Monday, November 10, 2008

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : 571 புள்ளிகள் உயர்ந்தன

சர்வதேச அளவில் பங்கு சந்தையில் இன்று நிளவிய சாதகமான சூழ்நிலையாலும், சீன பொருளாதாரத்தை சிக்கலில் இருந்து காப்பாற்ற அந்நாட்டு அரசு 586 பில்லியன் டாலர்களை கொடுத்திருப்பதாலும், இந்திய பங்கு சந்தையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பயனடைந்தது மெட்டல் பங்குகள்தான். அதற்கு அடுத்ததாக பவர், கேப்பிடல் குட்ஸ், டெலிகாம், ஆயில், டெக்னாலஜி பங்குகள் உயர்ந்திருந்தன.காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 571.87 புள்ளிகள் ( 5.74 சதவீதம் ) உயர்ந்து 10,536.16 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 175.25 புள்ளிகள் ( 5.87 சதவீதம் ) உயர்ந்து 3,148.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று ஐரோப்பிய, ஆசிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் நல்ல முன்னேற்றமே காணப்பட்டது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை உயரவில்லை என்றால் மேலும் உற்பத்தி குறைக்கப்படும் : ஓபக்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் உயர்ந்திருக்கிறது. நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 2.80 டாலர் அதிகரித்து 63.84 டாலராகி இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 2.72 டாலர் அதிகரித்து 60.07 டாலராகி இருக்கிறது. இதற்கிடையில் கச்சா எண்ணெய்கான விலை, ஓபக் எதிர்பார்க்கும் 70 டாலரில் இருந்து 90 டாலருக்குள் வரவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் உற்பத்தியை குறைக்க வேண்டியதுதான் என்று ஓபக் அமைப்பின் தலைவர் சாகிப் கேலில் தெரிவித்திருக்கிறார். அல்ஜீரியாவின் எனர்ஜி அமைச்சராகவும் ஓபக்கின் தலைவராகவும் இருக்கும் கேலில், அல்ஜீரியா தலைநகர் அல்ஜியர்ஸில் நடந்த எனர்ஜி இன்டஸ்டிரி செமினாரில் பேசியபோது, நாங்கள் எதிர்பார்க்கும் 70 டாலரில் இருந்து 90 டாலருக்கு விலை வரவில்லை என்றால், இன்னொரு முறை எண்ணெய் உற்பத்தியை குறைக்கவேண்டியதுதான் என்றார். இருந்தாலும் இதில் எல்லா நாடுகளிடேயும் கருத்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் ; ஏனென்றால் ஒவ்வொரு நாட்டுக்கும் சொந்த விருப்பு வெறுப்பு இருக்கிறது என்றார். உலக எண்ணெய் ஏற்றுமதியில் 40 சதவீதத்தை கொண்டிருக்கும் ஓபக் நாடுகள், நவம்பரில் இருந்து எண்ணெய் உற்பத்தியில் நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் பேரல்களை குறைத்து. 27.3 மில்லியன் பேரல்களை மட்டும் உற்பத்தி செய்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்