Sunday, October 18, 2009

அதிக லாபத்துடன் குஷியாக தீபாவளி கொண்டாடிய முதலீட்டாளர்கள்

மும்பை பங்குச் சந்தையில் ஏக குஷியுடன் தங்கள் தீபாவளி பண்டிக்கை திருநாளை முதலீட்டாளர்கள் கொண்டாடினர். 30 லட்சம் கோடி அளவிற்கு லாபம் கிடைத்துள்ளது என்றால், சந்தேஷத்திற்கு பஞ்சம் இருக்குமா என்ன? மும்பை பங்குச் சந்தை மற்றும் மும்பை முன்பேர வர்த்தக சந்தைகளில் சாம்வாட் 2065 கடந்த வெள்ளி கிழமையுடன் முடிவடைந்தது. இந்த சாம்வாட் 2065ல் பங்குச்சந்தையில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், முதலீட்டாளர்கள் இரட்டிப்பு லாபம் அடைந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த நேரத்தில் மொத்த முதலீட்டாளர்களி் லாபம் 58 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, நேற்று தீபாவளி அன்று
மும்பை பங்குச் சந்தை மற்றும் மும்பை முன்பேர வர்த்தக சந்தைகளில் சாம்வாட் 2066 பிறப்பை முன்னிட்டு முகுராத் வர்த்தகம் நடைபெற்றது. சாம்வாட் 2066ல் அதிக லாபம் கிடைக்கும் விதமாக லட்சுமி பூஜையும் நடைபெற்றது.
நன்றி : தினமலர்


டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிகர லாபம் 29.17% அதிகரிப்பு

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டாடா குரூப் கம்பெனி), இரண்டாம் காலாண்டு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது. இதில், அந்நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டை விட 29.17 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் 1, 642 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. நிறுவனத்தின் வருவாய் இனங்களும் 6.93 சதவீதம் அதிகரித்து 7,435 கோடி ரூபாயாக இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவன மேலாண்மை இயக்குனரும் சி.ஈ.ஓ.,வுமான சந்திரசேகரன் தெரிவிக்கும் போது, டாடா கல்சல்டன்சி நிறுவனம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. தொழில்துறையில் மேலும் முன்னேற்றம் அடைய தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதற்காக எங்களது வாடிக்கையாளர்களிடம் சுமூக உறவினை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்