Showing posts with label ஏ.டி.எம். Show all posts
Showing posts with label ஏ.டி.எம். Show all posts

Sunday, December 27, 2009

மார்ச் மாதத்திற்குள் 25,000 ஏடிஎம்.,கள் : ஸ்டேட் பேங்க்

வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25,000 ஏடிஎம்களை திறக்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார பொது மேலாளர் விஜி கண்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது இத்தகவலை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது : தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் கடந்த 2 ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1 கோடிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர ஒவ்வொரு கிளையும் ஆண்டுக்கு இரு குழந்தைகளை தத்தெடுத்து கல்வி செலவை அளித்து வருகின்றன. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25 ஆயிரம் ஏடிஎம்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 1,388 ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பயோ மெட்ரிக் எடிஎம்களை திறக்கவும் வங்கி ஏற்பாடு செய்து வருகிறது. இம்முறையில் வாடிக்கையாளர்கள் தங்கள் கைரேகையை ஏடிஎம்மில் பதிவு செய்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். ஒருவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மற்றவர்கள் பணம் எடுக்க முடியாது. ஏற்கனவே இத்தகைய ஏடிஎம் சென்டர்கள் மதுரை, மேலூர், செய்யாறு ஆகிய இடங்களில் திறக்கப்பட்டு விட்டன. வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏடிஎம்மில் பணம் எடுக்க பழகி கொள்ள வேண்டும். மாதத்தின் முதல் வாரத்திலேயே மொத்த பணத்தையும் எடுக்க முயற்சிக்க கூடாது. ஏனெனில் ஒரு மிஷினில் ரூ.32 லட்சம் மட்டுமே வைக்க முடியும் என்றார்.
நன்றி : தினமலர்


Monday, October 12, 2009

5 முறைக்கு மேல் பிற ஏ.டி.எம்.,களில் பணம் ‌எடுத்தால் கட்டணம்

ஐந்து முறைக்கு மேல் பிற ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை வரும் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கட்டுப்பாடின்றி பணம் எடுக்கும் நடைமுறை வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு, 16ம் தேதி முதல் பிற வங்கி ஏ.டி.எம்.,களை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்தலாம்.ரூபாய் 10,000 ஒரே தடவையில் எடுக்க முடியும். ஆறாவது முறை பயன்படுத்தும் போது, ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்றக் கட்டணம் உயர்ந்திருப்பதாக வங்கிகளில் சங்கம் ரிசர்வ் வங்கியிடம் குற்றம் சாட்டின. இதனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டது.
நன்றி : தினமலர்


Friday, August 28, 2009

ஏ.டி.எம்., கட்டுப்பாடுகள் அக்., 15ல் அமல்

வங்கிக் கணக்கு இல்லாத பிற ஏ.டி.எம்., களை, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தினால், அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கும் திட்டம், அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தல் மற்றும் கணக்கில் உள்ள பணத்தை அறிய பிற வங்கி ஏ.டி.எம்.,களைப் பயன்படுத்தும் போது, அதனால், அந்த வங்கியின் சேவை பாதிக்கப்படுவதோடு, வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கி, பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதனால், வங்கியின் செலவினம் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, பிற வங்கி ஏ.டி.எம்.,களை மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்துபவர்களிடம் சேவை கட்டணம் வசூலிக்கலாம் என, இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரைத்தது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கியும் ஒத்துக் கொண்டது. இந்தத் திட்டம், அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத் தப்பட உள்ளது. இந்தத் திட்டம் அமல்படுத்தப் பட்டால், மாதத்திற்கு ஐந்து தடவைக்கு மேல், பிற வங்கி ஏ.டி.எம்., களைப் பயன்படுத்தும் போது, வாடிக்கையாளர்களிடம், ஒரு தடவைக்கு 20 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த சேவை கட்டணம், எந்த வங்கியின் ஏ.டி.எம்., பயன்படுத்தப் பட்டதோ, அந்த வங்கிக்கு சென்றடையும்.

