போது 7,480 கோடி ரூபாய் வைத் துள்ளது. அது தான் ஒரு ஷாப்பிங் சென்று வரலாமே என்று கிளம்பி, 3,823 கோடி ரூபாய்க்கு அக்சானை வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளது.இதுபோல, ஓ.என்.ஜி.சி., கம்பெனியும், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய கம்பெனியை பில்லியன் டாலருக்கு மேல் கொடுத்து வாங்கவுள்ளது. உலகளவில் பல இடங்களிலும் கம்பெனிகளை இந்தியக் கம்பெனிகள் வாங்குவது, வருங்காலங்களில் பெரிய அளவில் வருவதற்கான அறிகுறிகளே ஆகும்.' பிக்சட் மெச்சூரிட்டி பிளான்கள்': பங்குச் சந்தை மேலும், கீழுமாக இருக்கிறது. எப்படி போகும் என்று யாராலும் சொல்ல முடியாத நிலை. அதே சமயம், வங்கிகள் 10 சதவீதம் வரை வட்டி கொடுக்கின்றன. முதலீட்டாளர்கள் எல்லாம், அதை விட அதிகமாக எங்கு கிடைக்கும் என்பது தான். பல மியூச்சுவல் பண்டுகள் தங்களது பிக்சட் மெச்சூரிட்டி பிளான்கள் மூலம் அதிக வட்டிகள் கொடுத்து வருகின்றன. ஸ்டேட் பாங்க் 90 நாட்கள் பிக்சட் மெச்சூரிட்டி பிளானுக்கு 11.5 சதவீத வட்டி கொடுப்பதாக அறிவித்துள்ளது. இது போன்ற திட்டங்கள் ஒரு வார காலம் மட்டுமே இருக்கும். பந்திக்கு முந்தியவர்களுக்கு தான் விருந்து என்பது போலத்தான் இது போன்ற திட்டங்களும். வருமானம் எங்கு கூடுதலாகக் கிடைக்கிறதோ அங்கு செல்வது தான் இயற்கை. இது போல திட்டங்களில் தற்போது, ரூ.1 லட்சம் கோடிக்கு மேலாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளதாக தெரிய வருகிறது. முதலீட்டாளர்கள் உஷாரானவர்கள் தான். இதன் காரணமாக பலர், தங்கள் 'டிமேட் கணக்கு'களில் உள்ள தங்கள் பங்குகளை விற்று விட்டு, வங்கிகள் பக்கம் சாயத் துவங்கி விட்டனர்.
பங்குச் சந்தையில் நிலைமை சரியான பிறகு திரும்பி வரலாம் என பலரும் நினைக்கத் துவங்கி விட்டனர். ஆம். உண்மை தான் 'சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.'இப்போதைக்கு பணம் முதலீடு செய்யாமல், வெறுமனே பேப்பரில் மட்டும் பங்குகள் வாங்குவது போலவும், சில நாட்கள் கழித்து விற்பது போலவும் கணக்கு போட்டு வாருங்கள். உங்கள் கணக்கு எப்படி சரியாகிறது என்று பார்த்த பிறகு, நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு அடுத்த ரவுண் டுக்கு தயாராகுங்கள். அதுவரை பொறுத்திருப்பதே சிறப்பு. 'ஷேர் புரோக்கர்கள்' தங்களுக்கு தொடர்ந்து கமிஷன் வேண்டும் என்பதற்காக வலை விரிப்பர்; அதில் விழுந்து விட வேண்டாம்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: இருப்பினும், பணவீக்கம் சிறிது குறைந்துள்ளதாலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டு ஜி.டி.பி., 7.9 சதவீதத்தில் இருப்பதாலும், சந்தை சிறிது மேலே செல்ல வாய்ப்புகள் ஒரு புறம் இருக்கிறது. ஆனால், இந்திய சந்தைகள் சரிந் தால், நாட்-அவுட் என்றே கூற வேண் டும். கடந்த ஆண்டு ஏறும் போதும் வெகு வேகமாக ஏறியது. அதுபோல இறங்கும் போதும் வேகமாக இறங்கியது. ஆனால், இப்போது அப்படியே தலைகீழ், ஏறினால் ஓரளவு ஏறுகிறது; சரிந்தால், நாம் நினைத்து பார்க்காத அளவில் சரிகிறது. எனவே, இப்போதைக்கு உ ங்கள் கையில் உள்ள பங்குகள் கணிசமான லாபத்தில் இருந்தால் விற்று விடுவதே சிறப்பு. வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதுவரை பொறுத்திருப்போம்.
நன்றி : தினமலர்


Saturday, August 30, 2008

லேண்ட்ரோவர் கார் உற்பத்தி குறைக்கப்பட்டது

சமீபத்தில் டாடா கைக்கு வந்த பிரிட்டிஷ் கார் கம்பெனி லேண்ட் ரோவரில் கார் தயாரிப்பு குறைக்கப்பட்டது. உலக அளவில் பொருளாதாரத்தல் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக, விற்பனையில் சரிவு ஏற்பட்டதால், இனிமேல் அங்கு வாரத்தில் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இதுவரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை நாட்களாக இருந்த அங்கு, இனிமேல் நான்கு நாட்கள் தான் வேலை நாட்களாக இருக்கும். அதாவது திங்கட்கிழமையில் இருந்து வியாழன் வரை தான் இனிமேல் அங்கு தயாரிப்பு நடக்கும். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும் அக்டோபரில் இருந்து இரவு ஷிப்டும் கேன்சல் செய்யப்படுகிறது. அமெரிக்காவின் ஃபோர்டு மோட்டார் கம்பெனியிடம் இருந்த ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் கம்பெனிகள் கடந்த ஜூலை மாதம்தான் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் கைக்கு வந்தது. 1.7 பில்லியன் பவுண்டுக்கு ( சுமார் 13,600 கோடி ரூபாய் ) இந்த நிறுவனம் டாடாவால் வாங்கப்பட்டது. ஆனால் இந்த தயாரிப்பு குறைப்பால் அதன் வருடாந்திர தயாரிப்பு அளவில் ஒரு சதவீதம்தான் குறையும் என்று சொல்கிறார்கள். சீனா, ரஷ்யா, பிரேசில், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள்,வட ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இப்போதும் கூட லேண்ட் ரோவர், ஜாகுவார் கார்கள் நன்கு விற்பனை ஆகத்தான் செய்கிறது.
நன்றி : தினமலர்


கே.ஜி.படுகையில் காஸ் எடுப்பதில் தீவிரம் காட்டுகிறது ரிலையன்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ( விற்பனையில் ) ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்., கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இருந்து கேஸ் எடுக்கும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ரிலையன்ஸ் இன்டஸ்டிரஸின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, வரும் அக்டோபரில் இருந்து அங்கு கேஸ் எடுக்கவேண்டும் என்றும் அதற்கு தகுந்த படி வேலைகள் செய்யுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். ஏற்கனவே திட்டமிட்டிருந்த காலத்தை விட 2 - 3 மாதங்கள் முன்னதாகவே கேஸ் எடுக்க அவர்கள் முன்வந்துள்ளார்கள். கேஸ் கிடைக்கும் கிருஷ்ணா - கோதாவரி படுகை பகுதிக்கும், அதன் சுந்திகரிப்பு நிலையம் இருக்கும் ஜாம்நகர் பகுதிக்குமிடையே போடப்பட்டு வரும் பைப்லைன் வேலையும் முடியும் தருவாயில் இருக்கிறது. உலகிலேயே அதிகம் கேஸ் இருக்கும் பகுதி என்று சொல்லப்படும் கிருஷ்ணா - கோதாவரி ஆற்று படுகையில் 11.5 டிரில்லியன் கியூபிக் அடி ( டி சி எஃப் ) கேஸ் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இங்கு கேஸ் எடுக்கும் தொழிலில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்., ஈடுபட்டு வருகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் அங்கு நாள் ஒன்றுக்கு 40 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் கேஸ் எடுக்க திட்டமிட்டிருக்கிறது. பின்னர் அதை ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குள் 80 மில்லியனாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. மற்ற உலக நாடுகளில் கேஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 9 வருடங்களுக்குப்பின் தான் அங்கிருந்து கேஸை எடுக்க முடிந்திருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் இன்டஸ்டிஸ் கேஸ் உற்பத்தி நிலையமோ கிருஷ்ணா - கோதாவரி படுகையில் கேஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 6 வருடங்களிலேயே கேஸ் எடுக்க இருக்கிறது.
நன்றி : தினமலர்


தமிழகத்துக்கு மாறுமா நானோ கார் திட்டம்?

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் இருந்து, தமிழகத்துக்கு மாறுமா டாடாவின் 'நானோ' கார் தொழிற் சாலை என்ற கேள்வி இப்போது பரபரப்பாக எழுந்துள்ளது. மற்ற எந்த நிறுவனமும் நிறைவேற்ற முயற்சிக்காத நிலையில், ஒரு லட்சம் ரூபாய் நானோ ரக கார்களை தயாரித்து விற்பனை செய்ய மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் தொழிற்சாலையை அமைத்தது டாடா நிறுவனம். விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெற்ற 400 ஏக்கர் நிலத்தை திரும்பத்தர வேண்டும் என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா போராடி வருகிறார். 'ஒரு நானோ காரை கூட வெளியே போக விடமாட்டோம்' என்று டாடா நிறுவனத்தைச் சுற்றி முற்றுகை போராட்டத்தை நடத்த தயாராகிவிட்டார்.'நானோ கார் திட்டத்துக்கு பிரச்னை வந்தால், நஷ்டத்தை நான் தாங்கிக் கொள்ளலாம்; ஆனால், தொழிலாளர்களுக்கு ஆபத்து வந்தால், நான் மேற்கு வங்கத்தை விட்டு தொழிற்சாலையை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை' என்று, டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அறிவித்தார்.டாடாவுக்கு அளித்த நிலத்தை திரும்பப் பெற முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் திட்டவட்டமாக கூறிவிட்டார். மம்தாவும், நிலத்தை திரும்பத் தராத வரை போராட்டம் ஓயாது என்று வெளிப்படையாக அறிவித்தும் விட்டார். இதனால், இழுபறி நீடிக்கிறது.நானோ கார் திட்டத்தை, திட்டமிட்டபடி அக்டோபர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்.
ஒரு லட்சம் ரூபாய் காரை சந்தைக்கு கொண்டு போக வேண்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் உள்ள பிரச்னையால் நானோ கார் அக்டோபருக்குள் வெளியில் வருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா உட்பட சில மாநில அரசுகள் டாடாவுக்கு அழைப்பு விடுத்தாலும், மேற்கு வங்க மாநிலம் ஒத்துழைக்க முடியாத நிலை வரும் போது, நானோ கார் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க டாடா முன்வரும் என்று தெரிகிறது.இது தொடர்பாக தமிழக அரசு, டாடாவுக்கு அழைப்பு விடுத்து விட்டது.
தூத்துக்குடியில் டைட்டானியம் ஆலை அமைக்க டாடாவுக்கு நிலத்தை ஏற்கனவே அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், நானோ கார் தொழிற்சாலைக்கும் நிலம் ஒதுக்க தயாராக உள்ளது.'டாடா நிறுவனம் ஏற்க முன்வந்தால் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளது. ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை' என்று, அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப் பட்டுள்ளது. டாடா தரப்பிலும் எந்த பதிலும் இதுவரை வெளியிடப்படவில்லை.டாடா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'நானோ கார் திட்டம் வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டால், மூலதன செலவில் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என்று தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்

சிங்கூர் தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றியது டாடா மோட்டார்ஸ்

கோல்கட்டாவுக்கு 35 கி.மீ.,தூரத்தில் இருக்கும் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அதன் தொழிலாளர்களை, நிர்வாகம் வெளியேற்றி விட்டது. திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் டாடா மோட்டார்ஸ் தொழிலாளர்கள் மிரட்டப்படுவதால் டாடா மோட்டார்ஸ் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு நிலவி வரும் மோசமான நிகழ்ச்சிகளால் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்று டாடாவின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வியாழன் அன்று டாடா மோட்டார்ஸின் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த கார்கள் மற்றும் பஸ்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதிலிருந்த தொழிலாளர்களை மிரட்டவும் செய்தனர். இதனையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த இஞ்சினியர்கள், டெக்னிஷியன்கள், எக்ஸிகூடிவ்கள் சுமார் 800 பேரில் ஒருவர் கூட வேலைக்கு வரவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களும் வேலைக்கு வரவில்லை. சிங்கூரில் டாடா தொழிற்சாலை அமைக்க பெறப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில், 400 ஏக்கர் நிலம் வலுக்கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அந்த 400 ஏக்கர் நிலத்தை, அதை கொடுத்த விவசாயிகளிடமே திருப்பி கொடுத்து விட வேண்டும் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி தலைமையிலான தொண்டர்கள் கடந்த 24ம் தேதியில் இருந்து தொழிற்சாலை முன்பு அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் டாடா தொழிலாளர்களை நாங்கள் மிரட்டவில்லை என்று மம்தா பானர்ஜி மறுக்கிறார். டாடாவுக்கு அங்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதால், அந்த தொழிற்சாலை அங்கிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுமா என்று டாடா உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்போது அந்த கேள்வி எழவில்லை; முதலில் அங்கு அமைதி திரும்ப வேண்டும். பின்னர்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றனர். எங்களது ஊழியர்கள் பயந்துபோய் இருக்கிறார்கள். எனவே எங்களது முதல் வேலை அவர்களது பயத்தை போக்குவதுதான் என்றனர்.
நன்றி : தினமலர்


