Sunday, August 3, 2008

மெல்ல மெல்ல எழும்புகிறது பங்குச் சந்தை



வியாழனும், வெள்ளியும் சந்தை மேலேயும், கீழேயும் ஏறி, இறங்கிக் கொண்டே இருந்தாலும் முடிவாக, இரு தினங்களிலும் மேலே சென்றே முடிவடைந்தது. வார முடிவில் சந்தைகள் மேலே சென்று முடிவடைந்தது, சென்டிமெண்டாக முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்தது. வியாழனன்று 69 புள்ளிகளும், வெள்ளியன்று 300 புள்ளிகளும் மேலே சென்றது.பணவீக்கம் சிறிது கூடியிருந்தது, முக்கியமான காரணம் என்று பார்க்கப் போனால், குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை தான். ஜூலை 11ம் தேதி அன்று பேரலுக்கு 147 டாலர் அளவில் இருந்தது, வியாழனன்று பேரலுக்கு 124 டாலர் அளவு வந்திருந்தது. இது தவிர, வெள்ளியன்று சர்வ தேச அணுசக்தி ஏஜென்சி கூட்டத்தின் முடிவு, இந்தியாவிற்கு சாதகமாக இருக்கலாம் என்ற யூகங்கள் சந்தையை பலப்படுத்தின. வெள்ளியன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தை 300 புள்ளிகள் கூடி 14,656 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 81 புள்ளிகள் கூடி 4,413 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
வியாழனன்று வெளியிடப்பட்ட தகவல்கள் படி, பணவீக்கம் இந்த வாரம் 11.98 சதவீதமாக இருந்தது. இது சென்ற வார அளவான 11.89ஐ விட சிறிது கூடுதல். கடன்களுக்கான வட்டி விகிதங்களை கூட்டக் கூடும் என்று பலரும் எதிர்பார்த்திருந் தனர். பஞ்சாப் நேஷனல் வங்கி, கடன்களுக் கான வட்டி விகிதத்தை 1 சதவீதம் கூட்டியதை தொடர்ந்து, பல வங்கிகளும் தங்களது கடன் களுக்கான வட்டிகளையும், டெபாசிட்களுக்கான வட்டிகளையும் கூட்டியுள்ளன. சிறிது காலத்திற்கு முன், வட்டி விகிதங்கள் மிகவும் குறைவாக இருந்த போது, நீண்ட கால வைப்பு நிதிகளில் பணம் போட்டுள்ளவர்கள், அந்த டெபாசிட்களை குளோஸ் செய்து விட்டு புதிதாகப் போடலாம். இது, சிறிது கூடுதல் வட்டி கிடைக்க ஒரு வழி. விலைவாசிகள் ஏறி வரும் நேரத்தில், சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
மருந்து கம்பெனிகளின் காலம் இது: டாய்ச்சி-ரான்பாக்சியைத் தொடர்ந்து, டோரண்ட் பார்மா என்ற இந்திய மருந்து கம்பெனி மீது, ஜப்பானின் டகேதா கண் வைத்துள்ளது. இது மருந்து கம்பெனிகளின் வசந்த காலம் எனலாம். இந்த வருடம் முழுவதும் பங்குச் சந்தை கீழேயே சென்று கொண்டிருந்தாலும், இந்திய மருந்துக் கம்பெனிகளில் பல சிறப்பாகவே பரிணமித்துக் கொண்டிருக்கின்றன. இது ஒரு ஆறுதலான விஷயம். ஏனெனில், சென்ற ஆண்டு முழுவதும் இந்திய மருந்துக் கம்பெனிகள் சந்தையில் பரிணமிக்க முடியவில்லை.
புதிய வெளியீடுகள்: வரப்போகும் புதிய விதிகளின் படி, புதிய வெளியீடுகளுக்கு அப்ளை செய்யும் போதே பணமும் சேர்த்து அனுப்ப வேண்டாம். உங்களுடைய கணக்கில் நீங்கள் அப்ளை செய்யும் பணத்தை வைத்திருந்து, அதை உங்கள் வங்கி நீங்கள் எடுக்க முடியாத படி வைத்திருந்தால் போதும்.
உங்களுக்கு பங்குகள் அலாட் ஆகும் பட் சத்தில், எவ்வளவு அலாட் ஆகிறதோ அவ் வளவு பணம் மட்டும் அந்த வெளியீட்டு கம் பெனி, உங்கள் வங்கியிலிருந்து பெற்றுக் கொள்ளும். மீதமுள்ள பணத்தை நீங்கள் உடனடியாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பணம் உங்கள் கணக்கிலேயே இருப் பதால், வட்டி நஷ்டங்கள் ஏற்படாது. புதிய வெளியீடுகளில் நிறைய பேர் முதலீடு இனி வரலாம். அடுத்த வாரம் அஸ்டிரல் கோக் என்ற கம்பெனி, தனது புதிய வெளியீட்டை கொண்டு வருகிறது. இது, ரூ.164 முதல் ரூ.196க்குள் இருக்கும். ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடத்தகுந்த வெளியீடு.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: கம்பெனிகளின் காலாண்டு முடிவுகளும் வந்து முடியும் சமயம் நெருங்கி விட்டது. கச்சா எண்ணெய் விலையும் ஒரு மாதிரி நிலையாக இருக்கிறது. இவைகளை வைத்துப் பார்க்கும் போது, வரும் நாட்கள் நன்றாகவே இருக்க வேண்டும். மியூச்சுவல் பண்டுகளிடம் நிறைய கையிருப்பு பணம் இருக்கிறது. மேலும், பல புதிய திட் டங்களையும் அறிவிக்க உள்ளது. பொதுத் துறை கம்பெனிகளில் பங்கு விற்பனை நடக்க வாய்ப்புகள் உண்டு. மத்திய அரசு இது சம்பந்தமாக ஆலோசனைகள் கேட்டு, பொதுத்துறை வங்கித் தலைவர்களுக்கும், இந்தியன் வங்கிகள் அசோஷியேஷனுக்கும் கடிதங்கள் எழுதியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அப்படி பங்கு விற்பனை நடந்தால், அது சந்தை மேலே செல்ல வாய்ப்பாக இருக்கும். அதே சமயம் வெளியீடுகள் வரும் போது, முதலீட் டாளர்கள் அதில் முதலீடு செய்ய ஏற்கனவே தங்களிடம் உள்ள பங்குகளை விற்க முற்
படுவர். அதனால், சந்தை கீழே இறங்கவும் வாய்ப்புகள் உண்டு. முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் பவர் வெளியீட்டை இன்னும் மறந்திருக்கமாட்டர் என நம்புவோம். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புள்ள சந்தை இது.


நன்றி : தினமலர்