
இந்தியாவின் மதிப்பு மிக்க 100 கம்பெனிகள் லிஸ்ட்டில் மீண்டும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் இடம் பிடித்து விட்டது. ஏற்கனவே இந்தியாவின் மதிப்பு மிக்க கம்பெனி லிஸ்ட்டில் தான் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் இருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் அந்த கம்பெனியில் நடந்த நிதி மோசடியை அடுத்து, அது அந்த பெருமையை இழந்தது. இப்போது டெக் மகேந்திராவின் கைக்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வந்திருப்பததை அடுத்து, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நிகர லாபயும் ஈட்டி, அதன் மூலம் அதன் பங்கு மதிப்பும் கடந்த வாரத்தில் பெரிய அளவில் உயர துவங்கியது. சத்யத்தின் சந்தை மதிப்பும் ரூ.7,800 கோடியாக உயர்ந்து விட்டது. கடந்த ஜனவரி 7ம் தேதி சத்யத்தில் நிதி மோசடி நடந்தது வெளியே தெரிந்தது. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து ஜனவரி 9 ம் தேதி, சத்யத்தின் பங்கு மதிப்பு வெறும் ரூ.6.30 ஆகத்தான் இருந்தது. அதன் சந்தை மதிப்பும் அப்போது சுமார் ரூ.600 கோடியாகத்தான் இருந்தது. இப்போது அதன் பங்கு மதிப்பும் உயர்ந்து விட்டது. அந்த நிறுவனத்தின் மதிப்பும் உயர்ந்து விட்டது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment