Showing posts with label கச்சா எண்ணெய். Show all posts
Showing posts with label கச்சா எண்ணெய். Show all posts

Sunday, November 23, 2008

அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி இந்தியாவிலும் எதிரொலி -சேதுராமன் சாத்தப்பன்

அமெரிக்காவில் வியாழனன்று பங்குச் சந்தையில் ஏற் பட்ட சரிவு உலகளவில் எதிரொலித்தது. அடுத்தாண்டு அமெரிக்காவில் பொருளாதாரம் ஏற்றம் காண வாய்ப் பில்லை என்ற அறிக்கையும், கார் கம்பெனிகளான போர்டு, ஜெனரல் மோட்டார், கிரிஸலர் ஆகியவை மூழ்கும் நிலைமையில் உள்ளன (அரசாங்கம் ஏதும் நடவடிக்கைகள் எடுத்து காப் பாற்றவில்லை என்றால்) என்பதும், வேலையில்லாதவர்கள் உதவித் தொகைக்காக விண்ணப்பிப்பவர்கள் கடந்த 16 வருடங்களில் தற்போது தான் மிகவும் அதிகம் என்ற செய்திகளும் வந்து அங்கு பங்குச் சந்தையை தாக்கின.
அந்த சுனாமி, உலகின் பல இடங்களிலும் அடித்தது. இந் திய பங்குச் சந்தையையும் விட்டு வைக்கவில்லை. மும்பை பங்குச் சந்தை 322 புள்ளிகள் சரிந்தது. குறிப்பாக ரிலையன்ஸ் பங்குகள் 6.8 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் பங்குகள் 8.3 சதவீதமும் சரிந்தன.பணவீக்கம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த வாரம் 8.90 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது. இது சென்ற வாரத்தை விட சிறிது குறைவு. இருந்தாலும் சந்தை மேலே எழும்பவில்லை.பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால், ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற நம்பிக்கையும், அடுத்த வாரம் டிரைவேடிவ் கான்டிராக்ட்களின் முடிவுத் தேதி வருவதால் பங்குச் சந்தையில் சிறிது முன்னேற்றமும் வெள்ளியன்று தெரிந்தது.வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை 464 புள்ளிகள் கூடியது. சமீப காலத்தில் இறக்கத்தையே சந்தித்து வந்த முதலீட்டாளர்களுக்கு வெள்ளி விடிவெள்ளியாகவே இருந்தது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை 8,915 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,693 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
பணவீக்கம் இன்னும் குறையுமா?: கட்டாயம் குறைய வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அரசாங்கம் இன்னும் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்கவில்லை. இது குறைக்கப்படுமானால் பணவீக்கம் இன்னும் குறையும். ஏனெனில் பல பொருட்கள், போக்குவரத்துக் கட்டணங்கள் அதைத் தொடர்ந்து குறைக்கப்படலாம். அது பணவீக்கத்தைக் குறைக்கும்.
ஒவ்வொரு தினமும் எண்ணெய் கவனி என்ற வாசகம் போய்விட்டது. ஏனெனில் கச்சா எண்ணெய் அவ்வளவு குறைந்து விட்டது. வாங்க ஆள் இல்லை. இனி டாலரை கவனி என்று வந்து விடும் போலிருக்கிறது. அவ்வளவு வேகமாக சென்று கொண்டிருக்கிறது.டாலரின் மதிப்பு 50 ரூபாயையும் தாண்டி சென்றுள்ளது. ஏன் இப்படி பந்தயக் குதிரை போல ஓடுகிறது? வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் விற்று பணம் எடுத்துச் செல்கின்றன. அதனால், டாலருக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இறக்குமதியாளர்கள் கூடிவரும் டாலரைப் பார்த்து பயந்து பார்வேட் கான்டிராக்ட் போட ஓடுகிறனர். அது டாலரின் மதிப்பைக் கூட்டுகிறது. ஏற்றுமதியாளர்கள் தங்களுக்கு ஏற்றுமதி மூலம் வரும் டாலரை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொள்கின்றனர், இன்னும் கூடும் என்ற நம்பிக்கையில். இதனால், நாளுக்கு நாள் டாலர் மதிப்பு கூடிக் கொண்டே செல்கிறது.தங்கமே, தங்கமே: என்.எஸ். கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடுவாரே, அது போல தங்கத்தைப் பார்த்து பாடத் தோன்றுகிறது. நாளுக்கு நாள் ஏறி வருகிறது. ஏன்? பங்குச் சந்தை சரிந்து கொண்டு வருகிறது, அதே சமயம் டாலர் மதிப்பும் கூடிவருகிறது. இருக்கும் பணத்தை பத்திரமாக முதலீடு செய்ய வேண்டும். இடம் வேண்டுமே? அதற்கு தான் தங்கத்தில் முதலீடு செய்ய எல்லாம் ஓடுகின்றனர். சமீப வருடங்களில் தங்கம் நல்ல முதலீட்டு சாதனமாக இருந்து வருகிறது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: ஒரே ஒரு ஆறுதல். இந்தியாவில் மட்டும் விழவில்லை; எல்லா நாடுகளிலும் சந்தை நிலமை இது தான். விழுந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்க சந்தைகள் எப்படி பரிணமிக்கப் போகிறதோ என்பதைப் பொறுத்தே அடுத்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கும் இருக்கும். ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளையும் பொறுத்து சந்தையின் போக்கு அமையும்.
நன்றி : தினமலர்


Friday, November 21, 2008

பெட்ரோல் விலை குறைய இன்னமும் ஒரு மாதம்...

