Tuesday, December 15, 2009

கேள்​விக்​கு​றி​யா​கும் மீன​வ​ரின் வாழ்​வு​ரிமை

க​ட​லோ​டும்,​​ கடற்​க​ரை​யோ​டும் பின்​னிப் பிணைந்​தது தான் மீனவ சமூ​கத்​தின் வாழ்க்கை.​ வர​லாறு முழு​வ​தும் பர​த​வ​ரின் சிறப்​பு​மிக்க பண்​பா​டும் வீர​மிக்க போராட்​டங்​க​ளும் மறைக்​கப்​பட்டே வந்​துள்​ளன.​

÷ நாட்​டின் எல்​லைப் பகு​தி​க​ளான கடற்​க​ரை​க​ளில் வாழ்ந்து கொண்டு கடல்​புற வழி​யாக வெளி​நாட்டி​லி​ருந்து வரும் ஆக்​கி​ர​மிப்​பா​ளர்​களை விரட்​டி​ய​டித்து தம் இன்​னு​யி​ரைத் தியா​கம் செய்து,​​ நாட்​டைக் காப்​பாற்​றிய எல்​லை​யோ​ரக் காவ​லர்​க​ளாக வாழ்ந்​த​வர்​கள் தான் மீனவ சமூ​கத்​தி​னர்.​ நாள்​தோ​றும் மீன​வ​ரின் தொழில் வாழ்க்கை என்​பது குளி​ரூட்​டப்​பட்ட அறை ஒன்​றுக்​குள் காலை 9 மணிக்​குத் தொடங்கி மாலை 5 மணி வரை அமர்ந்து பணி உத்​த​ர​வா​தத்​து​டன் ஓர் ஊழி​யர்,​​ அதி​காரி செய்​யும் வேலை​யைப் போன்​ற​தல்ல.​

​ கட​லுக்​குப் போனால் உயி​ருக்​கும்,​​ திரும்பி வரு​வ​தற்​கும் எந்​த​வித உத்​த​ர​வா​த​மும் இல்லை.​ உள்​ளூ​ரில் யார் காணா​மல் போனா​லும் தொலைக்​காட்சி உள்​ளிட்ட பல ஊட​கச் சாத​னங்​க​ளில் விளம்​ப​ரப்​ப​டுத்​தப்​பட்டு தனிப் போலீஸ்​படை அமைத்து தேடு​த​லும் முடுக்​கி​வி​டப்​ப​டு​கி​றது.​ ஆனால் மீன​வர்​கள் கட​லில் காணா​மல் போனால் வழக்​குக் கூட பதி​வா​காது.​ இப்​படி உயி​ரைப் பண​யம் வைத்து மீன​வர் பிடிக்​கும் மீன் ஏற்​று​ம​தி​யால் நாட்​டுக்​குக் கிடைக்​கும் அந்​நி​யச் செலா​வணி பல ஆயி​ரம் கோடி​க​ளைத் தாண்​டும்.​

÷இந்​தியா உல​கின் மீன் உற்​பத்​தி​யில் மூன்​றாம் இடம் வகிக்​கி​றது.​ நன்​னீர் மீன் உற்​பத்​தி​யில் இரண்​டாம் இடம் வகிக்​கி​றது.​ இத்​த​னைக்​கும் மீன​வ​ரின் மக்​கள்​தொகை நாட்​டின் மக்​கள் தொகை​யோடு ஒப்​பி​டும் போது மிக​வும் குறை​வா​னதே.​ உணவு மற்​றும் விவ​சாய அமைப்​பின் கணக்​கின்​படி மொத்த மீன​வர் 8.70 மில்​லி​யன்.​ இதில் முழு நேர​மாக மீன்​பிடி தொழி​லில் ஈடு​ப​டு​ப​வர்​கள் 0.93 மில்​லி​யன்,​​ பகுதி நேர மீன​வர்​கள் 1.07 மில்​லி​யன்,​​ மீன் சார்ந்த மற்ற நட​வ​டிக்​கை​க​ளில் ஈடு​ப​டு​ப​வர்​கள் 3.96 மில்​லி​யன் ஆகும்.​