நன்றி : தினமலர்


Saturday, August 22, 2009

ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க கட்டுப்பாடு கொண்டு வரப்படுமா?

வங்கிக் கணக்கு இல்லாத, மற்ற வங்கி ஏ.டி.எம்.,களில், மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல்,வாடிக்கையாளர்கள், பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் செலுத்தும் முறை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக, வங்கி அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. இச்செய்தியை, இந்திய ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தரப்பில் கூறப்பட்டதாவது:
மற்ற வங்கி ஏ.டி.எம்.,களில், ஐந்து முறைகளுக்கு மேல், பணம் எடுப்பவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை, உத்தரவாக வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களாக இந்த நடைமுறை உள்ளது. இது குறித்து அந்தந்த
வங்கிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். பிற வங்கி ஏ.டி.எம்.,களில், ஒரு தடவைக்கு 10 ஆயிரம்
ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் திட்டம் கொண்டு வரவும், தற்போது பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 40 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் உள்ளன. இவற்றில், 30 ஆயிரம் ஏ.டி.எம்.,கள், நகர்ப்புற மற்றும் மெட்ரோ நகரங்களில் உள்ளன. 10 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் மட்டுமே, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. நாடு முழுவதிலும், 80 பொதுத் துறை, தனியார், கூட்டுறவு மற்றும் வெளிநாட்டு வங்கிகள், ஏ.டி.எம்., சேவையை வழங்கி வருகின்றன. இந்த ஏ.டி.எம்.,களில், நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த போது, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பணம் எடுப்பவர்கள் 90 சதவீதம் பேர். அதே சமயம், ஒரு தடவைக்கு, 1,000 ரூபாய்க்கு குறைவாக பணம் எடுப்பவர்களை, அனுமதிக்கக் கூடாது என்ற யோசனையை, ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியளவிலான தொகை எடுப்பவர்கள், மிகக்குறைவாக உள்ளனர். சிறிய தொகையை மற்ற ஏ.டி.எம்.,களில் இருந்து எடுப்பதால், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கணக்கு வைப்பதில், சில பிரச்னைகள் மற்றும் தவிர்க்க முடியாத செலவு ஏற்படுகிறது. பிற வங்கி வாடிக்கையாளர்கள், கணக்கில் உள்ள பணத்தை தெரிந்து கொள்ள, பணம் எடுக்க, மீண்டும் கணக்கில் மீதம் உள்ள பணத்தை அறிய, அடிக்கடி ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு, கட்டணம் வசூலிக்கும் திட்டம், ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதை இன்னமும் அமல்படுத்தவில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன், அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


Friday, August 21, 2009

பிற வங்கி ஏடிஎம்களை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம்!

எந்த ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம், கட்டணமில்லை என்ற அறிவிப்பு வெளியானதும் கார்டும் கையுமாக ஏடிஎம் வாசல்களில் க்யூவில் காத்திருப்பவர்கள் உற்சாகத்தில் துள்ளினர்.

இப்போது அந்த அறிவிப்பில் ஒரு மாறுதல்...

பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம் அட்டைகளை மற்ற வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.20 முதஸ் 75 வரை வங்கிக்கேற்ப கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது.
இதனால் குறிப்பிட்ட வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் கருவியைத் தேடி அலைந்தனர் மக்கள் . பல ஏடிஎம்களில் பெரிய க்யூ நீள்வது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில்தான், அரசு வங்கி, தனியார் வங்கி என்ற பேதமில்லாமல், எந்த வங்கியின் கார்டாக இருந்தாலும் அதை வைத்து கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இப்போது அதிலும் ஒரு மாறுதல்...

குறிப்பிட்ட வங்கியின் அட்டையை பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படுமாம்.