8 சதவீத வளர்ச்சி சிதம்பரம் நம்பிக்கை

'நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் கண்டிப்பாக 8 சதவீதமாக இருக்கும்' என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.மும்பை பங்குச் சந்தையில், 'கரன்சி பியூச்சர் டிரேடிங்'கை மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று துவக்கி வைத்தார். நேற்று வர்த்தகம் துவங்கிய முதல் நாளில் அமெரிக்க டாலர் ரூ.44.15 என்ற விலையில் வர்த்தகமாகியது. மொத்தம் ஐந்தாயிரம் வர்த்தக ஒப்பந்தங்கள், வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் ஏற்பட்டன. இந்த வர்த்தகத்தில் பங்கேற்க 300 உறுப்பினர்கள், 11 வங்கிகள் பதிவு செய்துள்ளன. இதில், முதல் முறையாக வங்கிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டன. இருப்பினும், பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் அனைவரும் வர்த்தகத்தில் பங்கேற்கவில்லை.இந்த விழாவிற்கு பின், நிருபர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் என்ற அளவில் நிலை பெறும்.கடந்தாண்டு நான் சொன்னபடி, மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக இருந்தது. என்னுடைய கணிப்புப்படி, ஆண்டு வளர்ச்சியானது பெரும்பாலும் சரியாக இருக்கும்.கரன்சி பியூச்சர் டிரேடிங்கில் ஒரு முதலீட்டாளர், அன்னிய செலாவணி சந்தையில் ஏற்படும் அபாயங்களுக்கு இதை ஹெட்ஜிங் செய்து கொள்ளலாம். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், குடியுரிமை பெறாத இந்தியர்கள் ஆகியோர் பங்கேற்க முடியும்.ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு காலியிடம் ஏற்படும் சமயத்தில் அப்போது முடிவு செய்யப்படும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 5ம் தேதி ஓய்வு பெறுகிறார். கவர்னர் பதவியில் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், டில்லியில் மத்திய புள்ளியியல் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நடப்பு நிதியாண்டில், முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக இருந்தது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு 9.2 சதவீதமாக இருந்தது.தயாரிப்பு பிரிவு மற்றும் மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட பின்னடைவால் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்தாண்டு பொருட்கள் தயாரிப்பு பிரிவில் வளர்ச்சி 10.9 சதவீதமாக இருந்தது. அது, தற்போது 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல் மின்சக்தி உற்பத்தியானது 7.9 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்


Friday, August 29, 2008

பங்கு சந்தையில் மீண்டும் காளைகளின் ஆதிக்கம் ; சென்செக்ஸ் 3.4 சதவீதம் உயர்ந்தது

இந்திய பங்கு சந்தையில் மீண்டும் காளையின் ஆதிக்கம் ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 516.19 புள்ளிகள் ( 3.67 சதவீதம் ) உயர்ந்து 14,564.53 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 146 புள்ளிகள் ( 3.46 சதவீதம் ) உயர்ந்து 4,360.00 புள்ளிகளில் முடிந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், பணவீக்கம் எதிர்பார்த்ததை போல் உயராமல் குறைந்திருந்ததால், இன்று முழுவதும் காளையின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இன்ஃப்ராஸ்டரக்ஸர், ஆயில், மெட்டல் மற்றும் டெக்னாலஜி பங்குகள் பெருமளவு விற்பனை ஆயின. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் உயர்ந்திருந்தன. உலக அளவில் பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை இருந்ததும் இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்தது. பணவீக்கம் 12.79 சதவீதமாக இருக்கும் என்ற சிஎன்பிசி - டிவி18 யின் கணிப்பை பொய்யாக்கிவிட்டு பணவீக்கம் 12.40 சதவீதமாக இருந்தது பங்கு சந்தையில் நல்ல வளர்ச்சியை கொண்டு வந்தது.
நன்றி : தினமலர்


ஐ சி ஐ சி ஐ வங்கி துணை தலைவர் ராஜினாமா ; ஜேபி மார்கனின் சேர்ந்தார்

ஐ சி ஐ சி ஐ பேங்க்கின் இன்சூரன்ஸ் பிரிவு துணைதலைவராக பணியாற்றிய கல்பனா மோர்பாரியா, அதிலிருந்து விலகி விட்டார். அவர் ஜேபி மார்கன் நிதி நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவராக பொறுப்பேற்றார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ சி ஐ சி ஐ வங்கியில் கல்பனா மோர்பாரியா கடந்த 33 வருடமாக பணியாற்றியவர். அங்கு அவர், இன்சூரன்ஸ், செக்யூரிட்டீஸ் மற்றும் அசட் மேனெஜ்மென்ட் துறையில் தலைவராக பணியாற்றி வந்தார். 1975ம் வருடம் ஐ சி ஐ சி ஐ வங்கியில் சேர்ந்த கல்பனா, 2001 ம் ஆண்டு இயக்குனர்கள் குழுவில் இடம் பெற்றார். 2007 மே மாதம் வரை அதின் இணை மேலாண் இயக்குனராக இருந்தார். 2007 ஜூனில் இயக்குனர் குழுவில் இருந்து விலகினார். பின்னர் அவர் அந்த வங்கியின் இன்சூரன்ஸ் மற்றும் அசட் மேனேஜ்மென்ட் பிரிவின் துணை தலைவராக பணியாற்றினார். இப்போது அதிலிருந்து விலகிய கல்பனா, ஜேபி மார்கன் என்ற நிதி நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
நன்றி : தினமலர்

ரூ.14,999 க்கு லேப்டாப் : ஜெனித் அறிமுகப்படுத்தியது

இந்தியாவின் பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஜெனித், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.14,999 க்கு லேப்டாப்பையும் ரூ.11,999 க்கு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் மூன்று மாடல்களில் இருக்கின்றன. இந்த மாடல்கள் எல்லாம் எக்கோஸ்டைல் என்ற பெயரில் வெளிவருகின்றன. இந்த கம்ப்யூட்டர்களில் உடலுக்கு தீங்கு செய்யும் சாதனங்கள் எதுவும் இல்லை என்றும், இது மற்ற கம்ப்யூட்டர்கரை விட 30 சதவீதம் குறைவான மின்சாரத்தில் வேலை செய்யும் என்று சொல்கிறார்கள். இவைகள் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் விஸ்டா, மைக்ரோசாப்ட் எக்ஸ் பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும். ரூ.14,999 க்கு விற்கப்படும் எக்கோஸ்டைல் லேப்டாப்தான் மார்க்கெட்டில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டில் சிஸ்டத்தை கொண்டுள்ள லேப்டாப் என்று சொல்கிறார்கள். மைக்ரோசாப்ட் இந்தியாவின் சேர்மன் ரவி வெங்கடேசன் இதுகுறித்து பேசியபோது, எங்களது நோக்கமே மக்களுக்கு அவர்களால் வாங்கக்கூடிய விலையில் கம்ப்யூட்டரை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்றார்.
நன்றி : தினமலர்


குறைந்தது பணவீக்கம்

ஆகஸ்ட் 16ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 12.40 சதவீதமாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 12.63 சதவீதம். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, எரிபொருட்கள் விலை 1.1 சதவீதம் குறைந்துள்ளது. வீட்டு சாமான்களின் விலைகள் 3 சதவீதம் அதிகரித்துள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலை 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

Thursday, August 28, 2008

பணவீக்கம் உயரும் அபாயம்; சரிவில் முடிந்தது பங்கு சந்தை

பணவீக்கம் மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 248.45 புள்ளிகள் ( 1.74 சதவீதம் ) குறைந்து 14,048.34 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 78.10 புள்ளிகள் ( 1.82 சதவீதம் ) குறைந்து 4,214.00 புள்ளிகளில் முடிந்தது. சிஎன்பிசி - டிவி 18 எடுத்த கணிப்பின்படி இந்தியாவின் பணவீக்கம் 12.63 சதவீதத்தில் இருந்து 12.79 சதவீதமாக உயர்ந்து விடும் என்று சொல்லியிருந்தது. ஆனால் பெரும்பாலானவர்கள் பணவீக்கம் 13 சதவீதத்தை விடவும் தாண்டிவிடும் என்று சொன்னார்கள். இதனால் பங்கு சந்தையில் வீழ்ச்சி நிலை காணப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பெல், டி சி எஸ், எல் அண்ட் டி, ஐ சி ஐ சி ஐ பேங்க், விப்ரோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஓ என் ஜி சி, டி எல் எஃப் போன்ற நிறுவன பங்குகள் குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாவை நோக்கி குஸ்டவ் என்ற புயல் நகர்ந்து வருவதை அடுத்து நேற்று நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. ஏனென்றால் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் தான் பெரும்பாலான அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளின் எண்ணெய் கிணறுகள் இருக்கின்றன. இதனால் நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட்ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.88 டாலர் உயர்ந்து 118.15 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 1.59 டாலர் உயர்ந்து 116.22 டாலராக இருந்தது. மெக்ஸிகோ வளைகுடா பகுதியை புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் அங்கிருக்கும் பிரபல எண்ணெய் நிறுவனமான ராயல் டச் ஷெல், அதன் ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டது. 2005 ம் ஆண்டு அந்த பகுதியை தாக்கிய கட்ரினா மற்றும் ரீடா புயல்கள் தாக்கியதற்கு பின் இப்போதுதான் மிகப் பெரிய குஸ்டவ் புயல் அந்த பகுதியை தாக்க வருவதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


மஜா காணோம்: சந்தை கலகலத்து இருக்கிறது

சந்தை கலகலத்துப் போய் இருக்கிறது. கடந்த வருடம் இருந்த மஜா இல்லை. கடந்த வருடம் எல்லாருக்கும் ஒரு ஆச்சரியக்குறியாக இருந்த சந்தை, தற்போது ஒரு கேள்விக்குறியாகப் போய்விட்டது. என்ன ஆகும், எப்போது மேலே செல்லும் என்று எல்லாரையும் யோசனையில் ஆழ்த்திவிட்டு தூங்கச் சென்று விட்டது. திங்களன்று சந்தை துவக் கத்தில் நன்றாக இருந்தாலும், பலரும் லாப நோக்கத் தில் செயல்பட்டதால் கூடிவந்த புள்ளிகள் அனைத்தும் காணாமல் போய், கடைசியாக 48 புள்ளிகளே கூடுதலாக முடிவடைந்தது. நேற்று முன்தினம் துவக் கத்தில் சந்தை கீழே இருந்தாலும், பின்னர் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந் ததும், கச்சா எண் ணெய் விலை குறைந்ததும் சந்தையில் அது பிரதிபலித்தது. ஆதலால், நஷ்டங்கள் குறைந்து சந்தை மேலே வர ஆரம்பித்தது. முடிவாக 32 புள்ளிகள் கூடுதலாக முடிவடைந்தது. பணவீக்கம் 16 வருட உச்சத்தில் உள்ளது. அதைக் குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி மறுபடி வட்டிவிகிதங் களைக் கூட்டலாம் அல்லது சி.ஆர்.ஆர்., சதவீதத்தை கூட்டலாம் என்று வந்த யூகங்கள் சந்தையை நேற்று அடித்து கீழே விழ வைத்தது என்றால் மிகையாகாது. சமீபகாலமாக அரசும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், பணவீக்கம் குறைவதாகத் தெரியவில் லை. இந்த பயத்திலேயே சந்தை நேற்று கீழே சென்றது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை 126 புள்ளிகள் குறைந்து 14,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் குறைந்து 4,292 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 14,000க்கும் கீழே செல்லாமல் இருப்பது தான் தற்போதைய பெரிய ஆறுதல். கீழே செல்லும் பட்சத் தில் மனரீதியாக பலரை கவலைக்குள்ளாக்கும். காரணிகள் என்ன? பணவீக்கம், டாலர் ரூபாய் மதிப்பு, கச்சா எண்ணெய், தங்கம் விலை, அமெரிக்க பங்குச் சந்தை நிலவரம், ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரம் ஆகியவை பற்றியெல்லாம் முன்பு கவலைப் படாமல் இருந்து வந்தோம். ஆனால், தற்போது இவைகள் தான் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்கின்றன என்று தெரியவந்ததும் தினசரி அவை பற்றி தெரிய ஆர்வம் காட்டுகிறோம். டாலரும், ரூபாயும்: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 17 மாதங்களில் மிகக்குறைந்த அளவான 44 ரூபாயையும் தாண்டிச் சென்று இறக்குமதியாளர் களை நேற்று முன்தினம் மிகவும் கவலையடைய வைத்தது.
இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், ரூபாய் மதிப்பு குறைந்தும் அதிகம் பாதிப்பு அடையமாட்டோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே சமயம் மறுபடி கச்சா எண்ணெய் பேரலுக்கு 140 டாலர் அளவைத் தாண்டினால் அது நிச்சயம் எல்லாரையும் பாதிக்கும். சாப்ட்வேர் ஏற்றுமதியாளர்களுக்கு ரூபாய் மதிப்பு குறைவது ஒரு நல்ல சந்தர்ப் பம். வருங்காலங்களில் அவர் களின் லாபங்கள் கூடும் வாய்ப்புகள் உள்ளன. தாமஸ் குக்கும், உரிமை பங்குகளும்: இந்த சந்தையிலும் சிறிது கலங்காமல் இருக்கும் பங்குகளில் ஒன் றான தாமஸ் குக், உரிமைப் பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது. நீண்ட நாட்களாக எதிர் பார்க்கப்பட்டிருந்த ஒன்று என்றாலும், உரிமைப் பங்குகள் எந்த விகிதத்தில் வழங் கப்படுகின்றன, எவ்வளவு ரூபாயில் வழங்கப் படுகின்றன என்று இன்னும் அறிவிக்காதபட்சத்திலும் அந்தக் கம்பெனியின் பங்குகள் நேற்று 15 சதவீதம் வரை மேலே சென்றது. இவை முதலீட்டாளர் களுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்தக் கம்பெனியின் பங்குகள் மேலே சென்றிருக்கலாம். புதிய வெளியீடுகள்: புதிய வெளியீடுகள் வெளியிட எல் லாரும் துடித்துக் கொண்டிருந்தாலும், சந்தையின் தற் போதைய நிலைமையைப் பார்த்து இது சரியான சந்தர்ப்பம் இல்லை என்று ஒதுங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை தான். இருந்தாலும், பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது புதிய வெளியீடுகளை கொண்டு வருவதில் ஆர்வம் கொண்டு அதற்கான முயற்சிகளில் முழு ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றன. சந்தை எப்படி இருந்தாலும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் வருவது, உறுதி என்றே கூறலாம். விலையும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக வைக்கும் பட்சத்தில் நன்றாக செலுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தையை உள் நாட்டுப் பிரச்னைகள் தற்சமயம் தாக்குவதில்லை. உலகளவிலான பிரச்னைகள் தான் தாக்குகின்றன. ஆதலால், சந்தைக்கு என்ன ஆகும் என்பது உலகளவில் நடக்கும் விஷயங்களை வைத்தும், நாளை, பணவீக்க சதவீதம் எவ்வளவு இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தும் அமையும்.
சேதுராமன் சாத்தப்பன்