÷க​டுகு சிறுத்​தா​லும் காரம் போகாது.​ இவ்​வ​ளவு மக்​கள் தொகை​யில் சிறு​பான்​மை​யி​ன​ராக இருந்​தா​லும் தினந்​தோ​றும் உயி​ரைப் பண​யம் வைத்​துப் பிடிக்​கும் மீன்​பி​டிப்​பால் நாட்​டின் 20 சத​வி​கி​தம் அந்​நி​யச் செலா​வ​ணியை ஈட்​டித் தரு​கின்​ற​னர்.​ அதே உணவு மற்​றும் விவ​சாய அமைப்​பின் கணக்​குப்​ப​டியே கடந்த 2003-2004-ம் ஆண்​டின் மொத்த மீன் உற்​பத்தி 63-99 டன்​கள்.​ மீன் குஞ்சு உற்​பத்தி 19,173 மில்​லி​யன்.​ அதே காலத்​தில் ஏற்​று​மதி 5.21 லட்​சம் டன்​கள்.​ அதா​வது,​​ 6793.05 கோடி ரூபாய்.​ இது கடந்த 2007-2008-ல் 9000 கோடி ரூபா​யாக அதி​க​ரித்​துள்​ளது.​ எந்​த​வித எதிர்​பார்ப்​பும் இன்றி பிர​தி​ப​லன் பாராது நாட்​டுக்கு உழைக்​கும் மீன​வர்​க​ளுக்கு அரசு என்ன தான் செய்​துள்​ளது?​

÷மீ​ன​வ​ரைக் கடற்​க​ரையி​லி​ருந்​தும்,​​ மீன்​பிடி தொழி​லி​லும் இருந்​தும் அகற்​றிட அரசு மறை​மு​க​மா​க​வும் நேர​டி​யா​க​வும் பல சட்​டங்​கள்,​​ கொள்​கை​கள் மற்​றும் திட்​டங்​களை உரு​வாக்கி வரு​கி​றது.​ இது சற்று அதிர்ச்​சி​யாக இருக்​க​லாம்.​ ஆனால் இது​தான் உண்மை.​ கடந்த சில பத்​தாண்டு கால வர​லாற்​றில் நடந்த நிகழ்​வு​கள் இந்த உண்​மையை நமக்கு உணர வைக்​கின்​றன.​ ஏன் இப்​படி நடக்​கி​றது?​ ஒப்​பீட்​ட​ள​வில் உல​கின் பல நாடு​க​ளின் கடற்​க​ரை​கள் மாச​டைந்​து​விட்​டன.​ கடல் வளங்​க​ளும்,​​ அள​வுக்கு அதி​கப்​ப​டி​யான மீன்​பி​டிப்​பால் சுரண்​டப்​பட்​டு​விட்​டன.​

​ ​ உதா​ர​ண​மாக ஜப்​பான் மற்​றும் சில கிழக்​கா​சிய நாடு​க​ளி​லும்,​​ அமெ​ரிக்​கா​வி​லும் கடல் மீன்​வ​ளம் குறைந்​து​விட்​ட​ப​டி​யால் செயற்​கை​யான முறை​யில் நிலங்​க​ளி​லும்,​​ கடற்​க​ரை​க​ளி​லும் பாத்தி கட்​டி​யும்,​​ பண்ணை அமைத்​தும் மீன் வளர்க்க முயற்​சி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.​