அக்டோபர் மாதத்திலிருந்து இந்த புதிய திருத்தம் அமலுக்குவரும் என்று அனைத்து வங்கிகள் சங்கத்தின் துணை தலைமை அலுவலர் உன்னிகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதற்கு ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 80 அரசு, தனியார், கூட்டுறவுத் துறை சேர்ந்த வங்கிகளின் 40000க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன.
நன்றி : தட்ஸ்தமிழ்

Wednesday, August 5, 2009

ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.,களை நிறுவ ரூ.40 கோடிக்கு ஆர்டர் பெற்றது ஹெச்.சி.எல்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க்கின் ஏ.டி.எம்., களை நிறுவ, அந்த வங்கியிடமிருந்து ரூ.40 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஹெச்.சி.எல்., நிறுவனம் ஆர்டர் பெற்றிருக்கிறது. ஏ.டி.எம்.,களை நிறுவுவது, பராமரிப்பது மற்றும் சர்வீஸ் செய்வது போன்ற வேலைகளை ஹெச்.சி.எல்.நிறுவனம் செய்யும். நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்.,களை ஹெச்.சி.எல்., நிறுவும். ஆனால் அந்த ஏ.டி.எம்.,கள் வழக்கமான ஏ.டி.எம்.,களை விட மாறுபட்டு இருக்கும். அந்த புது ஏ.டி.எம்.,களில் கண் தெரியாதவர்கள் பிரைல் மொழியில் ஆப்பரேட் செய்யவும் பல மொழிகளில் தகவல்களை பெறவும் வசதிகளை கொண்டதாக இருக்கும் என்று ஹெச்.சி.எல் தெரிவித்திருக்கிறது. ஏ.டி.எம்.,களை நிறுவுவதில் உலக அளவில் றபுகழ்பெற்ற கொரிய நிறுவனமான நாடிலஸ் ஹோசுங்குடன் இணைந்து ஹெச்.சி.எல்., இந்த ஏ.டி.எம்.,களை நிறுவ இருக்கிறது.
நன்றி : தினமலர்


Monday, July 20, 2009

ஒரே கட்டுப்பாட்டு அறை மூலம் தனலட்சுமி ஏ.டி.எம்., கண்காணிப்பு

தனலட்சுமி வங்கியின் மத்திய கட்டுப்பாட்டு அறை கேமரா மூலம், அனைத்து ஏ.டி.எம்., வங்கிகளின் நடவடிக்கைளும் கண்காணிக்கப் பட உள்ளன. கேரளாவில் செயல்படும் தனலட்சுமி வங்கி, தனது தானியங்கி வங்கி சேவையை (ஏ.டி.எம்.,) மேம்படுத்தி, அதன்மூலம் 'தனித்துவ மாதிரி அயல் ஆதாரத் தீர்வையை' இந்தியாவிலேயே முதன் முறையாக அமல்படுத்த உள்ளது. இதற்காக, ஜெர்மனியின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கம்பெனி 'வின்கோர் நிக்ஸ்டாரின்' அங்கமான ஏ.ஜி.எஸ்., என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கியின் மூத்த அதிகாரியான ஆனந்த் குப்தா கூறுகையில், 'இப்புதிய திட்டத்தின் கீழ், வங்கியின் மத்திய கட்டுப்பாட்டு அறையில் உள்ள கேமரா மூலம் அனைத்து ஏ.டி.எம்.,களின் நடவடிக்கைகளும் மேற்பார்வை செய்யப்படும். இதனால், அதிக பாதுகாப்புடன் கூடிய சுலபமான சேவை மக்களுக்கு கிடைக்கும்' என்றார். வங்கியின் அனைத்து கிளைகளிலும் பாதுகாப்பு கருதி, டிஜிட்டல் அறிவிப்பு இடம் பெற உள்ளது.
நன்றி : தினமலர்


