அணுசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அமெரிக்காவுடன் செய்துகொள்ள, அனைத்துத் தரப்பு எதிர்ப்புகளையும் மீறி, பிடிவாதம் காட்டி அதைச் சாதித்துக் காட்டியவர் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்த உடன்பாடு இந்தியாவின் மின்சாரத் தேவைகளை முற்றிலுமாக நிறைவேற்ற உதவும் அமுதசுரபி என்று இந்திய ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்பட்டது. இதன் இணைப்பாக சர்வதேச அணுசக்திக் குழுமத்துடன் ஓர் உடன்பாடு, அணுசக்தி வர்த்தக நாடுகள் குழுவுடன் மற்றோர் உடன்பாடு என்றும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த அணுசக்தி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும், நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடருவதன் விளைவாகப் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவுடனான அணுசக்தித் துறை ஒத்துழைப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றம் "ஹைட் சட்டம்' என்ற ஒன்றை ஏற்கெனவே நிறைவேற்றியிருந்தது. இப்போது அணுசக்தி தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்திலும் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்கா தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு, அதையும் மன்மோகன் சிங் அரசு சிரமேற்கொண்டு செயல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதன் பின்னணிதான் என்ன? அணுமின் உற்பத்திக் கூடங்களை நிறுவி, மின்சார உற்பத்தியில் ஈடுபடுகையில், விபத்துக்கான சாத்தியக்கூறுகள் இருப்பது இயல்பே. அனல்-புனல் மின் நிலையங்களில்கூட விபத்துகள் நிகழ வாய்ப்பு உண்டு என்றாலும், அணுமின் நிலைய விபத்து மிகுதியான அபாயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அமெரிக்காவின் "மூன்று மைல் தீவு' அணுமின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்ததும், ரஷியாவின் "செர்னோபில்' அணுமின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்டதும், இத்தகைய விபத்துகளின் அபாய விளைவுகள் எந்த அளவுக்குக் கடுமையாக இருக்கும் என்பதற்கான அனுபவப் பாடங்களாகும்.
இந்த அபாயத்தைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் எச்சரிக்கையோடும், பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் அணுமின் உற்பத்தியில் ஈடுபட வேண்டியது அவசியம்; அது சாத்தியமானதும்கூட. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடுமானால், அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதும் தவிர்க்க முடியாத கடமைகள்.
÷எதிர்பாராத அபாயங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடாக வந்தவைதான் காப்பீட்டுத் திட்டங்கள். இதற்காக சர்வதேச அளவில் சில கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன; உலக நாடுகள் பலவற்றில் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. சர்வதேச அணுசக்திக் கழகத்தின் முயற்சியின் விளைவாக 1963-ல் அணுசக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்பாடு ஒன்று உருவாக்கப்பட்டு அது 1997 முதல் அமலாக்கத்துக்கு வந்தது.
÷வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பான, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஸ்தாபனத்தின் முயற்சியில் அணுமின் சக்தித் துறையில் மூன்றாவது நபர் கடப்பாடுக்கான பாரிஸ் கோட்பாடு 1960-ல் உருவாக்கப்பட்டு, 1963-ல் புரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் செழுமைப்படுத்தப்பட்டு, 1968 முதல் அமலுக்கு வந்தது. இந்த வியன்னா மற்றும் பாரிஸ் கோட்பாடுகள் இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான வரையறையை ஏற்படுத்த 1988-ல் செர்னோபில் விபத்துக்குப் பிறகு ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 1997-ல், சர்வதேச அணுசக்திக் கழக உறுப்பு நாடுகள் அணுசக்தி பாதிப்புக்கான கூடுதல் இழப்பீட்டுக்கான கோட்பாடு ஒன்றையும் நிறைவேற்றியுள்ளன. இது இன்னமும் அமலாக்கத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
÷இந்த சர்வதேசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட நாடுகள் சில, தத்தம் நாட்டுக்குப் பொருத்தமான சட்டங்களை இது தொடர்பாக நிறைவேற்றியுள்ளன. பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா போன்றவை பாரிஸ் அல்லது வியன்னா கோட்பாடுகளை ஏற்றுச் சட்டமியற்றிய நாடுகளில் சில. சர்வதேசக் கோட்பாடு எதனையும் அங்கீகரிக்காமலும், சொந்த நாட்டில் சட்டமியற்றாமலும் அணுசக்தித் துறையில் ஈடுபட்டு வரும் நாடாக சீனா உள்ளது.
