Thursday, December 3, 2009

5,000 பேரை பணியில் சேர்க்கிறது விப்ரோ!

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ வரும் (2009-2010) நிதியாண்டில் 5000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது. இதற்காக கல்லூரிகளில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த முடிவு செய்துள்ளது விப்ரோ. ஏற்கெனவே 8500 பேரை பணியில் நியமிக்கும் வேலை நடந்து கொண்டிருப்பதாகவும், கூடுதலாக மேலும் 5000 பேர் இப்போது தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் விப்ரோ நிறுவனத்தின் இணை சிஇஓ (ஐடி) கிரிஷ் பரஞ்பே தெரிவித்தார். 'நாங்கள் ஏற்கெனவே உறுதியளித்தபடி, குறிப்பிட்ட அளவு பணியிடங்களை நிரப்பி வருகிறோம். சொன்னபடி இளைஞர்களுக்கு அதிகளவு வாய்ப்புகளை தருகிறோம். அதுமட்டுமல்ல, பொறியியல் கல்லூரிகளில் மட்டும் வேலைக்கு ஆளெடுக்காமல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பிஎஸ்ஸி போன்ற படிப்புகளை முடித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு தருகிறோம். குறிப்பாக அறிவிக்கப்படும் பணியிடங்களுக்கு 60 சதவிகிதம் அனுபவமற்ற புதிய இளைஞர்களுக்கே வாய்ப்புத் தருகிறோம்' என்றார் கிரிஷ் பரஞ்பே. அடுத்த நிதியாண்டில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றும், மேலும் கூடுதலான பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


அற்​றைத் திங்​கள் அந்த நள்​ளி​ர​வில்...

{யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தில் (இப்​போது டோவ் கெமிக்​கல்ஸ்)​ துருப்​பி​டித்​துக் கிடக்​கும் ஒரு கொள்​க​லன்.}

1984 டிசம்​பர் 2 ம் தேதி இரவு 10 மணி.

​மத்​தி​யப் பிர​தேச மாநி​லம்,​ போபால் நக​ரில் உள்ள யூனி​யன் கார்​பைட் நிறு​வ​னத்​தின் கொள்​க​லன் 610-ல் தண்​ணீர் கலக்​கி​றது. அந்த டேங்க்​கில் இருந்த 42 டன் மீதைல் ஐசோ​ச​ய​னைட்,​ இந்​தத் தண்​ணீர் பட்​ட​தும் வேதி​யி​யல் மாற்​றம் அடை​கி​றது. 200 டிகிரி செல்​சி​யஸ் அள​வுக்கு வெப்​பம் உயர்​கி​றது. அழுத்​தம் தாங்​கா​மல் கொள்​க​ல​னின் பாது​காப்பு மூடி​கள் திறந்து கொள்​கின்​றன. நள்​ளி​ர​வில் விஷ​வாயு வெளி​யே​றிப் பர​வு​கி​றது...போபால் நகர் முழு​வ​தும்!​ ​

​அப்​போது அந்​ந​க​ரின் மக்​கள் தொகை 5.2 லட்​சம். இவர்​க​ளில் 2 லட்​சம் பேர் சிறு​வர்​கள். 3000 பேர் கரு​வுற்ற தாய்​மார்​கள். ​

​டிசம்​பர் 3-ம் தேதி காலை போபால் நகர மக்​கள் அனை​வ​ரும் கண்​ணெ​ரிச்​சல்,​ மூச்​ச​டைப்​பு​டன் கண்​வி​ழிக்​கின்​ற​னர். அன்​றைய ஒரு நாளில் மட்​டும் சுமார் 4000 பேர் இறந்​த​னர் என்று அதி​கா​ரப்​பூர்​வ​மாக அறி​விக்​கப்​பட்​டது. உண்​மை​யில்,​ இறந்​த​வர்​க​ளின் எண்​ணிக்கை இரு மடங்கு என்று சொல்​லப்​ப​டு​கி​றது. அடுத்த 72 மணி நேரத்​தில் இறந்​த​வர்​கள் சுமார் 10,000 பேர். இதன் பாதிப்​பால் மெல்​லச் செத்​த​வர்​கள் 25,000 பேர். ​

