Friday, December 11, 2009

தொலைக்​காட்​சி​யில் தொலைந்​த​வர்​கள்

பொழு​து​போக்கை மைய​மாக வைத்​துக் கண்​டு​பி​டிக்​கப்​பட்ட தொலைக்​காட்சி,​​ இன்று நம் அனை​வ​ரின் வாழ்​வி​லும் தொலைந்து போன காட்​சி​க​ளைத்​தான் காண்​பித்​துக் கொண்​டி​ருக்​கி​றது.​ தொலைக்​காட்​சி​யைப் பார்த்து வாழ்க்​கை​யைத் தொலைத்​த​வர்​க​ளும் உண்டு.​

​ ​ ​ தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​க​ளில் வட இந்​தி​யர்​களை விட தென்​னிந்​தி​யர்​கள் அதிக கவ​னம் செலுத்​து​வ​தா​க​வும்,​​ தமி​ழ​கத்​தில் சரா​ச​ரி​யாக நாள் ஒன்​றுக்கு 6.5 எபி​சோ​டு​க​ளைப் பார்ப்​ப​தா​க​வும்,​​ அதி​லும் குறிப்​பிட்ட 3 சானல்​களை 54 சத​வீ​தம் பேர் பார்ப்​ப​தா​க​வும் தனி​யார் நிறு​வ​னம் ஒன்​றின் புள்​ளி​வி​வ​ரம் தெரி​விக்​கி​றது.​

​ ​ ​ கேர​ளத்​தில் இது 4 எபி​சோ​டு​க​ளாக உள்​ள​தா​க​வும்,​​ பிற்​பக​லில் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​க​ளைப் பார்ப்​ப​தில் கேர​ளம்,​​ கர்​நா​ட​கத்தை விட தமி​ழ​க​மும்,​​ ஆந்​தி​ர​மும் தான் முன்​ன​ணி​யில் உள்​ள​தா​க​வும்,​​ அதி​லும் முன்​ன​ணி​யில் இருப்​ப​வர்​கள் பெண்​கள் என்​றும் அந்​தப் புள்​ளி​வி​வ​ரம் மேலும் தெரி​விக்​கி​றது.​

​ ​ ​ தொலைக்​காட்​சி​க​ளால் நம்​ம​வர்​கள் அடைந்த பயன்​தான் என்ன?​ பக்​கத்து வீடு​க​ளு​ட​னான தொடர்​பும்,​​ சச்​ச​ர​வு​க​ளும் குறைந்​துள்​ளது.​ கொலை​யும்,​​ கொள்​ளை​க​ளும்,​​ வீடு​க​ளில் பிரச்​னை​க​ளும் அதி​க​ரித்​துள்​ளன என்​பது தான் பதில்.​ ​

​ ​ பெண்​க​ளை​யும்,​​ தொடர்​க​ளை​யும் மைய​மாக வைத்தே இன்​றைய டிவி சேனல்​கள் தொடங்​கப்​பட்டு இயங்கி வரு​கின்​றன.​ தொலைக்​காட்​சி​க​ளில் ஒளி​ப​ரப்​பா​கும் பெரும்​பா​லான நிகழ்ச்​சி​கள் கொலைக்​காட்​சி​க​ளா​கத்​தான் இருக்​கின்​றன என்​பது வருத்​தப்​பட வேண்​டிய ஒன்று.​

​ ​ நல்ல நிகழ்ச்​சி​களை வழங்​கும் டிவி சேனல்​க​ளுக்கு நம்​மி​டையே பெரிய அள​வில் வர​வேற்​பில்லை என்​ப​தும்,​​ இந்த தொலைக்​காட்சி தொடர்​க​ளின் ஆதிக்​கத்​துக்​குக் கார​ணம்.​ ​

​ ​ ​ பெண்​களை மட்​டு​மன்றி குழந்​தை​க​ளை​யும் கவ​ரக்​கூ​டிய வகை​யில் ​ ஏரா​ள​மான டிவி சேனல்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.​ அதில் ஒளி​ப​ரப்​பா​கும் நிகழ்ச்​சி​கள் பிஞ்​சுக் குழந்​தை​க​ளின் மன​தில் நஞ்சை விதைப்​ப​தா​கத்​தான் உள்​ளன.​ ​

