Thursday, December 17, 2009

சீனாவில் 255 டன் தங்கம் உற்பத்தி

உலக அளவில் தங்கம் பயன்பாட்டில், இது வரை இந்தியா முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது, சீன நாட்டில் தங்கம் பயன்பாடு அதிகரித்துள்ளதையடுத்து, சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில், மிக அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளுள் சீனா முன்னணியில் உள்ளது. சென்ற அக்டோபர் மாதத்தில், சீனாவில் 26.354 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு 2009ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதத்தில் சீனாவில் 254.552 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டை விட 14.1 சதவீதம் அதிகம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பல நாடுகளின் செலாவணிகளுக்கு எதிராக, அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு சரிவடைந்து போனதால், உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. இதனால், கடந்த ஒரு சில மாதங்களாக இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்தது. டிசம்பர் 3ம் தேதியன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.1,707 ஆக உயர்ந்தது. அதாவது, ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.12,792 ஆக அதிகரித்தது. இந்தநிலையில், புதன்கிழமை அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,599 ஆக இருந்தது. இந்தியாவில், தங்கத்தின் விலை அதிகளவில் உயர்ந்ததையடுத்து, தங்கம் பயன்பாடு குறைந்து போனது.
நன்றி : தினமலர்


உண்மை சுடும்

நீதி​மன்​றங்​க​ளில் தேங்​கிக்​கி​டக்​கும் வழக்​கு​களை விரைந்து விசா​ரித்து தீர்ப்​பு​க் கூ​றா​விட்​டால் நீதித்​துறை நடை​மு​றையே நாள​டை​வில் நொறுங்​கி​வி​டும்,​​ மக்​க​ளுக்கு நீதித்​துறை மீதே நம்​பிக்கை போய்​வி​டும்,​கிளர்ந்து எழு​வார்​கள் -​ கல​கம் வெடிக்​கும் என்று எச்​ச​ரித்​தி​ருக்​கி​றார் உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதி​பதி கே.ஜி.​ பால​கி​ருஷ்​ணன்.​ இப்​போ​தா​வது இது​பற்​றிய கவலை நீதித்​து​றைக்கு எழுந்​தி​ருக்​கி​றதே,​​ மகிழ்ச்சி.​

சம​ர​சப் பேச்​சு​வார்த்தை மூலம் வழக்​கு​க​ளைத் தீர்க்​கும் மாற்று வழி குறித்த கருத்​த​ரங்​கம் பெங்​க​ளூ​ரில் நடை​பெற்​றது.​ அதில் பங்​கேற்​றுப் பேசி​ய​போது கே.ஜி.​ பால​கி​ருஷ்​ணன் இந்த எச்​ச​ரிக்​கையை விடுத்​தி​ருக்​கி​றார்.​

வழக்​கு​கள் தேங்​கி​வ​ரு​வது குறித்து கடந்த 20 வரு​ஷங்​க​ளா​கவே யார் யாரோ எச்​ச​ரித்து வரு​கின்​ற​னர்.​ மத்​திய சட்​டக் கமி​ஷன்,​​ உயர் நீதி​மன்​றங்​கள்,​​ உச்ச நீதி​மன்​றம்,​​ மத்​திய சட்​டம்,​​ நீதித்​து​றைக்​கான நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​க​ளைக் கொண்ட ஆலோ​ச​னைக் குழு போன்​றவை இந்த எச்​ச​ரிக்​கை​களை விடுத்து வரு​கின்​றன.​ ஆனால் உரிய பரி​கார நட​வ​டிக்​கை​கள்​தான் போது​மான அள​வில் எடுக்​கப்​ப​டா​மல் இருக்​கின்​றன.​

பெங்​க​ளூர் கருத்​த​ரங்​கில் பேசிய உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதி​பதி நாட்​டில் போதிய எண்​ணிக்​கை​யில் சார்பு நீதி​மன்​றங்​கள் இல்​ல​தா​ததே வழக்​கு​க​ளின் தேக்​கத்​துக்கு முக்​கிய கார​ணம் என்று வலி​யு​றுத்​தி​யி​ருக்​கி​றார்.​ வழக்​கு​கள் தேங்​கு​வ​தற்​கான பல்​வேறு கார​ணங்​க​ளில் அது​வும் ஒன்று என்​பதை மறுக்க முடி​யாது.​