÷ரஷியா, சீனா போன்ற நாடுகள் அணுமின் துறையில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை அரசுத் துறையில் மட்டுமே மேற்கொள்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளில் பிரதானமாக அணுமின்துறை உற்பத்தி - வர்த்தகத்தில் தனியார் துறையே ஈடுபட்டு வருகிறது. அணுமின் விபத்து காரணமான பாதிப்புகளுக்கும் முழுமையான நிவாரணம் அல்லது இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் என்பது பொதுவான ஒன்று. எனினும், காப்பீட்டுத் திட்டங்களின் கீழ், இந்த அணுமின் பாதிப்பு தொடர்பான கடப்பாடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே, இது குறித்துச் சட்டமியற்றிய நாடுகளின் நோக்கமாக அமைந்தது.
÷அணுமின் உற்பத்தித் துறையில் ஈடுபடுகிற நிறுவனங்கள் இருவகைப்படும். அணு உலைகள், இதர சாதனங்கள், எரிபொருள், எரிபொருள் பயன்பாடு தொடர்பான தொழில் நுணுக்கச் சேவைகள் போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்கள் ஒருவகை; இவற்றைப் பயன்படுத்தி அணுமின் நிலையத்தை நிறுவி இயக்குகிற, அதைப் பராமரிக்கிற, உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்று விநியோகிக்கிற பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் இரண்டாவது வகை. அணுமின் விபத்து பாதிப்பு குறித்த குடிமைக் கடப்பாடுகள் முதல் வகை நிறுவனங்கள் மீது சுமத்தப்படக்கூடாது என்பதுதான், இதுதொடர்பாக 1957-ம் ஆண்டிலேயே சட்டமியற்றிய அமெரிக்க நாடு எடுத்த முடிவு. அணுமின் உலை மற்றும் இதர சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உற்பத்திக் கோளாறு காரணமாகவே விபத்து நிகழ்ந்தாலும், அதன் பாதிப்புக்கு எந்த வகையிலும் கடன்பட்டவை ஆகாது என்று அவற்றுக்கு முழு விலக்கு அளித்துவிட்டது அமெரிக்க அரசாங்கம். மாறாக, விபத்து காரணமான பாதிப்புகளுக்கு, அணுமின் நிலையத்தைச் செயல்படுத்துகிற நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்காக அந்த நிறுவனம் காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டமியற்றப்பட்டது.
÷அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு, அது சட்டத்தின் கீழான காப்பீட்டை அமெரிக்க அணுமின் கூடங்கள் பெற்றுள்ளனவா என்று கண்காணிக்கிறது. இந்த அணுமின் கூடங்கள் தொடர்பான காப்பீட்டு உத்தரவாதத்தை "அமெரிக்க அணுசக்திக் காப்பீட்டாளர்கள்' என்ற ஒரு கூட்டமைப்பு நல்கி வருகிறது. இந்தக் காப்பீட்டைப் பெறச் செலுத்த வேண்டிய வருடாந்திர "பிரீமியம்' தொகை, ஒரே ஓர் அணுஉலையைக் கொண்ட மின்கூடத்துக்கு 4 லட்சம் டாலர் என்று சராசரியாக நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் அமெரிக்காவில் அணுசக்தி சாதன உற்பத்தி - வர்த்தகத்தில் ஈடுபடும் தனியார் துறை நிறுவனங்களுக்கு, விபத்து நிவாரண இழப்பீட்டிலிருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்கும் விதமாகவே அந்நாட்டுச் சட்டம் அமைந்துள்ளது.
÷இப்போது அமெரிக்காவில் தனியார் துறை அணுமின் உற்பத்தி நிறுவனங்களாக உள்ள ஜெனரல் எலெக்ட்ரிக், அரேவா, வெஸ்டிங் ஹவுஸ், ரோசாடோம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் புதிய அணுமின் கூடங்களுக்கான அணு உலைகள் உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்ய மும்முரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இவை அமெரிக்காவில் உள்ளதுபோலத் தங்களுக்குப் பாதுகாப்பான சட்ட ஏற்பாடுகள் இந்தியாவிலும் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றன. இந்தக் கோரிக்கையை அமெரிக்க அரசாங்கமும் வலியுறுத்துகிறது. அண்மையில் அமெரிக்க நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கிடம், அதிபர் ஒபாமாவே இதற்கான சட்டத்தை விரைவில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நெருக்குதல் கொடுத்துள்ளார் என்பது வெளிப்படையாகவே தெரிய வந்தது.