​ ​ சிறு​வ​ய​தி​லேயே டிவிக்கு அடி​மை​யா​கும் குழந்​தை​கள் கண்​பார்​வைக் குறை​பா​டு​க​ளுக்கு உள்​ளா​வ​தா​க​வும்,​​ மன​ரீ​தி​யான பாதிப்​புக்​குள்​ளா​வ​தா​க​வும் ஆய்​வு​கள் தெரி​விக்​கின்​றன.​

​ ​ தீபா​வளி,​​ பொங்​கல் போன்ற விழாக்​களை வீதி​யில் கொண்​டா​டிய காலம் போய் இன்று டிவி​யில் பார்த்து ரசிக்​கிற காலத்​தில் இருக்​கி​றோம்.​ பண்​டி​கைக் காலங்​க​ளில் கோயில்​க​ளுக்​குச் செல்​வது,​​ உற​வி​னர்​க​ளின் வீடு​க​ளுக்​குச் சென்று வரு​வது போன்ற பழக்க வழக்​கங்​கள் எல்​லாம் இன்று நம்​மி​டம் இருந்து மறைந்து போய்​விட்​டது ​(மறந்து போய்​விட்​டது)​ என்றே சொல்​ல​லாம்.​ ​

​ ​ ​ ஓடி விளை​யாடு பாப்பா என்று சொன்ன கவி​ஞர் பாரதி வாழ்ந்த நாட்​டில்,​​ இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழ​கி​விட்​டோம்.​

​ ​ ​ டிவி சேனல்​கள்,​​ இணை​யத்​தின் வரு​கை​யால் இன்​றைக்கு மைதா​னங்​க​ளில் விளை​யா​டு​வோ​ரின் எண்​ணிக்​கை​யும்,​​ தெரு​மு​னை​க​ளில் கதை பேசு​ப​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மா​கக் குறைந்​துள்​ளது.​ ​

​ ​ ​ தொலைக்​காட்​சிக்கு அடுத்​த​ப​டி​யாக இன்று ஏரா​ள​மா​னோரை தன்​னு​டைய கட்​டுக்​குள் வைத்​தி​ருப்​பது இணை​ய​த​ளம்.​ தொலைக்​காட்​சி​யின் பரி​ணாம வளர்ச்சி என்று சொல்​லக்​கூ​டிய அள​வுக்கு வளர்ச்​சி​யை​யும்,​​ வர​வேற்​பை​யும் பெற்​றுள்​ளது இணை​ய​த​ளம்.​ ​

​ ​ அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்​க​ளைப் போன்று தோன்​றி​யி​ருக்​கும் தெரு​முனை பிர​வு​ஸிங் சென்​டர்​கள்.​ ​ ​

​ ​ ​ தொலைக்​காட்​சி​யால் ​ சமூ​கத்​தில் மாற்​றங்​க​ளும்,​​ இணை​யத்​தால் வளர்ச்​சி​யும் ஏற்​பட்​டுள்​ளன என்​பதை ஒத்​துக்​கொள்​ளும் அதே வேளை​யில் அத​னால் ஏற்​பட்​டுள்ள சமூ​கச் சீர​ழி​வு​க​ளை​யும் எண்​ணிப்​பார்க்க வேண்​டும்.​ ​

​ ​ ​ மணிக்​க​ணக்​காக டிவி மற்​றும் இணை​ய​த​ளங்​க​ளின் முன் அம​ரும் பெரும்​பா​லன இளை​ஞர்​கள் மன​அ​ழுத்​தத்​தால் பாதிக்​கப்​ப​டு​வ​தா​க​வும்,​​ தவ​றான வழி​க​ளில் செல்​வ​தா​க​வும்,​​ சிலர் தற்​கொலை செய்து கொள்​ளும் நிலைக்​குத் தள்​ளப்​ப​டு​வ​தா​க​வும் மருத்​து​வர்​கள் கூறு​கின்​ற​னர்.​ ​

​ ​ ​ சுற்​றத்​தோ​டும்,​​ உற​வு​க​ளோ​டும் வாழ்ந்​த​வர்​கள் அக்​கால மனி​தர்​கள்.​ தொலைக்​காட்​சி​யோ​டும்,​​ இணை​யத்​தோ​டும் வாழ்ந்து கொண்​டி​ருக்​கி​ற​வர்​கள் இக்​கால மனி​தர்​கள்.​