இப்​போ​துள்ள 16,000 சார்பு நீதி​மன்​றங்​க​ளில் சுமார் 2,000-க்கும் மேற்​பட்ட நீதி​ப​தி​க​ளின் பத​வி​கள் காலி​யாக இருப்​ப​தை​யும் அவர் சுட்​டிக்​காட்​டி​யி​ருக்​கி​றார்.​ காலி​யி​டங்​களை உட​னுக்​கு​டன் நிரப்​பு​வ​து​டன் சார்பு நீதி​மன்​றங்​க​ளின் எண்​ணிக்​கையை 35,000 அள​வுக்கு உயர்த்​து​வ​தும் அவ​சி​யம் என்று வலி​யு​றுத்​தி​யி​ருக்​கி​றார்.​

அடுத்​த​ப​டி​யாக,​​ இந்​தி​யா​வில் வழக்​கா​டு​வ​தற்​கான செலவு மிக​வும் குறைவு என்​ப​தா​லும் வழக்​கு​க​ளின் எண்​ணிக்கை அதி​க​மாக இருக்​கி​றது என்று பேசி​யி​ருக்​கி​றார்.​ நீதி​மன்​றங்​கள் விதிக்​கும் கட்​ட​ணங்​க​ளும் படி​வங்​க​ளின் விலை​யும் வேண்​டு​மா​னால் அரசு நிர்​ண​யிப்​ப​தால் குறை​வாக இருக்​க​லாம்,​​ வழக்​க​றி​ஞர்​க​ளுக்​கான கட்​ட​ணம் அப்​ப​டியா என்​பதை அத்​து​றை​யில் உள்​ள​வர்​க​ளின் மன​சாட்​சியே பதில் கூறட்​டும் என்று விட்​டு​வி​டு​வோம்.​

நீதி​மன்​றங்​க​ளில் ஏற்​ப​டும் தாம​த​மும்,​​ செல​வும்,​​ மக்​க​ளுக்கு விரக்​தியை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ எனவே கட்​டப்​பஞ்​சா​யத்து என்று அழைக்​கப்​ப​டும் மாற்று வழி​மு​றையை நாடு​கின்​ற​னர்.​ இது "வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்' என்ற முது​மொ​ழிக்கு ஏற்ப,​​ ஜாதி அல்​லது அர​சி​யல் செல்​வாக்கு மிக்​க​வர்​க​ளின் ஆளு​கைக்கு உள்​பட்​ட​தாக இருக்​கி​றது.​ இங்கே எளி​யா​ருக்கு ​ நீதி கிடைக்​கி​றதோ இல்​லையோ அநீ​தி​யா​வது விரை​வாக வழங்​கப்​பட்டு விடு​கி​றது.​

சரியோ தவறோ விவ​கா​ரம் முடிந்​ததே என்ற அள​வில் மக்​கள் திருப்​தி​ய​டை​யத் தொடங்கி விடு​கி​றார்​கள்.​ ​

நீதித்​து​றை​யில் பிரிட்​டிஷ் ஆட்​சி​யா​ளர்​கள் தலை​யிட்டு நீதி​மன்​றங்​களை ஏற்​ப​டுத்​து​வ​தற்கு முன்​னால் நம் நாட்​டில் கிரா​மப் பஞ்​சா​யத்​து​களே நியா​யஸ்​த​லங்​க​ளா​க​வும் திகழ்ந்​தன.​ அப்​போது அவற்​றின் குறை​க​ளா​கப் பட்​டிய​லி​டப்​பட்ட பல விஷ​யங்​க​ளில் முக்​கி​ய​மா​னது,​​ அவை நடு​நி​லை​யா​னவை அல்ல என்​ப​தா​கும்.​

பஞ்​சா​யத்​தில் இடம் பெற்​ற​வர்​கள்,​​ கிடைக்​கும் சந்​தர்ப்ப சாட்​சி​யங்​க​ளின் அடிப்​ப​டை​யில்,​​ போதிய சட்ட அறிவு இல்​லா​மல்,​தங்​க​ளு​டைய செல்​வாக்​குக்கு பங்​கம் வராத வகை​யில் தீர்ப்பு வழங்​கி​னார்​கள் என்​ப​து​தான் அந்​தக் குற்​றச்​சாட்​டின் மையக் கருத்​தா​கும்.​ ​ ஆனால் வழக்​குத் தொடுக்​க​வும்,​​ விசா​ரிக்​க​வும்,​​ தீர்ப்பு வழங்​க​வும் அதி​கப் பொருள்,​​ நேரச் செலவு இல்​லா​மல் அந்​தப் பஞ்​சா​யத்​து​கள் நடந்து முடிந்​தன.​

