Sunday, December 28, 2008

ஆயத்த ஆடை ஏற்றுமதி 'டல்'

நகை ஏற்றுமதி தொழிலாளர்களை தொடர்ந்து, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் உள்ள இரண்டு லட்சம் பேர் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வைரம் உட்பட அரிய வகை கற்கள், நகைகள் போன்றவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப் பட்டதை அடுத்து, அந்த தொழிலில் ஈடுபட் டிருந்த ஒன்றரை லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோனது. இந்த ஆபத்து, இப்போது ஆயத்த ஆடைகளுக்கும் ஏற்பட்டு வருகிறது. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் , ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த தொழிலில் உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் பிழைப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு தான் அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள், தங்கள் இறக்குமதி அளவை குறைத்துக்கொண்டதை அடுத்து, இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதம் முதல், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறைந்து வருகிறது. இதனால், பல நகரங்களில் செயல்பட்டுவந்த ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பூர், சென்னை மற்றும் பெங்களூரு, ஜெய்ப்பூர், பிவாண்டி ஆகிய நகரங் களில் 70 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஒன்றே கால் லட்சம் தொழிலாளர்கள் வேலை பறிபோகும் நிலை ஏற்படும் என்று அஞ்சுகிறோம்.
கடந்த ஜனவரி-செப்டம்பர் மாதங்கள் இடையே ஒன்பதாயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி நடந் துள்ளது; இதன் பின், நவம்பரில் 30 சதவீதம் ஏற்றுமதி சரிந்து விட்டது. இந்தாண்டு இறுதிக்குள் 50 சதவீதம் குறையும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறை மட்டும் 4 சதவீதத்தை நிரப்பி வருகிறது. இப்போது இதில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இவ்வாறு கூட்டமைப்பு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இந்தாண்டு 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியை செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போதுள்ள நிலையில், அதற்கு நெருங்கவே வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது.
நன்றி : தினமலர்


நிலையற்று தள்ளாடுகிறது பங்குச் சந்தை

வியாழனன்று சந்தைக்கு விடுமுறை. வெள்ளி துவக்கம் நன்றாக இருந்தாலும், போகப் போக சந்தையில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. காலையில் சிறிது மேலேயே இருந்த சந்தை, போகப் போக சிறிது கீழே இறங்க ஆரம்பித்தது. வரும் காலங்களில், கம்பெனிகளின் ஆண்டு முடிவுகள் எதிர்பார்த்தது போல இருக்காது என்ற செய்திகளும், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஏற் பட்டிருக்கும் போர் மேகமும், சந்தையை கடைசி அரை மணி நேரத்தில் கீழே இழுத்துத் தள்ளியது.
பணவீக்கம் இந்த வாரம் 6.61 சதவீதமாக இருந்தது. இது, சென்ற வார அளவை விட சிறிது தான் குறைவு. இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும், இறுதியாக வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை 223 புள்ளிகள் குறைந்து 9,328 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 59 புள்ளிகள் குறைந்து 2,857 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இந்த வாரம் மட்டும் சந்தை 770 புள்ளிகளை இழந்திருக்கிறது.
அட்வான்ஸ் டேக்ஸ்: சென்ற ஆண்டு டிசம்பர் காலாண்டை விட, இந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் அட்வான்ஸ் டேக்ஸ் 22 சதவீதம் குறைவாகக் கட்டப் பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கம்பெனிகளின் வருமானம் குறைவாக இருக்கும் என்று இது உணர்த்துகிறது. இது, ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம்.
உலகளவில் பங்குச் சந்தை இந்த ஆண்டு கூடியுள்ளதா என்ற கேள்வி பலரது மனதில் வந்திருக்கும். இந்தியாவில் 55 சதவீதம் சந்தை கீழே விழுந்திருக்கிறது. உலகிலேயே அதிகம் கீழே விழுந்த சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. அதே சமயம், ஈரான் நாட்டின் பங்குச் சந்தை (மிகவும் சிறிய சந்தை) நஷ்டமில்லாமல் இந்த ஆண்டை முடிக்கவுள்ளது; சிறிது லாபமும் சம்பாதித்துள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் கம்பெனி, குஜராத்தின் ஜாம் நகரில் தனது உற்பத்தியை துவக்கி விட்டது. 25,000 கோடி ரூபாய் செலவில் துவங்கப் பட்டுள்ள இந்த ரிபைனரி, உலகின் ஆறாவது பெரிய ரிபைனரி. இது, இந்தியாவின் ரிபைனரி அளவை இன்னும் 20 சதவீதம் கூட்டும்.
இந்த தொழிற்சாலையின் மூலம் ஒரு நாளைக்கு 5,80,000 பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்ய முடியும். ரிலையன்ஸ் இண்டஸ்டீரிசின் முதல் ரிபைனரி இங்கே உள்ளது.
அது 6,60,000 பேரல்கள் சுத்தகரிப்பு செய்யும். இரண்டும் சேர்த்தால், ஒரு நாளைக்கு சுத்திகரிப்பு செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு, உலகிலேயே அதிகமாக ஒரே இடத் தில் சுத்திகரிப்பு செய்யப்படும் அளவு. இதனால், ரிலையன்ஸ் பெட்ரோலியம் கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன.
சந்தையில் எந்த பங்கு வெளியீடும் இருக்காத நிலையில், போர்டிஸ் ஹாஸ்பிட்டல் தனது உரிமை பங்கு வெளியீட்டை 1,000 கோடி ரூபாய் அளவில் கொண்டு வரவுள்ளது.
இதை, புதிய ஹாஸ் பிட்டல்கள் கட்டவும், பழைய கடன்களை திருப்பிச் செலுத்தவும் உபயோகப்படுத்தப் போகின்றனர். 75 சதவீத பங்குகள் கம்பெனியின் பெரிய முதலீட்டாளர்களிடமே இருப்பதால், இந்த உரிமைப் பங்கு வெளியீடு எளிதாகச் செலுத்தப் பட்டு விடும் என்பதில் ஐயமில்லை என்று நினைக்கின்றனர்.
மேலும், அப்பல்லோவிற்கு போட்டியாக உள்ள பெரிய அளவு ஹாஸ்பிட்டல்களில் இதுவும் ஒன்று.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? சந்தை அல்லாடிக் கொண்டிருப்பது உண்மை. சந்தையில் பணம் போட்டவர்களும் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். உலகளவு அல்லது உள் நாட்டு அளவு என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக சந்தை மிகவும் ஏற்ற, இறக்கமாக இருக்கிறது. நிலைமைகள் சரியாக நீண்ட நாட்கள் ஆகும்; அதுவரை பொறுமையாக இருப்பேன் என்பவர்களுக்கு இந்த சந்தை ஏற்றதாக இருக்கும்.
-சேதூராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