​ அதே​ச​ம​யத்​தில் இதற்கு மாறாக இந்​தி​யக் கடற்​க​ரை​யும்,​​ கடல்​வ​ளங்​க​ளும் பெரு​ம​ள​வில் வளங்​குன்​றா​மல் அழ​கு​டன் திகழ்​கின்​றன.​ 7,517 கி.மீ.​ நீள​முள்ள இந்​தி​யக் கடற்​க​ரை​யை​யும் ஆண்​டுக்கு பல ஆயி​ரம் கோடி வரு​வாய் தரும் கடல் வளத்​தை​யும் குறி வைத்து ஏரா​ள​மான தனி​யார் சுற்​றுலா நிறு​வ​னங்​க​ளும்,​​ அந்​நிய மீன்​பிடி நிறு​வ​னங்​க​ளும் வரத் துவங்​கி​விட்​டன.​ நாட்​டின் உல​க​ம​ய​மாக்​கல் கொள்​கை​கள் அமல்​ப​டுத்​தத் துவங்​கி​யதி​லி​ருந்து டாலர் குவி​யும் இட​மா​கக் கடற்​க​ரை​யைப் பார்க்​கத் தொடங்​கி​விட்​ட​னர்.​ இக்​கா​லந்​தொட்டே கடற்​க​ரையை ஆக்​கி​ர​மிக்​கும் திட்​டங்​கள் அணி வகுக்​கத் தொடங்​கி​விட்​டன என்​பது கவ​னிக்​கத்​தக்​கது.​

÷க​டற்​க​ரை​யில் ஓய்வு விடு​தி​கள்,​​ ரிசார்ட்​டு​கள்,​​ நீர் விளை​யாட்​டு​கள்,​​ மிதவை ஹோட்​டல்​கள் கட்டி வெளி​நாட்டு சுற்​று​லாப் பய​ணி​க​ளுக்கு வாட​கைக்கு விட்​டால் கிடைக்​கும் அந்​நி​யச் செலா​வணி அதி​க​மா​கும்.​ அதே​போன்று வெளி​நாட்டு நிறு​வ​னங்​கள்,​​ தொழிற்​சா​லை​கள்,​​ அனல் மின் நிலை​யங்​கள்,​​ அணு​மின் நிலை​யங்​கள்,​​ கணிப்​பொ​றி​த​க​வல் தொழில் நுட்​பப் பூங்​காக்​கள் இவற்றை உள்​ள​டக்​கிய சிறப்​புப் பொரு​ளா​தார மண்​ட​லங்​கள் எனக் கடற்​க​ரை​யில் அமைந்து கொண்​டி​ருக்​கும் மற்​றும் அமைய இருக்​கும் வளர்ச்​சித் திட்​டங்​க​ளின் பட்​டி​யல் முடி​வில்​லா​மல் நீள்​கி​றது.​

இவர்​க​ளின் நிர்​பந்​தத்​தால் கடற்​கரை மண்​டல ஒழுங்​கு​முறை அறி​விப்​பாணை 1991 ​ பல​முறை திருத்​தப்​பட்டு நீர்த்​துப் போகச் செய்​யப்​பட்​டது.​

​ இத​னைப் பலப்​ப​டுத்​து​வ​தற்கு விவ​சாய விஞ்​ஞானி எம்.எஸ்.​ சுவா​மி​நா​த​னின் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட கமிட்​டி​யின் பரிந்​து​ரை​க​ளின் அடிப்​ப​டை​யில் கடற்​கரை மண்​டல மேலாண்மை அறி​விப்​பாணை இயற்​றப்​பட்​டது.​ இந்த அறி​விப்​பா​ணை​யா​னது கடற்​க​ரையி​லி​ருந்து 1 கி.மீ.​ ​(1000 மீட்​டர்)​ தொலை​வுக்கு அப்​பால் மீன​வர்​கள் செல்ல வேண்​டும் என்​றும் கட​லுக்​குள் 12 கடல் மைல்​க​ளுக்கு வளர்ச்​சித் திட்​டங்​கள் அமைக்​கப்​பட வேண்​டும் ​(மீன் பிடிக்க அனு​ம​தி​யில்லை என்​பது மறை​மு​க​மா​னது)​ என்​றும் பரிந்​து​ரைத்​தது.​ இது மீன​வர்​க​ளுக்கு எதி​ராக இருந்​தது.​ கடல்​வ​ளத்​தை​யும் கடற்​க​ரை​யை​யும் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளுக்​குத் தாரை​வார்ப்​ப​தாக இருந்​தது அனை​வ​ரும் அறிந்​ததே.​ இதற்கு மீன​வர்​கள் கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​த​தால் திரும்​பப் பெறப்​பட்​டது.​ அதற்​குப் பதி​லாக இப்​போது கடல் மீன்​பிடி ​(ஒழுங்​கு​முறை மற்​றும் மேலாண்மை)​ சட்ட முன் வரைவு மசோதா 2009-ல் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​