சட்​டம் படித்த வழக்​க​றி​ஞர்​கள் வாதி,​​ பிர​தி​வா​தி​க​ளுக்​காக ஆஜ​ரா​கும் நீதித்​து​றையை நடு​நி​லை​யா​னது,​​ எவர் பக்​க​மும் சாயா​தது என்று பாராட்​டி​னா​லும் அது வழக்கை விசா​ரித்து தீர்ப்பு வழங்​கும் முக்​கி​ய​மான பணியை இழுத்​துக் கொண்டே போனால் அப்​ப​டிப்​பட்ட நீதித்​துறை யாருக்கு வேண்​டும் என்ற கேள்​வியே பெரி​தா​கி​றது.​ சட்​டப்​படி வழங்​கப்​ப​டும் தீர்ப்​பு​கள் தர்​மத்​துக்கு எதி​ரா​ன​வை​யாக இருக்​கும்​போது,​​ மக்​கள் ஆட்சி அமைப்​பின்​மீதே நம்​பிக்கை இழப்​ப​தும்,​​ தீவி​ர​வா​தி​க​ளாக மாறு​வ​தும் தவிர்க்க இய​லா​தவை.​

அதிக நீதி​மன்​றங்​கள்,​​ அதிக நீதி​ப​தி​கள்,​​ அதிக வேலை நாள்​கள் போன்​றவை இந்த வழக்​கு​க​ளின் எண்​ணிக்​கை​யைக் கணி​ச​மா​கக் குறைக்​கும்.​ அதை​விட முக்​கி​யம் நீதி​ப​தி​கள்,​​ வழக்​க​றி​ஞர்​கள்,​​ நீதித்​துறை நிர்​வா​கி​கள் ஆகி​யோ​ரின் மனங்​க​ளில் ஏற்​பட வேண்​டிய முக்​கி​ய​மான மாற்​றங்​கள்.​

இந்​தியா வறு​மை​யில் உழ​லும் கோடிக்​க​ணக்​கான ஏழை​க​ளைக் கொண்ட நாடு.​ இங்கு நீதி நிர்​வா​கத்​துக்கு அவர்​க​ளு​டைய வரிப்​ப​ணம்​தான் செல​வி​டப்​ப​டு​கி​றது.​ நேர​டி​யாக வழக்​குச் செல​வு​கள் குறைவு போலத் தோன்​றி​னா​லும் அந்த மானி​யமே வரிப்​ப​ணத்தி​லி​ருந்​து​தான் ஈடு​கட்​டப்​ப​டு​கி​றது.​ எனவே நீதி​ப​தி​க​ளும் வழக்​க​றி​ஞர்​க​ளும் வழக்கு விசா​ர​ணை​க​ளைத் துரி​த​மாக நடத்தி முடிக்​கக் கட​மைப்​பட்​ட​வர்​கள் ஆகின்​ற​னர்.​ ​

அனா​வ​சி​ய​மாக வாய்தா வாங்​கா​மல் வழக்கு விவ​ரத்​தை​யும் தங்​கள் தரப்பு நியா​யத்​தை​யும் இரு​த​ரப்பு வழக்​க​றி​ஞர்​க​ளும் எழுத்து மூலம் அளித்​து​விட்டு பிறகு தேவைப்​பட்​டால் வாதம் நடத்தி விசா​ர​ணையை விரைந்து முடிக்​க​லாம் என்று யோசனை கூறப்​பட்​டது.​ என்ன கார​ணத்​தாலோ அது ஏற்​கப்​ப​ட​வில்லை.​

கடந்த ஜூன் மாதப் புள்​ளி​வி​வ​ரப்​படி,​​ 1 கோடியே 94 லட்​சம் கிரி​மி​னல் வழக்​கு​க​ளும்,​​ 76 லட்​சம் சிவில் வழக்​கு​க​ளும் தீர்ப்​புக்​குக் காத்​தி​ருக்​கின்​றன.​ இந்த வழக்​கு​களை அடுத்த ஓராண்​டில் விசா​ரித்​துத் தீர்ப்பு வழங்க வேண்​டு​மா​னால்,​​ 1,500 உயர் நீதி​மன்ற நீதி​ப​தி​க​ளும்,​​ 23,000 கீழமை நீதி​மன்ற நீதி​ப​தி​க​ளும் தேவை.​

