வெளியூருக்குப் போவது என்று தீர்மானமானவுடன் நான் எடுத்த முடிவைக் கேட்டு வீட்டில் இருந்த யாரும் எதுவும் பேச வில்லை. சொல்லப் போனால் வெளியூருக்குப் போகக்கூட வேண்டாம் என்றே அவர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். நான் அவர்களைச் சமாதானப்படுத்த விரும்பவில்லை, அதே சமயம் எடுத்த முடிவை செயலாக்கியே தீருவது என்ற எண்ணத்தோடு வீதியில் இறங்கினேன்.
அதற்குள் என் வீட்டார், பக்கத்து வீட்டுக்காரரரிடம் சுருக்கமாகச் சொல்லி அவரும் நான் தெருக்கோடியை அடையும்போது, ஏன் சார் விஷப் பரீட்சை, நான் வேணா 2 நாள் உங்க வீட்டிலேயே படுத்துக் காவல் பார்த்துக்கறேன் என்று முன்வந்தார். உங்களுக்குச் சிரமம் வேண்டாம், நாம் அரசையும் நம்பித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டு, காவல் நிலையம் நோக்கி நடந்தேன். வெளியூர் போகும் அந்த 2 நாள்களும் போலீஸ்காரர்கள் என் வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த முடிவு.
போலீஸ் நிலையத்துக்குள் போனபோது கடா மீசையும் கலர் சொக்காயும் போட்டுக்கொண்டு நாற்காலியை அடைத்தபடி ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர்தான் ரைட்டர் என்று ஊகித்தேன். முதல்வர் கூடப் பதவி என்ற முள்முடி இல்லாத காலத்தில் கலர் லுங்கியுடன் பேட்டி தந்த படத்தை சுபமங்களாவில் பார்த்திருந்ததால் உண்மையிலேயே இவரும் பெரிய ரைட்டராகவே இருப்பார் என்று ஊகித்தேன். என் ஊகம் வீண் போகவில்லை.
அதற்குள் பேரிரைச்சலோடு வந்த ஜீப்பிலிருந்து காவல்துறைக்கே உரிய டிரேட் மார்க் தொப்பையுடன் ஒரு அதிகாரி யாரையோ வைதபடியே உள்ளே மூச்சு வாங்கிக்கொண்டு வந்தார். என்னய்யா ஸ்டேஷன் லட்சணம் இது, எங்கய்யா ஏட்டு, சூடா டீ சொல்லுய்யா என்று உரத்த குரலில் கட்டளையிட்டபடியே இவன் யார் என்று என்னைப் பார்த்துவிட்டு ரைட்டரைப் பார்த்தார்.
ரைட்டர் தெரியாது என்பதைக் கண்ணாலேயே சொல்லிவிட்டு விறைப்பாக சல்யூட் அடித்தார். என்னய்யா கேசு அது என்று கேட்டுக்கொண்டே அருகிலிருந்த மர நாற்காலியில் தன்னை புதைத்துக் கொண்டார்.
ரைட்டர் எப்.ஐ.ஆர். ரிஜிஸ்தரை அவரிடம் பணிவாகக் காட்டினார். அவர் மீண்டும் கொதிக்க ஆரம்பித்தார். நாம பொய் கேஸýதான் போடறோம்னு ஊர் பூரா பேசறாங்க இதிலே என்னயா பேரெல்லாம் இப்படி இருக்குது, படி என்று உத்தரவிட்டார்.
ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடினியார், வெண்ணிக்குயத்தியார், நப்பசலையார், குலோத்துங்கன், பரணர், கபிலர், பெருஞ்சித்திரனார், இளங்கோ, புகழேந்தி, அம்பிகாபதி என்று ரைட்டர் உற்சாகமாகப் படித்துக் கொண்டே போனார்.
நிறுத்துய்யா, இந்தப் புலவர்கள்ளாம் கடைச்சங்கமா, இடைச்சங்கமா, தொழிற்சங்கமான்னு அறிஞர்களாலேயே சொல்ல முடியல்ல, நீ பாட்டுக்கு இவங்க பேரை எழுதியிருக்கியே என்னய்யா கேஸý என்று மீண்டும் கேட்டார்.
போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது, அரசு ஊழியர்களைக் கடமை செய்ய விடாமல் தடுத்தது, தேசத்துக்கு எதிராகக் கலகம் செய்தது என்று எல்லா செக்ஷன்லயும் புக் பண்ணிட்டேன்(ஐ)யா என்றார். எனக்கே தூக்கிவாரிப்போட்டது.
இந்தப் புலவர்கள்ளாம் எந்தக் காலத்துலயா அப்படிச் செஞ்சாங்க என்று உண்மையிலேயே அழாக்குறையாகக் கேட்டார் அந்த அதிகாரி. இன்னிக்கு காலையிலேதான் சார் என்றார் ரைட்டர். எதுக்காக, யார் இவங்க என்று மீண்டும் கேட்டார்.
விடிகாலைலே கரண்ட் போயிடுச்சாம் சார், எங்க குடியிருப்புக்கு மட்டும் அடிக்கடி கரண்ட் கட் செய்வது சரியா என்று கேட்டு மறியல் பண்ணினாங்க சார். இவங்கள்ளாம் ஒரு அரசியல் கட்சியிலே சேர்ந்துட்டாங்க சார். அங்க அவங்க பேரையெல்லாம் இப்படி சுத்தத் தமிழ் பெயர்களா மாத்திட்டாங்க சார் என்று ரைட்டர் விளக்கினார்.
செம்மொழி மாநாடு நடக்கப் போகிற சமயத்தில் இத்தனை தமிழ்ப் புலவர்கள் கூண்டோடு கைதாகிவிட்டார்களே என்று திகைத்த எனக்குப் புதிர் அவிழ்ந்தது நிம்மதியாக இருந்தது.
அப்போது திடீரென யாரோ என்னைப் பிடித்துத் தள்ளினார் போல இருந்தது. கண்ணை விழித்துப் பார்த்தால் ஆபீசில்தான் லஞ்ச் இன்டெர்வெல்லுக்குப் பிறகு அப்படியே சீட்டில் தூங்கியதும் அதெல்லாம் பகல் கனவு என்றும் தெரிந்தது.
இனி ஊருக்குப் போகக்கூடாது, அப்படியே போவதாக இருந்தாலும் போலீஸ்காரர்களிடம் சொல்லி தொந்தரவு செய்யக்கூடாது என்று தோன்றியது.
கட்டுரையாளர் :ராணிப்பேட்டை ரங்கன்
நன்றி : தினமணி
Monday, December 7, 2009
கூவம் நதியாகிறது...
சென்னைப் பெருநகரின் அகண்ட சாக்கடைகளாக உள்ள கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மூன்றையும் தூய்மைப்படுத்தி, சிங்காரச் சென்னையை உருவாக்குவதற்காக சென்னை நதிகள் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
1967-ல் முதன்முதலாகத் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தபோதே, கூவத்தில் படகுவிடும் திட்டத்தைத் தொடங்கினார் அன்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த இன்றைய முதல்வர் மு. கருணாநிதி. அதற்காகக் கட்டப்பட்ட படகுத்துறைகளின் சிதைந்த மிச்சங்களை இப்போதும் சில இடங்களில் காண முடிகிறது. அப்போது அவரால் அத்திட்டத்தை செய்துமுடிக்க முடியவில்லை. "மகன் தந்தைக்காற்றும் உதவி' அவர் தொடங்கிய பணியை நிறைவு செய்வதுதான்.
இந்த ஆணையம் எத்தகைய பணிகளை முதலில் செய்யப்போகிறது; இதற்கான மதிப்பீடு என்ன, இச்செலவுக்கான நிதியை எங்கிருந்து பெறப்போகிறார்கள் என்ற விவரங்கள் விரைவில் இதுபற்றிய அறிவிப்புகளாக வெளியாகும். முதலில் கூவத்தைத்தான் எடுத்துக்கொள்ள இருக்கின்றனர்.
கூவம் மிகமிக மோசமாக மாசடைந்து, கழிவுகள் நகரவும் முடியாதபடி தேங்கிக் கிடக்கிறது. கூவத்தில் உள்ள தண்ணீரை எடுத்து, தெளியவைத்து, வடிகட்டிய நீரில் மீன்களை விட்டால், 4 மணி நேரத்தில் மீன்கள் செத்துவிடுகின்றன என்பதுதான் கூவம் குறித்து ஆய்வுமுடிவுகள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்ஸிஜன் இல்லை. வெறும் நச்சு உலோகக் கலப்பும், சேறும் சகதியும்தான் உள்ளன. அடையாறும் அந்தவிதமாகவே படுமோசமாக மாசடைந்து கிடக்கிறது. மணப்பாக்கம் தடுப்பணை வரை அடையாறு கொஞ்சம் தூய்மையாக இருந்தாலும், சென்னை பெருநகரத்தில் நுழைந்தவுடன் அதன் மேனியில் வெறும் குப்பைகளும் நச்சுக் கழிவுகளும்தான் கொட்டப்படுகின்றன. "அடையாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பதே நம்ப முடியாத விஷயமாக ஆகிவிட்டது.
அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் 1950 களில் இருந்த நிலை உருவாகவும், படகுகள் ஓடவும், நீர்வாழ் உயிரினங்கள் அவற்றில் காணப்படும் சூழல் மீண்டும் வரவேண்டும். இது முக்கியமான பணி என்பதிலும், இதை எப்பாடு பட்டாகிலும் செய்தாக வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. இருப்பினும், இத்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், இது தேர்தல் கால அரசியல் பிரசாரமாக மாறுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படிச் சொல்லக் காரணம் இருக்கிறது.
சென்னையின் நதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தேவை. இதற்குள் 3 சட்டப்பேரவை தேர்தல்களையும் 2 உள்ளாட்சித் தேர்தல்களையும் சென்னை சந்திக்க நேரலாம். இத்திட்டம் அரசியல் கட்சியின் சாதனையாக முன்வைக்கப்படுமானால், இத்திட்டத்தை எதிர்க்கட்சிகள் குறைகூறும், விமர்சிக்கும் என்பதோடு, ஆட்சி மாற்றம் ஏற்படுமேயானால், இத்திட்டத்தை முற்றிலுமாகப் புறக்கணிப்பார்கள், கிடப்பில் போடுவார்கள். இதனால் மக்களுக்கும் இழப்பு, சென்னை நகருக்கும் இழப்பு.
சிங்கப்பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்தான். இந்த நதி கூவம் போல மிகமிக மோசமாகாத நிலையிலேயே, 1977-ம் ஆண்டில், "சிங்கப்பூர் நதி மற்றும் கலாங் கழிமுகத் தூய்மைத் திட்டம்' தொடங்கப்பட்டு 10 ஆண்டு கால அவகாசத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டு, அதன்படி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டதன் முழுமுதற் காரணம்- அது அரசியல் வெற்றியாக ஆக்கப்படவில்லை என்பதுதான். சிங்கப்பூர் நதியின் கரையிலும் கழிமுகப் பகுதியிலும் குடியிருந்த 26,000 ஏழைக் குடும்பங்கள் பாரபட்சமின்றி ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டனர். 2,800 குடிசைத்தொழில் மற்றும் சிறுதொழில்கூடங்களும் ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டன. நடைபாதை வணிகர்கள், தெருவோர உணவகங்கள் எல்லாமும் கழிவுநீர் போக்கிகள் கொண்ட தனியிடங்களுக்கு மாற்றப்பட்டன. பிளாஸ்டிக் பொருள் போன்ற திடக்கழிவுகள் சிங்கப்பூர் நதியில் கலக்காதபடி சிறப்புத் தடுப்பு அமைப்புகள் கரையோரங்களில் ஏற்படுத்தப்பட்டன. இதற்கான திட்டச் செலவு 20 கோடி டாலர்கள்.
கூவத்தை அதன் உற்பத்தி இடத்திலிருந்து கழிமுகம் வரை சுமார் 65 கி.மீ. தொலைவுக்குத் தூய்மைப்படுத்தவும், அடையாறு (சுமார் 48 கி.மீ.), பக்கிங்காம் கால்வாய் எல்லாவற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பையும் குடிசைப் பகுதிகளையும் நீக்க வேண்டுமானால் மிகக் குறைந்தபட்சம் ஒரு லட்சம் குடிசைகளை அகற்றி, புறநகர்ப் பகுதியில் மாற்றிடம் தந்தாக வேண்டும். பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தொழில்நிறுவனம் மற்றும் மருத்துவமனைக் கழிவுகள் இதில் கலப்பதைத் தடுக்க வேண்டும். இத்தனையும் செய்ய வேண்டுமானால், அரசியல் சாய்வு இல்லாத அரசின் உறுதிப்பாடு தேவை. வாக்கு வங்கிகள் பற்றிய எந்த நினைப்பும் இல்லாமல், கடமையைச் செய்யும் உணர்வு மட்டுமே இருந்தால்தான் இத்திட்டம் வெற்றி அடையும்.