Wednesday, August 27, 2008

உலகின் மிகப்பெரிய லூப்ரிகன்ட் கம்பெனியாக ஷெல் தேர்வு

இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயில் ( லூப்ரிகன்ட்ஸ் ) சப்ளை செய்வதில் உலக அளவில் மிகப்பெரிய கம்பெனியாக அமெரிக்காவின் ஷெல் நிறுவனம் இருப்பது தெரியவந்திருக்கிறது. கிளின் அண்ட் கம்பெனி எடுத்த ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. 2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஷெல் நிறுவனத்திற்கு உலக அளவில் லூப்ரிகன்ட்ஸ் மார்க்கெட்டில் 13 சதவீத மார்க்கெட் ஷேர் இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் கம்பெனியை விட, ஷெல்லுக்கு 2 சதவீதம் மட்டுமே அதிக மார்க்கெட் ஷேர் இருக்கிறது. வருடாவருடம் அதன் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. வட அமெரிக்காவில் லூப்ரிகன்ட்ஸ்கான தேவை அதிகமாக இருந்தாலும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள விற்பனையில் ஷெல் நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இப்போது உற்பத்திக்கான செலவு அதிகரித்திருந்தாலும் நாங்கள் ஒருபோதும் லூப்ரிகன்ட்ஸின் தரத்தில் குறைவு வைப்பதே இல்லை. எங்கள் தயாரிப்பு மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்றுமே வீண்போகாது. இந்தியாவில் எங்கள் தயாரிப்புகள், பணத்திற்கேற்ற மதிப்பை கொண்டிருக்கும் என்று ஷெல் லூப்ரிகன்ட்ஸ் இந்தியாவின் தலைவர் டொலால்ட் ஆண்டர்சன் தெரிவித்தார். மேற்று ஐரோப்பிய நாடுகளில் லூப்ரிகன்ட்ஸ்கான தேவை குறைந்திருந்தாலும் ஷெல், அதன் மார்க்கெட் ஷேரை தக்க வைத்திருக்கிறது. அமெரிக்காவில் அதற்கு 12 சதவீத மார்க்கெட் ஷேர் இருக்கிறது. இந்தியாவில் லூப்ரிகன்ட்ஸின் விற்பனை அளவு வருடத்திற்கு 8 சதவீதம் வீதம் அதிகரிக்கிறது. சீனாவில் அது 20 சதவீதமாகவும் இந்தோனேஷியாவில் 14 சதவீதமாகவும் இருக்கிறது.
நன்றி :தினமலர்


சரிவில் முடிந்தது இன்றைய பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சென்செக்ஸ் குறைந்து தான் இருந்தது. இதேநிலை நீடித்து மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 185.43 புள்ளிகள் ( 1.28 சதவீதம் ) குறைந்து 14,296.79 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 45.40 புள்ளிகள் ( 1.05 சதவீதம் ) குறைந்து 4,292.10 புள்ளிகளில் முடிந்தது. ஆசிய பங்கு சந்தைகளில் இன்று ஏற்றமும் இறக்கமுமாக இருந்தாலும் ஐரோப்பிய சந்தை சரிவில்தான் முடிந்துள்ளது.
நன்றி :தினமலர்


டெய்ச்சி - ரான்பாக்ஸி ஒப்பந்தத்திற்கு எஃப் ஐ பி பி ஒப்புதல்

இந்தியாவின் பிரபல பார்மாசூடிகல் கம்பெனியான ரான்பாக்ஸியின் 20 சதவீத பங்குகளை கூடுதலாக வாங்க ஜப்பானின் டெய்ச்சி சான்கியோ முன்வந்தது. இதற்காக வெளிநாட்டு பணம் ரூ.21,560 கோடி இந்தியாவுக்குள் வர இருப்பதால், அதற்கு ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் புரமோஷன் போர்டிடம் ( எஃப்.ஐ.பி.பி.,) அனுமதி பெற வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு இப்போது எஃப்.ஐ.பி.பி., அனுமதி அளித்து விட்டது. மேலும் இப்போது இந்த விவகாரம் மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரத்துறையினரின் ஒப்பந்தத்திற்காக சென்றிருக்கிறது. ஏனென்றால் ரூ.600 கோடிக்கும் மேல் வெளிநாட்டு பணம் இங்கு வருகிறது என்றால் அவர்களின் ஒப்புதலை பெற வேண்டும். இவர்களது ஒப்புதல் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை என்றாலும், ரான்பாக்ஸியின் 20 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஓப்பன் ஆஃபர் ஆகஸ்ட் 16ம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 4ம் தேதி முடிகிறது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் நாங்கள் பங்குகளை வாங்கும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என்று டெய்ச்சி நிறுவன உயர் அதிகாரிகம் தெரிவித்தரனர்.
நன்றி : தினமலர்


புயல் தாக்கும் அபாயத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

கச்சா எண்ணெய் விலை ஏதாவது ஒரு காரணத்திற்காக உயரும் அல்லது குறையும். இப்போது அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் குஸ்டவ் என்ற புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக வந்த தகவலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. மெக்ஸிகோ வளைகுடா பகுதியில்தான் அமெரிக்காவின் பிரபல எண்ணெய் கிணறுகள் பல இருக்கின்றன. ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற ஜார்ஜியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் நடந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வதாக சொல்கிறார்கள். நியுயார்க் சந்தையில் நேற்று அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( அக்டோபர் டெலிவரிக்கானது ) பேரலுக்கு 67 சென்ட் உயர்ந்து 116.94 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 23 சென்ட் உயர்ந்து 114.86 டாலராக இருந்தது.
நன்றி : தினமலர்


இந்திய நகைகள் ஏற்றுமதி அமெரிக்காவில் சரிவு

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய நிறுவனங்களின் தங்க நகைகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.பல நாடுகளுக்கு தங்க நகை ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கணிசமான அளவில் வர்த்தகம் நடந்து வந்தது. ஆனால், சமீப காலமாக இந்த நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டு வருவதை அடுத்து, வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் சஞ்சய் கோத்தாரி கூறுகையில், 'கடந்தாண்டை விட, கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் தங்க நகைகள் ஏற்றுமதி 23 சதவீதம் குறைந்துள்ளது. அதனால், ரஷ்யா, சீனா, மேற்காசிய சந்தைகளில் தங்க நகை ஏற்றுமதி செய்வது தொடர்பாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.'தங்க நகைகள் ஏற்றுமதிக்குரிய பட்டியலில் நகைகளை மட்டும் மத்திய அரசு சேர்த்துள்ளது. தங்கம், விலை உயர்ந்த கற்கள் பதித்த ஆடைகள், புடவைகள், கைக்கடிகாரங்கள் உட்பட பல்வேறு பொருட்களையும் இந்த ஏற்றுமதி பட்டியலில் சேர்க்க வேண்டும். அப்போது தான், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இந்த பொருட்களை தயாரித்து, ஏற்றுமதி செய்ய வழி கிடைக்கும். மத்திய வர்த்தக அமைச்சகம் தான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஏற்றுமதியாளர்கள் கூறினர்.'இந்தியாவில் தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் தொடர்பான தொழிலில் 30 லட்சம் பேர் வேலையில் உள்ளனர். இந்த துறையை விரிவுபடுத்தினால், இன்னும் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். ஏற்றுமதியும் அதிகரிக்கும்' என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
நன்றி : தினமலர்


Tuesday, August 26, 2008

கிராமங்களை தேடி செல்கிறது ஹெச்.டி.எஃப்.சி பேங்க்

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியான ஹெச்.டி.எஃப்.சி., கிராமங்களில் அதன் கிளைகளை அதிக அளவில் துவக்க திட்டமிட்டிருக்கிறது. இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே கிளைகளை வைத்திருந்த ஹெச்.டி.எஃப்.சி., வங்கி இப்போது கிராமங்களை தேடி செல்வதற்கு காரணம், அங்கிருக்கும் விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களால் பெரிய அளவில் பேங்கிங் வேலைகள் நடக்கின்றன என்பதால்தான். அவர்களை தன் பக்கம் இழுக்கவே கிராமங்களில் கிளைகளை துவங்க அந்த வங்கி முன் வந்திருக்கிறது. மெட்ரோபாலிடன் நகரங்களில் இருப்பதுபோலவே கிராம கிளைகளும் கோர் பேங்கிங் வசதியால் இணைக்கப்பட்டிருக்கும் என்று ஹெச்.டி.எஃப். சி.,யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அடுத்த நிதி ஆண்டில் நாங்கள் இந்தியா முழுவதும் 200 புதிய கிளைகளை திறக்க இருக்கிறோம். அதில் 100 க்கும் அதிகமான கிளைகள் கிராமப்புறங்களில் திறக்கப்படும் என்று ஹெச்.டி.எஃப்.சி., பேங்கின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ஜி.எஸ்.கோபிநாத் தெரிவித்தார். கிராமப்புறங்களில் நாங்கள் கிளைகள் துவங்குவதன் முக்கிய நோக்கமே அங்குள்ள விவசாயிகளையும், சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களையும் வங்கிகளை பயண்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றார் அவர். இப்போது தென் இந்தியாவில் அவர்களுக்கு இருக்கும் 325 கிளைகளில் 125 கிளைகள், கிராமப்புறங்களிலும் செமி அர்பன் ஏரியாவிலும் இருக்கிறது.
நன்றி :தினமலர்


சிறிது உயர்ந்து முடிந்தது பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சென்செக்ஸ் குறைந்துகொண்டுதான் இருந்தது. மாலை வர்த்தகம் முடிய 10 நிமிடங்கள் இருக்கும் வரை இதே நிலைதான் நீடித்தது. ஆனால் கடைசி 10 நிமிடங்களில் இழந்த புள்ளிகள் மீட்கப்பட்டு, நேற்றைய நிலையில் இருந்து கொஞ்சம் உயர்ந்து சந்தை முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 31.87 புள்ளிகள் மட்டும் ( 0.22 சதவீதம் ) உயர்ந்து 14,482.22 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2.15 புள்ளிகள் மட்டும் ( 0.05 சதவீதம் ) உயர்ந்து 4,337.50 புள்ளிகளில் முடிந்தது. பேங்கிங், கேப்பிடல் குட்ஸ், பவர், சிமென்ட் மற்றும் குறிப்பிட்ட சில டெக்னாலஜி துறை பங்குகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஹெச்.டி.எஃப்.சி., வங்கி 3.92 சதவீதம், சத்யம் 3.25 சதவீதம், ஹெச்.சி.எல்.,டெக் 2.77 சதவீதம், விப்ரோ 2.25 சதவீதம், பெல் 1.96 சதவீதம் உயர்ந்திருந்தது.

நன்றி : தினமலர்


Technorati Profile

ரூ.3,300 கோடிக்கு பிரிட்டன் கம்பெனியை வாங்குகிறது இன்ஃபோசிஸ்

பெங்களுருவை சேர்ந்த பிரபல சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், ரூ.3,300 கோடி ரொக்கமாக கொடுத்து பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸான் குரூப்பை வாங்குகிறது. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் எடுத்துள்ள மூன்றாவது மிகப்பெரிய விரிவாக்க முயற்சி இது. ஜூன் 30,2008ம் தேதியுடன் முடிந்த காலத்தில் இன்ஃபோசிஸிடம் ரூ.7,500 கோடி உதிரி பணம் கையிருப்பு இருந்ததால் ஆக்ஸான் நிறுவனத்தை பணமாக கொடுத்து வாங்க இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிறுவனம் நவம்பரில் வாங்கப்பட்டு விடும் என்கிறார்கள். அவ்வாறு வாங்கி விட்டால் இந்திய ஐ.டி.கம்பெனி ஒன்று அதிக விலை கொடுத்து வாங்கும் மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனமாக இதுவாகத்தான் இருக்கும். கடந்த வருடத்தில் விப்ரோ நிறுவனம், அமெரிக்க நிறுவனமான இன்ஃப்ரோ கிராஸிங்தை ரூ.2,400 கோடிக்கு வாங்கியிருந்தது. அதுதான் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட நிறுவனமாக சொல்லப்பட்டு வருகிறது. ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனம் 2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய நிறுவனமான எக்ஸ்பர்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை 23 மில்லியன் டாலருக்கும், 2007ம் ஆண்டு பிலிப்ஸ் குலோபல் பிபிஓ நிறுவனத்தை 250 மில்லியன் டாலருக்கும் வாங்கியிருந்தது.

நன்றி :தினமலர்



டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன் ?

ஏப்ரல் - ஜூலை மாதத்தில் இந்தியாவின் டீசல் தேவை ( டிமாண்ட் ) சராசரியாக 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மின் உற்பத்தி நிலையங்களில் டீசலுக்கான தேவை அதிகரித்திருப்பதால் தான் இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்தியாவில் டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. டீசலுக்கான தேவை அதிகரித்திருப்பதாலும் இந்தியாவில் கிடைக்கும் பெட்ரோலிய உற்பத்தி குறைந்திருப்பதாலும் நாம் 2008 - 09 ல் 4.14 மில்லியன் டன் டீசலை இறக்குமதி செய்ய வேண்டியதாகிறது. இதில் 1.267 மில்லியன் டன் டீசலை ஏப்ரல் - ஜூலையில் இறக்குமதி செய்திருக்கிறோம் என்று ஐ ஓ சி சேர்மன் புகாரியா தெரிவித்தார். மேலும் இப்போதுள்ள டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக, இப்போது லிட்டருக்கு ரூ.34.80 என்ற விலையில் விற்கப்படும் டீசலை, தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு விற்கும் போது, லிட்டருக்கு ரூ.57 என்ற விலையில் விற்கலாம் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன. எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக டீசலை வாங்கும் இந்திய ரயில்வே, மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.57 என்று விலை வைக்கலாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய பெட்ரோலிய துறைக்கு பரிந்துரை செய்திருக்கிறது. மேலும் போக்குவரத்து துறை மற்றும் விவசாயத்துறைக்கு தள்ளுபடி விலையில் சப்ளை செய்யும் டீசலுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் பெட்ரோலிய அமைச்சர் முர்ளி தியோரவை சந்தித்து டீசல் தட்டுப்பாடு குறித்து விவாதித்த எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அப்போது, ஏப்ரல் - ஜூலை மாதங்களில் மட்டும் இந்தியாவில் டீசலுக்கான தேவை 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்த 18 சதவீததேவை அதிகரிப்பு பெரும்பாலும் மின்நிலையங்களால்தான் ஏற்பட்டிருக்கிறது என்றனர். போக்குவரத்து, விவசாயம் போன்ற துறைகளில் டீசலின் தேவை 10 - 12 சதவீதமும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் டீசலின் தேவை 30 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றனர்.
நன்றி : தினமலர்


ஏர் இந்தியாவுக்கு ரூ. 2,000 கோடி நஷ்டம்

'விமான எரி பொருளுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, ஏர் இந்தியாவுக்கு இந்த நிதி ஆண்டில், ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்படும்'என தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான போக்குவரத்து வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த சில மாதங்களாக விமானங்களுக்கு பயன்படுத்தும் எரி பொருளின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக, விமான பயண கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதிக வருவாய் இல்லாத வழித்தடங்களுக்கான விமான போக்குவரத்து குறைக்கப்பட்டது. விமான வழித் தடங்களும் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால், பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இது போன்ற பிரச்னைகளால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இந்த நிதி ஆண்டில், ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு விமான போக்குவரத்து வட்டாரங்கள் கூறின.ஏர் இந்தியா தலைவர் ரகு மேனன் கூறுகையில், 'எரி பொருள் விலை அதிகரித்துள்ளதால், பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், வருவாய் இழப்பு ஏற்படலாம். இருந்தாலும், செப்டம்பருக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடையும் என கூறப்படுவதால், இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். வருவாயை அதிகரிக்க, செலவினங்களை குறைக்கும் முயற்சியில் ஏர் இந்தியா முழு வீச்சில் ஈடுபடும்' என்றார்.'செலவினங்களை குறைப்பதன் மூலம் ரூ. 1,500 கோடி சேமிக்க முடியும்' என ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமலர்


Monday, August 25, 2008

இந்தியாவில் 3ஜி சர்வீர் கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவு பணத்தை கொட்ட வேண்டியிருக்கும்

இந்தியாவில் இப்போது மூன்றாம் தலைமுறை ( 3 ஜி ) மொபைல் சர்வீஸை கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த 3 ஜி சேவையை கொடுக்க முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அது பொருளாதார ரீதியாக அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது என்கிறார்கள். இதற்காக அவர்கள் பெருமளவு பணத்தை இங்கு கொட்டவேண்டியிருக்கும் என்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் சுமார் 50 லட்சம் மொபைல் சந்தாதாரர்களுக்கு 3 ஜி சர்வீஸ் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் ரூ.17 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். சர்வதேச அளவில் 3 ஜி சர்வீஸ் கெடுத்து அனுபவமுள்ள நிறுவனங்கள், இங்கு ஏலத்தின் மூலம் 2.1 ஜிகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் பெற்று சர்வீஸ் கொடுக்க முன்வந்தால், அவர்கள் முதலில் யுனிவர்சல் அக்ஸஸ் சர்வீஸ் லைசன்ஸ் ( யு ஏ எஸ் எல் ) என்ற ஒன்றை பெற வேண்டும். இந்தியா முழுவதுக்கும் 3 ஜி சர்வீஸ் கொடுக்க யு ஏ எஸ் எல் பெற அவர்களுக்கு ரூ.1,651 கோடி கட்டணம் ஆகும். ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் எடுக்க ரூ.7,500 - 8,000 கோடி செலவாகும். எனவே லைசன்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் வாங்க மட்டும் அவர்கள் ரூ.9,651 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும். மேலும் 50 லட்சம் சந்தாதாரர்களுக்கு சர்வீஸ் கொடுக்க தேவையான சாதனங்கள் வாங்க மற்றும் நிர்வாக செலவு ரூ. 7,500 கோடி ஆகும் என்கிறார்கள். எனவே மொத்தமாக ஒரு வெளிநாட்டு நிறுவனம் இங்கு 3 ஜி சர்வீஸ் கொடுக்க வந்தால் முதலில் அவர்கள் ரூ.17,151 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். மேலும் இப்போது சராசரியாக ஒரு சந்தாதாரரிடமிருந்து கிடைத்து வரும் ரூ.200 வருமானமும் 3 ஜி சர்வீஸ் கொடுக்கும்போது அது ரூ.150 ஆக குறைந்து விடும் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


தமிழ்நாட்டில் டீசல் பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறு விடுமுறை

தமிழ்நாட்டில் தற்போது டீசலுக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக வரும் செப்டம்பர் 15 ம் தேதியில் இருந்து பெட்ரோல் நிலையங்களுக்கு ஞாயிறுதோறும் விடுமுறை விடுவது என்று தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து இன்று சேலத்தில் தமிழ்நாடு பெட்ரோல்,டீசல் வினியோகஸ்தர்கள் சங்கம் கூடி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க, பிரதி ஞாயிறுதோறும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் வார நாட்களில் காலை 6 மணி முதல் இரவு பத்து மணி வரைக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் இயக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் செப்டம்பர்15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று, தமிழ்நாடு பெட்ரோல், டீசல் வினியோகஸ்தர்கள் சங்கங்க தலைவர் கண்ணன் தெரிவித்தார். இதற்கிடையே, டீசல் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழகத்தில் நிலவி வரும் டீசல் தட்டுப்பாட்டு பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுறகிறது.
நன்றி : தினமலர்

சிறிது உயர்ந்து முடிந்த பங்கு சந்தை

சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்டிருந்த முன்னேற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு போன்ற காரணங்களால் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்தபோது வேகமாக உயர்ந்து வந்த சென்செக்ஸ், பின்னர் மதியத்திற்கு மேல் குறைய ஆரம்பித்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் 48.86 புள்ளிகள் ( 0.34 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 14,450.35 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 7.90 புள்ளிகள் ( 0.18 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,335.35 புள்ளிகளில் முடிந்தது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை 114 டாலராக குறைந்தது

சர்வதேச சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை இன்று திங்கட்கிழமை 114 டாலருக்கு வந்து விட்டது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பதாலும் உலக அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாக சொல்கிறார்கள். அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( அக்டோபர் டெலிவரிக்கானது ) விலை பேரலுக்கு 14 சென்ட் குறைந்து 114.45 டாலராக இருக்கிறது. அதேபோல் லண்டனின் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 26 சென்ட் குறைந்து 113.66 டாலராக இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் தொடர்ந்து தேக்க நிலை காணப்படுவதாலும், அங்கு எண்ணெய்க்கான டிமாண்ட் குறைந்து வருவதாலும், இந்த நிலை ஐரோப்பாவிலும் நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலும் கச்சா எண்ணெய் விலை குறைவதாக சொல்கிறார்கள். டாலரின் மதிப்பு கூடினாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்து விடும்.
நன்றி : தினமலர்


கேபிள் வரி கட்டாமல் அரசுக்கு ரூ.265 கோடி இழப்பு: புதிய பணக்காரர்கள் உருவானது மிச்சம்

