Sunday, August 10, 2008

ஸ்டீல் விலை உயராது: தயாரிப்பாளர்கள் உறுதி


'ஸ்டீல் விலையை உயர்த்த மாட்டோம்' என, தயாரிப்பாளர்கள் மத்திய அரசிடம் உறுதியளித்துள்ளனர்.நாட்டின் பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் 12.01 சதவீதத்தை எட்டியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு சம்மந்தப்பட்ட தயாரிப் பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.உலகிலேயே ஸ்டீல் உற்பத்திச் செய்யும் நாடுகளில் ஐந்தாவது பெரிய நாடாக இருப்பது இந்தியா. மிக அத்தியாவசியப் பொருளான ஸ்டீல் விலையை மூன்று மாதங்களுக்கு உயர்த்த மாட்டோம் என ஸ்டீல் தயாரிப் பாளர்கள் மத்திய அரசுக்கு உறுதியளித்துள்ளனர். ஏற்கனவே ஸ்டீல் தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்த கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது.இதையடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக ஸ்டீல் அமைச்சகச் செயலர் பிரமோத் ரஸ்தோகி தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பயனாகத் தற்போதுள்ள விலையையே கடைப்பிடிப்பதாகவும், ஏற்றுமதியை நிறுத்தி வைப்பதாகவும் உறுதியளித்தனர். எவ்வளவு காலம் வரை இது அமலில் இருக்கும் என்பது பற்றி அறிவிக்கவில்லை.

நன்றி : தினமலர்