
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவின் 10 முக்கிய நிறுவனங்கள், அவர்களின் சந்தை முதலீட்டில் ரூ.5,168 கோடியை இழந்திருக்கின்றன. அதில் பெரும்பங்கை இழந்தது ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்பரேஷன் ( ஓ.என்.;ஜி.சி.)தான் . நான்கு தனியார் நிறுவனங்களையும் ஆறு பொதுத்துறை நிறுவனங்களையும் கொண்ட இந்தியாவின் முக்கிய 10 நிறுவனங்களின் சந்தை முதலீடு, கடந்த வாரத்தில் ரூ.16,88,213 கோடியில் இருந்து ரூ.16,83,045 கோடியாக குறைந்திருக்கிறது. கடந்த வெள்ளி அன்று மும்பை பங்கு சந்தையில் ஓ.என்.ஜி.சி.,யின் பங்கு மதிப்பு 4.56 சதவீதம் குறைந்து ரூ.1,126.80 ஆகத்தான் விற்பனை ஆனது. எனவே அதன் சந்தை முதலீடும் ரூ.11,518 கோடி குறைந்து ரூ.2,41,008 கோடியாகி விட்டது. ஒ.என்.ஜி.சி.,தவிர மற்ற முக்கிய நிறுவனங்களான எம்.எம்.டி.சி., என்.எம்.டி.சி.,எஸ்.பி.ஐ., பி.ஹெச்.இ.எல்., ஆகியவையும் அதிக அளவில் சந்தை முதலீட்டை கடந்த வாரத்தில் இழந்திருந்தன.
நன்றி : தினமலர்