ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து சவரன் 10 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்றது. 11 ஆயிரம் ரூபாயை நெருங்க, இன்னும் 48 ரூபாய் தான் குறைவாக உள்ளது.கடந்த மாதம் விலை குறைந்த ஆபரணத் தங்கம், தற்போது திருமண சீசன் என்பதால் கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 22ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,346 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 768 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 23ம் தேதி ஒரு கிராம் 1,346 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 768 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த 24ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,352 ரூபாயாக உயர்ந்தது. சவரன் தங்கம் 10 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 10 ஆயிரத்து 896 ரூபாய்க்கு உயர்ந்தது. நேற்று சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,369 ரூபாய்க்கு விற்றது. சவரன் 10 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்றது. 11 ஆயிரத்தை தொட இன்னும் 48 ரூபாய் தான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்



பெங்களுருவில் இருந்து துபாய்க்கு தினசரி விமான சேவையை தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் இயக்குகிறது. ஏற்கனவே லண்டன், கொழும்பு, மற்றும் தாகா போன்ற சர்வதேச நகரங்களுக்கு விமான சேவையை நடத்திக்கொண்டிருக்கும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், இப்போது நான்காவதாக துபாய்க்கு சேவையை துவங்கியிருக்கிறது. இந்த பயணத்திற்காக ஏ320 ரக விமானம் பயன்படுத்தப்படும் என்றும் கிங்ஃபிஷர் கிளாஸ், பிரீமியம் எக்கனாமி போன்ற வகுப்புகள் அதில் இருக்கும் என்றும் அந்த கிங்ஃபிஷர் தெரிவித்திருக்கிறது. பெங்களுருவில் இருந்து தினமும் மாலை 6 : 15 க்கு புறப்படும் அந்த விமானம்,ற இரவு 8 : 55 க்கு ( அங்குள்ள நேரம் ) துபாய் சென்றடையும். அதேபோல் அங்கு இரவு 10 : 10 க்கு புறப்படும் அந்த விமானம், பெங்களுருவுக்கு அடுத்த நாள் அதிகாலை 3 : 45 க்கு வந்து சேரும் என்று தெரிவித்திருக்கிறது.