Monday, July 13, 2009

ஏ.டி.எம்., கார்டுகளும் ஏராளமான பிரச்னைகளும்

தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக, வங்கிப் பணிகள் அனைத்தும், வாடிக்கையாளர்களின் கைக்குள் வந்துவிட்டன. வங்கிச் சேவைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, ஏ.டி.எம்., கார்டு வந்த பிறகு, வசதி எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பிரச்னைகளும் இருக்கின்றன. ஏ.டி.எம்., பயன்படுத்துவதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அது குறித்து புகார் தெரிவிக்க ஒவ்வொரு வங்கியிலும் புகார் படிவமே தயாராக வைக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு பிரச்னைகள் உள்ளன. அந்தப் புகார் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான பிரச்னைகள்...
* ஏ.டி.எம்., கார்டு மூலம் ஒரு முறை மட்டும் பணம் எடுத்தேன். ஆனால், இரண்டு, மூன்று தடவை பணம் எடுத்திருப்பதாக ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்காமலேயே ரசீதில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
* பரிவர்த்தனையை ரத்து செய்திருந்தும், ரசீதில் பணம் எடுக்கப்பட்டதாக பற்று வைக்கப்பட்டுள்ளது.
* குறைவான தொகையை ஏ.டி.எம்.,ல் எடுத்திருந்து, ரசீதில் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டிருந்தால்...
* ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தவே இல்லை. ஆனால், ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி பணம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரச்னைகளில் ஏதாவது ஒன்று ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தும் போது ஏற்பட்டிருந்தால், உடனே சம்பந்தப்பட்ட வங்கியில் தெரிவித்து, குறிப்பிட்ட புகார் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
சமீபத்தில் ஏ.டி.எம்., கார்டைப் பயன்படுத்தி, இதுபோன்றதொரு பிரச்னையில் சிக்கிய ஒருவர் கூறியதாவது: என் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேறொரு வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில் கார்டை செருகி, தொகையை டைப் செய்தேன். பணம் வரவில்லை. ஆனால், என் கணக்கில் 15 ஆயிரம் ரூபாய் பற்று வைக்கப்பட்டுவிட்டது. இது பற்றி கணக்கு இருக்கும் வங்கியில் புகார் கொடுத்தேன். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, 'டெபிட் கார்டை' பயன்படுத்தி ஓட்டலில் குடும்பத்துடன் சாப்பிடச் சென்றேன். பில்லுக்கு டெபிட் கார்டை கொடுத்தபோது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திருப்பித் தந்துவிட்டனர். அப்போது என்னிடம் பணமும் இல்லை. பெரும் அவமானத்தோடு, ஒருவழியாக பணம் ஏற்பாடு செய்து ஓட்டலுக்கு பில் செலுத்தினேன். இது பற்றியும் குறிப்பிட்ட தனியார் வங்கியில் புகார் கொடுத்தேன். 15 நாட்களில் சரி செய்யப்படும் என்கின்றனர். அந்த இடைவெளியில் என் செலவுகளுக்கும், இ.சி.எஸ்.,களுக்கும் எங்கிருந்து பணம் புரட்டுவது? வங்கியின் குற்றத்துக்கு நான் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?
இவ்வாறு அவர் குமுறினார்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து, தனியார் வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது: இதுபோல் ஏராளமான குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், தற்போது ஏ.டி.எம்., மையங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். எந்த வங்கி ஏ.டி.எம்., மையத்தையும் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு வெளியான பிறகு, இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. வாடிக்கையாளர்களின் அதிகளவு பயன்பாட்டுக்கு தகுந்த மாதிரி, ஏ.டி.எம்., மையங்களின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படவில்லை. இதனால் தான் தவறுகள் ஏற்படுகின்றன. ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தும்போது எவ்விதமான தவறு ஏற்பட்டாலும், உடனே சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் செய்துவிட வேண்டும். 'புகார் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளில் இருந்து 12 முதல் 15 நாட்களுக்குள் சரிசெய்து கொடுத்துவிட வேண்டும்' என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும், வங்கி கணக்கில் மாத சம்பளமோ அல்லது வேறு ஏதாவது வகையில் பணமோ பற்று, வரவு வைக்கப்பட்டால், அது குறித்து மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., அல்லது இ-மெயில் தகவல் வருவதற்கான வசதியை பயன்படுத்துவது நல்லது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்துவதே இல்லை. இந்த வசதியைப் பயன்படுத்தினால் நம் கணக்கில் பணம் இருக்கிறதா, எவ்வளவு இருக்கிறது என்பது பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இதனால், வெளி இடங்களில் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.டி.எம்., கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
* வங்கியில் ஏ.டி.எம்., கார்டு பெற்றவுடனே, உங்களது 'பின்' எண்ணை மாற்றிக்கொள்ளுங்கள்.
* உங்களது 'பின்' எண்ணை யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள்.
* 'பின்' எண்ணையும், ஏ.டி.எம்., கார்டையும் ஒரு சேர வைக்காதீர்கள். முடிந்தளவு 'பின்' எண்ணை, எங்கேயும் எழுதி வைக்காமல், மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.
* ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கும்போது தொகையையோ அல்லது பின் எண்ணையோ தவறுதலாக 'டைப்' செய்திருந்தால், முற்றிலுமாக, 'கேன்சல்' கொடுத்துவிடுங்கள். பின்னர், திரும்பவும் ஏ.டி.எம்., கார்டை செருகி புதிதாக, 'டைப்' செய்யுங்கள்.
* ஏ.டி.எம்., கார்டை தவறுதலாக மூன்று முறை செயல்படுத்திவிட்டால், அதன் பின்னர் உங்களது கார்டு முடக்கப்பட்டுவிடும்.
* ஏ.டி.எம்., கார்டு தொலைந்துபோனால், உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் செய்துவிட வேண்டும். அப்போது தான், காணாமல் போன ஏ.டி.எம்., கார்டை பிறர் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.
* ஏ.டி.எம்., கார்டின் பின்புறம் கையெழுத்து போடுவதற்கான பகுதியில், அவசியம் கார்டின் உரிமையாளர் கையொப்பம் போட வேண்டும். இதனால், கார்டை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.
* ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கும்போது தவறுதலாக கள்ளநோட்டு வந்துவிட்டால், உடனே சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் கொடுத்துவிடுவது நல்லது.
நன்றி : தினமலர்


