Friday, September 5, 2008

ஐரோப்பாவுக்கு போகும் 'ஐ 20' சென்னையில் தயாரிக்குது ஹுண்டாய்!

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள 'ஐ 20' ரக கார்களை, தன் சென்னை தொழிற்சாலையில் தயாரிக்க ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்ட 'ஐ 10' ரக கார் போல இல்லாமல், புதிய ரக கார், சர்வதேச அளவில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சர்வதேச கார் கண்காட்சி நடக்கிறது. அதில், ஹுண்டாய் நிறுவனம் தன் புதிய ஆறு கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார்களை சர்வதேச அளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த 'ஐ 20' ரக கார்களை ஆண்டுக்கு ஆறு லட்சம் எண்ணிக்கையில் சென்னை தொழிற்சாலையில் தயாரிக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நன்றி : தினமலர்


மின்சார இண்டிகா: டாடா புது திட்டம்

மின்சாரத்தால் இயங்கும் இண்டிகா காரை தயாரிக்க டாடா கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால், இதை இந்தியாவில் தயாரிக்கப்போவதில் லை. நார்வேயில் தயாரித்து, அங்கு விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது; அடுத் தாண்டு இந்த திட்டம் நிறைவேறியதும், 2010ல் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று தெரிகிறது . டில்லியில் நடந்த தொழில் வளர்ச்சி கண் காட்சியில் இந்த காரின் மாதிரி வடிவத்தை டாடா நிறுவனம் வெளியிட்டது. ஏற்கனவே, உலகின் மிக மலிவு விலை கார் என்று ஒரு லட்சம் ரூபாய் நானோ காரை அறிமுகம் செய்த டாடா, மின்சார இண்டிகா கார் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

'எரிபொருள் மிச்சமாகிறது; உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக இருக்காது என்ற வகையில், மின்சாரத்தால் இயங்கும் கார்களை தயாரிப்பதில் பல நிறுவனங் கள் தயாராகி விட்டன. அந்த வகையில், எங்கள் பதில் இண்டிகா மின்சார கார். வெளிநாடுகளில் வாகன காஸ் விலை பல மடங்கு உயர்ந்து வருவதால், இதுபோன்ற மின்சார கார்களுக்கு வரவேற்பு இருக்கும்' என்று டாடா நிறுவன நிர்வாக இயக்குனர் ரவிகாந்த் கூறினார். நிசான், மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள், மின்சார காரை தயாரிக்க தீவிரம் காட்டி வருவதை அடுத்து, அமெரிக்காவின் பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும், 'செவி வோல்ட்' என்ற மின்சார ரக காரை தயாரிக்க உள்ளது. டாடா நிறுவனம் தயாரிக்கும் மின்சார காரில் இடது பக்கத்தில் ஸ்டீரிங் பொருத் தப்பட்டிருக்கும். நார்வேயின் பிரபல நிறுவனம் ஒன்றுடன் கூட்டுசேர்ந்து இந்த மின்சார கார் தயாரிப்பு திட் டத்தில் டாடா இறங்கியுள்ளது. 

நன்றி : தினமலர்