ஜக்குபாய் திரைப்படம் இணையதளத்தில் வெளியான விவகாரத்தில் திரையுலகமே ஒன்று சேர்ந்து கண்டித்துள்ளது. இதில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட கோவை இளைஞரையும், திருட்டு டிவிடி தயாரித்த சென்னை நபரையும் கைது செய்துள்ளது. பொங்கல் நேரத்தில் திரைக்கு வரவிருந்த இப்படம் முன்னதாக வெளியாகியிருப்பது மிகவும் மோசமான சூழல் தமிழ்த் திரையுலகுக்கு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் போது, இதைவிட எங்களை நடுத்தெருவில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறி அழுதது, அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி, தமிழ்க் குடும்பங்கள் அனைத்திலுமே ஒரு பச்சாதாபத்தை உருவாக்கியிருக்கிறது. எத்தகைய பெரும் இழப்பைத் தயாரிப்பாளர்கள் சந்திக்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக பார்வையாளர்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.
திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது என்பதும் இணையதளத்தில் பல படங்களை யார்யாரோ போட்டுவிடுகிறார்கள் என்பதும் புதிய விஷயம் அல்ல. இப்போது திரையுலகமே கலங்கி நிற்கக் காரணம், படம் வெளியிடப்படத் தயாராக இருக்கும் நிலையில், அது யாருக்கோ கிடைத்து, இணையதளத்தில் வெளியாகி, அதை ஒருவர் பதிவிறக்கம் செய்து திருட்டு டிவிடியாக வெளியிடுகிறார் என்ற அதிர்ச்சிதான்!
ரஜினிகாந்த் குறிப்பிட்டதைப்போல திருடன் வெளியே இருந்து வரவில்லை, கூடவே இருந்திருக்கிறான். தயாரிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணியின்போதுதான் இந்தத் திரைப்படம் வெளியே எடுத்துச்செல்லப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்தவர் யார் என்பதை கண்டுபிடிப்பதும் சாத்தியம்தான். ஆனால் இத்தகைய உள்ளுறைத் திருடர்கள் உருவாக யார் காரணம்? திருட்டு டிவிடியை ஏன் ஒழிக்க முடியவில்லை? காவல்துறையினர் கண்டும்காணாமல் இருப்பதால் மட்டும்தான் திருட்டு டிவிடி சந்தையில் புழங்குகிறதா? இதற்கான பதில்கள் அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசிய பேச்சிலேயே இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், திருட்டு டிவிடி வாங்கிப் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமானதாக நினைக்கிறார்கள், திருட்டு டிவிடி போன்ற சட்டவிரோதமான செயல்கள் கருப்புப் பணத்திலிருந்து வருவதுதான். திருட்டு டிவிடி மூலம் கிடைக்கும் பணம், மும்பை குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாதச் செயல்களுக்குப் போய்ச் சேருகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்லிப் புரிய வைக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இது முழுக்க முழுக்க உண்மைதான்.
இருப்பினும்கூட, திரைத்துறையில் படத்தயாரிப்பு, சம்பளம் எல்லாவற்றிலும் கருப்புப் பணம் முழுவீச்சில் நடமாடுகிறது என்பதால்தான் ஒரு திரைப்படம் ஒரு கலையின் ஒரு பிரிவு என்று கருதாமல், வெறும் வியாபாரமாக கோடிகோடியாய் கொட்டப்படுகிறது என்கிற கசப்பான உண்மையும் இருக்கவே செய்கிறது.
"ரூ.15 கோடி சொத்தைத் திருடி விட்டார்கள் என்பதைவிட எங்களைக் கொன்றுவிட்டார்கள்' என்பதே உண்மை என்று படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறிய அதே மேடையில், நடிகர் ரஜினிகாந்த் ஜக்குபாய் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாததைச் சொல்லும்போது, "ரவிக்குமார் எனக்கு வாசபி என்ற பிரெஞ்சு படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அந்தக் கதை நன்றாக இருந்தது. சூப்பர் கதை. ஜக்குபாய் படம் நன்றாக ஓடும். ராதிகா கவலைப்பட வேண்டியதில்லை' என்று கூறியிருக்கிறார். தமிழ்ப்படங்களின் திரைக்கதை இப்படித்தான் உருவாகும் என்றால், மற்றவர்களைக் குறை சொல்ல என்ன நியாயம் இருக்கிறது?