Friday, June 5, 2009

ஏ.டி.எம். உபயோகிப்போர் எண்ணிக்கை பன்மடங்கு உயர்வு

கடந்த ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர், இதர வங்கியின் ஏ.டி.எம்.,களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக கட்டணம் எதுவும் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதனையடுத்து, ஏ.டி.எம்.,ஐ பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்து வருகிறது. பெரிய நகரங்களில் மட்டுமின்றி நடுத்தர நகரங்களிலும் ஏ.டி.எம்.களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இது குறித்து ஆக்சிஸ் வங்கியின் மூத்த துணைத் தலைவர் ஆஸ்பி இன்ஜினியர் கூறும்போது, இதர வங்கிகளின் ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் எங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் மற்றும் எங்களது வங்கியின் ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் இதர வங்கியின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 40-50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். நாட்டில் அதிக ஏ.டி.எம்.களை கொண்டுள்ள வங்கிகளில் ஆக்சிஸ் வங்கியும் ஒன்று. இவ்வங்கிக்கு நாடு முழுவதும் 3,600 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. மிகச் சிறிய வங்கிகளுக்கிடையிலும் ஏ.டி.எம். பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தனலட்சுமி வங்கியைச் சேர்ந்த ஆனந்த குப்தா தெரிவித்தார். இவ்வாறு ஏ.டி.எம். பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதிதாக கிளை அலுவலகங்களை தொடங்க திட்டமிட்டிருந்த பல வங்கிகள் இது குறித்து மறு பரிசீலனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய வங்கியான பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத ஸ்டேட் வங்கி, அதிக எண்ணிக்கையில் ஏ.டி.எம். மையங்களை கொண்டிருப்பதிலும் முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கிக்கு தற்போது 12,000 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இவ்வாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகரித்து 25,000 ஆக உயர்த்த இவ்வங்கி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
நன்றி : தினமலர்


