Sunday, November 15, 2009

புதிய சலுகைகளை வழங்க ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் திட்டம்

அடுத்த ஆண்டிற்குள் புதிய சலுகைகளை வழங்க ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், மிக சிறந்த மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின், முதல் பத்து இடத்திற்குள் வந்து விட வேண்டும் என்ற இந்நிறுவனத்தின் இலக்கே இந்த சலுகைகளை வழங்க காரணமாகும்.

மிக சிறந்த பத்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதலீட்டாளர்களை கவரும் விதமாக பல்வேறு புதிய சலுகைகளை அளிக்க இருப்பதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என்றும் ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


வைப்புத் தொகை வட்டி வீதம் குறைகிறது

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் வைப்புத் தொகைக்கான வட்டி வீதம் குறைந்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் நிரந்தர வைப்புத் தொகை குறித்து யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
அரசுத் துறை வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கு (பிக்சட் டிபாசிட்) அதிகபட்சமாக 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டு வந்தது. சமீப காலமாக அந்த 7 சதவீதம் கூட கொஞ்சம் குறையத் தொடங்கியது.

ஆனால், இப்போது இரண்டு அரசுத் துறை வங்கிகள் தங்களின், 180-364 நாட்கள் மற்றும் ஒரு ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டு காலகட்ட நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தில் 0.25 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் வரை குறைத்துவிட்டன. இதைத் தொடர்ந்து, தனியார் வங்கிகளும் குறிப்பிட்ட சில நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை குறைக்கத் தொடங்கி விட்டன. ஆனால், மூன்று ஆண்டு மற்றும் அதற்கு அதிகமான குறுகிய கால வைப்புத் தொகைக்கான வட்டி வீதம், 7 சதவீதமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
நன்றி : தினமலர்