Wednesday, December 9, 2009

அஜிதா ஏன் நக்​ச​லா​னாள்...?

இந்​தி​யா​வுக்கு மிகப்​பெ​ரிய ஆபத்து வெளியி​லி​ருந்து வராது.​ நம் நாட்​டுக்​குள்​ளேயே உரு​வாகி வரும் மாவோ​யிஸ்ட் தீவி​ர​வா​தி​க​ளால் உரு​வா​கும் ஆபத்​து​தான் அது எனப் ​ பல​ரும் கூறி வரு​கி​றார்​கள்.

மாவோ​யிஸ்​டு​களை அடக்கி ஒடுக்க கூடு​த​லான போலீ​ஸô​ரும்,​​ ராணு​வத்​தி​ன​ரும் சேர்ந்து ""ஆப​ரே​ஷன் கிரீன் ஹண்ட்'' எனப்​ப​டும் பச்சை வேட்டை திட்​டம்,​​ மத்​திய அர​சால் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.​ "நேர​டிப் பேச்​சு​வார்த்​தைக்கு வாருங்​கள் அல்​லது கடு​மை​யான நட​வ​டிக்​கை​களை எதிர்​கொள்​ளுங்​கள்' என்று மத்​திய அமைச்​சர் சிதம்​ப​ரம் எச்​ச​ரிக்​கை​யும் விடுத்​துள்​ளார்.​ ஆனால் இந்​தப் பிரச்​னையை ஒரு சட்ட ஒழுங்​குப் பிரச்​னை​யா​கக் கருதி நட​வ​டிக்கை எடுக்​கா​மல்,​​ ஓர் அடித்​தட்டு சமூ​கப் பிரச்னை என்ற நோக்​கில் ஆராய்ந்து மாற்று நட​வ​டிக்​கை​களை எடுக்க வேண்​டும் என்​பது அர​சி​யல் நோக்​கர்​கள் மற்​றும் நிர்​வாக வல்​லு​நர்​க​ளின் கருத்து.÷

​மாவோ​யிஸ்​டு​க​ளின் போராட்​டக் குழு​வில் நிறை​யப் பெண்​கள் உரு​வா​கி​யி​ருப்​பது இந்​தக் கருத்​துக்கு வலு சேர்க்​கி​றது.​ கடந்த நான்கு மாதங்​க​ளில் மேற்கு வங்​கத்​தின் மேற்கு மிது​ன​புரி பகு​தி​யில் 20 பெண் மாவோ​யிஸ்ட் தீவி​ர​வா​தி​க​ளைப் போலீ​ஸôர் கைது செய்​துள்​ள​னர்.​ அதில் மாலா குமாரி எனும் 20 வயது கும​ரிப்​பெண் ஒரு​வர்.​ இவர் மாவோ​யிஸ்​டு​க​ளின் உயர் கமிட்டி உறுப்​பி​னர்.​ ஒரு தாக்​கு​தல் பணிக்​குத் தலை​மை​யேற்று கையில் கண்​ணி​வெ​டி​குண்​டு​கள்,​​ பிஸ்​டல்​கள் போன்​ற​வற்​று​டன் கைது செய்​யப்​பட்​டி​ருக்​கி​றார்.​ ​

இது​போ​லவே சுமன்​மண்டி எனும் 50 வய​துப் பெண் ஒரு​வ​ரின் தலை​மை​யில் 14 பெண்​கள் லால்​கர் பகு​தி​யில் கைது செய்​யப்​பட்​டி​ருக்​கி​றார்​கள்.​ நிறை​யப் பெண் போரா​ளி​கள் யுத்​த​வெ​றி​யு​டன் அடர்ந்த காட்​டுப்​ப​கு​திக்​குள் கரடு முர​டான பகு​தி​க​ளில் ஆண்​க​ளுக்​குச் சம​மாக மிக​வும் அசெ​ள​க​ரி​ய​மான சூழ்​நி​லை​க​ளில் போரா​டு​வ​தற்​குத் தங்​க​ளைத் தயார்​ப​டுத்​திக் கொண்​டுள்​ள​னர்.​ இது​போன்ற வாழ்க்​கையை ஏற்​றுக்​கொள்​ளும் மன​நிலை அவர்​க​ளுக்கு ஏன்,​​ எப்​படி,​​ எதற்​காக வந்​தது எனும் கேள்வி எழு​கி​றது.​ இவர்​க​ளில் பல​ருக்கு மா சேதுங்,​​ கார்ல் மார்க்ஸ்,​​ லெனின் மற்​றும் ஸ்டா​லின் போன்​ற​வர்​க​ளைப் பற்றி எது​வுமே தெரி​யாது.​

2007-ம் ஆண்டு மகா​ராஷ்​டி​ரத்​தில் கத்​சி​ரோலி எனும் பகு​தி​யில் சுமன் எனும் 18 வயதே நிரம்​பிய இளம் பெண் மாவோ​யிஸ்​டு​க​ளின் தீவி​ர​வா​தப் பயிற்சி முகா​மில் ஆயு​தப்​ப​யிற்சி பெற்று வந்​தார்.​ அவ​ரைப் பேட்டி கண்ட ஒரு பத்​தி​ரி​கை​யா​ளர்,​​ ""இவ​ருக்கு கம்​யூ​னி​ஸத்​தைப் பற்​றியோ,​​ தீவி​ர​வா​தத்​தைப் பற்​றியோ எது​வுமே தெரி​யாது.​ தனது கிரா​மத்​தில் பிழைப்​புக்​குச் சரி​யான வழி கிடை​யாது,​​ தங்​க​ளைக் கொடு​மைப்​ப​டுத்​தும் ஆண்​கள் மற்​றும் தீவி​ர​வா​தி​க​ளைத் தேடித் தங்​கள் ஊருக்கு வரும் போலீஸ்​கா​ரர்​கள் தங்​களை மான​பங்​கம் செய்ய முயற்​சிப்​பது போன்​ற​வற்றி​லி​ருந்து விடு​பட மாவோ​யிஸ்​டு​களை அணு​கி​னால் அவர்​கள் உட​னடி நட​வ​டிக்கை எடுக்​கி​றார்​கள்.​ இவர்​கள் மாவோ​யிஸ்​டு​க​ளான கார​ணம் இது​தான்.​

