Monday, February 9, 2009

'சத்யம்' 3ம் காலாண்டு அறிக்கை : விரைவில் வெளியிட நடவடிக்கை

சிக்கலில் சிக்குண்டுள்ள சத்யம் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை விரைவாக வெளியிட புதிய இயக்குனர்கள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. முறைகேடுகளால் சிக்கித் தவிக்கும் சத்யம் நிறுவனத்தை தூக்கி நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அரசு நியமித்த புதிய இயக்குனர்கள் குழு வந்த பிறகு சத்யம் நிறுவனத்தை சீர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், சத்யம் நிறுவனத்தை கையகப்படுத்த போட்டியிட்டன. இதன் காரணமாக, முடங்கிப்போன சத்யம் நிறுவன பங்குகள் சற்றே ஏறுமுகம் கண்டன. புதிய தலைமை செயல் அதிகாரியாக, சத்யம் நிறுவனத்தை சேர்ந்த ஒருவரான மூர்த்தி நியமிக்கப்பட் டார். இதன் காரணமாக மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், சத்யம் நிறுவனத்தின் கணக்குளை சீர்படுத்தி ஒழுங்கு நிலைக்கு கொண்டுவர குறைந்தபட்சம் ஆறு மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது. புதிய தணிக்கையாளர்களாக சென்னை பிரம்மையா கம்பெனி, நிறுவனத்தின் உள்தணிக்கையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், வெளிநாட்டு தணிக்கை நிறுவனங்களான கே.பி.எம்.ஜி., மற்றும் டெலொய் ட்டி நிறுவனமும், சத்யம் நிறுவனத்தின் கணக்குகளை மறுதணிக்கை செய்ய புதிய இயக்குனர்கள் குழுவால் நியமிக்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டிலிருந்து கணக்குகளை தணிக்கை செய்து, நிறுவனத்தின் கணக்குகள் பழைய நிலைக்கு கொண்டு வர புதிய இயக் குனர்கள் குழு முடுக்கிவிடப்பட்டுள் ளது. சத்யம் நிறுவனத்தின் இந்தாண்டுக்கான காலாண்டு அறிக்கையை விரைவில் வெளியிட இயக்குனர்கள் குழு விரும்புகிறது. வெளிநாட்டைச் ÷ச்ந்த இரு தணிக்கை நிறுவனங்களும் இதுவரை போர்டிடம் எவ்வித அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையில், மூன்றாம் காலாண்டு அறிக்கையை வெளியிடுவதற்கான காலத்தை நீடிக்க வேண் டும் என சத்யம் இயக்குனர்கள் குழு , செபியிடம் கோரிக்கை விடுத்துள் ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட்ட மாதத்திற்குள் காலாண்டு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பது செபி வகுத்துள்ள விதிமுறையாகும்.
நன்றி : தினமலர்


1,650 தற்காலிக பணியாளர்களை வேலையில் சேர்த்தது டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், 1,650 பேரை தற்காலிய பணியாளர்களாக சேர்த்திருக்கிறது. ஜாம்ஷெட்பூரில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் இவர்கள் வேலையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். டாடாவின் ஹெவி டூட்டி கமர்சியல் வாகனங்கள் ஜாம்ஷெட்பூரில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் அதன் விற்பனை கடுமையாக சரிந்து போனதை அடுத்து, அங்கு மூன்று தடவைகள் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அங்கு பணியாற்றி வந்த 700 க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். ஜனவரி மாதத்தில் அதன் வாகன விற்பனை நல்லபடியாக இருந்ததால் உற்பத்தி வழக்கம் போல் நடக்க துவங்கி விட்டது. எனவே பிப்ரவரி துவக்கத்தில் இருந்து நாங்கள் இதுவரை 1,650 பேரை தற்காலிய பணியாளர்களாக ஏடுத்திருக்கிறோம் என்றார் ஒரு டாடா மோட்டார்ஸ் அதிகாரி. இப்போது உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருக்கிறதா என்று அந்த அதிகாரியிடம் கேட்டபோது, உற்பத்தி வழக்கம்போல் நடக்க துவங்கி விட்டது என்றார்.
நன்றி : தினமலர்


ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்கு சந்தை ஏற்றத்தில் முடிந்திருக்கிறது. நிப்டி 2,900 புள்ளிகளுக்கு மேல் சென்று முடிந்திருக்கிறது. கடைசி அரை மணி நேரத்தில் சென்செக்ஸூம் 9,600 புள்ளிகளை நெருங்கி வந்து விட்டது. ஆயில் அண்ட் கேஸ், பேங்கிங், மெட்டல், பவர், கேப்பிடல் குட்ஸ், மற்றும் டெலிகாம் பங்குகள் பெருமளவில் இன்று வாங்கப்பட்டதால் குறியீட்டு எண் உயர்ந்தது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 283.03 புள்ளிகள் ( 3.04 சதவீதம் ) உயர்ந்து 9,583.89 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 76.80 புள்ளிகள் ( 2.7 சதவீதம் ) உயர்ந்து 2,919.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


காதலர் தினம் எதிரொலிரோஜா ஏற்றுமதி உயர்வு

காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி நெருங்குவதை தொடர்ந்து, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர் மாவட்டங்களிலிருந்து, ரோஜாப் பூக்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக (டிட்கோ) தலைவர் ராமசுந்தரம் கூறியிருப்பதாவது: டிட்கோ மற்றும் எம்.என்.ஏ., என்ற ரோஜா வளர்ப்பு தொண்டு நிறுவனம் இணைந்து ஓசூர் அருகே அமுதகொண்டபள்ளியில், 125 ஏக்கர் பரப்பில், ரோஜா வளர்ப்பு பண்ணையை அமைத்துள் ளோம். இங்கு கடந்த ஆண்டு ஒரு கோடியே 10 லட்சம் ரோஜா வளர்க்கப் பட்டது. இந்த ஆண்டு 3 கோடி ரோஜா வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்காக புதிய வகை ரோஜாக்களை அறிமுகப்படுத்துவோம். இந்த ஆண்டு ஐரோப்பாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ள 'தாஜ்மஹால்' ரோஜாவை அறிமுகப்படுத்துகிறோம். ஐரோப்பா மட்டுமல்லாமல், ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், யு.ஏ.இ., ஆகிய நாடுகளுக்கும் 'தாஜ்மஹால்' ரோஜா ஏற்றுமதி செய்யப் படவுள்ளது. லெபனான் நாட்டிலிருந்தும் 'தாஜ்மஹால்' ரோஜாவிற்கு ஆர்டர்கள் வந்துள்ளன. ஒரு தாஜ்மஹால் வகை ரோஜா 25 முதல் 28 ரூபாய் விலையில் விற்கப்படும். அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள கோகினூர் வகை ரோஜாவிற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ராமசுந்தரம் கூறியுள்ளார்.
நன்றி : தினமலர்


இன்னும் மூன்று ஆண்டுகளில் 10,000 பேருக்கு வேலை : எல் அண்ட் டி ஏற்பாடு

இஞ்சினியரிங் மற்றும் கட்டுமான தொழிலில் புகழ்பெற்ற நிறுவனமான எல் அண்ட் டி, அதன் வெவ்வேறு திட்டங்களில் பணியாற்ற இன்னும் மூன்று ஆண்டுகளில் 10,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது. ஹசிரா என்று இடத்தில் எல் அண்ட் டி அமைக்கும் இஞ்சினியரிங் உற்பத்தி தொழிற்சாலையில் ரூ.4,500 கோடியை முதலீடு செய்யவும், அங்கு பணியாற்ற 5,000 பேரை வேலைக்கு எடுக்கவும் அது முடிவு செய்திருக்கிறது. இது தவிர அதன் மோனோ ரயில் திட்டம், பவர் ரியாக்டர்ஸ் மற்றும் டர்பைன் போன்ற வெவ்வேறு தொழில்களுக்கு தேவையான வேலையாட்களை எடுக்கவும் முடிவு செய்திருக்கிறது. சுமார் 7 பில்லியன் மதிப்புள்ள எல் அண்ட் டி நிறுவனம், அதன் ஏற்றுமதி மூலம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ரூ.2,000 கோடி வருவாய் ஈட்டவும், அணுசக்தி மூலம் 700 மெ.வா.மின்சாரம் தயாரிக்கும் இரண்டு திட்டங்களையும் எடுத்து அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது. குஜராத்தில் இருக்கும் வதோதரா நகரை எல் அண்ட் டி யின் பவர், ஹைட்ரோகார்பன் மற்றும் இஞ்சினியரிங் தொழிலுக்கான மையமாக வைத்துக்கொள்ளவும் அது திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் ஏ.எம்.நாயக் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்