Thursday, September 11, 2008

பங்குச் சந்தையில் தொடரும் திரிசங்கு நிலை

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்த தடைகள் நீங்கி, இந்தியாவும் ஒரு அங்கமானதால், சந்தையும் ஒளிர்வு பெற்றது. அது தான் நடந்தது திங்களன்று. இதனால், பவர் பங்குகள் பவர் காட்டின என்றால் மிகையாகாது.
மேலும், கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் அணுமின்சாரம் யூனிட் 2.50 அளவில் விலை வைக்கப்படும் என்ற செய்தியும் வலுவூட்டுகிறது.
திங்களன்று சந்தை 461 புள்ளிகள் கூடியது. இதனால், முதலீட்டாளர்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடியது. உங்களுக்கு எவ்வளவு கூடியது?: நேற்று முன்தினம், லாப நோக்கிலேயே பலர் இருந்ததால், சந்தை துவக்கத்தில் மிகவும் கீழேயே இருந்தது. பின்னர் சிறிது சுதாரித்து, இழந்த நஷ்டங்களை திரும்பப் பெற்று முன்னேறியது. ஒரு கட்டத்தில் மேலேயும் வந்தது.
குறிப்பாக சமீபகாலமாக ஏறிவந்த வங்கிப் பங்குகளை பலரும் விற்று லாபம் பார்க்கத் துவங்கினர். ஆதலால், கடைசியாக 44 புள்ளிகள் நஷ்டத்திலேயே முடிவடைந்தது. நேற்று முன்தினம் உலகளவில் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட இறக்கம் இந்தியாவிலும் நேற்று துவக்கத்தில் இருந்தே இருந்தது. மேலும், மெட்டல் பங்குகளின் விலை இறக்கமும் சந்தையை வெகுவாக பாதித்தது. குறிப்பாக ஸ்டெர்லைட் பங்குகள் 11 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 5 சதவீதமும் குறைந்தன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 238 புள்ளிகளை இழந்து 14,662 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 68 புள்ளிகளை இழந்து 4,400 புள்ளிகளில் முடிவடைந்தது.
அமெரிக்காவில் வீழ்ச்சி ஏன்?: நேற்று முன்தினம், அமெரிக்காவில் பங்குச் சந்தை விழுந்ததற்கு, மறுபடியும் சப்பிரைமா என்ற பயத்தை தோற்றுவிக்கும் அளவிற்கு ஒரு காரணம் இருந்தது. அதாவது, ஸ்டாண்டர்டு அண்டு புவர் கம்பெனி, லேமென் பிரதர்ஸ் கம்பெனியை கவனிக்க வேண்டிய லிஸ்டில் சேர்ந்து இருந்தது. அது, சந்தையில் மிகுந்த அலைகளை ஏற்படுத்தியது. அந்த கம்பெனியின் பங்குகள் 45 சதவீதம் குறைந்தது.
டாலர் எங்கே செல்கிறது?: ஒவ்வொரு நாளும் 'எண்ணெய் கவனி' என்ற வாசகம் போய், 'டாலரைக் கவனி' என்று வந்து விடும் போலிருக்கிறது. அவ்வளவு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. டாலரின் மதிப்பு ரூபாய் 45யையும் தாண்டி சென்றுள்ளது பலருக்கு வியப்பு அளிக்கிறது. ஏற்றுமதியாளர்களுக்கு லாபம்.
இழந்த லாபங்களை திரும்பப் பெற இது ஒரு வாய்ப்பு. ஆனால், நிறைய ஏற்றுமதியாளர்கள் ரூபாயின் மதிப்பு கூடிக்கொண்டே வந்த போது (அதாவது சமீபத்தில் 42.30லிருந்து) இது தான் சமயம் என்று பார்வேட் கான்ட்ராக்ட் பெரிய அளவில் போட்டு விட்டனர். அவர்களுக்கு லாபத்தில் நஷ்டம்.
கச்சா எண்ணெய், தங்கம் விலையும் டாலர் மதிப்பில் குறைந்து கொண்டு வருவது ஒரு நல்ல செய்தி. குறைந்து கொண்டே வரும் எண்ணெய் விலை யை தடுப்பதற்காக, 'ஓபெக்' எண்ணெய் தயாரிப்பாளர்களை தங்கள் கோட்டாவை மட்டும் உற்பத்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
உலகளவில் எண்ணெயின் உபயோகம் குறைந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். கூடும் உற்பத்தி, குறையும் உபயோகம் ஆகியவை விலையை இன்னும் குறைக்கும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளனர்.
புதிய வெளியீடுகள்: செபியின் புதிய விதிகளின் படி வெளிவந்துள்ள முதல் புதிய வெளியீடான 20 மைக்ரான், நேற்று மாலை வரை 0.77 மடங்கு செலுத்தப் பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்களின் பங்கு, ஒரு தடவை வரை செலுத்தப்பட்டுள்ளது. சிறிது ரிஸ்க் எடுக்க விரும்புபவர்களுக்கு போடத் தகுந்த வெளியீடு. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
வேதாந்தாவில் மாற்றம்: வேதாந்தா குரூப் என அழைக்கப்படும் (ஸ்டெர்லைட்) கம்பெனிகள், தனது கம்பெனிகளுக்கிடையே பிசினஸ் லைன்களை பிரித்துக் கொண் டுள்ளது. அதாவது, காப்பர் மற்றும் ஜிங்க், அலுமினியம் மற்றும் எனர்ஜி, இரும்புத் தாது என்று மூன்றாகப் பிரித்து காப்பர் மற்றும் ஜிங்க் பிசினஸ் ஸ்டெர்லைட் கம்பெனிக்கும், அலுமினியம் மற்றும் எனர்ஜி பிசினஸ் வேதாந்தா கம்பெனிக்கும், இரும்புத் தாது பிசினஸ் சீசா கோவா கம்பெனிக்கும் செல்லும். பிசினஸ் பிரித்து கொள்வதற்கு தகுந்தாற்போல் பங்குகளும் பிரித்து அளிக்கப்படும்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: இந்த வாரமும் சென்ற வாரம் போலத்தான் இருந்தது. அதாவது, திங்களன்று கிடைத்த பெரிய லாபத்தை நேற்று முன்தினம், நேற்றும் ஈடுசெய்து விட்டன. முதலீட்டாளர்கள், இந்த நிலையை கண்டு ஒரு திரிசங்கு நிலையில் தான் இருக்கின்றனர். வரும் நாட்கள் மேலும், கீழுமாகத்தான் இருக்க வேண்டும். டிரேடிங்கில், வல்லுனர்களுக்கு இந்த சந்தை ஒரு வாய்ப்பாகும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