÷இந்தப் பின்னணியில் தான் மத்திய அரசு அணுசக்தி குடிமைக் கடப்பாடு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மசோதாவில், இந்தியாவில் அமையவுள்ள அணுமின் கூடங்களில் விபத்து ஏதேனும் நேரிட்டால், அது தொடர்பான நிவாரணம், இழப்பீடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு, மத்திய அரசின் அணுமின் துறையின் கீழ் இயங்கும், இந்திய அணுமின் வாரியத்துக்கு மட்டுமே என்று விதிக்கப்படும். அணுஉலைகளையோ, இதர சாதனங்களையோ, அணுஎரிபொருளையோ, அதுதொடர்பான தொழில் நுணுக்கச் சேவைகளையோ, விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு எந்தவிதக் கடப்பாடும் இருக்காது என்பதுதான் இதன் சாராம்சம். அணு உலைகளின் உற்பத்திக் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டாலும், அவற்றை விற்பனை செய்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது.
÷அது மட்டுமல்ல, அணுமின் விபத்து நேரிட்டால், அந்த விபத்து தொடர்பான இழப்பீட்டுத் தொகைக்கு 45 கோடி டாலர் (ரூ. 2,300 கோடி) உச்சவரம்பாக விதிக்கப்படும் என்று இந்த மசோதாவைப் பற்றிய விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அணுமின் கூட விபத்து, லட்சக்கணக்கான மக்களைக்கூட பாதிப்புக்கு இலக்காக்கும் பரிமாணம் கொண்டதாக அமையக்கூடும். அப்படிப்பட்ட நிலையில் இந்த 45 கோடி டாலர் என்பது வெறும் கண்துடைப்பாக மட்டுமே நின்றுவிடும் ஆபத்து எழும். இந்த உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே அதற்கு உள்ளிட்டுக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற முடியும் என்பது இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. போபால் விஷவாயுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்டுகளாகியும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நிவாரணம் பெற இயலாது அல்லாடுகிற நேர்வை நினைவில் வைத்துப் பார்த்தால், மத்திய அரசின் புதிய சட்டம் எவ்வளவு பாதகமான நிலைமைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதை ஊகிப்பது கடினம் அல்லவே!
÷"லாபங்கள் அனைத்தும் தனியாருக்கு; பாதிப்புகளும், இழப்பும் அரசாங்கத்துக்கு' என்பதுதானே நவீன தாராளமயத்தின் தாரக மந்திரம். அதன்படி அமெரிக்க நாட்டின் அணுமின் உற்பத்தி - வர்த்தகத் தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 60,000 கோடி வரை விற்று, லாபம் ஈட்டுவதற்கு வழிதிறந்துவிட முற்படுகிற, இந்திய ஆட்சியாளர்கள், அவற்றின் மீது எந்தக் கட்டத்திலும் மயிலிறகு அளவுகூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்டம் போட்டுப் பாதுகாப்பு நல்க முற்படுகின்றனர்.
÷"என்ன விலை அமெரிக்க அணு உலையே? எம் மக்களின் உயிரைக் கூடத் தருவேன்' என்று இந்திய மக்களின் வாழ்வுரிமைக்கே எதிரான சட்டத்தை மன்மோகன் சிங் அரசு நிறைவேற்ற அனுமதிக்கப் போகிறதா நம் ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றம்?
கட்டுரையாளர் : உ.ரா. வரதராசன்
நன்றி : தினமணி
Friday, December 18, 2009
வாடிக்கை மறந்தது ஏனோ...
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்பது தெரியாமலே சில வாடிக்கையாளர்கள் வழக்கம் போலவே வங்கிகளுக்குச் சென்று புதன்கிழமை பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தனர். வேலை நிறுத்தம் செய்யப்போகிறோம் என்பதை ஊழியர்கள்தான் முன்கூட்டியே அறிவித்துவிடுகிறார்களே, அதைக்கூட பேப்பரில் படிக்காமலும் டி.வி.யில் கேட்காமலும் வங்கி வரை வந்து ஏன்தான் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறார்களோ தெரியவில்லை.
இந்த முறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையாக அல்லாமல் புதன்கிழமையைத் தேர்வு செய்தது ஏன் என்று புரியாமல் சிறிது நேரம் குழம்பினேன்.
அருகில் இருந்த மூத்த வாடிக்கையாளர் ஒருவரைக் கேட்டேன். பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது என்பார்கள் அதனால்தான் புதன்கிழமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றார் அவர்.