ஆக,​​ ஆதி​வாசி மக்​க​ளின்​மீது மற்​ற​வர்​க​ளால் நடத்​தப்​ப​டும் கடு​மை​யான நட​வ​டிக்​கை​க​ளுக்கு அர​சுத் தரப்​பிலோ மற்ற அரசு சாராத நிறு​வ​னங்​கள் தரப்​பிலோ எந்​த​வி​த​மான நல்​லா​த​ர​வு​டன் கூடிய நட​வ​டிக்​கை​கள் அந்​தப் பகு​தி​யில் கிடை​யாது.​ நமது வளர்ந்​து​விட்ட கிரா​மங்​க​ளில் உள்​ள​து​போல்,​​ ஊர்ப் பஞ்​சா​யத்து அல்​லது தனிப்​பட்​ட​வர்​கள் மீது நடத்​தப்​ப​டும் தாக்​கு​தல்​க​ளைத் தட்​டிக்​கேட்​கும் பெரி​ய​வர்​கள் அடர்ந்த காட்​டுப்​ப​கு​தி​யில் உள்ள ஆதி​வாசி கிரா​மங்​க​ளில் இல்லை.​

இது​போன்ற பகு​தி​க​ளுக்​குச் செல்​லும் மாவோ​யிஸ்​டு​கள் பாதிக்​கப்​பட்ட பெண்​க​ளைக் குறி​வைத்து தங்​கள் இயக்​கத்​தில் சேர்த்​துக் கொள்​கி​றார்​கள்.​

இது​போன்ற ஆதி​வாசி குடி​யி​ருப்​பு​க​ளில் கண்​டெ​டுக்​கப்​பட்ட ஒரு சிறிய போஸ்​ட​ரில் "வர்க்​கப் போராட்​டத்​தின் மூலம் புரட்சி உரு​வா​கும்.​ புரட்சி இல்​லா​மல் பெண்​க​ளுக்கு விடு​தலை கிடைக்​காது' எனும் வாச​கங்​கள் உள்​ளன.​ இப்​ப​கு​தி​யில் வேலை செய்​யும் ஓர் அனு​ப​வம் வாய்ந்த போலீஸ் அதி​கா​ரி​யின் கூற்​றுப்​படி ஆதி​வா​சி​கள் குடி​யி​ருப்​பு​க​ளில் பொரு​ளா​தார முன்​னேற்​ற​மும் கிடை​யாது.​ அது​போ​லவே எந்த அர​சி​யல் கட்​சி​யும் கிடை​யாது.​ எனவே இந்த அர​சி​யல் வெற்​றி​டத்தை மாவோ​யிஸ்​டு​கள் மிக எளி​தாக நிரப்​பி​வி​டு​கி​றார்​கள்.​

மேலே கூறப்​பட்ட விஷ​யங்​கள் நமக்கு மிக​வும் அதிர்ச்சி அளிப்​ப​தாக உள்​ளன.​ இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த நீட்​டாலா குலாட்​கர் என்​ப​வர்,​​ அஜிதா எனும் 19 வயது நிரம்​பிய பெண் நக்​ச​லைட் பற்றி விரி​வா​கக் கூறு​கி​றார்.​

1968-ம் ஆண்டு கேர​ளத்​தில் ஒரு காவல் நிலை​யத்​தைத் தாக்​கும் நக்​ச​லைட்​டு​கள் சுற்றி வளைத்​துப் பிடிக்​கப்​பட்​டார்​கள்.​ அவர்​க​ளில் அஜிதா எனும் பெண்​ம​ணி​யும் ஒரு​வர்.​ அஜிதா குனிக்​கல் எனும் இந்​தப் பெண் மும்​பை​யில் பிறந்​த​வர்.​ ஆனால் கேர​ளத்​தில் வளர்ந்​த​வர்.​ இவ​ரது தந்தை குனிக்​கல் நாரா​ய​ணன்,​​ கேர​ளத்​தில் நக்​சல்​பாரி இயக்​கத்​தைத் தொடங்​கி​ய​வர்.​ இவ​ரது மனைவி மந்​தா​கினி குஜ​ராத்​தைச் சேர்ந்​த​வர்.​ கல்​லூ​ரி​யில் படித்​துக் கொண்​டி​ருந்த அஜி​தாவை,​​ அவ​ரது தந்தை நக்​சல்​பாரி இயக்​கத்​தில் சேரு​மாறு அழைப்பு விடுத்​தார்.​

நக்​சல்​பாரி இயக்​கத்​தில் முழு ஈடு​பாடு ஏற்​பட்ட பின் அஜிதா கேர​ளத்​தில் வய​நாடு பகு​திக்​குச் செல்​கி​றார்.​ அங்கு மலைப்​பி​ர​தே​சத்​தில் ஆதி​வா​சி​க​ளுக்​கும்,​​ நிலச்​சு​வான்​தார்​க​ளுக்​கும் கடு​மை​யான தக​ரா​று​கள் நடந்​து​வந்த நேரம் அது.​ நிறைய ஆதி​வா​சி​க​ளின் நிலங்​களை நிலச்​சு​வான்​தார்​கள் வன்​மு​றை​யாக எடுத்​துக்​கொண்டு ஆதி​வா​சி​களை விரட்டி விடு​வது என்​பது ஒரு பிரச்​னை​யாக உரு​வெ​டுத்​தது.​

இது பற்றி அரசு அதி​கா​ரி​க​ளி​டம் கேட்​டால்,​​ நிறைய பட்டா நிலங்​கள் வெளி​யூர்​க​ளில் வசிக்​கும் நிலச்​சு​வான்​தார்​க​ளால் தனிப்​பட்ட முறை​யில் நேர​டி​யாக நிர்​வ​கிக்​கப்​ப​டா​மல் இருந்​தன.​

இது​போன்ற நிலங்​க​ளில் ஆதி​வாசி கிரா​மத்​தி​னர் சென்று குடி​ய​மர்ந்து கொண்டு சிறிய அள​வில் விவ​சா​யம் செய்து வந்​தார்​கள்.​ இது இரண்டு மூன்று தலை​மு​றை​க​ளா​கத் தொடர,​​ இந்த நிலங்​கள் தங்​க​ளுக்​குச் சொந்​தம் என்று அவர்​கள் நினைத்​தார்​கள்.​ ஆனால்,​​ அரசு ஆவ​ணங்​க​ளில் பல நிலச்​சு​வான்​தார்​கள் பட்​டா​தா​ரர்​க​ளா​கத் தொடர்ந்​தார்​கள்.​

நிலங்​க​ளின் தேவை​க​ளும்,​​ விலை​ம​திப்​பும் உயர்ந்த பின்​னர்,​​ நகர்ப்​பு​றங்​க​ளில் இருந்த நிலச்​சு​வான்​தார்​கள் தங்​கள் நிலங்​க​ளைத் தேடி மலைக்​கி​ரா​மப் பகு​தி​க​ளுக்கு வந்து அவற்றை யாரோ ஆக்​கி​ர​மித்​தி​ருப்​ப​தைக் கண்டு போலீஸ் உத​வி​யு​டன்,​​ உள்​ளூர் ரவு​டி​கள்,​​ வஸ்​தா​து​கள் உத​வி​யு​டன்,​​ ஆதி​வா​சி​க​ளைத் துரத்​தி​விட்டு,​​ தங்​கள் பட்டா நிலங்​களை மீண்​டும் கைய​கப்​ப​டுத்​து​வார்​கள்.​ வழக்​கம்​போல் போலீ​ஸôர் சட்​டப்​படி பட்டா வைத்​தி​ருக்​கும் பணக்​கா​ரர்​க​ளின் பக்​கம் துணை நிற்​பார்​கள்.​

நிலைமை இப்​படி இருக்க ஆதி​வாசி தலை​வர்​க​ளும் நக்​சல்​பாரி இயக்​கத்​தி​ன​ரும் நிலச்​சு​வான்​தார் கையில் இருக்​கும் பட்​டாக்​கள் உண்​மை​யா​னவை அல்ல,​​ போர்​ஜ​ரி​கள் என வாதிட்​டார்​கள்.​ இந்​தப் பிரச்னை மிக​வும் அதி​க​மாகி ஒரு கொரில்லா தாக்​கு​தல்​தான் சரி என ரக​சி​ய​மாக நக்​சல்​பா​ரி​க​ளின் கூட்​டத்​தில் பிர​சா​ரம் தொடர்ந்​தது.​

கேர​ளத்​தின் அன்​றைய நம்​பூ​தி​ரிப்​பாட் அர​சாங்​கம் தலைச்​சேரி எனும் இடத்​தில் ஒரு பெரிய தாக்​கு​த​லைச் சமா​ளிக்க வேண்​டி​யி​ருந்​தது.​

கண்​ணூர் மாவட்​டத்​தில் ஒரு தனி​யார் பீடி கம்​பெனி மிகப் பிர​ப​ல​மாக வளர்ந்​தது.​ அதில் சுமார் 20,000 பீடித் தொழி​லா​ளர்​கள் வேலை செய்​தார்​கள்.​ அவர்​க​ளுக்​குக் குறைந்​த​பட்ச கூலி நிர்​ண​யம் செய்து நம்​பூ​தி​ரிப்​பா​டின் கம்​யூ​னிஸ்ட் அரசு ஒரு சட்​டம் இயற்​றி​யது.​ இந்​தக் கூலி கட்​டு​ப​டி​யா​காது என்​ப​தால்,​​ பீடி கம்​பெ​னியை மூடி​விட்டு,​​ தங்​கள் சொந்த கர்​நா​டக மாநி​லத்​துக்கு அதை மாற்​றி​விட்​டார்​கள்.​

இந்த ஒரே நட​வ​டிக்​கை​யில் 20,000 ஏழைத் தொழி​லா​ளர்​கள் வேலை​யி​ழந்து பரி​த​வித்​தார்​கள்.​ அவர்​க​ளைத் திரட்டி ஆயு​தங்​க​ளைக் கொடுத்​துப் பயிற்சி செய்து தலைச்​சேரி போலீஸ் நிலை​யத்​தைத் தாக்க முற்​பட்​டார்​கள் நக்​ச​லைட்​டு​கள்.​

அஜிதா அந்​தத் தாக்​குத​லில் பங்​கெ​டுத்​தார்.​ ""அந்​தத் தாக்​குத​லில் நிறைய ஆயு​தங்​கள் அங்கே கிடைக்​கும் என்று நாங்​கள் ஈடு​பட்​டோம்.​ ஆனால் அந்​தத் தாக்​குத​லில் நாங்​கள் கைது செய்​யப்​பட்டு படு​தோல்வி அடைந்​தோம்'' என்​கி​றார் அஜிதா.​ அவர் ஏழரை ஆண்​டு​கள் சிறை​யில் இருந்​தார்.​

19 வயதே நிரம்​பிய அஜிதா,​​ போலீ​ஸô​ரால் மான​பங்​கப்​ப​டுத்​தப்​பட்​ட​தா​க​வும்,​​ அவர்​கள் தன்னை நிறைய விப​சார வழக்​கில் கைதான பெண்​க​ளு​டன் ஒரே அறை​யில் அடைத்து வைத்​த​தா​க​வும் கூறு​கி​றார்.​ அது​மா​தி​ரிப் பெண்​கள் தாங்​கள் வாழ்க்​கை​யில் ஏழ்​மை​யி​னா​லும்,​​ ஆண்​கள் மற்​றும் போலீ​ஸôர் பல​ரால் துன்​பு​றுத்​தப்​பட்டு விப​சா​ரத் தொழி​லுக்கு வந்​த​தா​க​வும் கூறி​னார்​க​ளாம்.

இது ஒரு கேடு​கெட்ட உல​கம் என்​ப​தைத் தன்​னு​டைய ஏழரை ஆண்டு சிறை அனு​ப​வத்​தில் முழு​வ​தும் தெரிந்து கொண்​ட​தாக அவர் கூறு​கி​றார்.​

என் தந்தை எனக்​குப் போதித்த சித்​தாந்​தங்​க​ளும்,​​ என்​போன்ற சில துர​தி​ருஷ்​ட​மான ​ பெண்​கள் வாழ்க்​கை​யில் அனு​ப​வித்த துன்​பங்​க​ளும் என்​னைத் தீவிர போரா​ளி​யாக மாற்​றி​யது என்று கூறு​கி​றார் அஜிதா.​ ​

இது​போன்ற தக​வல்​கள் வளர்ந்​து​விட்ட மாநி​ல​மா​கிய தமி​ழ​கத்​தின் குடி​மக்​க​ளா​கிய நமக்கு மிக​வும் ஆச்​ச​ரி​யத்தை அளிக்​க​லாம்.​ மக்​க​ளின் அடிப்​ப​டைத் தேவை​களை மாநில அரசு கவ​னிக்க வேண்​டும்.​ கிரா​மப்​பு​றங்​க​ளில் வாழ்க்​கைக் கட்​ட​மைப்​பு​கள் எனப்​ப​டும் சாலை வச​தி​கள்,​​ குடி​நீர் வசதி,​​ கல்வி,​​ சுகா​தா​ரம் போன்​ற​வற்​று​டன் அடிப்​படை சமூ​கப் பாது​காப்​பும் உறுதி செய்​யப்​பட வேண்​டும்.​