இந்​தி​யா​வைப் பொறுத்​த​வரை அர​சாங்​கம்​தான் மிகப்​பெ​ரிய வழக்​கா​ளர் என்று சொல்​லப்​ப​டு​வது உண்டு.​ மத்​திய,​​ மாநில அர​சு​க​ளும் அர​சுத்​து​றை​க​ளும் வெவ்​வேறு காலங்​க​ளில் தொடர்ந்த தேவை​யற்ற வழக்​கு​களை மறு​ப​ரி​சீ​லனை செய்து அவற்றை விலக்​கிக் கொள்​வது அல்​லது முடித்​துக் கொள்​வது என்​றும் தீர்​மா​னித்து வழக்​கு​க​ளின் எண்​ணிக்​கை​யைக் கணி​ச​மா​கக் குறைக்​க​லாம்.​

அர​சும் நிர்​வா​க​மும் நியா​ய​மாக நடந்து கொள்​ள​வில்லை என்​ப​தால் பாதிக்​கப்​பட்ட குடி​மக்​கள் அர​சின்​மீது தொடுத்த வழக்​கு​க​ளும் ஏரா​ளம்,​​ ஏரா​ளம்.​ முறை​யா​க​வும்,​​ ​ நியா​ய​மா​க​வும்,​​ விரை​வா​க​வும் அர​சும் நிர்​வா​க​மும் செயல்​பட்​டால்,​​ பொது​மக்​கள் நீதி​மன்​றத்தை நாட வேண்​டிய அவ​சி​ய​மும் கணி​ச​மா​கக் குறைந்​து​வி​டும்.​

இந்​தி​யச் சிறைச்​சா​லை​க​ளில் சுமார் இரண்​டரை லட்​சம் பேர் விசா​ர​ணைக் கைதி​க​ளா​கத் தீர்ப்பை எதிர்​நோக்​கிக் காத்​தி​ருக்​கி​றார்​கள்.​ அவர்​க​ளது நிலை​மை​யைப் பற்றி யாரா​வது கவ​லைப்​ப​டு​கி​றார்​களா?​ அதில் எத்​தனை பேர் நிர​ப​ரா​தி​களோ,​​ யாருக்​குத் தெரி​யும்?​

வழக்​கு​கள் தேங்​கிக் கிடக்​கின்​றன.​ நீதி தாம​தப்​ப​டு​கி​றது என்​றெல்​லாம் கருத்​த​ரங்​கம் போட்​டுப் பேசிக்​கொண்​டி​ருந்​தால் போதாது.​ செயல்​பட வேண்​டும்.
நன்றி : தினமணி

வங்கதேச செல்போன் நிறுவனத்தை வாங்கிறது பாரதி ஏர்டெல்!

வங்கதேசத்தின் நான்காவது பெரிய செல்போன் நிறுவனமான வாரிட் டெலிகாமை வாங்குகிறது இந்தியாவின் பாரதி ஏர்டெல். அபுதாபியைச் சேர்ந்த தாபி நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த வாரிட் மொபைல். இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் வங்கதேச மொபைல் போன் மார்க்கெட்டில் நுழைகிறது பாரதி ஏர்டெல்.
வாரிட் டெலிகாமின் 70 சதவிகித பங்குகளை பாரதிக்கு விற்க சம்மதித்துவிட்ட தாபி நிறுவனம், இதற்கு முறைப்படி வங்கதேச தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளது.
கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர்களை ஆரம்பத்தில் முதலீடு செய்யும் பாரதி, படிப்படியாக 900 மில்லியன் டாலர் வரை வங்கதேசத்தில் முதலீடு செய்யும் திட்டத்தில் உள்ளது. வாரிட் நிறுவனம் 2007ல் வங்கதேசத்தில் கால்பதித்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக அந்நாட்டின் பெரிய செல்போன் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பாரதி நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவது, வங்கதேச தொலைத் தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தும் என்று இந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் தற்போது 52 மில்லியன் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
நன்றி : தினமலர்