Friday, April 3, 2009

இந்தியா முழுவதும் பெரும்பாலான ஏ.டி.எம்.,கள் நேற்று வேலை செய்யவில்லை

யாரும் எந்த பேங்க் ஏ.டி.எம்.மிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும் சொன்னார்கள். எந்த ஏ.டி.எம்.மும் வேலை செய்யாமல் போய் விட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து, அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏ.டி.எம்.மில் தான் பணம் எடுக்க வேண்டும் என்பதில்லை. எந்த பேங்கின் ஏ.டி.எம்.என்றாலும் பரவாயில்லை. அதில் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு சேவை கட்டணம் எதுவும் கிடையாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. மாதத்தில் முதல் சில நாட்கள் வரை, பெரும்பாலானவர்கள் சம்பள பணத்தை எடுக்க ஏ.டி.எம்.,செல்வதால் அந்த நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் எந்த ஏ.டி.எம்.,மிலும் பணம் எடுக்கலாம் என்றதால் அவரவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஏ.டி.எம்.களில் கடந்த இரண்டு நாட்களாக கடும் கூட்டம் இருந்தது. ஆனால் பணம் எடுக்க சென்றவர்களில் பலர் பணம் எடுக்க முடியாமல்தான் திரும்பினர். அவர்களுக்கு பணத்திற்கு பதிலாக வந்தது ' டிரான்ஸாக்ஷன் டிக்லைன் ' என்ற மெசேஜ் தான். இந்தியாவில் அதிகம் ஏ.டி.எம்.களை வைத்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ பேங்க் களின் உயர் அதிகாரிகள் இதனை ஒத்துக்கொண்டனர். மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஏ.டி.எம்.களை பயன்படுத்தியதால், இன்டர் - பேங்க் டிரான்ஸாக்ஷனை கவனிக்கும் நேஷனல் பைனான்ஷியல் ஸ்விட்ச் ( என்.எஃப்.எஸ்.) இல் ஓவர்லோட் ஆகி விட்டது. அதனால்தான் ஏ.டி.எம்.கள் வேலை செய்யாமல் நின்று விட்டன என்றனர்.
நன்றி : தினமலர்


Tuesday, March 31, 2009

நாளை முதல் எந்த ஏ.டி.எம். மிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் : கட்டணம் கிடையாது

சாதாரன மக்களுக்கு பெரிதும் பயன்படும் திட்டம் ஒன்றை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இதன்படி நாளை முதல் ( ஏப்ரல் 1 ) எந்த வங்கியின் ஏ.டி.எம்.மிலும் நீங்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம். அது உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்காக கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி சொல்லி விட்டது. இதுவரை நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கி, அல்லது அதனுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் வங்கிகள் ஆகியவற்றின் ஏ.டி.எம்.களில் மட்டுமே கட்டணம் ஏதுமின்றி பணம் எடுத்துக்கொள்ள முடியும். இது தவிர வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவைக்கும் குறைந்தது ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இப்போது அது நீக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பை அடுத்து, பல வங்கிகள் தங்களின் ஏ.டி.எம்.நெட்வொர்க்கை அதிகரிக்க திட்டமிட்டிருக்கின்றன. ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், புதிதாக 60 ஏ.டி.எம்.களை திறக்க உள்ளதாக அதன் எக்ஸிகூடிவ் டைரக்டர் சின்ஹா தெரிவித்தார்.ஆனால் கிரிடிட் கார்டை கொண்டு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலோ, இந்தியாவுக்கு வெளியே இருக்கும் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினாலோ கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்