கல்வி அறி​வில்​லாத பெண்​கள் எப்​படி நடத்​தப்​ப​டு​கி​றார்​கள்,​​ தொழி​லா​ளர்​கள் எப்​ப​டித் தங்​கள் எஜ​மா​னர்​க​ளால் நடத்​தப்​ப​டு​கி​றார்​கள் என்​ப​வை​யெல்​லாம் அடிப்​படை விஷ​யங்​க​ளாக மாறு​கின்​றன.​ ஏழை,​​ பணக்​கா​ரன் வித்​தி​யா​சம் மிக அதி​க​மாகி காழ்ப்​பு​ணர்ச்சி வள​ரக்​கூ​டாது என்ற ஒரே கார​ணத்​துக்​கா​கத்​தான் இந்​தி​யா​வின் முதல் பிர​த​மர் பண்​டித ஜவா​ஹர்​லால் நேரு,​​ சோஷ​லிச சித்​தாந்​தப்​படி ஏழை மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​காக பல உய​ரிய திட்​டங்​களை நடை​மு​றைப்​ப​டுத்​தி​னார்.​ காலப்​போக்​கில் அர​சி​யல்​வா​தி​க​ளின் ஊழல் பெருகி தாதாக்​க​ளு​ட​னும்,​​ தன​வந்​தர்​க​ளு​ட​னும் ஒரு கூட்​டணி அமைத்து ஏழை மக்​கள் அதிக அள​வில் உரு​வா​கித் தங்​க​ளுக்கு அரசு எது​வும் செய்​யாது,​​ போரா​டித்​தான் நமக்கு வேண்​டிய நன்​மை​களை நாம் பெற முடி​யும் என்ற எண்​ணம் உரு​வா​கி​விட்​டது.​

​இதை முற்​றும் உணர்ந்து,​​ அதன் அடிப்​ப​டை​யில் திட்​ட​மி​டா​மல்,​​ கூடு​தல் போலீ​ஸô​ரை​யும்,​​ பாது​காப்​புப் படை​யி​ன​ரை​யும் அனுப்பி,​​ ஆளில்​லாத விமா​னங்​க​ளின் மூலம் குண்டு மழை பொழிந்து மாவோ​யிஸ்​டு​களை அடக்கி ஒடுக்​கி​விட முடி​யாது!​​​ ​
கட்டுரையாளர் : எ‌ன்.​ முரு​க‌ன்
நன்றி : தினமணி

ஊழ​லின் ஊற்​றுக்​கண்!

உலக ஊழல் ஒழிப்பு தினம் என்று ஆண்​டுக்​கொரு முறை ஊழ​லுக்கு எதி​ரான விழிப்​பு​ணர்வை மக்​கள் மத்​தி​யில் ஏற்​ப​டுத்​து​வது என்​பதே அவ​மா​ன​க​ர​மான விஷ​யம்.​ கொலை கொள்ளை ஒழிப்பு தினம்,​​ விப​சார ஒழிப்பு தினம்,​​ உண்மை பேசும் தினம் என்​றெல்​லாம்​கூட ஏற்​ப​டுமோ என்று பய​மாக இருக்​கி​றது.​

ஊழல் என்​பது உல​க​ளா​விய விஷ​ய​மா​கி​விட்​டது என்​ப​தால் அதை அன்​றாட வாழ்க்​கை​யின் அம்​ச​மா​கவே பெரும்​பா​லோர் ஏற்​றுக்​கொண்டு விட்​ட​தா​கத் தோன்​று​கி​றது.​ ராஜா ராணி காலத்தி​லி​ருந்து ஆட்​சி​யா​ளர்​க​ளுக்கு நெருக்​க​மாக இருந்​த​வர்​கள் அதி​கப்​ப​டி​யான சலு​கை​களை அனு​ப​விப்​பது என்​பது புதிய விஷ​ய​மல்ல.​ அதே​போல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளில் பலர் குடி​மக்​க​ளின் நல​னைப் பற்​றியே கவ​லைப்​ப​டா​மல் சகல சௌ​பாக்​கி​யங்​க​ளு​டன் ராஜ​போ​க​மாக ஊதாரி வாழ்க்கை வாழ்ந்த சரித்​தி​ரம் உல​க​ளா​விய ஒன்று.​

ஆட்​சி​யை​யும் அதி​கா​ரத்​தை​யும் ஒரு சிலர் பரம்​பரை பாத்​தி​யதை கொண்​டாடி வரு​வ​தை​யும்,​​ குடி​மக்​க​ளின் நல்​வாழ்​வைப் பற்​றிய சிந்​த​னையே இல்​லா​மல் ஆட்​சி​யா​ளர்​க​ளும் அவர்​க​ளுக்கு நெருக்​க​மா​ன​வர்​க​ளும் செயல்​பட்டு வரு​வ​தை​யும் பார்த்து மக்​கள் கொதித்து எழுந்​த​தன் விளை​வு​தான் மன்​னர் ஆட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​பட்​ட​தும்,​​ மக்​க​ளாட்சி மலர்ந்​த​தும்.​ நியா​ய​மா​கப் பார்த்​தால் மக்​க​ளாட்​சி​யில் லஞ்​சம்,​​ ஊழல்,​​ அதி​கார துஷ்​பி​ர​யோ​கம்,​​ ஒரு சிலர் தனிச் சலு​கை​கள் பெறு​வது போன்​ற​வற்​றுக்கே இடம் இருக்​க​லா​காது.​

ஆட்சி முறை மாறி​யதே தவிர மன்​ன​ராட்​சி​யின் தவ​று​க​ளும் குறை​பா​டு​க​ளும் களை​யப்​பட்​ட​னவா என்று கேட்​டால் உதட்​டைப் பிதுக்க வேண்டி இருக்​கி​றது.​ பரம்​பரை ஆட்​சிக்​குக்​கூட மக்​க​ளாட்​சி​யில் முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாத நிலைமை.​ ஜார் மற்​றும் பதி​னெட்​டாம் லூயி மன்​னர்​க​ளுக்​குப் பதி​லாக ஹிட்​லர்,​​ முசோ​லினி,​​ இடி அமின் என்று சர்​வா​தி​கா​ரி​க​ளும்,​​ மக்​க​ளைப் பற்​றிய கவ​லையே இல்​லா​மல் தங்​க​ளது மனம் போன போக்​கில் நடந்த ஆட்​சி​யா​ளர்​க​ளும் மக்​க​ளாட்​சி​யி​லும் தொடர்​வ​து​தான் வேடிக்கை.​