வேலை பறிப்பு இருக்காது-சம்பள உயர்வும் இருக்காது

இந்தியாவில் சாப்ட்வேர் உட்பட எக்கச்சக்க சம்பளம் தந்து வந்த பல்வேறு தனியார் நிறு வனங்களில், நிதி நெருக்கடி காரணமாக, வேலை நீக்கம் இருக் காது; ஆனால், அடுத்த ஆண்டு சம்பள உயர்வு முடக்கப்படும்! சர்வதேச நிதி நெருக்கடியால், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்று பலதுறை நிறுவனங்கள் தவிக்கின்றன.
இதனால், இந்த நிறுவனங்களின் பணிகளை செய்து வரும் இந்திய சாப்ட்வேர் உட்பட பல் வேறு நிறுவனங்களுக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பல சாப்ட்வேர் நிறுவனங் களுக்கு, வெளிநாட்டு நிறுவனங் கள் அளித்துவந்த 'ப்ராஜக்ட்'கள் பறிபோய் வருகின்றன; அதுபோல, பல கால் சென்டர் களுக்கு பணிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முடக்கி வைத் துள்ளன.
இதனால், இந்திய நிறுவனங் களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட் டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களில் ஆட்குறைப்பு அதிக அளவில் நடந்து வருகிறது. ஆனால், இந்திய நிறுவனங்களில் இந்த அளவுக்கு ஆட்குறைப்பு இல்லை. ஆனால், சம்பள உயர்வை குறைக்கவோ, முடக்கி வைக் கவோ முடிவு செய்ய பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, சர்வதேச சர்வே நிறுவனம்,'மெர்சர்' சமீபத்தில் சர்வே நடத்தியது. அதில் தெரியவந்த தகவல்கள்: இந்திய நிறுவனங்களில் ஐந்தில் ஒரு கம்பெனி வீதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் நடுத்தர அளவில் வர்த்தகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஊழியர் களை வேலையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எடுக்க தயா ரில்லை. ஆனால், அடுத்தாண்டுக் கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளன. வெளிநாட்டு உதவியுடன் நடக்கும் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களில் தான் ஆட்குறைப்பு இருக்கலாம்; ஆனால், அங்கும் முடிந்த அளவுக்கு ஊழியர்களை தக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
இந்தியாவில் 80 சதவீத சாப்ட்வேர் நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் ப்ராஜக்ட்கள் வராததால், இந்த நிறுவனங்கள் வருவாய் குறைந் துள்ளது.
முன்னணி நிறுவனங்களில் 83 சதவீத நிறுவனங்கள், தங்கள் வருவாய் இந்தாண்டு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே இருக்கும் என்று நினைக்கின்றன.
திறமைக்குறைவான ஊழியர் களை தக்க வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவர்களுக்கு வேறு பணிகள் அளிக்கப்படலாம். அப்படியும் முடியாதவர்களை மட்டும் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.
நன்றி : தினமலர்