வீடுகள் விலை உயர்வு தொடருமா?: எச்.டி.எப்.சி., தலைவர் பேட்டி

'வீடுகள் தேவை தொ டர்ந்து அதிகமாக இருப்பதால், தற்போதுள்ள அதிகபட்ச விலை என்ற போக்கு தொடராதே தவிர, வீடுகளின் தேவை என்பது குறையாது. மாறாக பிடித்த வீடுகள் ஓரளவு கட்டுப்படியாகும் நிலையில் இருந் தால், வாங்குவதில் தவறு இல்லை' என்று, எச்.டி. எப்.சி., சேர்மன் தீபக் பரேக் கூறினார். வங்கி வட்டி விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார். பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்து உள் ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடும் நிதி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில், வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற அச்சம், சந்தை மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. வீடுகள் வாங்குவோர் எண்ணிக்கை கடந்த காலங்களில் இருந்தது போல் இல் லாமல், ஒரு வித தேக்கநிலை காணப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் இப்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து எச்.டி.எப்.சி., சேர்மன் தீபக் பரேக்கிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு தீபக் பரேக் அளித்த பேட்டி வருமாறு: இப்போதுள்ள வட்டி விகிதங்கள் ஏற்கனவே உச்சகட்டத்தில் உள்ளன. இந்நிலையில், மேலும் 0.5 சதவீதம் உயருமோ என்ற அச்சம் சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது. இது குறித்து பயம் தேவையில்லை. கடந்த சில வாரங்களாக ஏறிய பணவீக்கம் கணிசமாக குறையத்துவங்கியுள்ளது. எனவே, வட்டி விகிதம் அதிகரிக்கும் என்ற பயம் தேவையில்லை. கண்டிப் பாக பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வர்த்தக ரீதியான ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து நீண்ட கால அடிப்படையில் நன்றாக இருக்கும். இதில் அச்சம் கொள்ள தேவையில்லை. ரியல் எஸ்டேட் துறை சந்தையில் பங்கேற்க வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். நேரடி அன்னிய முதலீடு மற்றும் பங்குச் சந்தையில் ரியல் எஸ் டேட் நிறுவன பங்குகளை வாங்குவதில் கணிசமான வெளிநாட்டு முதலீடு அதிகரித்துவருகிறது. அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் அன்னிய நேரடி முதலீடு 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். இதில், புது பங்கு வெளியீடு மீண்டும் வரவேற்பை பெற சில காலம் ஆகலாம். வீட்டுக்கடன் வழங்கியதில் எச்.டி.எப்.சி.,யை பொ ருத்தமட்டில் இந்த நிதியாண் டின் முதல் நான்கு மாதங்களில் கடன் பெற்றோர் சதவீதம் கடந் தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் சற்று தொய்வு ஏற்பட்டு 22 சதவீதமாக இருந்தது. இந்தாண்டில் இனி வரும் மாதங்களில் 24 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை கடன் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. வீடுகளின் தேவை குறைந்தபாடில்லை. வீடுகளின் விலை சரியாக நிர்ணயிக் கப்பட்டால், அதன் தேவைக்கு ஏற்ப கிராக்கி தொடரும். இன்றைய நிலையை வைத்து வீடுகள் அல்லது மனைகளுக்கு அதிக பட்ச விலை என்ற போக்கு தொடர வாய்ப்பில்லை. விலை குறையும் என்று கருதி வாங்குவதா அல்லது வேண்டாமா என்று குழம்ப வேண்டாம். பிடித்தால் வாங்க வேண்டியது தான். ஆனால், எதிர்காலத்திலும் வீட்டு வசதி தேவை அதிகமாக இருக்கிறதே தவிர குறைய வாய்ப்பு இல்லை. 15 ஆண்டுகளுக்கான வீட்டுக் கடன் வசதி வட்டி விகிதம் ஏறி இறங்கி மாறுபாட்டுடன் இருக்கும். ரியல் எஸ்டேட் துறை தற்போது தான் ஒரு இணக்கமான சூழ்நிலையை எட்டிவருகிறது. விரைவில் இது மேல் நோக்கிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தீபக் பரேக் கூறினார்.
நன்றி : தினமலர்