வளர்ச்சி அடைந்த நாடு​கள்,​​ வளர்ச்சி அடை​யாத நாடு​கள் என்​கிற வேறு​பாடே இல்​லா​மல்,​​ மக்​க​ளாட்சி,​​ சர்​வா​தி​கார ஆட்சி,​​ ராணுவ ஆட்சி என்​றெல்​லாம் வித்​தி​யா​சம் பாரா​மல் எங்​கும் எல்லா இடத்​தும் நீக்​க​மற நிறைந்​தி​ருக்​கும் பரம்​பொ​ருள்​போல லஞ்​ச​மும்,​​ ஊழ​லும்,​​ அதி​கார துஷ்​பி​ர​யோ​க​மும்,​​ தனி​ந​பர் சலு​கை​க​ளும் பரந்து விரிந்​தி​ருப்​பது மனித சமு​தா​யத்​துக்கே களங்​க​மா​க​வும் அவ​மா​ன​மா​க​வும் தொடர்​கி​றது.​

லஞ்ச ஊழ​லைப் பொறுத்​த​வரை ஒரு வேடிக்​கை​யான விஷ​யம் என்​ன​வென்​றால்,​​ இது படித்​த​வர்​க​ளின் தனிச்​சொத்து என்​ப​து​தான்.​ கிரா​மங்​க​ளில் படிக்​காத ஏழை விவ​சா​யியோ,​​ தொழி​லா​ளியோ லஞ்​சம் வாங்​க​வும்,​​ ஊழல் செய்​ய​வும் வாய்ப்பே இல்​லா​த​வர்​கள்.​ அரசு அலு​வ​லர்​க​ளா​னா​லும்,​​ காவல்​து​றை​யி​ன​ரா​னா​லும் அவர்​கள் படித்​த​வர்​கள்.​ அவர்​கள்​தான் லஞ்​சம் வாங்​கு​கி​றார்​கள்.​ அப்​பாவி ஏழை​க​ளும்,​​ படிப்​ப​றி​வில்​லா​த​வர்​க​ளும்,​​ சாமா​னி​யர்​க​ளும்,​​ நடுத்​தர வர்க்​கத்​தி​ன​ரும் இந்​தப் படித்த "கன'வான்​க​ளின் பேரா​சைக்​குத் தீனி போட வேண்​டிய நிர்​பந்​தம்.​

பிகா​ரில் முதல்​வர் நிதீஷ் குமார் பதவி ஏற்​ற​தும் ஊழ​லுக்கு எதி​ரா​கக் கடும் நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டார்.​ லஞ்​சம் வாங்​கும்​போது கையும் கள​வு​மா​கப் பிடி​பட்டு,​​ ​ கைது செய்​யப்​பட்ட 365 அரசு ஊழி​யர்​க​ளில் 300 பேருக்​கும் அதி​க​மா​ன​வர்​கள் கோடீஸ்​வ​ரர்​கள் என்​பது ​ விசா​ர​ணை​யில் தெரிய வந்​தது.​

கடந்த நான்கு ஆண்​டு​க​ளில்,​​ சுமார் 1000 அரசு உயர் அதி​கா​ரி​கள் மற்​றும் ஊழி​யர்​கள்​மீது வழக்​குத் தொட​ரப்​பட்​டி​ருக்​கி​றது.​ இவர்​க​ளில் சிலர் சிறைத் தண்​ட​னை​யும் அனு​ப​வித்​த​வர்​கள்.​ ஆனா​லும் இவர்​க​ளில் ஒன்​றி​ரண்டு கணக்​கர்​க​ளும்,​​ கடை​நிலை ஊழி​யர்​க​ளும் தவிர யாரும் பதவி நீக்​கம் செய்​யப்​ப​ட​வில்லை.​ வழக்​கு​கள் தொட​ரப்​பட்டு நடந்து கொண்​டி​ருக்​கின்​ற​னவே தவிர தீர்ப்பு எழு​தப்​ப​ட​வில்லை.​ இவர்​க​ளைப் பதவி நீக்​கம் செய்ய மேல​தி​கா​ரி​கள் தயா​ரு​மில்லை.​ பிகா​ரில் மட்​டு​மல்ல,​​ இந்​தியா முழு​வ​துமே உள்ள நிலைமை இது​தான்.​

ஐம்​ப​து​க​ளில் உள்​துறை அமைச்​ச​ராக இருந்த குல்​ஜா​ரி​லால் நந்​தா​வில் தொடங்கி எத்​தனை எத்​த​னையோ பிர​த​மர்​க​ளும்,​​ உள்​துறை அமைச்​சர்​க​ளும்,​​ அர​சி​யல் தலை​வர்​க​ளும் ஊழ​லுக்கு எதி​ரா​கப் போரை அறி​வித்து விளம்​ப​ரம் தேடிக் கொண்​டார்​களே தவிர ஊழல் ஒழி​ய​வும் இல்லை.​ ஊழ​லுக்கு எதி​ரான வாய் சவ​டால் குறை​ய​வு​மில்லை.​

அர​சி​யல் தலை​வர்​க​ளின் ஊழ​லைக்​கூ​டப் புரிந்து கொள்​ள​லாம்.​ தேர்​த​லுக்​குச் செலவு செய்த பணத்தை லஞ்​சம் வாங்கி ஈடு​கட்டி,​​ அடுத்த தேர்​தல்​க​ளுக்​கான பணத்​தைச் சேர்த்து வைக்க முயற்​சிக்​கி​றார்​கள் என்று சமா​தா​னம் சொல்ல முடி​யும்.​ கொள்ளை அடித்​துக் கொள்​ள​வும்,​​ லஞ்​சம் வாங்​கிக் கொள்​ள​வும் மக்​கள் அவர்​க​ளுக்கு வாக்​க​ளித்து அனு​மதி வழங்கி இருக்​கி​றார்​கள் என்று மன​தைத் தேற்​றிக் கொள்​ள​லாம்.​