​இன்​ன​மும் சாகா​மல் இருக்​கும் இரண்டு விஷ​யங்​க​ளில் முத​லா​வது,​ போபால் மாவட்ட நீதி​மன்​றத்​தில் நடை​பெ​றும்,​ யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தின் மீதான வழக்கு ஒன்​று​தான். இரண்​டா​வ​தாக,​ யூனி​யன் கார்​பைடு விட்​டுச்​சென்ற 390 டன் நச்சு வேதிப்​பொ​ருள்​கள் இன்​ன​மும் போபா​லின் நிலத்​தடி நீரைக் கெடுத்​துக் கொண்​டி​ருக்​கி​றது.

​பரா​ம​ரிப்பு இல்​லா​த​து​தான் விபத்​துக்​குக் கார​ணம் என்று தெளி​வாக ஆய்வு அறிக்​கை​கள் குறிப்​பிட்​டன. பரா​ம​ரிப்​புச் செல​வு​களை குறைப்​ப​தற்​காக கொள்​க​லன் 610க்கு அளிக்க வேண்​டிய குளிர்​ப​தன வச​தியை விலக்​கிக் கொள்​ளா​மல் இருந்​தி​ருந்​தால் இந்த விபத்தே நடந்​தி​ருக்​காது என்று ஆய்வு முடி​வு​கள் தெரி​விக்​கப்​பட்​டன. ஆனா​லும் யூனி​யன் கார்​பைடு இதை ஏற்​க​வில்லை. ஏதோ ஒரு ஊழி​ய​ரின் சதி​வேலை கார​ண​மாக,​ கொள்​க​லன் 610-ல் தண்​ணீர் கலக்​கப்​பட்​டுள்​ளது என்ற வாதத்தை மட்​டுமே முன்​வைத்​தது.

​இந்த வாதத்​தை​யும் உப்​பு​சப்பு இல்​லா​மல் செய்து உண்மை மறைக்​கப்​பட்​டது. 42 டன் மீதைல் ஐசோ​ச​ய​னைடை ஒரே கொள்​க​ல​னில் வைத்​தி​ருந்​தது சட்​டப்​ப​டிக் குற்​றம்,​ இந்த அள​வுக்​கான மூலப்​பொ​ருளை 200 கலன்​க​ளில் வைத்​தி​ருந்​தி​ருக்க வேண்​டும் என்று ஆய்வு நடத்​திய வல்​லு​நர் குழு குறை​கூ​றி​யுள்​ளது என்​பதை அரசு பெரி​தாக நினைக்​க​வில்லை.

​இறந்​த​வர் குடும்​பத்​துக்கு ரூ.62 ஆயி​ரம்,​ பார்வை இழப்பு போன்ற நிரந்​தர ஊன​முற்​றோ​ருக்கு ரூ.25000 இழப்​பீடு வழங்​கி​ய​தோடு சரி. மொத்​தம் ரூ. 1500 கோடி இழப்​பீ​டு​க​ளாக கொடுக்​கப்​பட்​டுள்​ளது. அதா​வது,​ இந்​திய அரசு 3 பில்​லி​யன் டாலர் இழப்​பீடு கேட்டு வழக்கு தொடுத்​தது. ஆனால் கிடைத்​ததோ அதில் 15 விழுக்​கா​டு​தான்.

​இத்​த​னைப் பேர் மர​ணத்​துக்கு கார​ண​மாக இருந்த யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தின் தலை​மைச் செயல் அலு​வ​லர் வாரன் ஆன்​டர்​சன் இந்த வழக்​கில் முதல் குற்​ற​வா​ளி​யாக பதிவு செய்​யப்​பட்​டார். ஆனால் அவர்,​ நீதி​மன்ற விசா​ர​ணைக்கு அழைக்​கப்​ப​டும்​போ​தெல்​லாம் வரு​வேன் என்ற உறு​தி​மொ​ழி​யு​டன் அமெ​ரிக்கா சென்​ற​வர் திரும்ப வரவே இல்லை. நீதி​மன்​றம் அழைத்​தா​லும் வர​வில்லை. அதன் பிறகே,​ 17 ஆண்​டு​கள் கழித்து அவரை மறைந்​து​வா​ழும் குற்​ற​வா​ளி​யாக அறி​வித்து அவரை ஒப்​ப​டைக்க வேண்​டும் என்று அமெ​ரிக்​கா​வி​டம் இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டது. இந்​திய அரசு சொல்​லும் கார​ணங்​க​ளுக்​காக நாங்​கள் எமது குடி​ம​கனை உங்​க​ளி​டம் ஒப்​ப​டைக்க இன்​னின்ன சட்​டங்​கள் இடம் தர​வில்லை என்று அமெ​ரிக்கா சொல்​லி​விட்​டது.

​இப்​போது யூனி​யன் கார்​பைடு கம்​பனி என்றே ஒன்று இல்லை என்று ஆகி​விட்​டது. அதா​வது அந்த நிறு​வ​னத்தை,​ ஏற்​கெ​னவே பங்​கு​தா​ரர் என்று சொல்​லிக்​கொண்டு,​ டோவ் கெமிக்​கல் நிறு​வ​னம் முழு​மை​யாக வாங்​கி​விட்​டது. இப்​போது யார் மீது வழக்கு தொடுப்​பது. கீழே தள்​ளி​ய​தோடு குழி​யும் பறித்​த​தாம் குதிரை என்​கிற கதை​யாக,​ இந்​தி​யா​வில் ஏற்​பட்ட வேலை​யி​ழப்பு நாள்​க​ளுக்கு ரூ.10,000 டாலர் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று வழக்கு போடும் அள​வுக்கு தைரி​யம் வந்​து​விட்​டது. இந்த டோவ் கெமிக்​கல் என்​பதே ஒரு பொய்​யான ஒன்று என்​றும்,​ யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்தை காப்​பாற்ற இப்​ப​டி​யான பெயர் மாற்​றம் உரி​மை​யா​ளர் மாற்​றம் என்று நடிக்​கி​றார்​கள் என்​றும் சொல்​லப்​ப​டு​கி​றது.

​போபால் நீதி​மன்​றம் கடந்த ஜூலை மாதம்,​ ஆன்​டர்​ச​னைக் கைது செய்​வ​தற்​கான புதிய ஆணை​யைப் பிறப்​பித்​துள்​ளது. மறு​ப​டி​யும் இந்​திய அரசு இதனை அமெ​ரிக்​கா​வுக்​குத் தெரி​வித்து,​ அவர்​கள் சட்​டத்​துக்கு பொருந்தி வந்​தால்,​ ஆன்​டர்​சனை அனுப்பி வைப்​பார்​கள். ​ஆனால்,​ இப்​போது இந்​தியா மீது அமெ​ரிக்கா பொழி​யும் பாச​ம​ழை​யில் இந்த மாதி​ரி​யான முகம் சுளிக்க வைக்​கும் பிரச்​னை​களை முன்​வைக்​கப்​ப​டுமா என்​ப​தும் சந்​தே​கம்​தான்.

​சரி,​ ஆன்​டர்​சன் ஒப்​ப​டைக்​கப்​பட்​டா​லும் என்ன நீதி கிடைத்​து​வி​டும்?​ ​

​"கட்​டின புரு​ஷன் சரி​யில்​லா​தப்ப,​ கண்​ட​வ​னை​யெல்​லாம் குத்​தம் சொல்லி என்ன ​ஆகப்​போ​வது' என்று அழுத பெண்​கள் மூக்​கைச் சிந்​து​வ​தைப் போலத்​தான் நாமும் சமா​தா​னம் அடைய வேண்​டும் போல. வேறு வழி!​
கட்டுரையாளர் : இரா. சோம​சுந்​த​ரம்
நன்றி : தினமணி


தேவை சாதனைச் சிந்தனை!

