Thursday, December 3, 2009

அற்​றைத் திங்​கள் அந்த நள்​ளி​ர​வில்...

{யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தில் (இப்​போது டோவ் கெமிக்​கல்ஸ்)​ துருப்​பி​டித்​துக் கிடக்​கும் ஒரு கொள்​க​லன்.}

1984 டிசம்​பர் 2 ம் தேதி இரவு 10 மணி.

​மத்​தி​யப் பிர​தேச மாநி​லம்,​ போபால் நக​ரில் உள்ள யூனி​யன் கார்​பைட் நிறு​வ​னத்​தின் கொள்​க​லன் 610-ல் தண்​ணீர் கலக்​கி​றது. அந்த டேங்க்​கில் இருந்த 42 டன் மீதைல் ஐசோ​ச​ய​னைட்,​ இந்​தத் தண்​ணீர் பட்​ட​தும் வேதி​யி​யல் மாற்​றம் அடை​கி​றது. 200 டிகிரி செல்​சி​யஸ் அள​வுக்கு வெப்​பம் உயர்​கி​றது. அழுத்​தம் தாங்​கா​மல் கொள்​க​ல​னின் பாது​காப்பு மூடி​கள் திறந்து கொள்​கின்​றன. நள்​ளி​ர​வில் விஷ​வாயு வெளி​யே​றிப் பர​வு​கி​றது...போபால் நகர் முழு​வ​தும்!​ ​

​அப்​போது அந்​ந​க​ரின் மக்​கள் தொகை 5.2 லட்​சம். இவர்​க​ளில் 2 லட்​சம் பேர் சிறு​வர்​கள். 3000 பேர் கரு​வுற்ற தாய்​மார்​கள். ​

​டிசம்​பர் 3-ம் தேதி காலை போபால் நகர மக்​கள் அனை​வ​ரும் கண்​ணெ​ரிச்​சல்,​ மூச்​ச​டைப்​பு​டன் கண்​வி​ழிக்​கின்​ற​னர். அன்​றைய ஒரு நாளில் மட்​டும் சுமார் 4000 பேர் இறந்​த​னர் என்று அதி​கா​ரப்​பூர்​வ​மாக அறி​விக்​கப்​பட்​டது. உண்​மை​யில்,​ இறந்​த​வர்​க​ளின் எண்​ணிக்கை இரு மடங்கு என்று சொல்​லப்​ப​டு​கி​றது. அடுத்த 72 மணி நேரத்​தில் இறந்​த​வர்​கள் சுமார் 10,000 பேர். இதன் பாதிப்​பால் மெல்​லச் செத்​த​வர்​கள் 25,000 பேர். ​

​இன்​ன​மும் சாகா​மல் இருக்​கும் இரண்டு விஷ​யங்​க​ளில் முத​லா​வது,​ போபால் மாவட்ட நீதி​மன்​றத்​தில் நடை​பெ​றும்,​ யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தின் மீதான வழக்கு ஒன்​று​தான். இரண்​டா​வ​தாக,​ யூனி​யன் கார்​பைடு விட்​டுச்​சென்ற 390 டன் நச்சு வேதிப்​பொ​ருள்​கள் இன்​ன​மும் போபா​லின் நிலத்​தடி நீரைக் கெடுத்​துக் கொண்​டி​ருக்​கி​றது.

​பரா​ம​ரிப்பு இல்​லா​த​து​தான் விபத்​துக்​குக் கார​ணம் என்று தெளி​வாக ஆய்வு அறிக்​கை​கள் குறிப்​பிட்​டன. பரா​ம​ரிப்​புச் செல​வு​களை குறைப்​ப​தற்​காக கொள்​க​லன் 610க்கு அளிக்க வேண்​டிய குளிர்​ப​தன வச​தியை விலக்​கிக் கொள்​ளா​மல் இருந்​தி​ருந்​தால் இந்த விபத்தே நடந்​தி​ருக்​காது என்று ஆய்வு முடி​வு​கள் தெரி​விக்​கப்​பட்​டன. ஆனா​லும் யூனி​யன் கார்​பைடு இதை ஏற்​க​வில்லை. ஏதோ ஒரு ஊழி​ய​ரின் சதி​வேலை கார​ண​மாக,​ கொள்​க​லன் 610-ல் தண்​ணீர் கலக்​கப்​பட்​டுள்​ளது என்ற வாதத்தை மட்​டுமே முன்​வைத்​தது.

​இந்த வாதத்​தை​யும் உப்​பு​சப்பு இல்​லா​மல் செய்து உண்மை மறைக்​கப்​பட்​டது. 42 டன் மீதைல் ஐசோ​ச​ய​னைடை ஒரே கொள்​க​ல​னில் வைத்​தி​ருந்​தது சட்​டப்​ப​டிக் குற்​றம்,​ இந்த அள​வுக்​கான மூலப்​பொ​ருளை 200 கலன்​க​ளில் வைத்​தி​ருந்​தி​ருக்க வேண்​டும் என்று ஆய்வு நடத்​திய வல்​லு​நர் குழு குறை​கூ​றி​யுள்​ளது என்​பதை அரசு பெரி​தாக நினைக்​க​வில்லை.