ஆனால்,​​ மக்​க​ளின் வரிப்​ப​ணத்​தில் சம்​ப​ளம் வாங்​கும் அரசு அதி​கா​ரி​கள்,​​ மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது எந்த விதத்​தில் நியா​யம்?​ வாங்​கும் சம்​ப​ளம் தங்​க​ளது தகு​திக்​கும் திற​மைக்​கும் ஏற்​ற​தாக இல்​லை​யென்​றால் ராஜி​நாமா செய்​து​விட்டு வேறு வேலை பார்த்​துக் கொள்​வ​து​தானே?​ மக்​க​ளாட்​சி​யில் மக்​க​ளுக்​காக உழைப்​ப​தற்​காக மக்​க​ளால் சம்​ப​ளம் கொடுத்து நிய​மிக்​கப்​பட்​டி​ருக்​கும் வேலைக்​கா​ரர்​கள்,​​ மக்​க​ளின் கோரிக்​கையை நிறை​வேற்ற மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது தடுக்​கப்​பட்​டால் ஒழிய,​​ லஞ்​ச​மும் ஊழ​லும் அன்​றாட வாழ்க்​கை​யின் ​ அங்​க​மா​கத் தொடர்​வ​தைத் தடுக்க முடி​யாது.​

லஞ்​ச​மும் ஊழ​லும் படித்​த​வன் செய்​யும் தவறு.​ "இவ​னெல்​லாம் படித்​தால் என்ன,​​ படிக்​கா​மல் போனால் என்ன?​' என்று கேட்​கத் தோன்​று​கி​றதா?​ படிக்​கா​விட்​டால் லஞ்​சம் வாங்க முடி​யாதே...!
நன்றி : தினமணி

நாடா​ளு​மன்​றத்​தில் நாவாட உத​வாத செம்​மொழி!

"தே ம​து​ரத் தமி​ழோசை உல​க​மெ​லாம் பர​வும்​வகை செய்​தல் வேண்​டும்' என்று ஆர்ப்​ப​ரித்​தார் மகா​கவி பார​தி​யார். ஆனால் எந்த நாட்​டின் சுதந்​தி​ரத்​துக்​கா​கத் தம் வாழ்​நாளை அர்ப்​ப​ணித்​துக் கொண்​டாரோ,​ அந்த நாட்​டின் நாடா​ளு​மன்​றத்​தி​லேயே அவர்​தம் தாய்​மொ​ழி​யான தமிழ்​மொழி ஓங்கி ஒலிக்​கப்​போ​வ​தில்லை என்​பதை அவர் எண்​ணி​யி​ருக்க மாட்​டார்.

÷த​மிழ் உயர்​த​னிச் செம்​மொழி என்​பதை மொழி​யி​யல் அறி​ஞர் ​ ராபர்ட் கால்​டு​வெல்,​ ​ "திரா​விட மொழி​க​ளின் ஒப்​பி​லக்​க​ணம்' என்​னும் நூல்​வ​ழியே 1856-ம் ஆண்டு உல​குக்​குத் தெரி​வித்து சுமார் 150 ஆண்​டு​க​ளுக்​குப் பிறகு,​ மத்​திய அரசு தமி​ழைச் செம்​மொழி என்று அறி​வித்​தது. தமி​ழைச் செம்​மொ​ழி​யாக அறி​வித்​ததே,​ செம்​மொ​ழிக்​கான தகு​தி​க​ளைத் தளர்த்தி வேறு​சில மொழி​க​ளை​யும் செம்​மொ​ழி​யாக அறி​விப்​ப​தன் பொருட்டே என்​ப​தும் பிற​கு​தான் விளங்​கி​யது. ​ ​ ​ ​ ​

÷இது ஒரு​பு​றம் இருக்க,​ தகுதி மிகு​தி​யால் செம்​மொழி என்​னும் பெருமை பெற்ற தமிழ்​மொ​ழி​யில்,​ நாடா​ளு​மன்​றக் கூட்​டத்​தொ​டர்​க​ளில் தமிழ்​நாட்​டைச் சார்ந்த ஒரு மத்​திய அமைச்​சர் நாடா​ளு​மன்​றத்​தில் தமி​ழில் பேச அனு​மதி மறுக்​கப்​பட்டு வரு​கின்ற செய்தி ஊட​கங்​க​ளில் அவ்​வப்​போது வந்​து​கொண்​டி​ருக்​கி​றது.

​ நாடா​ளு​மன்​றத்​தில் மத்​திய அமைச்​சர்​கள் தமி​ழில் பேசு​வ​தற்​குத் தடை​யாக இருப்​பது என்ன அல்​லது யார் என்​பது பல​ருக்​கும் பெரும் புதி​ரா​கவே உள்​ளது. மத்​திய அமைச்​சர்​கள் பேசு​வ​தற்கு அனு​மதி மறுக்​கப்​ப​டு​கி​ற​தென்​றால்,​ அமைச்​சர்​கள் அல்​லாத மற்ற நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள்,​ இந்​தி​யி​லும் ஆங்​கி​லத்​தி​லும் பிறர் பேசு​வ​தைப்​போல் எப்​போ​தும் எதி​லும் தமி​ழில் பேச அனு​ம​திக்​கப்​ப​டு​கி​றார்​களா என்​றால்,​ இல்லை என்​பதை நம்​பு​வ​தற்கே பலர் தயங்​கு​வார்​கள். ​ ​

÷அ​வை​யில் ஒரு​வர் இந்​தி​யில் பேசி​னால் அது ஆங்​கி​லத்​தி​லும்,​ ஆங்​கி​லத்​தில் பேசி​னால் அது இந்​தி​யி​லும் ​ உட​னுக்​கு​டன் மொழி​பெ​யர்ப்பு செய்​யப்​ப​டு​கி​றது. இந்த மொழி​பெ​யர்ப்பு வசதி மாநி​லங்​க​ளவை உறுப்​பி​ன​ராக இருந்த பேர​றி​ஞர் அண்ணா அவர்​க​ளின் கோரிக்​கை​யால் 1964-ம் ஆண்டு முதல் செய்​து​த​ரப்​பட்டு வரு​கி​றது.

தமி​ழில் பேசு​வ​தற்கு மத்​திய அமைச்​ச​ருக்கு அனு​மதி ஏன் மறுக்​கப்​ப​டு​கி​றது என்​ப​தற்​கான கார​ணத்​தைத் தெரிந்​து​கொள்​வ​தற்​கு​முன்,​ நாடா​ளு​மன்​றத்​தில் எந்​தெந்த மொழி​க​ளில் பேச​லாம் என்​பது குறித்து அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் என்ன சொல்​கி​றது என்​ப​தைப் பார்ப்​பது அவ​சி​ய​மா​கி​றது.

÷அ​ர​சி​ய​ல​மைப்​புச் சட்​டத்​தின் 120-வது பிரிவு இவ்​வாறு குறிப்​பி​டு​கி​றது:​ ""நாடா​ளு​மன்ற நட​வ​டிக்​கை​கள் இந்தி அல்​லது ஆங்​கி​லத்​தில் மேற்​கொள்​ளப்​ப​டும்.