÷இப்​பு​திய சட்ட முன் வரைவு மறை​மு​க​மாக அல்ல,​​ ஒளி​வு​ம​றை​வாக கூட இல்​லா​மல் நேர​டி​யாக மீன​வர்​களை அழிப்​ப​தற்கு குறி வைத்து ஏவி​வி​டப்​பட்​டுள்​ளது.​

இச்​சட்ட முன்​வ​ரைவு நாடா​ளு​மன்​றத்​தில் சட்​ட​மாக நிறை​வேற்​றப்​பட்​டால் மீன​வர்​க​ளின் வாழ்​வு​ரிமை முற்​றி​லு​மா​கப் பாதிக்​கப்​ப​டும்.​ மீன​வர்​க​ளின் இனமே கூண்​டோடு அழிக்​கப்​ப​டும்.​ ஒடுக்​கு​மு​றை​யின் உச்​ச​மாக உள்ள இச்​சட்​டத்​தின் முக்​கி​யப் பிரி​வு​கள் ​

மீன​வர்​கள் 12 கடல் மைல்​க​ளுக்கு மேல் அதா​வது ஆழ்​க​ட​லுக்கு மீன்​பி​டிக்​கச் செல்​லக் கூடாது.​ மீறிச் சென்​றால் 3 ஆண்​டு​கள் சிறைத்​தண்​டனை அல்​லது 9 லட்​சம் ரூபாய் அப​ரா​தம் அல்​லது இரண்​டும் ஒரு சேர விதிக்​கப்​ப​டும்.​ ரூ.​ 10,000-த்துக்கு மேல் மீன்​பி​டிக்​கக்​கூ​டாது.​ அப்​படி மீன்​பி​டிக்​கும்​பட்​சத்​தில் பட​கும்,​​ பிடிக்​கப்​பட்ட மீனும் மத்​திய அர​சால் பறி​மு​தல் செய்​யப்​ப​டும்,​​ ஏலம் விடப்​ப​டும்.​ அப்​ப​ட​கில் உள்ள மீன​வர் தலா ஒவ்​வொ​ரு​வ​ருக்​கும் 25,000 ரூபாய் அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும்.​

÷எல்​லா​வற்​றுக்​கும் மேலாக அந்​நிய பன்​னாட்டு நிறு​வ​னம்,​​ அந்​நிய நிறு​வ​னத்​தின் ​ கப்​பல்​க​ளுக்கு ஆழ்​கட​லில் மீன்​பி​டிக்க அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளது.​ இதற்​காக பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் கப்​பல்​க​ளுக்கு அனு​மதி அளிக்​கும் கடித முறை ஏற்​கெ​னவே அம​லில் இருந்து வரு​கி​றது என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​

÷வெ​ளி​நாட்டு நிறு​வ​னங்​க​ளுக்கு நமது கட​லில் ஆராய்ச்சி செய்ய அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.​ இந்​தச் சட்​டத்​தின்​படி மரபு வழி மீன​வர்​கள் எந்​தெந்த மாதங்​க​ளில் எந்​தெந்த மீன்​பி​டிக்க வேண்​டும்,​​ எவ்​வ​ளவு காலம் மீன்​பி​டிக்க வேண்​டும்,​​ எவ்​வ​ளவு மீன்​பி​டிக்க வேண்​டும் எந்​தக் கரு​வியை,​​ எந்த அள​வுள்ள பட​கைப் பயன்​ப​டுத்தி எந்த இடத்​தில் மீன்​பி​டிக்க வேண்​டும் என்​பதை மத்​திய அரசு விதி​கள் மூல​மாக அறி​விக்​கும்.​