​ ​ ​ இன்​றைய இளை​ஞர்​கள் விளை​யாட்​டுப் போட்​டி​க​ளில் பங்​கேற்​ப​தை​விட,​​ அதைப் பார்த்து ரசிப்​ப​தைத்​தான் விரும்​பு​கின்​ற​னர்.​ இதன்​வி​ளைவு கிரிக்​கெட் தவிர மற்ற விளை​யாட்​டு​க​ளில் மெச்​சு​கின்ற அள​வுக்கு இந்​தி​யர் யாரும் இல்லை.​ ​ இந்​தி​யா​வின் தேசிய விளை​யாட்​டான ஹாக்​கி​யின் நிலையோ மிக​வும் பரி​தா​பத்​துக்​கு​ரி​யது.​

​ ​ ​ உலக வரை​ப​டத்​தில் ஒளிந்​தி​ருக்​கும் நாடு​கள் கூட ஒலிம்​பிக்​கில் கோப்​பையை வென்ற நாடு​க​ளின் பட்​டிய​லில் ஒளிர்​கி​றது.​ ஆனால் உல​கின் இரண்​டா​வது பெரிய மக்​கள் தொகையை கொண்ட இந்​தி​யா​வின் நிலையோ வெற்​றிப்​பட்​டிய​லில் தேடும் நிலை​யில் தான் இருக்​கி​றது.​
கட்டுரையாளர் : ஏ.வி. பெரு​மாள்
நன்றி : தினமணி

தெலுங்கு,​​ ஆனால்...

தெலங்​கானா எனப்​ப​டும் ஹைத​ரா​பாத் மாநி​லத்தை,​​ அன்​றைய பிர​த​மர் ஜவா​ஹர்​லால் நேரு,​​ ஆந்​திர மாநி​லத்​து​டன் 1956-ம் ஆண்​டி​லேயே சேர்ப்​ப​தற்கு உத்​த​ர​விட்​டார்.​ அதற்கு ஒரு நியா​ய​மான கார​ணம் இருந்​தது.​ மொழி​வாரி மாநி​லம் என்ற அள​வு​கோல் வைக்​கப்​பட்ட பிறகு,​​ ஒரே மொழி பேசும் இரு மாநி​லங்​கள் அமை​யு​மா​னால்,​​ அது தவ​றான முன்​னு​தா​ர​ண​மாக அமைந்​து​வி​டும் என்று நேரு கரு​தி​னார்.​ மேலும் மறு​சீ​ர​மைப்பு செய்​யப்​ப​டும் மற்ற மொழி​வாரி மாநி​லங்​க​ளி​லும் இத்​த​கைய கருத்​து​கள் எழக்​கூ​டும் என்​றும் கரு​தி​னார்.​

நேரு​வின் எண்ண ஓட்​டத்​தில் தவறு காண முடி​யாது.​ ஒரே மொழி பேசும் இரு மாநி​லங்​கள் அமைந்​தி​ருந்​தால்,​​ தமிழ்​நாட்​டில்​கூட கொங்​கு​நாடு,​​ தொண்​டை​நாடு,​​ பாண்​டி​நாடு,​​ நாஞ்​சில் நாடு என்று தனித்​த​னி​யா​கக் கோரிக்கை எழுந்​தி​ருக்​கும்.​ இதே​போன்ற மன​நிலை கர்​நா​ட​கத்​தி​லும் கேர​ளத்​தி​லும் ஏன் இந்​தி​யா​வின் வேறு பல மாநி​லங்​க​ளி​லும் ஏற்​பட்​டி​ருக்க வாய்ப்பு உண்டு.​

ஆந்​திர மாநி​லத்​தில் ஏறக்​கு​றைய 40 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக ஆட்சி செய்த காங்​கி​ரஸ் கட்சி,​​ தெலங்​கா​னா​வின் ஆதங்​கம் கருத்​தில் கொள்​ளப்​ப​டும் என்று நேரு அளித்த வாக்​கு​று​தியை மறந்து,​​ தெலங்​கானா என்​ற​ழைக்​கப்​ப​டும் 10 மாவட்​டங்​க​ளின் ​(ஹைத​ரா​பாத்,​​ அடி​லா​பாத்,​​ கரீம்​ந​கர்,​​ கம்​மம்,​​ மக​பூப்​ந​கர்,​​ மேடக்,​​ நல​கொண்டா,​​ நிஜா​மா​பாத்,​​ ரெங்​கா​ரெட்டி,​​ வரங்​கல்)​ வளர்ச்​சி​யில் அக்​கறை காட்​ட​வில்லை என்​ப​தால்​தான் இன்​ன​மும் தெலங்​கானா பிரச்னை உயிர்ப்​பு​டன் மீண்​டும் எழு​கி​றது.​ ​