கேபிள் ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய சேவை வரியில் ஒரு ஆண்டுக்கு மத்திய அரசுக்கு 265 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 'டிராய்' என்னும் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சேகரித்த தகவலின் அடிப்படையில், வரி அமைப்புகள் நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2007-08ம் ஆண்டில் கேபிள் இணைப்புக்கான சேவை வரியாக 28 கோடி ரூபாய் வசூலானது. இதற்கு முந்தைய ஆண்டும் இதே அளவில் தான் சேவை வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில், 1.5 கோடி புதிய கேபிள் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு துறைகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கேபிள் இணைப்புகள் எத்தனை என்று திட்டவட்டமாக இன்னமும் வரித்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கான திட்டம் மற்றும் நடைமுறைகளை கேபிள் நிறுவனங்களோ அல்லது எம்.எஸ்.ஓ., எனப்படும் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்களோ உருவாக்க வில்லை. டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை ஆகிய நான்கு மாநகரங்களில் அதிக கேபிள் இணைப்புகள் உள்ளன. மேலும் 20 நகரங்களில் கணிசமாக இந்த இணைப்புகள் கடந்த ஓராண்டில் லட்சக்கணக்கில் அதிகரித்திருக்கிறது. கணக்கில் வந்திருப்பது அதிகபட்சம் 12 லட்சம் கேபிள் இணைப்புகள் மட்டுமே. அப்படிப் பார்த்தால், கேபிள் இணைப்பு தரும் உள்ளூர் ஏஜென்டுகள் தங்கள் இஷ்டத்திற்கு பொத்தாம் பொதுவாக ஒரு தொகையைக் கட்டி, அதேசமயம் அதிகரிக்கும் இணைப்புகளைக் காட்டுவதில்லை என்று வரித்துறை கருதுகிறது.
டில்லியில் மட்டும் 26 லட்சம் வீடுகளில் கேபிள் இணைப்பு இருக்கிறது. சராசரியாக மாதம் ஒரு இணைப்புக்கு 150 ரூபாய் என்று கணக்கிட்டால், ஆண்டு வருமானம் 470 கோடி ரூபாய். அப்படிப்பார்த்தால், அதற்கு சேவை வரி 58 கோடி ரூபாய். ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் வெறும் 5.7 கோடி ரூபாய் மட்டும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதே போல மற்ற நகரங்களில் இன்னமும் கணக்கெடுப்பு நடத்தவில்லை.இதைப் பற்றி மேலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில், வடமாநிலங்களில் இப்படி அதிகமாக வரும் வருவாய் கறுப்புப் பணமாக மாறி, அதிக பணக்காரர்களை திடீரென உருவாக்கியிருக்கிறது. ஏனெனில், கேபிள் மாதாந்திரக் கட்டணம் வசூலிக்கும் போது முறையான ரசீதை வாடிக்கையாளர்களுக்குத் தருவதில்லை. அப்படி ரசீது தரும் பட்சத்தில் சேவைவரி தானாக வந்து விடும். அது மட்டும் அல்ல, ஒரு தெருவில் அல்லது பகுதியில் ஆயிரத்து 500 கேபிள் இணைப்பு இருந்தால், வழக்கமாக 500 அல்லது 600 இணைப்புக்குப் பணம் தந்து விட்டு மற்றதை இருதரப்பும் சேர்ந்து சரிக்கட்டும் நடைமுறை இருக்கிறது. 'டிராய்' திட்டப்படி இக்கட்டணங்களுக்கு முறையான ரசீது தேவை.வடமாநிலங்களில் இம்மாதிரி கடந்த காலங்களில் பெரிய அளவில் கேபிள் இணைப்புகள் அதிகரித்ததால், அந்த எம்.எஸ்.ஓக்களை நிர்வகிப்பவர்கள் அல்லது கேபிள் ஒளிபரப்பாளர்கள் தாங்கள் சேகரிக்கும் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இந்தி, மொழி பத்திரிகை நடத்துபவர்கள் பலர் 'டிவி' சேனல்களையும், எம்.எஸ்.ஓ.,க்களையும் தங்கள் கட்டுப் பாட்டில் மறைமுகமாக வைத்துள்ளனர்.
பல கோடி ரூபாய் கறுப்பு பணத்தைக் கொடுத்து பெரிய நகரங்களில், அலுவலகங்களுக்கு நிலம் வாங்குவதும், பல கோடியில் அந்த நிலத்தில் கட்டடங்களைக் கட்டுவதும், நடத்த முடியாமல் திணறும் நாளேடுகளை விலைக்கு வாங்குவதும், பத்திரிகையின் விலையைக் குறைத்து போட்டிகளை நசுக்குவதும், நடைமுறையாக உள்ளது. இதில் பல அரசியல்வாதிகளின் ஆதரவு உள்ளதால், வருமான வரி அதிகாரிகள் இதில் தலையிட அஞ்சுகின்றனர்.பத்திரிகைகளின் விற்பனையை அதிகரித்துக் கணக்குக் காட்ட, இந்தக் கறுப்புப் பணம் பெரிதும் உதவுகிறது. பினாமி ஏஜென்டுகளை கணக்கில் வைத்திருப்பதும், பிற ஏஜென்டுகளுக்குத் தேவையில்லாப் பிரதிகளை அதிக அளவில் அவர்களுக்கு அனுப்பி வைத்து, விற்காதப் பிரதிகளை விற்றதாக கணக்குக் காட்ட, கறுப்புப் பணத்தை எடுத்து ஏஜென்டுகள் கணக்கில் மாதம் தோறும் கோடிக்கணக்கில் வரவு வைப்பதும் வடமாநிலங்களில் வாடிக்கையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விற்பனை, கணக்கு கச்சிதமாக எழுதப்படுவதால், பத்திரிகைகளின் விற்பனைக்கு அத்தாட்சி வழங்கும் ஏ.பி.சி., என்ற குழு இந்த போலி விற்பனையை உண்மை என்று நம்பி சான்றிதழ் கொடுக்கிறது.தற்போது, 'டிவி'யில் இன்டர்நெட் என்ற புதிய 'ஐபிடிவி' அறிமுகம் செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பதால், இத்துறையிலிருந்து வரும் குளறுபடிகளைக் கண்காணிக்க முடிவு செய்திருக்கிறது. நூற்றுக்கணக்கான சேனல்கள் ஒளிபரப்பப்படுவதால், தானாக முன்வந்து சுயக்கட்டுப்பாட்டுடன் ஒளிவு மறைவற்ற அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய செய்தி, ஒளிபரப்புத்துறைச் செயலர் சுஷ்மா சிங் கூறியுள்ளார்.கேபிள் தொழில் தற்போது பன்முக வளர்ச்சி பெற்றிருப்பதால், இதுவரை பின்பற்றப்பட்டு வந்த தவறான அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு, வரி செலுத்துவதில் சரியான அணுகுமுறையைப் பின்பற்ற 'டிராய்' ஒழுங்குமுறை ஆணையம், மாநில அரசுகளுடனும், வரித்துறையுடனும் சேர்ந்து செயல் பட்டால், அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி முழுவதும் கிடைக்கும் என்ற நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


Sunday, August 24, 2008

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கள்ள நோட்டு அபாயம்: அச்சம் தருகிறது உளவுத்துறை கணிப்பு

இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது புலனாய்வுத் துறை. மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்களில், நான்கில் ஒன்று கள்ள நோட்டு.புலனாய்வுக் குழு (ஐ.பி.,) திரட்டியுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில், புழக்கத்தில் உள்ள பணத்தில் ரூ. 1.7 லட்சம் கோடி பணம், கள்ளநோட்டுக்கள். 2008, ஜூலை 18ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் மக்கள் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி. புலனாய்வுக் குழு வெளியிட்ட தகவலை ஒப்பிட்டால், புழக்கத்தில் உள்ள ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி ரூபாயில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள். ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்திருக்கும் வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் போன்றவற்றின் மதிப்புக்கு இணையாக, ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் காலம் இப்போது கிடையாது.
ஆனால், கள்ளநோட்டுக்களும் பெருமளவு சேர்வதால், ரூபாயின் மதிப்பு படுபாதாளத்துக்கு போவதுடன், பணவீக்கம் பெரிதும் அதிகரித்து, விலைவாசி கடுமையாக உயருமே தவிர குறையாது. அதேசமயம் கள்ள நோட்டு நடமாட்டத்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே சிதைந்து போகும் அபாயம் காத்திருக்கிறது.கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு, வங்கி அதிகாரிகளே துணை போகும் அவலமும் இந்தியாவில் உள்ளது. சமீபத்தில் உ.பி.,யில் அரசு வங்கியான ஸ்டேட்பாங்க் மற்றும் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஸ்டேட் பாங்க் காசாளர் வீட்டில் நடத்திய சோதனையில், 7.21 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப் பட்டது. இதில், ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள், கள்ள ரூபாய் நோட்டுக்கள்.
புலனாய்வு குழு வெளியிட்ட தகவலை ரிசர்வ் வங்கி மறுத்த போதும், இந்த அளவு கள்ளநோட்டுகள் எப்படிப் புழங்குகின்றன என்பதற்கு சரியான ஆதாரம் மற்றும் புள்ளிவிவரம் இல்லை. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மூத்த போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் டில்லியில் நடந்த போது, வங்கித் துறையே கள்ள நோட்டு புழக்கத்துக்கு காரணமாக இருப்பதை, உ.பி., மாநில அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். இதை தடுப்பதற்குரிய வழிவகை இல்லாததும் சுட்டிக் காட்டப்பட்டது. கள்ள நோட்டுகள் பிடிபட்ட சம்பவங்களில் வங்கியின் சில அதிகாரிகளே உதவியதாகக் கூறப்படுவது போலீசாருக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும் ரூபாய் நோட்டுக்கள், இந்தியா முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 422 கருவூலங்கள் மூலம் வினியோகிக்கப் படுகின்றன. இந்த கருவூலங்களிலேயே கள்ளநோட்டுக்கள் ஊடுருவும் அபாயமும் உள்ளது. புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்கள், சாதாரணமாக ஒரு வங்கியின் காசாளரால் அடையாளம் காணமுடியாத அளவுக்கு நவீனத் தொழில் நுட்பத்துடன் துல்லியமாக அச்சிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளால், வைக்கப் பட்டுள்ள ஏ.டி.எம்., இயந்திரங்களில், கள்ளநோட்டுக்கள் கலந்து உள்ளன.இதனால், அதைப் பயன்படுத்தி பணம் எடுப்போர், எடுக்கப்படும் ரூபாய் நோட்டு, தற்செயலாக கள்ள நோட்டாக இருப்பதை அறிந்தால், அவர்கள் மாட்டிக் கொள்வார்களே தவிர, அதற்கு ஈடாக நல்ல நோட்டு பெற முடியாது. ஆகவே, ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணபட்டுவாடா நிலையத்தில் கள்ள நோட்டு ஊடுருவும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டதால், இன்று இப்பிரச்னையின் பூதாகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.அதேநேரம் ரியல் எஸ்டேட்களில் பெருமளவு முதலீடு செய்யும் பெரும்பணக்காரர்கள், அதில் ஒரு பகுதியை, கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற பயன்படுத்துகின்றனர். இந்த கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி கள்ள நோட்டுக்களாக உள்ளன. ரியல் எஸ்டேட் துறையில் தான் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்துக்கு கொண்டுவரப்படுகின்றன என்பதும் அதிர்ச்சி தரும் தகவல். கள்ள நோட்டுக்களுடன் சிக்குவோரிடமும், சந்தேகத்துக்கு இடமானோரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்திய கரன்சி நோட்டுக்களை அச்சிடுவதற்கென்றே பாகிஸ்தானில், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் கண்காணிப்பின் பிரத்யேக அச்சகம் அனைத்து உள்கட்டமைப்புகளுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது அதேபோல, ஐரோப்பாவில் செயல்படும் பாகிஸ்தான் நிறுவனங்களும் இந்திய கரன்சியை அச்சிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாகிஸ்தான் நிறுவனங்கள் வாங்கும் கரன்சி நோட்டு அச்சிட பயன்படுத்தும் காகிதம், அதன் தேவைக்கு மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் போலவே, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கள்ளநோட்டுக்கள் அச்சிடப்படுவதால், அவற்றை கண்டுபிடிப் பது முடியாத காரியமாக உள்ளது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை தடுப் பதற்கு, வங்கித்துறையில் உரிய கட்டுப் பாடுகளும், கறுப்புப் பண புழக்கத்தை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட வேண்டியது அவசியமாகி உள்ளது.

கதிகலங்க செய்த பங்குச் சந்தையில் வரவேற்கத்தக்க திடீர் திருப்பம்...


முன்பெல்லாம் வெள்ளியன்று சந்தை முடியும் போது பயமுறுத்திக் கொண்டிருந்த பணவீக்கம், வியாழக்கிழமையே பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும், 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பது போல பணவீக்க புள்ளி விவரம் வெளிவருவதற்கு முன்னரே (வியாழன் மாலை வெளியிடப்படுகிறது) பங்குச் சந்தையை புரட்டிப் போட்டு விடுகிறது. அப்படித்தான் இருந்தது வியாழக் கிழமை சந்தை. காலையிலிருந்தே சந்தை குறைய ஆரம்பித்தது. போதாக்குறைக்கு ஆசிய பங்குச் சந்தைகளும் விழுந்தன. மீண்டும் கூடி வரும் கச்சா எண்ணெய் விலையும் சேர்ந்து மொத்தமாக பங்குச் சந்தையை 435 புள்ளிகள் விழ வைத்தன. பணவீக்கம் கூடுகிறது என்றாலே அது வங்கிப் பங்குகளையும், கட்டுமானத்துறை பங்குகளையும் தான் அசைத்துப் பார்க்கும். வங்கித் துறை 5.2 சதவீதமும், கட்டுமானத்துறை 5.1 சதவீதமும் கீழே இறங்கின.

சமீப காலமாக கட்டுமானத் துறை மிகவும் கீழே இறங்கி வருவது ஒரு கவலைக்குரிய விஷயமாகும். 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில் இதுபோல ஒரு பெரிய சரிவை சந்தித்தது. அதன் பிறகு வீறு கொண்டு எழுந்த கட்டுமானத் துறை, மறுபடி கீழே இறங்கி வருவது அது சார்ந்துள்ள எல்லா துறை பங்குகளையுமே அசைத்துப் பார்க்கும்.வியாழனைப் போல வெள்ளியும் துவக்கத்தில் கீழேயே இருந்தது. ஒரு கட்டத்தில் 100க்கும் அதிகமான புள்ளிகள் கீழே சென்றிருந்தன. சரி, இந்த வாரம் மொத்தமாக நஷ்ட வாரம் தான் என்று பலரும் நினைத்திருந்த போது ஐரோப்பிய சந்தைகளின் நல்ல துவக்கம், லண்டனில் உலகச் சந்தையில் மெட்டல் விலைகள் கூடியதால் அதன் எதிரொலி இங்கும் கேட்டது. பங்குச் சந்தை சிறிது மேலே வர அதுவும் ஒரு காரணமாக இருந்தது. குறிப்பாக ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ பங்குகளின் விலைகள் கூடின. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 14,401 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,327 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. சென்செக்ஸ் 14,400ஐ தாண்டியும், நிப்டி 4,300ஐ தாண்டியும் முடிந்து இருப்பது ஆச்சரியமான திருப்பம் தான். இது வரவேற்கத்தக்கது.அம்பானி சகோதரர்களின் பிரச்னை: அம்பானி சகோதரர்களின் பிரச்னைகளை, அவர்களின் அம்மா கோகிலா பென்னை வைத்து தீர்த்துக் கொள் ளும்படி கோர்ட் கூறியுள்ளது. இது ஒரு நல்ல முடிவைத் தரும் என்று பலரும் நினைப்பதால், அவர் களின் கம்பெனி பங்குகள் மேலே சென்றன.

ஐ போனும், பங்கு சந்தையும்: உலகில் பல நாடுகளில் அறிமுகமான ஆப்பிள் கம்பெனியின் ஐ போன் இந்தியாவிற்கு வராதா என்று பலரும் ஏங்கிக் கொண்டிருந்தனர். தற்போது, இந்தியாவிலும் வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய கம்பெனிகள் ஐ போனை அறிமுகம் செய்துள்ளன. விலை சாதாரண போன்களை விட அதிகமாக உள்ளதால், ஐ.சி.ஐ.சி.ஐ., பாங்க், அக்சிஸ் பாங்க், பார்கலேஸ் பாங்க் ஆகியவை இந்த போனை வாங்குவதற்கு கடன்களும் கொடுக் கப் போகின்றன என்ற செய்திகளும் வருகின்றன. நன்கு விற்பனை ஆகும் பட்சத்தில் பாரதி ஏர்டெல் கம்பெனியின் பங்கு விலைகள் கூடலாம்.எப் அண்ட் ஓவிற்கு சென்ற பங்குகள்: 39 பங்குகள் எப் அண்ட் ஓ செக்மெண்டில் 21ம் தேதி முதல் பட்டியலிடப்பட்டது. பலரும் இந்தப் பங்குகள் நன்றாக விலைகள் கூடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பட்டியலிடப்பட்ட தினத்தன்று மூன்று பங்குகள் வர்த்தகமே நடைபெறவில்லை. மற்ற பங்குகளில் பல 2 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கீழே விழுந்தன. 18 பங்குகளில் எப் அண்ட் ஓ டிரேடிங்கில் 50 டிரேட் மட்டும் தான் நடைபெற்றது.புதிய வெளியீடு: 22 கம்பெனிகள் புதிய வெளியீடுகள் கொண்டு வருவதற்காக செபியிடம் வாங்கியிருந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. சந்தையின் நிலைமை சரியில்லாததால், தற்போது புதிய வெளியீடுகள் கொண்டு வரும் பட்சத்தில் அது சரியாக விற்காது, முதலீட்டாளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற எண்ணத்திலே பலரும் தங்களது திட்டங்களை ஒத்தி வைத்துவிட்டனர். அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: சந்தையின் நிலைமை இன்னும் மேலேயும், கீழேயும் தான் இருக்கிறது. பலரும் பணங்களை கைகளில் வைத்துள்ளனர். சந்தையில் முதலீடு செய்ய மனது வரவில்லை.
ஏனெனில், வங்கிகளில் 10 சதவீதம் அளவு வட்டி கிடைக்கிறது. அதில் முதலீடு செய்து விட்டு அக்கடா என்று இருக்கலாம் என்று தான் நினைக்கின்றனர். இது தவிர, மியூச்சுவல் பண்டுகள் வைத்திருக்கும் பணங்களும் சந்தைக்கு வரவில்லை. சந்தை இப்போதுள்ள நிலையில் சிறு முதலீட்டாளர்களுக்கு சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை. அன்றாட வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் சற்று ஒதுங்கியிருப்பது நல்லது. கையில் உள்ள பங்குகள் லாபத்தை எட்டினால் விற்று விட்டு, சரிவுக்காக காத்திருப்பதே மேல்.அடுத்த வாரம்' டிரைவேடிவ் டிரேடிங்' முடிவு தேதி வருகிறது. அதுவரை இது போல மேலும், கீழுமாகத்தான் இருக்கும்.காத்திருப்போம் பொறுமையாக.

-சேதுராமன் சாத்தப்பன்-

நன்றி :தினமலர்


சம்பளம் அதிகம் நுகர்வு அதிகம்: பணவீக்கம் இன்னும் ஏறும்: பிரிட்டன் வங்கி கணிப்பு

கணிசமான துறைகளில் சம்பளம் அதிகமாக உள்ளது; அதனால், உணவுப் பொருட்கள் முதல் பல பொருட்களின் நுகர்வு பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பணவீக்கம் இந் தாண்டு இறுதி வரை குறைய வாய்ப்பே இல்லை!பிரிட்டனின் பிரபல வங்கி 'பெர்க்லே' இப்படி கணித்துள்ளது.அதன் சர்வே அறிக்கையில் கூறியிருப்பதாவது:பணவீக்கம் அதிகரிப்பு, அதன் விளைவாக உணவு, எண்ணெய் பொருட்களின் விலை உயர்வு எல்லாம் சர்வதேச அளவில் பரவலாக உள்ளது. இந்தியாவில் இப்போது பல துறையிலும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள் ளது. சர்வதேச அளவுக்கு சம்பளம் உயர்த் தப்பட்டுள்ள நிலையில், நுகர்வுப் பொருட்களும் சர்வதேச அளவில் இந்தியாவில் தான் அதிகரித்து வருகிறது.
பண வீக்கம், விலைவாசி ஏற்றம் இருந்தாலும், நுகர்வு மட்டும் இன்னும் குறையவே இல்லை. சம்பள உயர்வு அதிக அளவில் குறைக்கப் படவில்லை என்பதால், நுகர்வுப் பொருட்கள் சதவீதம் குறையவில்லை. பலரும் இன்னும் பொருட் களை வாங்கும் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை; சிக்கனத்தை கடைபிடிப்போர் எண்ணிக்கையும் குறைவு தான்.பணவீக்க உயர்வை அடுத்து, பழங்கள் விலை 9 சதவீதம் அதிகரித் துள்ளது. இதுபோல, பருப்புகள் விலை 2 சதவீதம், டீசல் விலை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. விலைவாசி ஏறியும், நுகர்வு சதவீதம் குறையாத நிலை உள்ளது. இந்த நிலை நீடித்தால், அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 17 சதவீதத்தை எட்டலாம் என்று அஞ்சப்படுகிறது.சாப்ட்வேர் உட்பட பல துறைகளில் இன்னமும் சம்பள உயர்வு 15 சதவீதம் வரை இருப்பதால், விலை வாசி ஏற்றம், கணிசமான பேருக்கு பெரிய பாதிப்பாகவே இல்லை. அதனால் அவர்களின் நுகர்வில் பெரிய அளவில் குறைவு ஏற்படவில்லை.
மொத்த வளர்ச்சி உயர்வு கடந்தாண்டு வரை 9 சதவீதமாக இருந்தது; இப்போது 8ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம், பல திட்டங்கள் தாமதமாகியும், முடங்கியும் உள்ளது தான்.பணவீக்க நிலை பங்குச்சந்தையையும் பாதித்து வருகிறது. இப்போது கண்டுள்ள சரிவுக்கே பலரும் வேதனைப்படுகின்றனர். பங்குச்சந்தையில் இன்னமும் சரிவு ஏற்படும்.இவ்வாறு சர்வேயில் கூறப்பட் டுள்ளது.
நன்றி : தினமலர்


Saturday, August 23, 2008

நானோ தொழிற்சாலை அமைக்க இங்கு வாருங்கள் : டாடாவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் அழைப்பு

டாடாவின் கனவு காரான நானோவின் தொழிற்சாலையை எங்கள் மாநிலத்தில் அமையுங்கள். நாங்கள் அதற்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து தருகிறோம் என்று மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஸ்முக் டாடாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் தொழிற்சாலை அமைத்துள்ள டாடா மோட்டார்ஸ், அங்கு தொடர்ந்து ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருவதை அடுத்து அதன் தலைவர் ரத்தன் டாடா நேற்று மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறி விடுவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து மகாராஷ்டிரா முதல்வர் தேஸ்முக் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து பிரச்னைகள் இருக்குமானால் அவர்கள் ( டாடா ) தாராளமாக இங்கு ( மகாராஷ்டிரா ) வரலாம். நாங்கள் அவர்களுக்கு தேவையான நிலம் கொடுப்பதோடு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றார். டாடாவுக்கு இங்கு ரத்தின கம்பள வரவேற்பு காத்திருக்கிறது என்றார் அவர். மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதியை குறிவைத்து அங்கு தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத டாடா மோட்டார்ஸ் சேர்மன் ரத்தன் டாடா, நேற்று கோல்கட்டாவில் பேசியபோது, இங்கு எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால் இங்கிருந்து வெளியேறி விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் இன்று கோல்கட்டா வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மேற்று வங்க முதல்வர் புத்ததேப் பட்டாசார்ஜிடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது தவிர சிங்கூரில் உள்ள பிரச்னைக்குறிய நில உரிமையாளர்கள் பலரும், டாடா இங்கிருந்து வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை என்றிருக்கிறார்கள். அங்குள்ள கிரிஷி ஜாமி ரக்ஸா கமிட்டியை சேர்ந்த பலர் டாடா தொழிற்சாலையில் இப்போது வேலை செய்து வருகிறார்கள். அவர்களும் டாடா இங்கிருந்தால் தான் எங்களது வாழ்க்கை தரம் உயரும் என்றிருக்கிறார்கள். சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் இதுவரை ரூ.1,500 கோடி முதலீடு செய்திருக்கிறது. அக்டோபரில் நானோ காரை வெளியிட திட்டமிட்டு அங்கு மும்முரமாக வேலை நடந்து வரும் நிலையில், நானோ தொழிற்சாலைக்காக எடுக்கப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் 24ம் தேதியில் இருந்து அங்கு தொடர் போராட்டம் நடத்துவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பாணர்ஜி அறிவித்திருக்கிறார்.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைய ஆரம்பித்தது

சில தினங்களாக உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை கொஞ்சம் குறைந்திருந்தது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.38 டாலர் குறைந்து 119.83 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 1.35 டாலர் குறைந்து 118.81 டாலராக இருக்கிறது. டாலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சொல்கிறார்கள். டாலரின் மதிப்பு குறைந்திருந்தால் மக்கள் டாலரில் முதலீடு செய்யாமல் ஆயில் போன்ற முக்கிய பணமதிப்புள்ள பொருட்களில் முதலீடு செய்கிறார்கள். டாலர் மதிப்பு உயர்ந்து விட்டால் மக்கள் மீண்டும் டாலரில் முதலீடு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பான ஓபக், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறது என்று வந்த தகவலாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்

'பணவீக்கம் 13 சதவீதத்தை தாண்டாது'

'பணவீக்கம் எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டுவிட்டது. 13 சதவீதத்திற்குள்ளாக கட்டுப்படுத்தப்படும். இனிவரும் வாரங்களில் பணவீக்கம் குறையத் துவங்கும்' என, மத்திய வர்த்தக அமைச்சகச் செயலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நாட்டின் பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 9ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.63 சதவீதத்தை எட்டியுள்ளது. 13 சதவீதம் இன்னும் தொட்டும் விடும் தூரம் தான் என்று சொல்லும் அளவிற்குப் போய்க்கொண்டு இருக்கிறது. மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்து மும்பையில் நேற்று நடந்த சர்வதேசக் கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய வர்த்தக அமைச்சகச் செயலர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:
அத்தியாவசியப் பொருட்கள் விலை குறித்த காபினட் கமிட்டி, தற்போதுள்ள விலைவாசி நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. விலையைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோதுமை மற்றும் அரிசி கையிருப்பு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் கையிருப்பும் போதுமான அளவில் உள்ளது. எனவே, பணவீக்கம் இனி வரும் வாரங்களில் குறையத் துவங்கும். எந்த சூழ்நிலையிலும் 13 சதவீதத்திற்கு மேல் செல்லாது.விலைக்கான காபினட் கமிட்டி, அடுத்த வாரம் மீண்டும் கூடி விவாதிக்க உள்ளது.இவ்வாறு ஜி.கே.பிள்ளை கூறினார்.
நன்றி : தினமலர்