​இறந்​த​வர் குடும்​பத்​துக்கு ரூ.62 ஆயி​ரம்,​ பார்வை இழப்பு போன்ற நிரந்​தர ஊன​முற்​றோ​ருக்கு ரூ.25000 இழப்​பீடு வழங்​கி​ய​தோடு சரி. மொத்​தம் ரூ. 1500 கோடி இழப்​பீ​டு​க​ளாக கொடுக்​கப்​பட்​டுள்​ளது. அதா​வது,​ இந்​திய அரசு 3 பில்​லி​யன் டாலர் இழப்​பீடு கேட்டு வழக்கு தொடுத்​தது. ஆனால் கிடைத்​ததோ அதில் 15 விழுக்​கா​டு​தான்.

​இத்​த​னைப் பேர் மர​ணத்​துக்கு கார​ண​மாக இருந்த யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தின் தலை​மைச் செயல் அலு​வ​லர் வாரன் ஆன்​டர்​சன் இந்த வழக்​கில் முதல் குற்​ற​வா​ளி​யாக பதிவு செய்​யப்​பட்​டார். ஆனால் அவர்,​ நீதி​மன்ற விசா​ர​ணைக்கு அழைக்​கப்​ப​டும்​போ​தெல்​லாம் வரு​வேன் என்ற உறு​தி​மொ​ழி​யு​டன் அமெ​ரிக்கா சென்​ற​வர் திரும்ப வரவே இல்லை. நீதி​மன்​றம் அழைத்​தா​லும் வர​வில்லை. அதன் பிறகே,​ 17 ஆண்​டு​கள் கழித்து அவரை மறைந்​து​வா​ழும் குற்​ற​வா​ளி​யாக அறி​வித்து அவரை ஒப்​ப​டைக்க வேண்​டும் என்று அமெ​ரிக்​கா​வி​டம் இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டது. இந்​திய அரசு சொல்​லும் கார​ணங்​க​ளுக்​காக நாங்​கள் எமது குடி​ம​கனை உங்​க​ளி​டம் ஒப்​ப​டைக்க இன்​னின்ன சட்​டங்​கள் இடம் தர​வில்லை என்று அமெ​ரிக்கா சொல்​லி​விட்​டது.

​இப்​போது யூனி​யன் கார்​பைடு கம்​பனி என்றே ஒன்று இல்லை என்று ஆகி​விட்​டது. அதா​வது அந்த நிறு​வ​னத்தை,​ ஏற்​கெ​னவே பங்​கு​தா​ரர் என்று சொல்​லிக்​கொண்டு,​ டோவ் கெமிக்​கல் நிறு​வ​னம் முழு​மை​யாக வாங்​கி​விட்​டது. இப்​போது யார் மீது வழக்கு தொடுப்​பது. கீழே தள்​ளி​ய​தோடு குழி​யும் பறித்​த​தாம் குதிரை என்​கிற கதை​யாக,​ இந்​தி​யா​வில் ஏற்​பட்ட வேலை​யி​ழப்பு நாள்​க​ளுக்கு ரூ.10,000 டாலர் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று வழக்கு போடும் அள​வுக்கு தைரி​யம் வந்​து​விட்​டது. இந்த டோவ் கெமிக்​கல் என்​பதே ஒரு பொய்​யான ஒன்று என்​றும்,​ யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்தை காப்​பாற்ற இப்​ப​டி​யான பெயர் மாற்​றம் உரி​மை​யா​ளர் மாற்​றம் என்று நடிக்​கி​றார்​கள் என்​றும் சொல்​லப்​ப​டு​கி​றது.

​போபால் நீதி​மன்​றம் கடந்த ஜூலை மாதம்,​ ஆன்​டர்​ச​னைக் கைது செய்​வ​தற்​கான புதிய ஆணை​யைப் பிறப்​பித்​துள்​ளது. மறு​ப​டி​யும் இந்​திய அரசு இதனை அமெ​ரிக்​கா​வுக்​குத் தெரி​வித்து,​ அவர்​கள் சட்​டத்​துக்கு பொருந்தி வந்​தால்,​ ஆன்​டர்​சனை அனுப்பி வைப்​பார்​கள். ​ஆனால்,​ இப்​போது இந்​தியா மீது அமெ​ரிக்கா பொழி​யும் பாச​ம​ழை​யில் இந்த மாதி​ரி​யான முகம் சுளிக்க வைக்​கும் பிரச்​னை​களை முன்​வைக்​கப்​ப​டுமா என்​ப​தும் சந்​தே​கம்​தான்.

​சரி,​ ஆன்​டர்​சன் ஒப்​ப​டைக்​கப்​பட்​டா​லும் என்ன நீதி கிடைத்​து​வி​டும்?​ ​

​"கட்​டின புரு​ஷன் சரி​யில்​லா​தப்ப,​ கண்​ட​வ​னை​யெல்​லாம் குத்​தம் சொல்லி என்ன ​ஆகப்​போ​வது' என்று அழுத பெண்​கள் மூக்​கைச் சிந்​து​வ​தைப் போலத்​தான் நாமும் சமா​தா​னம் அடைய வேண்​டும் போல. வேறு வழி!​
கட்டுரையாளர் : இரா. சோம​சுந்​த​ரம்
நன்றி : தினமணி


2 comments:

உதயம் said...

பிரான்ஸின் இன்றைய நாளிதழ்களிலும் போபால் விஷ வாயு பற்றிய கட்டுரையை வெளியிட்டிருந்தனர். மிக மிக கொடுமையான சம்பவம். இன்னும் இது சம்பந்தமான குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்திய அரசின் கையாலாகாதத்தனமாகும்.

பாரதி said...

உதயம் வருகைக்கு நன்றி