சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 113 டாலராக குறைந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாது என்று பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கடந்த ஜூலை 11ம் தேதி பேரலுக்கு 147 டாலருக்கும் மேல் இருந்த கச்சா எண்ணெய் விலை, நேற்று 113 டாலர்தான். இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவிடம் கேட்டபோது, இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் கூட, இந்தியாவில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, மார்க்கெட் விலையை விட குறைவாகத்தான் இருக்கிறது. எனவே இதற்கு மேலும் விலையை குறைக்க முடியாது என்றார். மேலும் இந்தியாவில் டீசலின் தேவை, எதிர்பார்த்ததை விட 23 - 24 சதவீதம் அதிகரித்திருக்கிறது. எனவேதான் சில இடங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.
நன்றி : தினமலர்
Wednesday, August 13, 2008
பெட்ரோல் விலையை குறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை : முரளி தியோரா
Labels:
கச்சா எண்ணெய் விலை,
டீசல் விலை,
தகவல்,
பெட்ரோல்
அமெரிக்காவில் பெட்ரோல் உபயோகம் குறைந்ததால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்தது
உலகிலேயே அதிக அளவு பெட்ரோலை உபயோகிக்கும் நாடு அமெரிக்காதான். முன்பு பெட்ரோல் விலை குறைவாக இருந்ததால் இஸ்டத்திற்கு செலவழித்தார்கள். இப்போதோ பேரலுக்கு 147 டாலர் வரை விலை உயர்ந்து கொண்டே போனதால் பெட்ரோல் உபயோகத்தை குறைக்க ஆரம்பித்து விட்டனர். அதனால் இப்போது கச்சா எண்ணெய் விலையும் குறைகிறது என்கிறார்கள். நேற்றைய சந்தையில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 112.31 டாலர் வரை குறைந்து பின்னர் 113.01 டாலரில் முடிந்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவு குறைவு. அமெரிக்க அரசு வெளியிட்ட எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்டிரேஷன் ( ஐ இ ஏ ) ரிப்போர்ட்டில், கடந்த 26 ஆண்டுகளில் இல்லத அளவாக அமெரிக்காவில் பெட்ரோல் உபயோகம் குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்காவின் பெட்ரோல் உபயோகம் நாள் ஒன்றுக்கு 8,00,000 பேரல்கள் குறைந்திருக்கிறது.அமெரிக்காவில் இப்போதிருக்கும் பொருளாதார மந்த நிலையே அடுத்த வருடமும் நீடித்தால், கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துதான் இருந்தால், அடுத்த வருடத்தில் அமெரிக்காவின் பெட்ரோல் உபயோகம் நாள் ஒன்றுக்கு 20.08 மில்லியன் பேரல்களாக ( 2,00,80,000 பேரல்கள் ) மட்டுமே இருக்கும் என்று ஐ இ ஏ அறிக்கை சொல்கிறது. ரஷ்யாவும் ஜார்ஜியாவும் சண்டையை விலக்கிக்கொள்வதாக அறிவித்திருப்பதும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஒரு காரணம். ஏனென்றால் இவர்களது சண்டையால் ஜார்ஜியா வழியாக செல்லும் மிக முக்கியமான எண்ணெய் பைப்லைன் ஒன்றுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் முன்பு இருந்தது.இப்போது அந்த அச்சம் போய் விட்டது. ஜார்ஜியா ஒரு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு இல்லை என்றாலும் அது வழியாக முக்கியமான பைப்பைன் ஒன்று ஆசர்பைஜானில் இருந்து துருக்கிக்கு செல்கிறது. இந்த பைப்லைன் வழியாக நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஆசர்பைஜானில் இருந்து துருக்கிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்
நன்றி : தினமலர்
Labels:
கச்சா எண்ணெய் விலை,
தகவல்,
வணிகம்
பங்குச் சந்தையில் தள்ளாட்டம்
கச்சா எண்ணெய் விலை சர்வதேச அள வில் வெகுவாக சரிந்த போதும், அதன் தாக் கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை. மாறாக தொழில் வளர்ச்சி புள்ளிவிவரத்தை காரணம் காட்டி, பங்குச் சந்தை புரோக்கர்களின் கைங்கரியத்தால் சரிவு ஏற் பட்டது.சர்வதேச அளவில் கடந்த வாரத்திலிருந்து கச்சா எண்ணெய் விலை சரிந்த போ தெல் லாம் இந்திய பங்குச் சந்தைகளில் நல்ல ஏற் றத்தைப் பார்க்க முடிந்தது. ஆனால், நேற்று கச்சா எண்ணெய் விலை பேரல் 113 டாலர் வரை குறைந்து வந்தது. இப்படி குறையும் சமயத்தில் தங்கத்தின் விலை குறைந்து, பங் குச் சந்தையில் ஏற்றத்தைப் பார்க்க முடியும்.தங்கத்தின் விலை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த போதும், பங்குச் சந்தை மட்டும் சறுக்கியது. ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவை காரணமாகக் கூறினாலும், இந்திய தொழில் உற்பத்தி புள்ளிவிவரம் வெளியானதை கையில் எடுத்துக் கொண்டு பெரும்பாலான ஆபரேட்டர்கள் தங்கள் வேலையை காண்பித்து விட்டனர்.கடந்த ஜூன் மாதம், தொழில் உற்பத்தி வளர்ச்சி 5.4 சதவீதமாக இருந்ததாக புள்ளி விவர பட்டியல் வெளியானது. மே மாதத்துடன் ஒப்பிடும் போது முன்னேற்றம் இருந்தாலும், கடந்த ஆண்டு ஒப்பிடும் போது இதே மாதத்தில்8.9 சதவீதமாக இருந்தது. கடைசியில் வர்த்தக முடிவில் 291.79 புள்ளிகள் சரிந்து மும்பை பங்குச் சந்தை 15,212 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தை68 புள்ளிகள் சரிந்து 4,552 புள்ளிகளில் நிலை பெற்றது.இப்போதெல்லாம் தொடர்ந்து ஆயிரம் புள்ளிகள் வரை ஏறினாலே, லாபம் கருதி விற்க வருவது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தான். இவர்கள் தான் தற்போதைய ஏற்ற இறக்கத்திற்கு காரணம். தாங்கள் வாங்கிய பங்குகளின் விலை 10 முதல் 20 சதவீதம் ஏறியிருந்தாலே விற்று விடுகின்றனர்.இப்போதைய நிலையில் 15,800 புள்ளிகளுக்குள் மும்பை பங்குச் சந்தை ஏறுவதும், பின்னர் இறங்குவதுமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதை, தொடர்ந்து சில நாட்களுக்கு சிறு முதலீட்டாளர்கள் கண்காணித்தாலே, சூட்சுமத்தை புரிந்து கொண்டு விடலாம்.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்,
பங்கு சந்தை நிலவரம்,
வணிகம்
Subscribe to:
Posts (Atom)