'நானோ' கார் திட்டத்திலிருந்து வெளியேறுகிறேன்: தொழிலதிபர் டாடா அதிருப்தி


'சிங்கூர் டாடா கார் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டமும், வன்முறையும் தொடர்ந்தால், இங்கு கார் தயாரிக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு, மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறுவோம்' என தொழிலதிபர் ரத்தன் டாடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்கு வங்கம், சிங்கூரில் டாடா நிறுவனத்தின் கார் தொழிற்சாலை உள்ளது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமான ஒரு லட்ச ரூபாய் நானோ கார், இங்கு தான் தயாராகிறது. இந்த ஆண்டு அக்டோபரில் நானோ கார் விற்பனைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.சிங்கூரில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், 400 ஏக்கரை சம்பந்தபட்ட விவசாயிகளிடம் திரும்ப அளிக்கவில்லை எனில், இம்மாதம் 24ம் தேதியில் இருந்து தொழிற் சாலை அமைந்துள்ள பகுதியில் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இதனால், ரத்தன் டாடா கோபமடைந்துள்ளார். கோல்கட்டாவில் டாடா நிறுவன பொதுக் குழு கூட் டத்தில் அவரின் கோபம் வெளிப் பட்டது. அவர் பேசியதாவது:சிங்கூர் கார் தொழிற்சாலைக் காக, ஏற்கனவே ரூ.1,500 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. தொடர்ந்து, தொழிற்சாலை மீதும், அங்கு பணிபுரியும் மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தொழிலாளர்களை அடி வாங்குவதற்காக இங்கு அழைத்து வரவில்லை. பணியாற்றுவதற்காக வே அழைத்து வந்துள் ளோம். அசாதாரணமான சூழ்நிலையால் தொழிலாளர்களிடையே பீதி ஏற்பட்டுள் ளது. வன்முறையும், போராட்டங்களும் தொடருமானால், கார் தயாரிப்பை கைவிட்டு மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. இதை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். இந்த விஷயத்தில் நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை மேற்கு வங்க மக்கள் தீர்மானிக்க வேண்டும். மேற்கு வங்க மக்களுக்கு நாங்கள் விரும்பத்தகாத நபர்களா என்பதை அவர்களே தெரிவிக்கட்டும்.திட்டமிட்டபடி நானோ கார் குறித்த காலத்தில் விற்பனைக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், சிலர் இதற்கு எதிராக செயல்படுகின்றனர். மேற்கு வங்கத்தின் இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. ஒப்பந்த அடிப்படையிலேயே நிலங்களை வாங்கியுள்ளோம். சிங்கூரை விட்டு வெளியேறும் பட்சத்தில், மேற்கு வங்கத்தில் எங்களின் எதிர்கால முதலீடு கேள்விக் குறியாகும். மம்தா பானர்ஜியுடன் பேச்சு நடத்துவது குறித்து டாடா மோட்டார்ஸ் இயக்குனர் ரவிகாந்த் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இவ்வாறு ரத்தன் டாடா பேசினார்.இப்பிரச்னை குறித்து, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா கூறுகையில், எனக்கு மே.வங்க விவசாயிகள் மீது மட்டுமே அக்கறை. டாடா நிறுவனத்தினர் எழுதிய கடிதத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய அவசியம் இல்லை' என்று கூறியுள்ளார்.டாடா தெரிவித்த கருத்துக்களால், மே.வங்க தொழிலதிபர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.
நன்றி : தினமலர்


Friday, August 22, 2008

அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோன் விலை மிக அதிகமாக இருப்பது ஏன் ?

கடந்த ஜூன் மாதமே அமெரிக்காவில் வந்து விட்ட ஐபோன், இன்றுதான் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இவ்வளவு காலதாமதமாக இந்தியாவுக்கு வந்திருந்தாலும், அமெரிக்காவில் 199 டாலருக்கு ( சுமார் ரூ.8,300 ) விற்கப்படும் ஐபோன் இந்தியாவில் மட்டும் ஏன் ரூ.31,000 க்கு விற்கப்படுகிறது?. ஏன் இவ்வளவு விலை வித்தியாசம் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கைதான். இதற்கு பதிலளித்த ஏர்டெல் மொபிலிட்டியின் தலைவர் சஞ்சய் கபூர், இது விஷயத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்று இருக்கிறது. அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள் ஐபோன் 3 வருட லாக் இன் பீரியட்டில் வருகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. அமெரிக்காவில் ஒருவர் 199 டாலர் கொடுத்து ஐபோன் ஒன்றை வாங்குகிறார் என்றால் அவர் அதன் ஹார்ட்வேரை ( ஹேண்ட்செட் ) மட்டுமே வாங்கி இருக்கிறார் என்று அர்த்தம். பின்னர் அந்த ஹேண்ட்செட்டை ஆக்டிவேட் செய்ய அவர் 150 டாலர் செலுத்த வேண்டும். அத்துடன் முடிந்து விடாது. பின்னர் அவர் வருடா வருடம் அதன் ஏதாவது ஒரு பிளானை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அந்த கட்டணம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சென்று விடும். ஆனால் இந்தியாவில் ரூ.31,000 க்கு விற்கப்படும் ஐபோனில் எல்லாமே அடங்கி விடுகிறது. இன்னொரு விஷயத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விற்பனை மூலம் ஏர்டெல்லுக்கோ வோடபோனுக்கோ எந்த வித லாபமும் கிடைக்கப்போவது இல்லை என்றார் அவர். இந்தியாவில் ஏர்டெல் மட்டும் வோடபோன் நிறுவனங்கள், 8 ஜிபி ஐபோனை ரூ.31,000 க்கும் 16 ஜிபி ஐபோனை ரூ.36,000 க்கும் விற்பனை செய்கிறது.
நன்றி : தினமலர்


பங்கு சந்தையில் முன்னேற்றம் : ஒரு சதவீதம் உயர்ந்தது

மும்பை பங்கு சந்தை இன்று முன்னேறி இருந்தது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சம் உயர்ந்தும் கொஞ்சம் குறைந்தும் தள்ளாடிக் கொண்டு இருந்த பங்கு சந்தை, மதியத்திற்குப்பின் உயர்ந்த நிலையிலேயே இருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 157.76 புள்ளிகள் ( 1.11 சதவீதம் ) உயர்ந்து 14,401.49 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 43.60 புள்ளிகள் ( 1.02 சதவீதம் ) உயர்ந்து 4,327.45 புள்ளிகளில் முடிந்தது. 4300 புள்ளிகளுக்கும் கீழே போயிருந்த நிப்டி இன்று மீண்டும் 4300க்கு மேல் சென்று விட்டது. பணவீக்கம் 12.44 சதவீதத்தில் இருந்து 12.63 சதவீதமாக உயர்ந்திருந்தது சிறிது பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ஐரோப்பிய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் அது மதியத்திற்கு மேல் இந்திய பங்கு சந்தையிலும் ஏற்ற நிலையை கொண்டு வந்தது.
நன்றி : தினமலர்


இனி தவனை முறையிலும் ஐபோன் வாங்கலாம் : வோடபோன் ஏற்பாடு

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனமான வோடபோன் நிறுவனம், இந்தியாவில் இன்று ஆப்பிள் ஐபோன் விற்பனையை துவங்கி இருக்கிறது. வோடபோன் விற்பனை செய்யும் ஐபோன் ரூ.31,000 மற்றும் ரூ.36,000 விலையில் இருப்பதால், அவ்வளவு தொகை கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கான தவனை முறையில் ஐபோன் வாங்கவும் அந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்காக வோடபோன் நிறுவனம், ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் பார்க்ளேஸ் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆறு அல்லது 12 மாத தவனையில் ஐபோனை விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறது. அதாவது ஐபோனை தவனை முறையில் வாங்க விரும்புபவர்கள் இந்த மூன்று பேங்க்களில் ஏதாவது ஒன்றின் கிரிடிட் கார்டு மூலமாக வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கான தொகையை 6 அல்லது 12 மாத தவனைகளில் ( இ எம் ஐ ) செலுத்த வேண்டும். இதற்கான வட்டி, மற்ற கடனுக்கு விதிக்கப்படும் வட்டியை விட குறைவாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஐ சி ஐ சி ஐ வங்கியுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து நாட்டின் மிகப்பெரிய கிரிடிட் கார்டு நிறுவனமான சிட்டி பேங்க்குடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. வோடபோனை பொருத்தவரை நாட்டின் 50 முக்கிய நகரங்களில் 250 கடைகளில் ஐபோன் விற்கப்படுகிறது. இது தவிர ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் இருக்கும் அதன் ஸ்டோர்களில் ஐபோனை வைத்திருக்கிறது. டில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் பெங்களுருவில் இருக்கும் வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வைத்தால் அவர்களுக்கு இன்றிரவு ஐபோன் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இம்மாதிரி இதுவரை 2,000 பேர் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்களாம். ஏர்டெல் நிறுவனமோ இதுவரை 2,00,000 பேரிடமிருந்து ஆர்டர் வாங்கி வைத்திருப்பதாக சொல்கிறது. அவர்கள் நாளைதான் ஐபோனை விற்பனை செய்கிறார்கள். இந்தியாவில் 65 நகரங்களில் ஏர்டெல் ஐபோனை விற்பனை செய்கிறது. இது தவிர ஐபோன் வாங்குபவர்களுக்கு 50 எம்பி வரை இலவசமாக டவுன்லோட் செய்து கொடுக்கிறார்கள்.இது தவிர வேறு சில சலுகைகளையும் அது அதன் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. ஆனால் வோடபோனை போல ஏர்டெல் நிறுவனத்திற்கு இ எம் ஐ மூலம் ஐபோனை விற்பனை செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை மிக அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் 199 டாலருக்கு ( சுமார் ரூ.8,300 ) ஐபோன் கிடைக்கிறது. இது தவிர வருடத்திற்கு 99 டாலரும் ( சுமார் ரூ.4,200 ) சேவை கட்டணம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் விலை குறைவாக இருக்கிறதே என்று அங்கு ஐபோனை வாங்கி அதை இந்தியாவில் பயன்படுத்த முடியாது. எனென்றால் அங்கு வாங்கும் ஐபோன்கள் இங்கு வேலை செய்யாது. இங்கு வேலை செய்யாதவாறு அது லாக் செய்யப்பட்டிருக்கும்.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 12.63 சதவீதமாக உயர்ந்தது

ஆகஸ்ட் 9ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 12.63 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது இதற்கு முந்தைய வாரத்தில் 12.44 சதவீதமாக இருந்தது. பழங்கள், காய்கறிகள், பால், டீ, பருப்பு வகைகள் போன்ற உணவுப்பொருட்கள் மற்றும் காட்டர் யார்ன், சிமென்ட் போன்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பணவீக்கம், கடந்த வாரத்தை விட 0.19 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இது கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் 4.24 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது. ஆகஸ்ட 9ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் காட்டன் யார்ன் விலை 8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பாலியஸ்டர் விலை 7 சதவீதம் உயர்ந்திருக்கிறது.உணவுப்பொருட்கள் விஷயத்தில் டீ விலை 2 சதவீதம், பால் விலை ஒரு சதவீதம்,பருப்பு விலை ஒரு சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே நேரம் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை 6 சதவீதம், சூரியகாந்தி எண்ணெய் விலை 2 சதவீதம் குறைந்திருந்தது. இது தவிர முட்டை, கடல் உணவு மற்றும் இறைச்சி விலையும் குறைந்திருந்தது.
நன்றி : தினமலர்


புதிதாக மூலதனம் அதிகரித்தால் வரி தொழிலதிபர்கள் பெரும் அதிருப்தி

வருமான வரித்துறையினரின் புதிய கெடுபிடி, கம்பெனிகளை கலக்கம் அடையச் செய்திருக்கிறது. கடந்த நிதியாண்டில், ரூ.50 லட்சத்திற்கு அதிகமாக கம்பெனியின் மூலதன முதலீடு அதிகரித்திருக்கும் பட்சத்தில், அதற்கு வரி உண்டு. மத்திய அரசின் நேரடி வரிவிதிப்பு குழுமம் (சி.பி.டி.டி.,) வெளியிட்ட இந்த ஆணை, தகவல் கேட்டுப் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்பது சிறப்பம்சமாகும். இப்புதிய நெருக்கடி கண்டு தொழிலதிபர்கள் அதிர்ந்துள்ளனர்.பொதுவாக, வரிவசூலில் ஆய்வுகளுக் கான நடைமுறைகள் ஆண்டு தோறும் விளக்க அறிக்கையாக வெளிவரும். ஆனால், இந்த ஆண்டு இப்புதிய வரிவிதிப்பு திட்டம் பற்றி வெளியில் தகவல் கசிய முடியாதபடி செய்திருக்கின்றனர். அப்படிப் பார்த்தால், இப்புதிய திட்டத்தில், பொருட்களை சப்ளை செய்தவர்களுக்கு ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக கம்பெனி தர நேரிட்ட போதும் அல்லது விற்றுமுதல் 30 சதவீதம் அதிகரித்தாலோ இந்த கெடுபிடி பாயும். கடந்த நிதியாண்டில் ரூ.50 லட்சத்திற்கு மேல் மூலதனம் அதிகரிக் கும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தாலோ அல்லது 2008-2009ம் ஆண்டில் சம்பந்தப் பட்டிருந்தாலோ, வரித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.அது மட்டுமல்ல, சேமிப்பு வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக வைத்திருந்தாலும், அசையாச் சொத்து ரூ.30 லட்சம் வரை வாங்கியதாக ஆண்டு தகவல் அறிக்கையில் காட்டும் போதும் வந்துவிடும் ஆபத்து. அதே சமயம் வரி கட்டும் போது, காட்டப்படும் கணக்குகளில் இவை இருந்தால் தப்பிக்கலாம்.எல்லாவற்றையும் விட, வரி செலுத்துவோரின் கணக்குகளை இப்புதிய சட்டப்படி பரிசீலிக்க, வரித்துறை களப்பணி அதிகாரிகளுக்கு அதிகாரம் தந்திருப்பது, அதிகார துஷ்பிரயோகத்திற்கு நிச்சயம் வழிவகுக்கும். மேலும், விவசாயம் மூலம் வருமானம் பெறுபவர் யாரேனும் இருந்தால், அவர்களும் இதில் சிக்குவர். விவசாய வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் வந்தால், இப்புதிய சட்டப்படி ஆய்வு நடக்கும்.
நன்றி : தினமலர்