ஒரு உறுப்​பி​ன​ரால் தம் கருத்தை இந்தி அல்​லது ஆங்​கி​லத்​தில் வெளிப்​ப​டுத்த இய​லாது என்​றால்,​ மாநி​லங்​க​ள​வைத் தலை​வர் அல்​லது மக்​க​ள​வைத் தலை​வர் அல்​லது அந்​தந்த அவையை நடத்​து​ப​வர் அந்த உறுப்​பி​ன​ரைத் தம்​மு​டைய தாய்​மொ​ழி​யில் பேச அனு​ம​திக்​க​லாம்.'' ​ ​ ​ ​

÷ஆ​னால் நாடா​ளு​மன்​றத்​தில் நடப்​பது என்ன?​ இந்தி,​ ஆங்​கி​லம்,​ சம்ஸ்​கி​ரு​தம் மற்​றும் உருது ஆகிய மொழி​க​ளில் யாரும் எப்​போது வேண்​டு​மா​னா​லும் பேச​லாம். தமி​ழிலோ அல்​லது பிராந்​திய மொழி​கள் என்று அழைக்​கப்​ப​டும் வேறு மாநில மொழி​க​ளிலோ ஓர் உறுப்​பி​னர் பேச வேண்​டும் என்​றால்,​ அவர் பேசு​வ​தற்​குக் கொடுக்​கப்​ப​டும் வாய்ப்​பை​விட,​ அவ​ருக்கு விதிக்​கப்​ப​டும் கட்​டுப்​பா​டு​கள் அவர் தமி​ழில் பேசா​மல் இருப்​பதே மேல் என்று எண்ணி ஒதுங்​கி​வி​டச் செய்​கி​றது.

​ ஒரு​வர் நாடா​ளு​மன்ற உறுப்​பி​ன​ரா​வ​தற்​கான தகு​தி​க​ளைப் பட்​டிய​லி​டு​கின்ற அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டப் பிரிவு 84 அல்​லது நாடா​ளு​மன்​றத்​தில் எந்​தெந்த மொழி​க​ளில் பேச​லாம் என்​ப​தைக் குறிப்​பி​டும் அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டப் பிரிவு 120 அல்​லது நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டும் முறை மற்​றும் அவர்​க​ளின் தகு​தி​கள் பற்றி விலா​வா​ரி​யா​கக் குறிப்​பி​டும் மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டம்,​ 1951 ஆகி​ய​வற்​றில் எது​வும்,​ ஒரு நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் தமிழ் உள்​ளிட்ட தம் தாய்​மொ​ழி​யில் பேசு​வ​தைத் தடை செய்​ய​வில்லை. அவர்​க​ளுக்கு ஆங்​கி​லம் அல்​லது இந்தி கட்​டா​யம் தெரிந்​தி​ருக்க வேண்​டும் என்​றும் கூற​வில்லை.

​ இவ்​வா​றி​ருக்க,​ அடிப்​ப​டை​யில் நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​க​ளான மத்​திய அமைச்​சர்​கள் தமி​ழில் பேச​மு​டி​யாது என்று கூறு​கிற,​ அர​சி​யல் சட்​டத்தை விஞ்​சு​கிற அதி​கா​ரம் யாருக்கு இருக்​கி​றது?​ நிச்​ச​ய​மாக எவ​ருக்​கும் இல்லை. இந்த ஜன​நா​யக ரீதி​யான மொழி உரிமை மறுக்​கப்​ப​டு​வ​தற்​கான முக்​கி​ய​மான கார​ணம்,​ இந்​திக்​குத் தரப்​ப​டும் அதே உரி​மையை பிராந்​திய மொழி​க​ளுக்​கும் தரு​வதா என்​னும் மனப்​பாங்​கைத் தவிர வேறு எது​வாக இருக்​க​மு​டி​யும்?​

​ ஒரு மத்​திய அமைச்​சர் தாம் தமி​ழில் பேச​வி​ரும்​பு​வ​தாக நாடா​ளு​மன்​றச் செய​ல​கத்​துக்​குத் தெரி​வித்​தது பாராட்​டத்​தக்க ஒரு முன்​னோ​டி​யான செயல்.

​ த மி​ழ​கத்​தைச் சேர்ந்த பிற அமைச்​சர்​கள் மற்​றும் நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் அனை​வ​ருமே தங்​கள் கருத்தை முன் ஆயத்​த​மின்றி ஆங்​கி​லத்​தில் வெளிப்​ப​டுத்​தும் அள​வுக்கு ஆங்​கி​லப் புலமை பெற்​ற​வர்​களா என்ற கேள்வி எழு​வ​தும் இயற்​கை​தான். ​ ​ ​

÷த​மி​ழர்​கள் சம உரி​மை​யின்றி வாழ்ந்​து​வ​ரும் இலங்கை மற்​றும் சிங்​கப்​பூர் நாடா​ளு​மன்​றங்​க​ளில்​கூட தமி​ழில் தடை​யின்​றிப் பேச வாய்ப்​ப​ளிக்​கப்​ப​டு​கி​றது.

தமி​ழில் பேச​வும் பிற மொழி​க​ளில் பேசப்​ப​டு​வதை மொழி​பெ​யர்ப்​பு​மூ​லம் தமி​ழில் கேட்​க​வும் வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

​ தற்​போது இந்​திய நாடா​ளு​மன்​றத்​தில் முன்​ன​றி​விப்பு செய்​து​விட்டு ஒரு எம்.பி. தமி​ழில் பேச​லாமே தவிர,​ இந்தி மற்​றும் ஆங்​கி​லத்​தில் ​ பேசும்​போது அதைத் தமி​ழில் மொழி​பெ​யர்ப்பு மூலம் அவ​ரால் கேட்​க​மு​டி​யாது,​ அந்த வசதி இங்கு செய்​து​த​ரப்​ப​ட​வில்லை.