சமீபத்தில் நோபல் பரிசு பெற்றிருக்கும் வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானி முனைவர் ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் சில கருத்துகள் சிந்தனைக்குரியவை மட்டுமல்ல, பாராட்டுக்கும் உரியவை. லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் எம்.ஆர்.சி. பரிசோதனைச் சாலையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முனைவர் வெ. ராமகிருஷ்ணன் இன்னும் தனது இந்தியத் தொடர்புகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுடன் இந்தியாவின் வருங்காலம் பற்றிய சிந்தனைகளையும் சுமந்து கொண்டிருப்பது என்பதே நெகிழ வைக்கும் விஷயங்கள்தான்.

வெளிநாட்டில் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொண்டு விட்டாலே, தனது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமே இந்தியாவிலிருந்து வெளியேறி விட்டதுதான் என்பது, வாழ்வில் வெற்றி பெற்றுவிட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பலரும் கூறும் குற்றச்சாட்டு. இந்தியாவின் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகள் திறமைக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்றும், லஞ்சமும், ஊழலும், சிபாரிசும்தான் வளர்ச்சிக்கு அளவுகோலே தவிர திறமைக்கு இந்தியாவில் இடமில்லை என்றும் பல வெளிநாடுவாழ் இந்தியர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களில் இருந்து மாறுபட்டு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் இந்தியாவின் வருங்காலம் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் நம்பிக்கையூட்டும் தகவல்கள் நமக்கே வியப்பாக இருக்கிறது.

சுதந்திரத்துக்கு முன்பு உலக அரங்கில் புகழ்பெற்ற கணிதமேதை ராமானுஜம், விஞ்ஞானி சி.வி. ராமன் போன்றவர்களைப்போல தற்போது பல மேதைகள் உருவாகாததன் காரணம் பற்றிக் கேட்டபோது, அதற்கு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் பதில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ""கடின உழைப்பும் லட்சிய வெறியும் இருந்தால் உலகம் போற்றும் மேதைகளாகவும், தலைசிறந்த விஞ்ஞானிகளாகவும் உருவாகக்கூடிய திறமைசாலிகள் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது இருந்தாலும், அவர்கள் கணினி, பொறியியல், நிதி நிர்வாகம் போன்ற படிப்புகளுடன் பன்னாட்டு நிறுவனங்களில் சில லட்ச ரூபாய் அல்லது டாலர்கள் சம்பாதிப்பதுடன் திருப்தி அடைந்து விடுவதுதான் இந்தியாவின் துரதிர்ஷ்டம்'' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் அவர்.

மேலும் கூறுகையில், முந்தைய நாள்களைப்போல அல்லாமல் உலக ஆராய்ச்சிகள் அனைத்துமே இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதிகள் இருப்பதால், வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவில் இருந்தபடியே ஆராய்ச்சிகளைத் தொடர முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். தன்னுடைய துறையிலேயேகூட பிரகாசமான எதிர்காலமுள்ள இளம் இந்திய விஞ்ஞானிகள் பலரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணைய தளங்களிலும், பல ஆய்வரங்கங்களிலும்தான் பார்த்து வியப்பதாகவும் கூறியிருக்கிறார் விஞ்ஞானி ராமகிருஷ்ணன்.

இந்தியாவின் மிகப்பெரிய குறைபாடு, போதிய ஆராய்ச்சி நிறுவனங்கள் இல்லாமை என்பதை ஒத்துக் கொள்ளும் அவர், எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி சாலைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக, மருத்துவம், பொறியியல், நிர்வாக இயல், நிதி நிர்வாகம், தகவல் தொழில் நுட்பம் போன்ற படிப்புகளுக்குப் பெற்றோரும், மாணவர்களும் அரசும் முன்னுரிமை கொடுத்து வருவதன் விளைவு, அடிப்படை விஞ்ஞானப் பிரிவுகளான ரசாயனம், பௌதீகம், விலங்கியல், தாவர இயல் போன்றவைகளும், அவற்றின் சிறப்பு இயல்களும் போதிய வரவேற்பு இல்லாமல் இருக்கின்றன. இதன் தொடர்விளைவாக, பெரிய ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இந்தியாவில் உருவாவது கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது.

அரசும் சரி, விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காகத் தரப்படும் முக்கியத்துவத்தையும், நிதி ஒதுக்கீடையும் படிப்படியாகக் குறைத்து வருகிறது. மேலைநாடுகளின் ஆராய்ச்சிகளை நாம் பயன்படுத்திக் கொண்டால் போதுமானது என்றும், உயர்மட்ட அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காக அரசு நிதியாதாரம் அளிப்பது தேவை இல்லாதது என்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு சிந்தனை ஏற்பட்டிருக்கிறது. ஒருசில தனியார் நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும்தான் இன்னும் முனைப்பாக அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கான நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.

படிப்பு முடிவதற்குள், கல்லூரி வளாகத்திலேயே நேர்முகத் தேர்வு நடந்து வேலை கிடைத்தால் போதும் என்று மாணவர்களும் நினைக்கிறார்கள். பல லட்சம் ரூபாய் கட்டணம் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோரும் நினைக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் வசதியாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் பெற்றோர்கள் அவர்கள் சாதனையாளர்களாக உலக அரங்கில் புகழ் பெற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரியவில்லை. இதன் விளைவு, முன் எப்போதையும்விடப் புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் நமது இளைஞர்கள் இருந்தும் நாம் சாதனையாளர்களை உருவாக்காமல் இருக்கும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அப்துல் கலாம், அமர்த்தியா சென், முனைவர் "வெங்கி' ராமகிருஷ்ணன் போன்ற பல உலக சாதனையாளர்களும் பௌதீகமும், பொருளாதாரமும், ரசாயனமும் படித்தவர்கள்தான் என்பதையும், பணம் சம்பாதிப்பதைவிடக் காலாகாலம் நிலைத்து நிற்கும் சாதனை படைப்பது முக்கியம் என்பதையும் நமது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு அரசு பெரிய அளவில் தொடர்ந்து நிதி உதவி அளித்து ஊக்கமும் ஆக்கமும் தந்தாக வேண்டும். அடிப்படை விஞ்ஞானத்துக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் கல்விக் கொள்கையை அமைத்து உயர் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளித்தால் மட்டுமே இது சாத்தியம். நோபல் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதைப் போல, உலக அரங்கில் தலைசிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கும் வாய்ப்பும் வசதியும் இந்தியாவுக்கு இருக்கிறது. அதை நாம் தெரிந்தே உதாசீனப்படுத்துகிறோமே, ஏன்?
நன்றி : தினமணி

துபாய் புயலைத் தாண்டி சந்தை உயர காரணம் என்ன?

துபாய் சோதனைகளால் சந்தை கடந்த வியாழனும், வெள்ளியும் சரிந்தது. பின் எப்படி திங்களன்று ஜம்மென்று மேலே சென்றது என்று பலருக்கு வியப்பாக இருக்கலாம். திங்களன்று இந்தியாவின் மொத்த வளர்ச்சி சதவீதம் பற்றிய தகவல்கள் வெளியாயின. அது, எதிர்பார்ப்புக்கு மேல் நன்றாக இருந்ததால், சந்தைகள் மேலே சென்றன.
செப்., மாத காலாண்டு முடிவில் இந்தியாவின் மொத்த வளர்ச்சி 7.9 சதவீதமானதால், எட்டாவது அதிசயம் என்ற அளவிற்கு பேசப்பட்டது. அது, துபாயின் புயலையும் தாண்டி சந்தையை தூக்கி நிறுத்தியது.

முதல் காலாண்டில் 5.8 சதவீதம், இரண்டாவது காலாண்டில் 6.1 சதவீதம், மூன்றாவது காலாண்டில் 7.9 சதவீதம் என்று சென்று கொண்டிருப்பதால் இந்த ஆண்டு முடிவில் சராசரியாக 7 சதவீதத்தை தொடமுடியும் என்று, மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். திங்களைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் சந்தை முன்னேற்றத்திலேயே தான் இருந்தது. ரிசர்வ் வங்கி, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த சி.ஆர்.ஆர்., சதவீதத்தை கூட்டலாம் (வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்க வேண்டிய பண சதவீதத்தை) அல்லது வட்டி விகிதங்களைக் கூட்டலாம். இது, வங்கிகளிடம் உள்ள உபரிப்பணத்தை குறைக்க உதவும். வங்கி டிபாசிட் பணத்திற்கு, வரும் காலத்தில் சிறிது வட்டி கூடலாம். நேற்று முன்தினம் மும்பை பங்குச் சந்தை 272 புள்ளிகள் மேல் சென்றது.