கடல் மீன்​பிடி ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்​தின் நோக்​க​மாக தேசி​யப் பாது​காப்​புச் சட்​டம் ஒழுங்​கைக் காப்​ப​து என்று அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​ தேசி​யப் பாது​காப்​புக் கரு​தியோ,​​ சட்​டம் ஒழுங்​கைக் கார​ணம் காட்​டியோ படகு உரி​மை​யா​ள​ருக்கு அளிக்​கப்​பட்​டுள்ள அனு​ம​தியை ரத்து செய்​யும் அதி​கா​ரம் மத்​திய அர​சுக்கு உண்டு.​

÷ஏற்​கெ​னவே கட​லோ​ரப் பாது​காப்​புப் படை​யி​ன​ரும் கப்​பல் படை​யி​ன​ரும் கட​லில் மீன்​பி​டிக்​கும் மீன​வ​ரைத் துன்​பு​றுத்தி வரு​கின்​ற​னர்.​ இப்​போது இச்​சட்​டத்​தின்​படி தேசி​யப் பாது​காப்பு என்ற பெய​ரிலோ சட்​டம் ஒழுங்​குக்​குப் பாத​க​மா​கச் செயல்​பட்​டார் என்றோ கட​லோ​ரப் பாது​காப்​புப் படை​யி​ன​ரும் காவல்​து​றை​யி​ன​ரும் மீன​வ​ரைத் துன்​பு​றுத்​து​வது சட்​ட​பூர்​வ​மா​கி​வி​டும்.​ அது தொடர்​க​தை​யா​கி​வி​டும்.​

மேலி​ருக்​கும் சட்​டப்​பி​ரி​வு​க​ளைப் படிக்​கும் யாரும் நமது கட​லில் மீன்​பி​டிக்க பாரம்​ப​ரி​ய​மான மீன​வர்​க​ளுக்கு அனு​மதி இல்லை.​ பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளுக்கு மட்​டுமே அனு​மதி அளிக்​கப்​ப​டு​கி​றது என்​ப​தைப் புரிந்​து​கொள்ள முடி​யும்.​

​ நமது மீன​வர்​களை மீன்​பி​டிப்​புத் தொழிலி​லி​ருந்து விரட்டி அடிப்​ப​தற்​கான சட்​ட​பூர்வ முயற்​சியே இது.​ அன்று தேசத்​தின் விடு​த​லைக்​கா​கப் போரா​டி​ய​வர்​களை ஒடுக்​கு​வ​தற்​காக வெள்ளை ஏகா​தி​பத்​தி​யத்​தால் போடப்​பட்​டது,​​ ரெüலட் என்ற ஒடுக்​கு​மு​றைச் சட்​டம்.​ அதற்கு சற்​றும் குறைந்​த​தல்ல இச்​சட்​டம்.​ இச்​சட்​டம் வந்​தால் மீன​வர்​கள் கடலி​லி​ருந்​தும் கடற்​க​ரையி​லி​ருந்​தும் விரட்​டி​ய​டிக்​கப்​ப​டு​வது நிச்​ச​யம்.​ மீன​வர்​கள் மத்​தி​யில் பட்​டி​னிச்​சா​வு​கள் அதி​க​ரிக்​கும்.​ கடல் வளத்​தை​யும்,​​ கடற்​க​ரை​யை​யும் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் ஆக்​கி​ர​மித்​துக் கொள்​ளை​ய​டித்து முழு​வ​தை​யும் சுரண்​டப்​போ​வது நிச்​ச​யம்.​