தெலங்​கா​னா​வில்​தான் படிப்​ப​றி​வில்​லா​த​வர் அதி​கம்,​​ இங்​கு​தான் ஏழை விவ​சா​யி​கள் தற்​கொலை செய்​து​கொள்​வ​தும் அதி​கம்.​ இங்​கு​தான் வறுமை தாண்​ட​வ​மா​டு​கி​றது.​ குழந்​தை​களை விற்​கி​றார்​கள்.​ கிருஷ்ணா கோதா​வரி நதி​கள் ஓடி​னா​லும் வறட்​சி​தான் மிச்​சம்.​ தெலங்​கா​னா​வில்​தான் ஆந்​திர மாநி​லத்​தின் ஒரே ஐஐடி,​​ மண்​டல பொறி​யி​யல் கல்​லூரி உள்​ளது.​ ரயில்வே மண்​டல அலு​வ​ல​கம் உள்​ளது.​ ராம​குண்​டத்தி​லி​ருந்​து​தான் ஏவு​கணை ஏவப்​ப​டு​கி​றது.​ ஆனால் இந்த நிறு​வ​னங்​க​ளில் பணி​யாற்​று​வோர் பெரும்​பா​லோர் தெலங்​கானா பகு​தி​யைச் சேர்ந்​த​வர்​கள் அல்ல.​ இவை​தான் இப்​போது தெலங்​கானா போராட்​டத்​துக்​குத் தூண்​டு​த​லாக இருக்​கி​றது.​

சத்​தீஸ்​கர்,​​ ஜார்க்​கண்ட்,​​ உத்​த​ராஞ்​சல் ஆகிய மாநி​லங்​கள்,​​ தற்​போது தெலங்​கானா பகு​தி​யை​விட மிகச்​சி​றிய பரப்​ப​ளவு கொண்​டவை.​ அவற்​றைத் தனி​மா​நி​ல​மாக அறி​வித்​துள்​ள​போது,​​ சுமார் 3.5 கோடி மக்​கள்​தொகை கொண்​டி​ருக்​கும் தெலங்​கா​னாவை ஏன் தனி மாநி​ல​மாக அறி​விக்​கக்​கூ​டாது என்​பது தற்​போது முன்​வைக்​கப்​ப​டும் வாதம்.​ ​

சரி,​​ நேரு​வின் எண்​ணத்​துக்கு மாறாக,​​ ஒரே மொழி​பே​சும் மாநி​லத்தை இப்​போது இரண்​டா​கப் பிரித்​து​விட்​டால் பிரச்னை தீர்ந்​து​வி​டுமா என்​றால் அது​வும் சந்​தே​கம்​தான்.​ தெலங்​கா​னா​வில் எந்​த​வித சுய​மான நிதி​ஆ​தா​ரத்​துக்​கும் வழி​யில்லை.​ ​ இந்த மாநி​லம் உரு​வாக்​கப்​பட்​டால்,​​ அது முழுக்​க​மு​ழுக்க மத்​திய அர​சின் நிதி​யு​த​வியை மட்​டுமே நம்​பி​யி​ருக்க முடி​யும்.​ நக்​ஸல் ஒழிப்பு மற்​றும் வறுமை ஒழிப்​புத் திட்​டங்​க​ளுக்​காக ஆண்​டு​தோ​றும் சில ஆயி​ரம் கோடி ரூபாய் தெலங்​கானா பகு​திக்கு ஒதுக்​கப்​பட்​டா​லும் இவை முறை​யா​கப் போய்ச் சேர​வில்லை என்​கி​ற​போது,​​ தனி மாநி​ல​மாக மாறி​னால் மட்​டும் நிலைமை சரி​யா​கி​வி​டுமா என்​பது சந்​தே​கம்​தான்.​ ​