மற்றொருவர் சொன்னார், மார்கழி மாத ஆரம்பம், கோயிலுக்குப் போவதற்காக வங்கி ஊழியர்கள் இந்த நாளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றார். இது அதைவிட அபத்தமாக இருந்தது.
வங்கி ஊழியர்கள் கடுமையாக வேலை செய்து களைத்து, வீட்டுக்குப்போய் அங்கும் வேலை செய்துவிட்டுப் படுத்து, காலையில் எழுந்திருப்பதற்கே சுமார் 7 அல்லது 8 மணி ஆகிவிடும். அப்படியிருக்க விடியற்காலை பூஜைக்காக அவர்கள் இந்த நாளைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் சரியல்ல.
சனி,ஞாயிறு விடுமுறையோடு சேர்ந்தே வெள்ளி, திங்கள் ஆகிய நாள்களை வேலை நிறுத்தத்துக்குத் தேர்வு செய்கிறார்கள் என்று வங்கி ஊழியர்களைப் பற்றி முன்னர் குறை கூறப்பட்டது. அப்படியெல்லாம் தாங்கள் சுய நலமிகள் அல்லர் என்று காட்டவே வாரத்தின் நடு நாளைத் தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ? இதுவும் ஒரு கணக்குத்தான்.
வங்கி ஊழியர்கள் எப்போது வேலை நிறுத்தம் செய்தாலும் அவர்களுடைய கோரிக்கை பொதுநலன் சார்ந்ததாகவும் வலுவானதாகவும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ, மதவாத, திரிபுவாத, பிற்போக்கு சக்திகளுக்கு எதிரானதாகவும்தான் இருக்கும்.
இந்த முறை பாரத ஸ்டேட் வங்கியுடன் இந்தூர் ஸ்டேட் வங்கியைச் சேர்க்கக்கூடாது என்பது முக்கிய கோரிக்கை. இதன் உள்ளே நாம் புக வேண்டாம். (அதன் நுட்பம் நமக்குத் தெரியாது.)
அப்படி இணைத்தால் ஏழு கடல்களும் பொங்கும், கடலில் சுனாமி ஏற்படும்,திருவண்ணாமலை, பரங்கிமலை, மதுரை திருப்பரங்குன்றத்துக்கு அருகில் உள்ள பசுமலை போன்றவைகூட எரிமலைகளாகி நெருப்பைக் கக்கும், கடுமையான நில அதிர்வு ஏற்படும் என்றெல்லாம் புரிகிறது.
அடுத்தது வங்கி நிர்வாக நடைமுறைகளைச் சீர்திருத்த வேண்டும் என்பது. இதுவும் உண்மையிலேயே வலியுறுத்தப்பட வேண்டிய கோரிக்கைதான். நம் பங்குக்கு நாமும் சில கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என்று நினைக்கிறேன். இதை அடுத்த வேலை நிறுத்தத்துக்கு வங்கி ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் பரிசீலித்தால் போதுமானது.
வங்கிகளுக்குள் வாடிக்கையாளர்கள் வருவதைத் தவிர்ப்பதற்காகத்தான் ஏ.டி.எம். என்ற மெஷின் ஆங்காங்கே வைக்கப்படுகிறது. அப்படி இருந்தும் சில அராத்துகள் வங்கிகளுக்கு உள்ளே வந்து பணம் எடுக்க முற்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் வங்கிகளில் பணம் போடலாமே தவிர எடுப்பதற்காக உள்ளே நுழையவே கூடாது என்ற கோரிக்கையை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது சென்னையிலும் புறநகர்களிலும் பணம் எடுக்கப் போகும் வாடிக்கையாளர்களிடம் கூறப்படும் முதல் உபதேசமே, ஏ.டி.எம். கார்டு வாங்குங்க, எங்க கிட்டயே வர வேண்டாம், அப்படியே பணம் எடுத்துக்கொண்டு (திரும்பிப்பார்க்காமல்) போயிடுங்க என்பதுதான்.
அடுத்தது பென்ஷன் அக்கவுண்ட், அடிக்கடி 300, 500 என்று எடுக்கும் எஸ்.பி. அக்கவுண்ட், வங்கிக்கு பெரிய லாபம் தராத கரண்ட் அக்கவுண்ட் ஆகியவற்றையெல்லாம் தானியங்கி மெஷின்களே கையாள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தலாம்.