மேலும், தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னை பெருநகரின் நதிகளுக்கு மட்டும் ஆணையம் அமைத்திருப்பதைக் காட்டிலும், ஏன் தமிழக நதிகள் ஆணையம் என அமைக்கவில்லை என்பது சற்று வருத்தம் தருகிறது. தமிழகத்தின் நதிகள் அனைத்துமே ஏறக்குறைய கூவம், அடையாறு போல தூய்மை கெட்டுப்போய் கிடக்கின்றன. மணல்கொள்ளையாலும் தொழில்துறைக் கழிவுகளாலும் மேனி மெலிந்து, நோயுற்றுக் கிடக்கின்றன. இவற்றையும் தூய்மைப்படுத்துவது தமிழக அரசின் பணிதானே?
வாஷிங்டனுக்கு ஒரு பொட்டோமேக். லண்டனுக்கு ஒரு தேம்ஸ். பாரீசுக்கு ஒரு ரைன். சென்னைக்கு ஒரு கூவம் என்கிற நிலை ஏற்பட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியுடைய கனவு மட்டுமல்ல. ஒவ்வொரு சென்னைவாசியின் கனவும்கூட. நல்லதொரு முயற்சி துணை முதல்வர் தலைமையில் செயல்படத் தயாராகிறது. இந்த ஆக்கபூர்வமான திட்டம் அரசியலாக்கப்படக் கூடாது!

Labels:
சுற்றுச்சூழல்,
தமிழகஅரசு,
தலையங்கம்
துபாய் நெருக்கடியால் பாதிப்பில்லை : உலக வங்கித் தலைவர்
துபாய் நெருக்கடி சமாளிக்கக் கூடிய அளவு சாதாரணமானது தான் எனவும், இதனால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார் உலக வங்கி குழும தலைவர் ராபர்ட் சோயல்லிக். டில்லியில் திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவை சந்தித்த பிறகு அவர் கூறுகையில், 'நிதி நெருக்கடி காரணமாக துபாயில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சமாளிக்கக் கூடிய அளவுக்கு சாதாரண பிரச்சினை தான். இதில் இந்தியாவுக்கோ, அதன் தொழிலாளர்களுக்கோ பெரும் பாதிப்பு என்று சொல்ல முடியாது.'என கூறியுள்ளார். மேலும், 'உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாய் இருக்கும். சீனாவும் இந்தியாவும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, உலகின் முக்கிய சக்தியாகத் திகழ்ந்தவை. இப்போது மீண்டும் அவை தங்கள் பழைய ஆதிக்கத் தன்மையைப் பெறுவதில் ஆச்சரியமில்லை. இந்தியா தனது நிதியியல் கொள்கையை நிலைப்படுத்தினால் மேலும் பல பிரமிக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம்' என தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்,
ரிசர்வ் வங்கி,
வங்கி
உலக பொருளாதார நெருக்கடி: நோபல் பரிசு தொகை குறைப்பு
உலகின் உயரிய சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு வழங்கும் திட்டத்தை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்பர்ட் நோபல் என்பவர் 1901ம் ஆண்டு உருவாக்கினார். இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி பரிசை தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தார். இதற்காக குறிப்பிட்ட தொகை வங்கிகளிலும், பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் இருந்து வரும் வருமானம் மூலம் பரிசு தொகை வழங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் ரூ.7 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் உலக பொருளாதார மாற்றங்கள் காரணமாக நோபல் அமைப்புக்கு வரவேண்டிய வருமானம் குறைந்துவிட்டது. எனவே இனிவரும் காலங்களில் நோபல் பரிசு தொகையை குறைத்து வழங்க திட்டமிட்டு உள்ளனர். இது பற்றி நோபல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஷால்மர் கூறும்போது, “எதிர் காலத்தில் பரிசு தொகையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதை தவிர்க்க முயற்சித்து வருகிறோம். ஆனால் நிலைமை சீராகும் வாய்ப்பு குறைவாக உள்ளது” என்றார்.

தகவல்
Subscribe to:
Posts (Atom)