Monday, July 6, 2009

பட்ஜெட் எதிரொலி : பங்கு சந்தையில் கடும் சரிவு

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிறைய எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டதால் பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. பேங்கிங் மற்றும் நிதித்துறையில் எந்த வித ஊக்குவிப்பு திட்டமும் அறிவிக்கப்படாததால் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டதாக சொல்கிறார்கள். இன்று காலை பட்ஜெட் வாசிக்கப்படாத வரை உயர்ந்திருந்த சந்தை குறியீட்டு எண்கள், பட்ஜெட் வாசிக்கப்பட்டதும் மழமழவென சரிய ஆரம்பித்து விட்டது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 869.65 புள்ளிகள் குறைந்து 14,043.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 258.55 புள்ளிகள் குறைந்து 4,165.70 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. பங்கு சந்தை சரிவு குறித்து கருத்து சொன்ன நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இது அதிகப்படியான எதிர்பார்ப்பினால் வந்த விழைவு என்றார். மேலும் கார்பரேட் உலகம் இந்த பட்ஜெட்டால் விரக்தி அடையவில்லை என்றும் சொன்னார். தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. கம்மாடிடிஸ் டிரான்ஸ்சாக்ஷன் டாக்ஸ் நீக்கப்பட்டிருக்கிறது. மினிமம் ஆல்டர்நேட்டிவ் டாக்ஸ் உயர்த்தப்பட்டிருக் கிறது என்றார் முகர்ஜி.
நன்றி : தினமலர்


பால் வர்த்தகத்தில் மீண்டும் நுழைகிறது பிரிட்டானியா

பிரிட்டானியா நிறுவனம் சுவையூட்டப் பட்ட பால் வர்த்தகத் துறையில் மீண்டும் நுழையத் தயாராகி வருகிறது. பிரிட்டானியா நிறுவனம் பிஸ்கட் மற்றும் பால் பொருட்களால் தயாரான பொருட் களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. இத்துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் பிரிட்டானியாவும் ஒன்று. கடந்த 1997ல் இந்நிறுவனம் சுவையூட் டப்பட்ட பாலை பாக் கெட்களில் அடைத்து விற்பனை செய்து வந்தது. மேலும், சமீபகாலமாக இளைஞர்கள் விரும்பி குடிக்கும் பானமாக சுவையூட் டப்பட்ட பால் உருவெடுத்துள் ளது. இதனால், சுவையூட்டப் பட்ட பாலை பாக் கெட்களில் அடைத்து, எந்த நேரத்திலும் குடிக் கும் வகையில் விற் பனை செய்ய மீண் டும் தயாராகி வருகிறது. பால் வர்த்தகத்தில் மீண்டும் நுழைவதற்காக பிரிட்டானியா நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீடு செய் யும் என எதிர் பார்க் கப்படுகிறது. இருந்தாலும், இதுகுறித்து பிரிட்டானியா நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

நன்றி : தினமலர்



2008 - 09 ல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக குறைந்திருக்கிறது : பிரணாப் முகர்ஜி

2009 - 10 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக சராசரியாக 9 சதவீதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 2008 - 09 நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக குறைந்திருக்கிறது என்றார். அவர் மேலும் தெரிவித்ததாவது : விரைவில் மீண்டும் 9 சதவீத வளர்ச்சியை அடைய தேவையான திட்டங்களை அரசு தீட்டி, அதற்கு ஏற்றபடி செயல்படும் என்றார். இந்த நிதி ஆண்டில் ஏழைகளுக்கு வீடு மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்த செய்ய ஏற்படும் செலவுக்காக ரூ.3973 கோடி ஒதுக்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு அர்பன் மறுவாழ்வு திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.12,887 கோடியாக உயர்த்தப்படும். விவசாய வளர்ச்சி 4 சதவீதமாக இருக்கும் என்று உத்தரவாதம் கொடுக்கலாம். விவசாய மற்றும் தொழில் வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டப்படும். 2008 ம் ஆண்டு, பொருட்கள் மற்றும் சர்வீஸ் துறையின் வர்த்தகம் இரட்டிப்õகி இருக்கிறது. உலக பொருளாதாரத்தில் இன்னும் ஸ்திரமற்ற தன்மையே நிலவி வருகிறது. இந்த ஒரு பட்ஜெட்டால் மட்டுமே நமது எல்லா பிரச்னைகளையும் சரி செய்து விட முடியாது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை, 2014 க்குள் பாதியாக குறைக்கப்படும். 2009 - 10 நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும். 2014 க்குள் உள்கட்டமைப்பு துறையில் முதலீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். முதல் முறையாக பட்ஜெட் தயாரிக்கும் முன் மாநில நிதி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்ய வந்திருக்கிறார்கள். பிபிபி முறையில் குறிப்பிட்ட துறையில் முதலீட்டை பெறுக்குவதில் மத்திய அரசு வெற்றி பெற்றிருக்கிறது. ஹைவேஸ் மற்றும் ரயில்வே வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி 23 சதவீதம் உயர்த்தப்படுகிறது. விவசாயிகள், அவர்களது கடனில் 75 சதவீதத்தை அடைக்க, அதிகபட்டமாக டிசம்பர் 31, 2009 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்