சமையல் காஸ் மற்றும் கெரசின் விற்பனையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருப்பதால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் திட்டம் இல்லையென, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 147 டாலராக அதிகரித்த போது, கடந்த ஜூன் மாதத்தில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும் உயர்த்தப்பட்டன. ஆனால், அதன் பின், கச்சா எண்ணெய் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 50 டாலராகக் குறைந்துள்ளது.இதனால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படலாம் என செய்திகள் வெளியாயின. இந்நிலையில், பெட்ரோலியத் துறை செயலர் ஆர்.எஸ்.பாண்டே கூறுகையில், 'பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனையில் லாபம் பெற்றாலும், சமையல் காஸ் மற்றும் கெரசின் விற்பனையில், தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. 'இந்த நிலை தொடரும் வரை, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படாது. விலைகளைக் குறைப்பது குறித்த திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை' என்றார்.ஆனால், நமது அரசு வாங்கும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 48 டாலர் என்று தற்போது அரசால் கணக்கிடப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான எக்சைஸ் வரி வரவு கடந்த மாதத்தில் அரசுக்கு குறைந்திருக்கிறது. ஏற்கனவே விலை அதிகரிப்பால் எக்சைஸ் வரிக் குறைப்பை மேற்கொண்ட மத்திய அரசுக்கு இழப்பு 6000 கோடி ரூபாயாகும். ஆகவே, தற்போது பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு எக்சைஸ் வரி ஒரு ரூபாய் விதிப்பது, அதற்குப் பின் பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைக்கலாம் என்ற திட்டம் அரசிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.அதே சமயம், தற்போது ஆறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடப்பதால், டிசம்பர் மாதக் கடைசி வரை இந்த விலைக் குறைப்பை அமல் படுத்த வேண்டாம். அதுவரை எண்ணெய் கம்பெனிகள் லாபம் அடையட்டும் என்ற கருத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Wednesday, November 12, 2008

ரஷ்ய எண்ணெய் கம்பெனி இம்பீரியலை வாங்க இன்னும் 28 நாளில் ஏற்பாடு : ஓ.என்.ஜி.சி

ஓ.என்.ஜி.சி.,யின் வெளிநாட்டு அங்கமான ஓ.என்.ஜி.சி.,விதேஷ் நிறுவனம், ரஷ்ய எண்ணெய் நிறுவனமான இம்பீரியல் எனர்ஜியை, 2.6 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு தேவையான டாக்குமென்ட்களை இன்னும் 28 நாளில் அனுப்பும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் முதலீட்டாளர் களிடையே இதை இப்போது வாங்க வேண்டுமா என்ற பயமும் இருந்து வருகிறது. இம்பீரியல் எனர்ஜி நிறுவனத்தை ஓ.என்.ஜி.சி.,க்கு விற்க, ரஷ்ய அரசாங்கமும் அனுமதி கொடுத்துவிட்டது. திங்கள் அன்று வெளியான பத்திரிக்கை செய்தியில், இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இம்பீரியல் எனர்ஜிக்கு ஓ.என்.ஜி.சி., கொடுக்க இருக்கும் தொகை மிக அதிகம் என்று இந்திய அரசாங்கம் எண்ணுகிறது என்றும், இந்த விலையில் அதிருப்தியில் இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து அன்றைய தினம் இம்பீரியல் எனர்ஜியின் பங்கு மதிப்பு வெகுவாக குறைந்து போனது. ஆகஸ்ட்டில் இம்பீரியல் எனர்ஜியை ஓ.என்.ஜி.சி., வாங்கிக்கொள்வதாக சொன்னபோது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 128 டாலராக இருந்தது. இப்போது அது 63 டாலராகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஓ.என்.ஜி.சி.,கொடுப்பதாக சொன்ன விலையை குறைக்கப்போவதில்லை என்று இப்போது அறிவித்திருப்பதால் மீண்டும் இம்பீரியல் எனர்ஜியின் பங்கு மதிப்பு கூடி விட்டது.
நன்றி: தினமலர்


Tuesday, September 16, 2008

ஓபக் அமைப்பில் சேர விடுத்த அழைப்பை நிராகரித்தது பிரேசில்

பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் அமைப்பான ஓபக் இல் சேரும்படி, பிரேசிலுக்கு சவுதி அரேபியா விடுத்த அழைப்பை பிரேசில் நிராகரித்துள்ளது. எங்கள் நாட்டின் ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து நாங்களே பயன்படுத்த போகிறோம்.நாங்கள் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யப்போவதில்லை. எனவே ஓபக் கில் சேரச்சொல்லி சவுதி அரேபியா விடுத்த அழைப்பை நாங்கள் நிராகரித்து விட்டோம் என்று பிரேசிலின் சுரங்கம் மற்றும் எனர்ஜி அமைச்சர் எடிசன் லாபோ தெரிவித்தார். பிரேசிலின் ஆழ்கடல் பகுதியில் புதிதாக எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் 55 பில்லியன் பேரல்கள் ( 5,500 கோடி பேரல்கள் ) கச்சா எண்ணெய் இருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றை எடுத்து பயன்படுத்தினாலே பிரேசிலுக்கு போதுமானது என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்