தெலங்​கானா கோரிக்கை மக்​கள்​பி​ரச்​னை​யாக உரு​வெ​டுத்​துள்​ளது என்று சொல்​வ​தை​விட இது சில அர​சி​யல் தலை​வர்​க​ளின் சுய​லா​பத்​துக்​காக எழுப்​பப்​ப​டு​கி​றது என்​ப​தால்​தான் இந்​தப் புதிய மாநி​லம் உரு​வா​வதை நாம் ஒரு​மு​றைக்கு இரு​முறை ​ஆய்​வுக்கு உள்​ப​டுத்த வேண்​டி​யி​ருக்​கி​றது.​ ​

தற்​போது தெலங்​கானா ராஷ்ட்​ரிய சமிதி தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவ் நடத்​திய உண்​ணா​வி​ர​தப் போராட்​ட​மும் கல​வ​ரங்​க​ளும் தெலங்​கானா மாநி​லம் உரு​வாக்​கு​வ​தற்​காக என்​ப​தைக் காட்​டி​லும்,​​ கடந்த சட்​ட​மன்​றத் தேர்த​லில் படு​தோல்வி அடைந்த இக்​கட்​சி​யின் கெüர​வத்தை நிலை​நாட்​ட​வும் தனது தலை​மையை தக்​க​வைத்​துக் கொள்​ள​வும்​தான்.​ கடந்த தேர்த​லில் 45 இடங்​க​ளில் போட்​டி​யிட்டு,​​ 10 இடங்​க​ளில் மட்​டுமே வெற்றி பெற்​றது இக்​கட்சி.​ இதற்கு முந்​தைய தேர்த​லில் காங்​கி​ரஸ் கட்​சி​யு​டன் கூட்​டணி அமைத்து 26 எம்​எல்ஏ,​​ 5 எம்.பி.க்க​ளைப் பெற்று மத்​திய மாநில அர​சில் பங்கு வகிக்​க​வும் செய்த டி.ஆர்.​ எஸ்.​ கட்​சிக்கு இது படு​தோல்வி.​ இதை ஈடு​செய்​யவே தற்​போது நடந்த போராட்​டங்​கள்.​

மேலும்,​​ தற்​போது ஆந்​திர முதல்​வர் ரோசய்​யா​வுக்​குத் தலைவலி கொடுக்க வேண்​டும் என்​கிற ஒரே கருத்​தில் செயல்​பட்​டு​வ​ரும் மறைந்த ராஜ​சே​கர ரெட்​டி​யின் மகன் ஜெகன் மோகன் ரெட்​டி​யின் ஆத​ரவு சந்​தி​ர​சே​கர ராவுக்கு இருக்​கி​றது என்​ப​தும் இப்​போ​ராட்​டத்​தின் நோக்​கத்தை நீர்த்​துப்​போ​கச் செய்​கி​றது.​

தெலங்​கானா தனி​மா​நி​லம் ஆவது குறித்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று சோனியா தலை​மை​யில் நடந்த காங்​கி​ரஸ் கட்​சிக் கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது.​ இதை​ய​டுத்து சந்​தி​ர​சே​கர ராவ் தனது உண்​ணா​வி​ர​தத்தை முடித்​துக் கொண்​டுள்​ளார்.​ அதே​நே​ரத்​தில் சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் தங்​கள் எதிர்ப்​பைத் தெரி​வித்து ராஜி​நாமா செய்​யத் தயாராகி இருக்கிறார்கள்.

இன்​னொரு சிக்​கல் இப்​போதே ஆந்​தி​ரத்​தில் ஆரம்​ப​மா​கி​விட்​டது.​ தெலங்​கானா தனி மாநி​லம் என்​றால் ராய​ல​சீமா எந்த விதத்​தில் குறைவு?​ கட​லோர ஆந்​தி​ரம் எந்​த​வி​தத்​தில் குறைவு?​ அவற்​றை​யும் தனி மாநி​ல​மாக்​குங்​கள் என்ற கோரிக்கை எழத்​தொ​டங்​கி​விட்​டது.​ ஒரு மாநி​லத்​தின் அனைத்து மக்​க​ளுக்​கும் ஒரே வித​மான சலு​கை​கள்,​​ நலத்​திட்​டங்​கள்,​​ நிதி,​​ தொழில்​வ​ளர்ச்​சித் திட்​டங்​கள் கிடைக்​கச் செய்ய வேண்​டிய பொறுப்​பும்,​​ கண்​கா​ணிக்க வேண்​டிய கட​மை​யும் மத்​திய அர​சுக்கு இருக்​கி​றது.​ அதில் தவ​று​கள் நிக​ழும்​போது,​​ இப்​ப​டி​யான போராட்​டங்​க​ளை​யும் நியா​யப்​ப​டுத்​தும் நிலை உரு​வா​கி​வி​டு​கி​றது.​

மக்​க​ளாட்​சி​யில்,​​ ஆட்​சி​யில் இருப்​ப​வர்​கள் மக்​க​ளின் உணர்​வு​க​ளைப் பிர​திப​லிக்​கா​மல் போனால்,​​ தெலங்​கானா போன்ற கோரிக்​கை​கள் எழு​வ​தைத் தவிர்க்க முடி​யாது!
நன்றி : தினமணி

அக்டோபரில் தொழில் வளர்ச்சி 10.3 சதவீதம் அதிகரிப்பு

அக்டோபர் மாதத்தில் தொழில் துறை வளர்ச்சி 10.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதே ஆகும். இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜுலை-செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக இருக்கும் தகவல் நேற்று வெளியிடப்பட்டது. இன்று தொழில் துறை வளர்ச்சியும் அதிகரித்த புள்ளி விபரங்களை அரசு வெளியிட்டுள்ளது. இதனால் நெருக்கடியிலும், மந்தநிலையிலும் இருந்த பொருளாதாரம், அரசின் பல்வேறு சலுகைகளால் வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பியுள்ளது.
இந்த நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஏப்ரல்-அக்டோபர் வரை) 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. (சென்ற நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 4.3 சதவீதம்.) தொழில் துறை உற்பத்தியை கணக்கிடும் அட்டவணையில் உள்ள 80 சதவீத தொழில்களின் வளர்ச்சி 11.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. (சென்ற நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் மைனஸ் 0.6 சதவீதம்.) அதே நேரத்தில் பங்குச் சந்தை உட்பட பல்வேறு நிபுணர்கள் அக்டோபர் மாத தொழில் துறை உற்பத்தி 12 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.

நன்றி : தினமலர்



'டிஷ் டிவி'யின் புதிய அறிமுகம்

இந்தியாவின் நம்பர் 1, 'டைரக்ட் டூ ஹோம்' நிறுவனமான, 'டிஷ் டிவி,' தனது தென்மாநில வாடிக்கையாளர்களுக்காக, பிரத்தியேகமான பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த, 1,690 ரூபாய் மதிப்புள்ள, 'ஹாப்பி ஹோம் சில்வர் ப்ளஸ் பேக்' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து அம்சங்களும் நிறைந்த சிறந்த பொழுதுபோக்காக, இந்த பேக்கை உருவாக்கியுள்ளனர். தென்மாநில மொழிகள், விளையாட்டுகள், வர்த்தகம், செய்திகள், திரைப்படங்கள், இடைவேளை இல்லாத திரைப்படம் என, முழுமையான பொழுதுபோக்கு பேக்காக இது திகழ்கிறது. 'டிஷ் டிவி' மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், டிஜிட்டல் தொலைக்காட்சியை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் எளிமையாக்கியுள்ளது. மேலும், அனைத்து சேனல்களையும் பார்க்க விரும்பும், 'ஹை எண்ட் பிளாட்டினம்' சந்தாதாரர்களுக்கு, 1,990 ரூபாய் மதிப்புள்ள செட்-டாப் பாக்சை இலவசமாக்கி உள்ளது.இந்த குறைந்த காலச் சலுகைகள், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில், 2010 ஜன., 15ம் தேதி வரை கிடைக்கும். 'டிஷ் டிவி' துணைத் தலைவர் அஞ்சலி மல்ஹோத்ரா கூறுகையில், ''வீட்டில் உள்ள அனைவரும் விரும்பும் வகையில், அதிகளவு எண்ணிக்கையில் உள்ள சேனல்களை, மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்தில், எங்கள் 'டிஷ் டிவி' வழங்குவதன் மூலம், இனி டி.டி.எச்., பெற்றுக் கொள்வது என்பது எளிதான விஷயம்,'' என்றார்.
நன்றி : தினமலர்