நேற்றும் சந்தை முதலீட்டாளர்களுக்கு சாதகமாகத்தான் இருந்தது. ஆனால், மதியத்திற்கு மேல், லாபம் அனைத்தையும் இழந்து முடிந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 28 புள்ளிகள் குறைந்து 17,169 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 5,123 புள்ளிகளுடனும் முடிந்தது.

அக்டோபர் ஏற்றுமதி: அக்டோபர் ஏற்றுமதி கடந்தாண்டு இதே சமயம் ஏற்றுமதியை விட 6.6 சதவீதம் குறைவாக உள்ளது. வரும் ஜனவரியிலிருந்து ஏற்றுமதி கூடும் வாய்ப்புகள் உள்ளன. பல கம்பெனிகளுக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் வருவது கூடியுள்ளது.


விவசாயத்துறை வளர்ச்சி? மொத்த வளர்ச்சி பல துறைகளிலும் நன்றாக இருந்தாலும், விவசாயத் துறையில் அவ்வளவு சிறப்பாக இல்லாதது ஒரு குறைதான். அது சரிசெய்யப்பட வேண்டும். இல்லையெனில், அது நீண்டகாலத்தில் இந்தியாவைப் பாதிக்கும். மேலும், உணவுப் பொருட்களின் விலை இன்னும் கூடும் அபாயம் உள்ளது. அது எல்லாவற்றையும் பாதிக்கும், சந்தைகள் உட்பட. பல வெளிநாட்டு கம்பெனிகள், அடுத்த காலாண்டு எப்படி இருக்கும் என்று பார்த்து விட்டு முதலீடு செய்யலாம் என்று தான் நினைக்கின்றன.


'துபாய் வேர்ல்ட்': 'துபாய் வேர்ல்ட்' அரசு கம்பெனியல்ல. தனிக் கம்பெனி என்று துபாய் அரசு அறிக்கை விடுத்துள்ளது. இது எந்த அளவு அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரியவில்லை.

பக்ரீத் விடுமுறை இன்னும் தொடர்வதால், அடுத்த வாரத் துவக்கத்தில் தான் தெளிவான ஒரு நிலை கிடைக்கும்.


துபாய் பங்குச் சந்தைகள்: அனைவருக்கும் மிகுந்த ஆர்வம் இருக்கும் துபாயில் சந்தை எப்படி பரிணமித்தது என்று. செய்திகள் கேட்ட பிறகு சந்தை ஆரம்பித்த முதல் நாளில் துபாய் சந்தை 7 சதவீதமும், அபுதாபி சந்தை 8 சதவீதமும் குறைந்தன. நக்கீல் பாண்ட்கள் தனது மதிப்பில் 50 சதவீதத்திற்கும் மேலாக சமீபத்தில் இழந்திருக்கின்றன. அதாவது, 100 டாலர்களுக்கு அந்த பாண்டை வாங்கியிருந்தால் அதன் விலை தற்போது 50 டாலர்கள் தான் கிடைக்கும். அவ்வளவு குறைந்திருக்கிறது.


வரும் நாட்கள் எப்படி இருக்கும்? துபாய் சோதனைகளையும் தாண்டி சந்தை சாதனை படைத்து வருகிறது. இப்படி சாதனைகள் படைக்க மொத்த வளர்ச்சி தான் முக்கியக் காரணம். துபாயில் இன்னும் பெரிய அளவு சோதனைகள் இல்லாவிடில் சந்தைகள் இதே நிலையிலேயே இருக்கும். பெரிய ஏற்ற, இறக்கங்கள் இருக்காது.

- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்