Thursday, August 21, 2008

எலக்ட்ரிக் காரை வெளியிடுகிறது ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி

இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி, 2013ல் எலக்ட்ரிக் காரை தயாரித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதற்கிடையில் பேட்டரியில் ஓடும் மூன்று சக்கர வாகனம் ஒன்றையும் அது வெளியிட இருக்கிறது. மேலும் அதன் இ பைக் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த நிதி ஆண்டில் புதிதாக இரண்டு ஹைஸ்பீடு இ பைக்களை அறிமுகப்படுத்துகிறது.சோலார் எனர்ஜியில் ஓடும் வாகனங்களை தயாரிக்கும் முயற்சியிலும் ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி ஈடுபட இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம். எனவே வாகனங்களை எலக்ட்ரிக் மயமாக்கும் ஆராய்ச்சிக்கு அதிக அளவு முதலீடு செய்கிறோம். எலக்ட்ரிக் வாகன சந்தையில் நாங்கள் முன்னணியில் இருக்க விரும்புகிறோம் என்றார் ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனியில் தலைமை செயல் அதிகாரி சோகிந்தர் கில். அவர் மேலும் தெரிவித்தபோது, இன்னும் ஐந்து வருடங்களில் மூன்று மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் காரை இங்கு அறிமுகப்படுத்தி விடுவோம் என்றார். இப்போது அவர்கள் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே இருக்கும் பேட்டரி காருக்கு செலவு அதிகமாகிறது. எனவே அது நமக்கு லாபகரமாக இருக்காது. எனவேதான் நாங்கள் கெப்பாசிடர்களை பயன்படுத்த இருக்கிறோம். அதன் மூலம் உடனுக்குடன் சார்ஜ் செய்து கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம் என்றார் கில். இந்திய கண்டிஷனுக்கு ஒத்து வரக்கூடிய வகையிலும் நாங்கள் காரை வடிவமைக்கிறோம் என்றார் அவர். இவர்களின் மூன்று மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் கார்கள் லூதியானாவில் இருக்கும் அவர்களது தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட இருக்கிறது.
நன்றி : தினமலர்

கடும் சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை

பணவீக்க விகிதம் மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் இன்றைய பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்கு சந்தையில் காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைய துவங்கிய சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 434.50 புள்ளிகள் ( 2.96 சதவீதம் ) குறைந்து 14,243.73 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 131.90 புள்ளிகள் குறைந்து 4,283.85 புள்ளிகளில் முடிந்துள்ளது. சிஎன்பிசி - டிவி 18 எடுத்த கணிப்பில், ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 12.44 சதவீதத்தில் இருந்து 12.62 சதவீதமாக உயர்ந்து விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இன்று பங்கு சந்தை சரிவை சந்திக்க வேண்டியதாகி விட்டது. மேலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தையிலும் வீழ்ச்சியே காணப்பட்டது. சீனாவின் ஷாங்கை - 3.63 சதவீதம், ஹாங்காங்கின் ஹேங் செங் - 2.46 சதவீதம், ஜப்பானின் நிக்கி - 0.77 சதவீதம், சிங்கப்பூரின் ஸ்டெரியிட்ஸ் டைம்ஸ் - 1.49 சதவீதம், கொரியாவின் கோஸ்பி - 1.83 சதவீதம் மற்றும் தைவானின் தைவான் வெயிட்டட் - 1.74 சதவீதம் குறைந்திருந்தது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தது


சர்வதேச சந்தையில் இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர ஆரம்பித்து விட்டது. நியுயார்க் மெர்கன்டைல் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.14 டாலர் ( அல்லது 1 சதவீதம் ) உயர்ந்து 116.70 டாலராக இருக்கிறது.லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 89 சென்ட் ( அல்லது 0.8 சதவீதம் ) உயர்ந்து 115.25 டாலராக இருக்கிறது. போலந்தில் ஏவுகணை தடுப்பு கருவி ஒன்றை நிறுவ அமெரிக்கா போலந்து அரசுடன் ஒப்பந்தம் செய்திருப்பதை அடுத்து ரஷ்யா கோபமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் இருந்து சந்தைக்கு வரும் கச்சா எண்ணெய் அளவு குறையும் என்கிறார்கள். மேலும் ஜார்ஜியா மீது ரஷ்யா படையெடுத்ததால் காஸ்பியன் கடல் பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் 1.1 மில்லியன் பேரல்கள் குறைந்திருக்கிறது. இது தவிர அமெரிக்காவின் எண்ணெய் சப்ளையிலும் கடந்த வாரம் 6.2 மில்லியன் பேரல்கள் குறைந்திருப்பதாக சொல்கிறார்கள்.ஜூலை 11ம் தேதி, வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவாக 147.27 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 21 சதவீதம் குறைந்திருக்கிறது.

நன்றி : தினமலர்


ஒலிம்பிக் போட்டியால் அங்குள்ள ஹோட்டல்களுக்கு கொழுத்த வருமானம்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியால் அங்குள்ள ஹோட்டல்கள் பார்வையாளர் களால் நிரம்பி வழிகின்றன. இதனால் அங்குள்ள ஹோட்டல்கள் நல்ல லாபம் பார்த்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமான ஆகஸ்ட் 8ம் தேதி இரவு பெய்ஜிங்கில் இருக்கும் ஹோட்டல்களில், ஒரு ரூமில் இருந்து கிடைக்கும் வருமானம் ( ரெவன்யூ பெர் அவெய்லபிள் ரூம் ) 546 சதவீதம் உயர்ந்திருந்தது. ஹோட்டல்களில் ரூம் தேவைப்படுவோர் எண்ணிக்கை 86.3 சதவீதமும், ரூம் கட்டணம் 421 சதவீதமும் உயர்ந்திருந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சராசரியாக 87 டாலராக இருந்த ரூம் கட்டணம், இந்த வருடம் ஆகஸ்ட் 8ம் தேதி 451 டாலராக உயர்ந்து விட்டது. ஒலிம்பிக் போட்டி ஆரம்பமான நாட்களை ஒட்டிய இரு தினங்களில் மட்டும் அங்குள்ள ஹோட்டல்களில் ரூம்களுக்கான தேவை ( டிமாண்ட் ) அதிகரித்ததோடு ரூம் வாடகையும் அதிகரித்திருக்கிறது. ஆகஸ்ட் 24ம் தேதிதான் ஒலிம்பிக் முடிவடைகிறது என்பதால் அதுவரை அங்குள்ள ஹோட்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்.
நன்றி : தினமலர்

தங்கத்திற்கு சென்றது பங்குச் சந்தைக்கு போக வேண்டிய பணம்

சந்தைக்கு இந்த வாரத்துவக்கமே நஷ்டமாகத்தான் இருந்தது. திங்களும், நேற்று முன்தினமும் சந்தை கீழேயே இருந்தது. நேற்று தான் காப்பாற்றியது என்றே கூற வேண்டும். அமெரிக்க சந்தைகளில் மறுபடி சிறிது பயம் தெரிகிறது. அதாவது, அங்கு மறுபடி கொடுத்துள்ள கடன்களில் இருந்து ஏதும் பூதம் கிளம்புமோ என்ற பயம் பலருக்கும் இருக்கிறது. அது, உலகளவில் பங்குச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது உண்மை. மறுபடி ஒரு சப்-பிரைம் ப்ராப்ளமா? தாங்காது உலகம். இது தவிர பணவீக்க பயம் யாருக்கும் தெளியவில்லை. இதனால், கடந்த ஒரு வாரமாக இறங்கி வந்த வங்கிப் பங்குகள் நேற்று முன்தினம் சிறிது ஏற்றம் கண்டன. சர்க்கரை பங்குகளும் இனித்தன. இருந்தும் மும்பை பங்குச் சந்தை நேற்று முன்தினம் 102 புள்ளிகள் குறைந்தது. பெர்ட்டிலைசர் மானியங்களுக்காக 22,000 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட முடிவுகள் மத்தியில் எடுக்கப்பட்டதால் நேற்று பெர்ட்டிலைசர் கம்பெனி பங்குகள் மேலே சென்றன. தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த சந்தைக்கு நேற்று தான் சிறிது உயிர் வந்தது. குறிப்பாக ரிலையன்ஸ், கிராசிம், பி.எச்.இ.எல்., ஆகிய கம்பெனிகள் மேலே சென்றன. நேற்று முடிவாக மும்பை பங்குச் சந்தை 134 புள்ளிகள் கூடி 14,678 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 47 புள்ளிகள் கூடி 4,415 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. பிரேசிலும், பங்குச் சந்தையும்: ஒரு காலத்தில் யாருக்கும் வேண்டாத நாடாக இருந்த பிரேசில் இன்று உலகளவில் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. ஒரு காலத்தில் (1990) அங்கு பணவீக்கம் 6,800 சதவீதம் அளவு இருந்தது. தற்போது 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கிறது. கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற நாடு என்று தற்போது அழைக்கப்படுகிறது. ஏனெனில், அங்கு தான் தோண்டுமிடமெல்லாம் எண்ணெய் வளமும், இரும்பு தாது வளமும் கிடைக்கிறது. கூடிவந்த எண்ணெய், இரும்பு தாது விலைகளால் அங்கும் பங்குச் சந்தை கடந்த வருடம் உயர்ந்து கொண்டே சென்றது. ஆனால், இவ்வளவு இருந்தும் இந்த வருடம் அங்கும் பங்குச் சந்தை கீழே செல்ல ஆரம்பித்தது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.
தங்கம் வாங்கலாமா தங்கம்?
தங்கம், டாலர் மதிப்பில் பார்த்தால் கடந்த மாதம் அதிகபட்சமாக அவுன்ஸ் 1,030 டாலரில் இருந்தது. கடந்த வாரம் குறைந்தபட்சமாக 770 டாலர் அளவு சென்று தற்போது 815 டாலர் அளவில் வந்து நிற்கிறது. அதே சமயம் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு டாலர் 42.30 அளவில் இருந்தது. தற்போது, 43.73 அளவு நேற்று இருக்கிறது. அதாவது, டாலருக்கு ஒரு ரூபாய் 43 பைசா கூடியுள்ளது. ஒரு ஆச்சரியமான உயர்வு இது. இந்த அளவு உயர்வு ஆச்சரியம் அளித்தாலும், தங்கம் விலை டாலர் மதிப்பிலேயே அளவிடப்படுவதால், விலை 11,400 முதல் 11,900 அளவிலேயே இருந்து வருகிறது (10 கிராம், 24 காரட் தங்கம்). தங்கத்தின் சமீபத்திய ஏற்ற, இறக் கத்திற்கு டாலர், ரூபாய் மதிப்பும் ஒரு காரணம். இன்னொரு காரணம் டிமாண்ட். விலை குறைகிறது, இது தான் வாங்குவதற்கு சமயம் என்று மக்கள் சென்ற வாரமெல்லாம் கடைகளில் அலை மோதினர். பங்குச் சந்தைக்கு வரவேண்டிய பணத்தில் பாதியளவாவது தங்கத்தில் சென்றிருக்கும். ஒரு டாலருக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு ரூபாய் 43 பைசா வரை கூடியிருந்தாலும், அது பங்குச் சந்தையில் ஏற்றுமதி, சாப்ட்வேர் கம்பெனியின் பங்குகளை மேலேற்றாதது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்?:
சந்தையில் பல பங்குகள் மலிவாகக் கிடைக்கின்றன. ஆனால், மலிவாகக் கிடைக்கிறதே என்று வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. இது தங்கம் போல் இல்லை. தங்கம் விலை குறைந்ததும் பலர் வரிசையில் நின்று வாங்கினர். ஆனால், பங்குச் சந்தை குறைந்தால் வாங்குபவர்கள் சிலரும் காணாமல் போய்விடுவர். ஏனெனில் கடந்த வருடத்தில் எல்லாரும் குறைந்த காலத்தில் அதிகம் பங்குச் சந்தையில் சம்பாதித்தனர். அதுவே ரீபிட் ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அந்தக் காலம் திரும்பி வருமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும், பங்குச் சந்தையை நீண்ட காலம், அதாவது ஒரு தென்னம் கன்றையோ அல்லது ரப்பர் கன்றையோ நடும் போது சில வருடங்களுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நட்டு பாதுகாப்போம் அல்லவா, அதுபோல பாதுகாத்தால் பங்குச் சந்தையும் நீண்டகாலத்தில் பலன் தரும். கடந்த 11ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தை 15,303 புள்ளிகளில் இருந்தது, தற்போது கிட்டதட்ட 825 புள்ளிகள் குறைந்து 14,678 புள்ளிகளில் இருக்கிறது. இருந்தாலும் வாங்குபவர்கள் அதிகம் இல்லை. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற கதை தான்.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்