ஆங்​கி​லப் புலமை இல்​லா​த​தால் தமி​ழில் பேசும் ஒரு​வர்,​ ஆங்​கி​லம் அல்​லது இந்​தி​யில் நடை​பெ​றும் அவை நட​வ​டிக்​கை​களை தமிழ் மொழி​பெ​யர்ப்பு இல்​லா​மல் எவ்​வாறு புரிந்​து​கொள்​வார்?​

இரண்​டாந்​த​ரக் குடி​மக்​க​ளா​கத் தமி​ழர்​கள் நடத்​தப்​ப​டு​வ​தா​கக் கூறப்​ப​டும் நாடு​க​ளின் நாடா​ளு​மன்​றங்​க​ளில் தமி​ழில் பேசு​வ​தற்​கும் பிறர் பேசு​வ​தைத் தமி​ழில் கேட்​ப​தற்​கும் கொடுக்​கப்​ப​டும் உரிமை,​ இந்​திய நாடா​ளு​மன்​றத்​தில் கொடுக்​கப்​ப​ட​வில்லை என்​பதை எண்​ணும்​போது யார் இரண்​டாந்​த​ரக் குடி​மக்​கள் என்ற கேள்வி ஈட்​டி​யாய் நெஞ்​சில் குத்​து​கி​றது.

​ 27 நாடு​கள் அங்​கம் வகிக்​கின்ற,​ 736 எம்.பி.க்க​ளைக்​கொண்ட ஐரோப்​பிய கூட்​ட​மைப்​பின் நாடா​ளு​மன்​றத்​தில் 23 மொழி​க​ளில் உட​னடி மொழி​பெ​யர்ப்பு செய்​யப்​ப​டு​கி​றது.

இதற்​காக 800-க்கும் அதி​க​மான மொழி​பெ​யர்ப்​பா​ளர்​கள் பணி​ய​மர்த்​தப்​பட்​டுள்​ள​னர் என்​பது வியப்​பு​மே​லி​டும் உண்மை.

​ ஆனால் காஷ்​மீ​ரம் முதல் கன்​னி​யா​கு​மரி வரை இந்​தியா ஒரே நாடு என்று உரக்​கச் சொல்​லிக் கொண்​டி​ருக்​கும் இத்​தி​ரு​நாட்​டில் சொந்​த​மொ​ழியே அன்​னி​யப்​பட்​டுக் கிடக்​கும் அவ​லத்​தி​லும் சல​ன​மில்​லா​மல் இருப்​ப​து​தான் தமி​ழ​னின் தனிப்​பண்​பு​போ​லும். ​ ​

÷சொந்த நாட்​டின் நாடா​ளு​மன்​றத்​தி​லேயே மதிக்​கப்​ப​டாத ஒரு மொழி செம்​மொ​ழி​யாய் இருந்து யாருக்கு என்ன பயன்?​ யாரு​டைய தய​வும் இன்றி நாடா​ளு​மன்​றத்​தில் தமி​ழில் பேசும் சூழல் உரு​வாக வேண்​டு​மெ​னில்,​ அர​சி​ய​மைப்​புச் சட்​டத்​தின் 120-வது பிரி​வைத் திருத்​து​வது அவ​ச​ர​மா​ன​தும் அவ​சி​ய​மா​ன​தும்​கூட. நாடா​ளு​மன்ற நட​வ​டிக்​கை​கள் இந்தி அல்​லது ஆங்​கி​லத்​தில் மேற்​கொள்​ளப்​ப​டும் என்ற வாச​கத்தை நாடா​ளு​மன்ற நட​வ​டிக்​கை​கள் இந்தி அல்​லது ஆங்​கி​லம் அல்​லது தமிழ் உள்​ளிட்ட மாநில மொழி​க​ளில் மேற்​கொள்​ளப்​ப​டும் என்று மாற்​றி​ய​மைக்​கின்ற அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டத்​தி​ருத்​தம் கொண்​டு​வ​ரப்​பட வேண்​டும்.

அப்​போ​து​தான் இந்​திக்​கும் ஆங்​கி​லத்​துக்​கும் கொடுக்​கப்​ப​டும் நாடா​ளு​மன்ற கெüர​வம் செம்​மொழி தமி​ழுக்​கும் கிடைக்​கும்.

​ தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சே​ரி​யைச் சார்ந்த இரு அவை​க​ளின் எம்.பி.க்கள் 59 பேரும்,​ அர​சி​யல் கட்​சித் தலை​வர்​க​ளும் இந்த அர​சி​ய​ல​மைப்பு சட்​டத்​தி​ருத்​தத்​தைக் கொண்​டு​வர முயற்​சிப்​பார்​களா?​

அண்​ணா​வின் நூற்​றாண்டு விழா கொண்​டா​டப்​பட்ட இந்த ஆண்​டில்,​ அவ​ரு​டைய முய ற்​சி​யால் கொண்​டு​வ​ரப்​பட்ட நாடா​ளு​மன்ற மொழி​பெ​யர்ப்பு சேவை முழு​வீச்​சில் செம்​மொழி தமி​ழுக்​குக் கிடைக்​கச் செய்​வதே அவ​ருக்​குச் செலுத்​தும் உண்​மை​யான அஞ்ச​லி​யாக அமை​யும்.

​(கட்​டு​ரை​யா​ளர்:​ தில்லை நாக​சாமி
மாநி​லங்​க​ள​வை​யில் முது​நிலை மொழி​பெ​யர்ப்​பா​ள​ராக 20 ஆண்​டு​கள் பணி​யாற்றி விருப்ப ஓய்வு பெற்​ற​வர்)​. ​​
நன்றி : தினமணி

வோடபோன் நிறுவன ரோமிங் கட்டணம் குறைப்பு

செல்போன் நிறுவனங்களுக்கிடையிலான போட்டியின் ஒரு கட்டமாக வோடபோன் நிறுவனம் தனது இரு திட்டங்களுக்கான ரோமிங் கட்டணத்தைக் குறைத்துள்ளது. போஸ்ட் பெய்ட் மற்றும் ப்ரீ பெய்ட் ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் இது பொருந்தும். வோடபோனின் டிராவல் பிளான் மற்றும் டிக்கெட் பிளான் ஆகிய இரு பிரிவுகளில் இந்த ரோமிங் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. டிராவல் பிளான் திட்டப்படி வாடிக்கையாளர்கள் இனிமேல் ஒரு நிமிடத்திற்கு 70 பைசா ரோமிங் கட்டணமாக செலுத்த வேண்டும். டிக்கெட் பிளான் திட்டத்தின்படி, ஒரு விநாடிக்கு 1.5 பைசா செலுத்த வேண்டும். ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள், ரூ.61 ரீசார்ஜ் செய்து டிராவல் பிளானையும், ரூ.62 ரீசார்ஜ் செய்து டிக்கெட் பிளானையும் பயன்படுத்தலாம். இந்த இரு திட்டங்களுக்கான வாலிடிட்டி, ரீசார்ஜ் செய்யும் நாளிலிருந்து 365 நாட்களாக இருக்கும்.
நன்றி : தினமலர்