வங்கிக்கு வாடிக்கையாளர்களே வேண்டாம் என்பதல்ல நோக்கம்; சுயநிதிக் கல்லூரி, பள்ளிக்கூட நிறுவனர்கள்,வியாபாரிகள்,பஸ் முதலாளிகள், டிராவல்ஸ் நடத்துகிறவர்கள்,40 வயதுக்குள்பட்ட வாடிக்கையாளர்கள்,சுய உதவிக்குழு மகளிர், வருமானவரித்துறை, கலால் துறை, ரயில்வேயில் டிக்கெட் ரிசர்வேஷனுக்கு உதவக் கூடியவர்கள் போன்ற வங்கி ஊழியர்களுக்கும் ஏதாவது பலன்தரக் கூடிய வாடிக்கையாளர்கள் வருவதை வங்கி ஊழியர்கள் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை.
பணம் எடுப்பதற்கான சலானில் தேதி போட மறப்பவர்கள், பணம் செலுத்தும்போது டினாமினேஷன் சரியாகப் போடத் தெரியாதவர்கள், வங்கி ஊழியர் மெனக்கெடவே அவசியம் இல்லாத வகையில் தன் வேலையைத் தானே பார்த்துக் கொள்ள முடியாதவர்கள், காலையில் வங்கியில் நுழைந்தால் சாயங்காலம் வரை காத்திருந்து வேலையை முடித்துக் கொள்ளும் அளவுக்குப் பொறுமை இல்லாதவர்கள் வங்கிக்கு வரவே கூடாது.
பணம் எடுக்க அல்லது போட ஒரு முறையும், என்ட்ரி போட ஒரு முறையும் வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வரக்கூடிய நல்ல பழக்கம் உள்ளவர்கள் தாராளமாக வங்கிக்கு வரலாம்.
வேலை நேரத்தில் வங்கி ஊழியர்கள் சீட்டில் இல்லாமல் போனால் ஆட்சேபம் தெரிவிக்கிறவர்களும், வம்பு பேசும்போது நாகரிகம் இல்லாமல் குறுக்கிட்டு, ""நாங்க வேலைக்குப் போக வேண்டாமா?'' என்று அபசுரமாக அங்கலாய்ப்பவர்களும், செல் போனில் அழைப்பு வந்தால் கேஷியர் உள்பட யாருமே சீட்டில் உட்கார்ந்து பேசினாலும் வெளியே போனாலும் கூக்குரல் எழுப்புகிறவர்களும், ""உங்க பேங்கே தண்டம், எத்தனை மணி நேரம் காத்திருக்கிறது?'' என்று சாபம் கொடுப்பவர்களும் எந்த அரசு வங்கியிலும் கணக்கு வைத்துக்கொள்ளவே கூடாது என்று வங்கி நடைமுறைச் சட்டத்தில் திருத்தமே கொண்டுவரலாம்.
வங்கி ஊழியர்கள் வேலை நேரத்தில் வேலைதான் செய்ய வேண்டும், திடீர் திடீரென ஸ்டிரைக் செய்யக் கூடாது என்றெல்லாம் சுயநலமாக நினைக்கிற வாடிக்கையாளர்களை கணக்கு வைத்துக் கொள்ளாமல் நீக்கிவிடும் அதிகாரம் வங்கி ஊழியர்கள் சங்கத்துக்கே தரப்பட வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் அமலானால் வங்கிகள் சமரசம் உலாவும் இடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்கிறதா உங்களுக்கு?
கட்டுரையாளர் : ராணிப்பேட்டை ரங்கன்

எரிவாயு, பேட்டரியில் இயக்கும் முதல் பைக் அறிமுகம்
எரிவாயு மற்றும் பேட்டரியில் இயக்கும் முதல் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பெங்களூரில் அறிமுகம் செய்யப் பட்டது. சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத உலகின் முதல் நவீன பைக் இதுவாகும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து, ஈகோ வெஹிகில்ஸ் நிறுவனம், இடி120 மற்றும் ஸ்டிரைக் என்ற பெயர்களில் இந்த இருசக்கர வாகனங்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. இது பெட்ரோலை போல இரண்டு மடங்கு மைலேஜ் வழங்குகிறது. இது எரிவாயு மற்றும் பேட்டரியில் இயக்குமாறும், 120 சிசி திறன் பைக் குறைவான அளவு கார்பனை வெளியிடுமாறும் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பைக்குகளை காஸ் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட இரண்டினாலும் இயக்கலாம். நடுவழியில் சார்ஜ் தீர்ந்து விட்டாலும் எரிவாயு மூலம் இயக்கலாம் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்
Subscribe to:
Posts (Atom)