எனவே,​​ எல்லா வகை​யி​லும் மீன​வ​ரின் வாழ்​வு​ரிமை கேள்​விக்​குள்​ளாக்​கப்​ப​டு​வது உறு​தி​யா​கி​விட்​டது.​ இப்​போது நாடு முழு​வ​தும் எழுந்த மீன​வர்​க​ளின் கடும் எதிர்ப்​பி​னால் சட்​ட​முன் வரை​வைத் தாற்​கா​லி​க​மாக நிறுத்தி வைப்​ப​தா​க​வும்,​​ ஆனால் திருத்​தங்​க​ளு​டன் கொண்டு வரப்​போ​வ​தா​க​வும் அறி​வித்​துள்​ளது,​​ மீன​வர்​க​ளின் மனங்​க​ளின் நீங்​காத அச்​சத்தை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது.​ மீன​வர்​க​ளின் துயர் என்​று​தான் தீருமோ?
கட்டுரையாளர் : எம்.​ சேது​ராம​லிங்​கம்
நன்றி : தினமணி

தேசம் விலை​போ​கி​றதே...!

அது மன்​ன​ராட்சி ஆனா​லும்,​​ மக்​க​ளாட்சி ஆனா​லும்,​​ ஏன் சர்​வா​தி​கார ஆட்​சியே ஆனா​லும் அந்த நாட்​டை​யும்,​​ மக்​க​ளை​யும்,​​ அவர்​க​ளது நல​னை​யும் பாது​காப்​ப​து​தான் அடிப்​ப​டைக் கடமை.​ நல்ல பல திட்​டங்​க​ளின் மூலம் மக்​க​ளது நல்​வாழ்​வுக்கு ஓர் அரசு உத்​த​ரவு தரு​கி​றதோ இல்​லையோ,​​ அன்​னி​யர்​கள் தேசத்தை ஆக்​கி​ர​மிக்​கா​மல் பாது​காப்​ப​தும்,​​ சுரண்​டா​மல் பார்த்​துக் கொள்​வ​தும் எந்த ஓர் அர​சுக்​கும் அடிப்​ப​டைக் கடமை.​ இந்த அடிப்​ப​டைக் கட​மை​யைக்​கூட மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி செய்​யத் தவ​று​கி​றதோ என்​கிற ஐயப்​பாடு சமீ​ப​கா​ல​மா​கத் தோன்​றி​யி​ருக்​கி​றது.​

இந்​தியா மிகப்​பெ​ரிய மின் பற்​றாக்​கு​றை​யைச் சந்​திக்க இருக்​கி​றது என்​பதை யாரும் மறுக்​க​வில்லை.​ இந்​தி​யா​வின் எரி​சக்​தித் தேவையை எப்​படி எதிர்​கொள்​வது என்​ப​தில் அனை​வ​ரும் கைகோர்த்து,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நல​னை​யும் கருத்​தில்​கொண்டு செயல்​பட வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்து இருக்க முடி​யாது.​ இந்​தப் பிரச்​னை​யில் மக்​கள் கருத்தை முறை​யா​கக் கணிக்​கா​ம​லும்,​​ பொது​வான அணு​கு​மு​றை​யைக் கடைப்​பி​டிக்​கா​ம​லும் அமெ​ரிக்​கா​வு​டன் பல்​வேறு சம​ர​சங்​க​ளைச் செய்​து​கொண்டு அணு​சக்தி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது இந்​திய அரசு.​

அது​வும் போதா​தென்று,​​ இந்​தி​யா​வின் உரி​மை​களை அடகு வைக்​கும்,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நியா​ய​மான பாது​காப்பை நிர்​மூ​ல​மாக்​கும் ஒரு நட​வ​டிக்​கை​யி​லும் இப்​போது மன்​மோ​கன் சிங் தலை​மை​யி​லான அரசு இறங்கி இருப்​பது அதிர்ச்சி அளிக்​கி​றது.​

அது இந்​திய நிறு​வ​னமோ,​​ பன்​னாட்டு நிறு​வ​னமோ எது​வாக இருந்​தா​லும்,​​ தாங்​கள் தொழில் செய்து லாபம் சம்​பா​திப்​ப​தற்​கா​கச் சுற்​றுச்​சூ​ழ​லைப் பாதிப்​ப​தும்,​​ தொழி​லா​ளர்​கள் மற்​றும் அந்​தத் தொழிற்​சா​லை​யைச் சுற்றி வாழும் மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​கும்,​​ ஆரோக்​கி​யத்​துக்​கும் பாதிப்பு ஏற்​ப​டுத்​து​வ​தும் ஏற்​பு​டை​ய​தல்ல.​ நமது அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் 21-வது பிரி​வின்​படி வாழ்​வு​ரிமை என்​பது ஒவ்​வோர் இந்​தி​யக் குடி​ம​க​னுக்​கும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​

நமது உச்ச நீதி​மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் மேலும் ஒரு​படி சென்று,​​ வாழும் உரிமை என்​பது உயி​ரு​டன் வாழ்​வது என்​பது மட்​டு​மல்ல,​​ சுய​ம​ரி​யா​தை​யு​டன் வாழ்​வது என்​ப​தும் அடிப்​ப​டைத் தேவை​க​ளான உண்ண உணவு,​​ உடுக்க உடை,​​ இருக்க வீடு இவை​க​ளு​டன் வாழ்​வது என்​ப​தும்​தான் என்று பல தீர்ப்​பு​க​ளின் மூலம் உறுதி செய்​தி​ருக்​கி​றது.​ அதை மேலும் விரி​வு​ப​டுத்தி,​​ மனித உரி​மை​யு​ட​னும்,​​ கௌ​ர​வத்​து​ட​னும் வாழ்​வது என்​பது,​​ பாது​காக்​கப்​பட்ட சுற்​றுச்​சூ​ழ​லு​ட​னும்,​​ நச்​சுக் கலப்​பில்​லாத காற்று மற்​றும் தண்​ணீ​ரு​ட​னும் வாழ்​வது என்​று​கூ​டத் தீர்ப்பு வழங்கி இருக்​கி​றது.​

உல​கி​லுள்ள ஏனைய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டங்​களை எல்​லாம்​விட,​​ இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் சுற்​றுச்​சூ​ழ​லுக்கு மிக அதி​க​மான முன்​னு​ரி​மை​யும் முக்​கி​யத்​து​வ​மும் அளித்​தி​ருக்​கி​றது.​ இயற்​கைச் சூழ​லைப் பேணு​வது மற்​றும் அதி​க​ரிப்​பது என்​பதை அர​சி​யல் சட்​டப்​பி​ரிவு 51-அ,​​ அடிப்​படை உரி​மை​யா​கவே நமக்கு அளித்​தி​ருக்​கி​றது.​

உச்ச நீதி​மன்ற பல்​வேறு தீர்ப்​பு​கள் வலி​யு​றுத்​தும் கருத்து,​​ எந்த ஒரு தொழில் நிறு​வ​ன​மும் அத​னால் ஏற்​ப​டும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​க​ளுக்கு முழுப் பொறுப்​பும் ஏற்​றாக வேண்​டும் என்​ப​தைத்​தான்.​ தங்​க​ளது ஊழி​யர்​க​ளுக்கு மட்​டு​மல்ல,​​ அந்த நிறு​வ​னத்​தின் கழி​வு​கள்,​​ வாயுக் கசி​வு​கள் மற்​றும் நச்​சுத்​தன்மை போன்​ற​வற்​றால் சுற்​றி​லும் வாழும் பொது​மக்​க​ளுக்​கும்,​​ உயி​ரி​னங்​க​ளுக்​கும் ஏற்​ப​டும் பாதிப்​பு​கள் அனைத்​துக்​கும்​கூட நிறு​வ​னம் பொறுப்​பேற்​றாக வேண்​டும்.​

சட்​ட​மும் அர​சி​யல் சட்​ட​மும் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ தார்​மிக ரீதி​யா​கப் பார்த்​தா​லும்,​​ தாங்​கள் லாபம் கரு​திச் செய்​யும் தொழில் அடுத்​த​வ​ரைப் பாதிக்​கக்​கூ​டாது என்​ப​தும் அப்​ப​டிப் பாதிப்பு ஏற்​பட்​டால் அதற்​கான நஷ்ட ஈடும் பரி​கா​ர​மும் செய்ய வேண்​டும் என்​ப​தும் சட்​டம் இருந்​தா​லும் இல்​லா​விட்​டா​லும் மனித நாக​ரி​கம் ஏற்​றுக்​கொள்​ளும் கட​மை​யும்​கூட.​ நிலைமை இப்​படி இருக்​கும்​போது,​​ நமது மத்​திய அரசு விசித்​தி​ர​மான ஒரு சட்​டத்​தின் மூலம்,​​ அன்​னி​யப் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் நஷ்ட ஈட்​டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்​க​ளுக்​குப் பாது​காப்பு அளிக்​கத் தயா​ராகி இருப்​ப​து​தான் வெட்​கக் கேடாக இருக்​கி​றது.​

அமெ​ரிக்​கா​வில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடு​க​ளு​டன் இந்​தியா கையெ​ழுத்​திட்ட அணு எரி​சக்தி ஒப்​பந்​தங்​க​ளுக்​குப் பிற​கும் அந்த நாட்டு நிறு​வ​னங்​கள் இன்​னும் அணு மின் நிலை​யங்​க​ளைத் தொடங்க ஆர்​வத்​து​டன் முன்​வ​ரா​தது ஏனாம் தெரி​யுமா?​ அந்த அணு மின் நிலை​யங்​க​ளில் ஒரு​வேளை கசிவு ஏற்​பட்டு அத​னால் பாதிப்பு ஏற்​பட்​டால்,​​ அதற்கு அந்​தப் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் முழுப் பொறுப்பு ஏற்​றாக வேண்​டுமே என்​ப​தால் அவர்​கள் தயங்​கு​கி​றார்​க​ளாம்.​ எப்​படி இருக்​கி​றது கதை.​ அணு மின் நிலை​யங்​க​ளில் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து லாபம் அடைய மட்​டும்​தான் தயா​ராம்!​ ​

நமது இந்​திய அரசு உடனே என்ன செய்ய இருக்​கி​றது தெரி​யுமா?​ அணு​மின் எரி​சக்தி பாதிப்​புச் சட்​டம் ​(சிவில் நியூக்​ளி​யர் லயபி​லிட்டி பில்)​ என்​றொரு சட்​டம் இயற்றி,​​ இந்த அணு​மின் நிலை​யங்​க​ளால் பாதிப்பு ஏற்​பட்​டால் அந்த நிறு​வ​னங்​க​ளின் அதி​க​பட்ச நஷ்ட ஈட்​டுத் தொகை 450 மில்​லி​யன் டாலர் என்று பாது​காப்​புத் தர முன்​வந்​தி​ருக்​கி​றது.​ அதற்கு மேலான பாதிப்​பு​க​ளுக்கு இந்​திய அரசே பொறுப்பு ஏற்​றுக் கொள்​ளு​மாம்.​

என்ன அயோக்​கி​யத்​த​னம் என்று யாரும் கேட்​டு​வி​டக் கூடாது.​ தேசப்​பற்​று​மிக்க ஓர் அரசு,​​ இந்​தி​யாவை ஓர் அமெ​ரிக்​கா​வாக மாற்​ற​வும்,​​ பன்​னாட்டு முத​லீ​டு​க​ளைப் பெறு​வ​தற்​கா​க​வும் இப்​படி ஒரு "சலுகை' அளிக்க இருக்​கி​றது.​ நாளைய தலை​மு​றை​யின் நல்​வாழ்வு முக்​கி​யமா,​​ இந்​திய மக்​க​ளின் பாது​காப்பு முக்​கி​யமா இல்லை பன்​னாட்டு முத​லீ​டும்,​​ ஆபத்​தான அணு மின்​சக்​தி​யும் முக்​கி​யமா?​

தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!
நன்றி : தினமணி