தமிழ்த் திரையுலகில் பிறமொழிகளில் வெற்றியடைந்த படங்களின் கதைத் தழுவல் தொடக்க காலம் முதலாகவே நடந்து வந்திருப்பதுதான். ஆனால் அண்மைக்காலத்தில், மிகப் பெரும்பாலான படங்கள் ஏதோ ஒரு மொழியில் வெற்றியடைந்த, அல்லது பேசப்பட்ட, அல்லது கையாளப்பட்ட புதுமை உத்திகளை அப்படியே இறக்குமதி செய்வதாகத்தான் இன்றைய தமிழ்த் திரையுலகம் இருக்கிறது. ரூ.20-க்கு மூன்றுபடங்கள் கொண்ட ஒரு டிவிடி என்று பெருகிவிட்டபிறகு, தமிழ்ப்படங்களின் மூலங்களையும் சேர்த்தே வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் சூழல் தமிழகத் திரைப்பட ரசிகர்களிடம் உருவாகியிருப்பதை இன்றைய தமிழ்த் திரையுலகம் அறிந்திருக்கவில்லையோ!
எம்ஜிஆர் தனது சம்பளத்தை அதிகமாக நிர்ணயிக்கக் காரணமாகச் சொல்லப்பட்ட செய்தி ஒன்று உண்டு. "தமிழகத்தின் எல்லா நகர்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்காக மட்டுமே இந்தப் படத்தை ஒரு முறையாவது நிச்சயம் பார்ப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நுழைவுக்கட்டணத்தில் ஒரு ரூபாய் எனக்குக் கிடைத்தால் என்ன?' என்பதுதான். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் மீது நம்பிக்கை இருந்தது. இன்றும்கூட, அவரது பல படங்கள் டிவிடியாக கிடைத்தாலும், திரையரங்குக்கு வரும்போது ஒருமுறை மீண்டும் பெரிய திரையில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவுக்குக் கதையும், நடிகர்களின் பங்களிப்பும் இருந்தது.
அண்மையில் வெளியான "2012', "அவதார்' ஆகிய படங்களின் திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது. அந்தப் படத்தை டிவிடியில் பார்த்து அசந்துபோய், பெரிய திரையில் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று திரையரங்குக்கு ஓடும் ரசிகர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். நல்ல படங்களுக்கு ரசிகர்கள் அதற்கான மதிப்பை வழங்கத் தவறுவதில்லை என்பதை தமிழ்த் திரையுலகம் உணர வேண்டும்.
அத்துடன், ஜக்குபாய் படத் திருட்டு மட்டுமல்ல, ஓட்டல் அறையில் விவாதிக்கப்படும் பல திரைப்படங்களின் கதைக்கரு, நகைச்சுவைக் காட்சி தொடர்பான தகவல்கள் எல்லாமும் பல்வேறு இயக்குநர் முகாம்களுக்குக் கசிந்திடக் காரணம், இயக்குநர், கதாநாயகன் கதாநாயகிக்கு நல்ல சம்பளம் கொடுக்கும்போது, உதவி இயக்குநர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் மிகக் குறைந்த ஊதியம் கொடுப்பதும்தான் என்பதையும் திரையுலகம் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி : தினமணி
Monday, January 11, 2010
தமிழ் வெறும் துக்கடாவா...?
கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் சென்னை இசை விழா முடிவடையும் நிலையை எட்டிவிட்டது. முக்கியமான பழம்பெரும் சபாக்களின் நிகழ்வுகள் முடிந்துவிட்டன. சென்னை சங்கமத்துடன் இந்த ஆண்டுக்கான இசைவிழா நிறைவுபெறும்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற இசை, நாட்டியம் தொடர்பான கலை விழாக்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் மாதம் எடின்பரோ சர்வதேசக் கலைவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழா. 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இசை, நாட்டிய விழாவில் பங்குபெறவும், கலந்துகொள்ளவும் உலகெங்கிலும் இருந்து கலைஞர்களும் ரசிகர்களும் குவிகிறார்கள். ஆனால், இந்த இசை விழா நடப்பது ஆறே ஆறு அரங்கங்களில் மட்டுமே.
லண்டன் நாட்டிய விழா, நியூயார்க் நாட்டிய விழா, ஐரோப்பிய நாட்டிய விழா என்று எத்தனை எத்தனையோ இசை, நாட்டிய விழாக்கள். ஆனால், அவை அனைத்துமே வியாபாரக் கண்ணோட்டத்துடன், பல தொழில் நிறுவனங்களும், அந்தந்த நகர அமைப்புகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்திக் குளிர்காய முற்படுகின்றனவே தவிர, கலைக்காக நடத்தப்படும் விழாக்களா என்றால் கிடையாது.
ஆனால் நமது சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் இசைவிழா அப்படிப்பட்டதல்ல. இது வியாபாரத்துக்காக நடத்தப்படுவது அல்ல. சுற்றுலாப் பயணிகளைக் கவர வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்படுவதும் அல்ல. கலைக்காகக் கலாரசிகர்களால் நடத்தப்படும் நமது சென்னை இசை விழாவின் பிரமாண்டம் உலகில் வேறு எந்தப் பகுதியில் நடைபெறும் விழாக்களுக்கும் இல்லை என்பதால்தான், சென்னை மாநகரம் இந்தியாவின் கலாசார தலைநகரம் என்று போற்றப்படுகிறது.
73 சபாக்கள் ஏறத்தாழ 2,850 இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் திறமையை ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த அதிசயத்தைப் பார்த்து வடநாட்டவரும், வெளிநாட்டவரும் வாய் பிளந்து ஆச்சரியப்படுகிறார்கள். ஆண்டுதோறும் சில நூறு புதிய இளைய தலைமுறைக் கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள். சொல்லப்போனால் இந்த இளைய தலைமுறைக் கலைஞர்களில் பலர் பணத்துக்காக இசையைத் தேர்ந்தெடுக்காமல், இசையை இசைக்காக நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
கர்நாடக இசை என்பதை நாம் தென்னிந்திய இசை அல்லது திராவிட இசை என்று சொல்வதுதான் சரி. எப்படித் தமிழர், கேரளத்தவர், கன்னடர், ஆந்திரர் ஆகிய அனைவரையும் வடவர்கள் "மதராசிகள்' என்று குறிப்பிடுகிறார்களோ அதைப்போல, நமது தஞ்சைத் தரணியில் தோன்றி தென்னகமெங்கும் பரவிய தென்னக இசையைக் கர்நாடக இசை என்று குறிப்பிடுகிறார்கள், ஆற்காடு நவாபுகள் அப்போது கர்நாடிக் நவாப் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கிருஷ்ணா நதிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையிலான பகுதியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்தனர். மைசூர் உள்பட உள்ள பகுதியை ஆண்ட கர்நாடிக் நவாபுகளின் நாட்டு இசையைக் கர்நாடக இசை என்று இந்துஸ்தானிய இசை மரபினர் அழைக்க முற்பட்டனர். இதுதான் வரலாற்று உண்மை.
சப்த ஸ்வரங்களின் அடிப்படையில் அமைந்த இசை எப்படித் தமிழிசையாகும் என்று கேட்பவர்கள் மறந்துவிடும் ஒன்று, இந்த சப்த ஸ்வரங்கள் நமது பண்களின் பரிணாமம்தான் என்பதை. இசையும், முழவும், தாளமும், கூத்தும், அபிநயமும் ஆய இவை ஐந்தும் பஞ்ச மரபு என்பார்கள். "பஞ்ச மரபு' என்கிற சங்க கால நூலில் இசை மரபின் வங்கிய மரபு என்கிற உட்பிரிவில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் சுத்த எழுத்தால், ""வரிபரந்த கண்மடவாய் வைக்கத் தெரிவரிய ஏழிசையும் தோன்றும். இதனுள்ளே பண் பிறக்கும். சூழ் முதலாம் சுத்தத் துளை'' என்று வங்கியம் (புல்லாங்குழல்) வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
நமக்கே உரித்தான இந்த இசையை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் முதலில் அந்த இசை பாமரனுக்கும் புரியும் இசையாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகத் தமிழ் சாகித்யங்கள் (பாடல்கள்) கையாளப்பட வேண்டும். பெயருக்குத் துக்கடாவாக ஒரு திருப்புகழோ, திருப்பாவையோ பாடுவது என்பது இசையை மட்டுமல்ல, தமிழையும் கேவலப்படுத்துவதாக இருக்கிறது.
இளைய தலைமுறைக் கலைஞர்கள் பலர் தமிழ் சாகித்யங்களை மட்டுமல்ல, தெலுங்கு சாகித்யங்களையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பாடும் அவலநிலை ஏற்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழில் பாடினால் மட்டும் போதாது. தமிழ் படித்துத் தமிழைச் சரியாக உச்சரித்தும் பாட வேண்டும்.
கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும்போது, நீங்கள் தமிழில் பாடுவதாக இருந்தால்தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்கள் நிபந்தனை விதிப்பதில்லை என்கிற நியாயமான கேள்வியை எழுப்பி இருக்கிறது "விடுதலை' நாளிதழ். நாமும் அந்தக் கருத்தையே பிரதிபலிக்கிறோம்.
இசை பாமரர்களைப் போய்ச் சேர வேண்டும். இந்த நோக்கம் சென்னை சங்கமத்தால் ஓரளவுக்கு செயல்வடிவம் கொள்கிறது என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும். பூங்காக்களில் பாடும் பல கலைஞர்கள் பாமரர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழில் பாடுகிறார்கள். இவர்கள் சபாக்களில் பாடும்போது தமிழில் பாடுவதில்லையே ஏன்? அங்கே கூடும் ரசிகர்கள் தமிழ் பாடக்கூடாது என்று சொல்வார்களா என்ன? இல்லை அவர்கள்,வெளிநாட்டவர்களும் வெளிமாநிலத்தாருமா, தமிழர்கள்தானே?
பணக்கார நிலச்சுவான்தார்கள் மற்றும் ஜமீன்தார்களின் ஏகபோக உரிமையாக இருந்த இசை இன்று அனைவருக்கும் பொதுவாகி இருக்கிறது. இனி அதைப் பாமரனும் ரசிக்கும் நிலை ஏற்பட வேண்டும். அதற்குப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை இசை கட்டாயமாகக் கற்றுத்தரப்பட வேண்டும். நமது சபாக்களும், இசைவாணர்களும் தமிழிசைக்கு முன்னுரிமை தரவேண்டும். தமிழகத்தில் தமிழில் பாடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் கேவலம் இனியும் தொடரக்கூடாது!

மொபைல் போன் மூலமான இன்டர்நெட் பயன்பாடு அதிகரிப்பு
இந்தியாவில் மொபைல் போனில் இன்டர் நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிரித்து வருகிறது. முன்பெல்லாம் கம்ப்யூட்டரில் தான் மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தி வந்தனர். தற்போது, இன்டெர்நெட்டை பயன்படுத்தும் வகையில் ஏராளமான நிறுவனங்கள் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளன. இதையடுத்து, மொபைல் போனில் இன்டர் நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரித்த வண்ணம் உள்ளது. இன்டர்நெட் மற்றும் மொபைல்போன் கூட்டமைப்பு இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோர் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில், 47கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. மொபைல் போன் வைத்துள்ளவர்களில் 20 லட்சம் பேர் இன்டர்நெட் வசதியை பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 70 சதவீதத்தினர் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் மற்றும் இளம் வயதினர்.
நன்றி : தினமலர்
Subscribe to:
Posts (Atom)