அக்டோபர் மாதத்தில் தொழில் துறை வளர்ச்சி 10.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதே ஆகும். இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜுலை-செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக இருக்கும் தகவல் நேற்று வெளியிடப்பட்டது. இன்று தொழில் துறை வளர்ச்சியும் அதிகரித்த புள்ளி விபரங்களை அரசு வெளியிட்டுள்ளது. இதனால் நெருக்கடியிலும், மந்தநிலையிலும் இருந்த பொருளாதாரம், அரசின் பல்வேறு சலுகைகளால் வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பியுள்ளது.
இந்த நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஏப்ரல்-அக்டோபர் வரை) 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. (சென்ற நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 4.3 சதவீதம்.) தொழில் துறை உற்பத்தியை கணக்கிடும் அட்டவணையில் உள்ள 80 சதவீத தொழில்களின் வளர்ச்சி 11.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. (சென்ற நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் மைனஸ் 0.6 சதவீதம்.) அதே நேரத்தில் பங்குச் சந்தை உட்பட பல்வேறு நிபுணர்கள் அக்டோபர் மாத தொழில் துறை உற்பத்தி 12 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment