Showing posts with label ரூபாய். Show all posts
Showing posts with label ரூபாய். Show all posts

Tuesday, January 12, 2010

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற அரிய வாய்ப்பு: இந்தியன் வங்கி ஏற்பாடு

கிழந்த ரூபாய் நோட்டுகளை, நல்ல நோட்டுகளாக மாற்ற இன்றே சரியான நாள். பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால், உடனடியாக இந்தியன் வங்கி ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு முகாமுக்கு சென்று, அதனை புதிய நோட்டுகளாக மாற்றி கொள்ளலாம். இதற்காக தான், இந்தியன் வங்கி இந்த சிறப்பு ஏற்பாட்டினை செய்துள்ளது. இந்தியன் வங்கியின் பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
வங்கியின் சிறப்பு முகாம்களான சென்னை துறைமுகம்,​​ தியாகராயநகர், சேத்துபட்டு,​​ மதுரை மெயின்,கோவை மெயின்,​​ ஈரோடு,​​ கடலூர்,​​ கிருஷ்ணகிரி,​​ காஞ்சிபுரம்,​​ கும்பகோணம்,​​ தஞ்சாவூர், கோவை மெயின்,​​​ கிருஷ்ணகிரி,​​ காஞ்சிபுரம்,​​ கும்பகோணம்,​​ தஞ்சாவூர், ஈரோடு,​​ கடலூர் உள்ளிட்ட கிளைகளில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.
நன்றி : தினமலர்


Sunday, November 1, 2009

புதிய குறியீடுகளுடன் ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை

ரூபாய் நோட்டுகளிலுள்ள பாதுகாப்பு அம்சங்களைக் கூட, அப்படியே காப்பியடித்து அச்சுஅசலாக கள்ளநோட்டுகளை அச்சடித்து பரப்பி வருகிறது பாகிஸ்தான். இதனால், இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுக்குரிய பாதுகாப்புக் குறியீடுகளை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்தியாவின் மீது வன்மத்துடன் இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவில் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவது, மத்திய அரசுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி அவ்வப்போது 100, 500,1,000 ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்புக் குறியீடுகளை நுணுக்கமாக மாற்றிக் கொண்டே வந்தாலும், மாற்றம் செய்யப் பட்ட குறியீடுகளை, நோட்டின் பேப்பர் உட்பட காப்பியடித்து பாகிஸ்தான் கள்ளநோட்டு

களைத் தயாரித்து விடுகிறது.ரூபாய் நோட்டின் உயர்தரத்தாள், அதிலுள்ள வெள்ளிக்கோடு அல்லது பச்சைக் கோடு, அலங்காரப் பூக்கள், காந்திஜி, எண்கள், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து, வாட்டர் மார்க் எனப்படும் வெற்றிடம் போன்றவை கள்ளநோட்டுகளிலும் அப்படியே இருக்கின்றன.கடந்த 1996ல் அச்சான நோட்டுகளின் சாயலில் கள்ளநோட்டுகள் வந்ததால், 2006ல் ரிசர்வ் வங்கி புதிய பாதுகாப்புக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியது.

500 ரூபாய் நோட்டிலுள்ள பச்சைக் கோடு; அந்தக் கோட்டில் அச்சாகியிருக்கும் 'பாரத் ஆர்.பி.ஐ.,' என்ற வார்த்தை; நோட்டின் குறுக்கு மறுக்காக ஓடும் கண்ணாடி நூலிழைகள்; நோட்டின் ஒரு பக்கத்தில் உள்ள மலர் அலங்காரங்களில் 500 என்று தெரிவது; நோட்டு வெளியிடப்பட்ட ஆண்டு போன்றவை இந்தப் புதிய குறியீடுகளில் அடக்கம்.பாகிஸ்தானிலுள்ள குவெட்டா என்ற இடத்தில் அச்சாகி, நேபாளம் வழியாக உத்தரபிரதேச மாநிலத்துக்குள் இந்தக் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இந்தக் கள்ளநோட்டுகளில் மேலே சொல்லப்பட்ட புதிய பாதுகாப்புக் குறியீடுகள் அப்படியே இருந்தன. இது மத்திய

அரசைப் பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கி யிருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம் உ.பி.,யிலுள்ள 'கொண்டா' வாரணாசிக்கருகிலுள்ள 'மலாகியாபுல்' என்ற இடங்களில் கள்ளநோட்டுகளைக் கண்டுபிடித்துள் ளது. கடந்த 2002ல் ஐந்து கோடியே 57 லட்ச ரூபாய்; 2004ல் ஆறு கோடியே 81 லட்ச ரூபாய்; 2007ல் எட்டு கோடி ரூபாய்; 2008ல் 15 கோடி ரூபாய் என்று ஆண்டுக்கு ஆண்டு பிடிபடும் கள்ளநோட்டுகளின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.தற்போது இந்திய அரசு நோட்டு தயாரிக்கும் உயர்தரத் தாள்களை இங்கிலாந்து,நெதர்லாந்து,ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஐந்து நாடுகளிலுள்ள ஆறு கம்பெனிகளிடம் வாங்கி வருகிறது.இந்தியாவிலுள்ள 'ஹொஷங்காபாத்' என்ற இடத்திலுள்ள நோட்டுத்தாள் தயாரிக்கும் கம்பெனி, 100,500,1,000 ரூபாய் நோட்டுக்களைத் தவிர்த்து பிற நோட்டுகளுக்கான தாள்களை மட்டும் தயாரித்து வருகிறது. இதன் உற்பத்தித் திறன் வெறும் இரண்டாயிரத்து 500 மெட்ரிக் டன் மட்டுமே. இதனால், பாதுகாப்பான உயர்தர தாள்களைத் தயாரிக்கும் 12 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு புதிய பேப்பர் மில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்த தகவல் களை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. உள்நாட்டிலேயே தரமான கரன்சி நோட்டு பேப்பர்களைத் தயாரிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தப் புதிய மில் உருவாகி வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி தலைமையகம் ,'500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் எந்தெந்த பாதுகாப்புக் குறியீடுகளை கள்ளநோட்டுகளில் பயன்படுத்தி வருகின்றனர் என்பதைக்

கண்காணித்து வருகின்றோம். 'புதிய குறியீடுகள் உருவாக்குவது பற்றிய ஆலோசனை நடந்து வருகிறது. தேவைப்படும்போது அந்தக் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளது.


கள்ளநோட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி?: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டின் ஒரு பக்கத்தில் மேலிருந்து கீழாக பளபளக்கும் பச்சைக் கோடு ஒன்றிருக்கும். அதில் 'ஆர்.பி.ஐ.,' என்பது ஆங்கிலத்திலும், 'பாரத்' என்பது இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். பச்சைக் கோட்டினை வெளிச்சத்தில் பார்க்கும்போது நீல நிறத்தில் தெரியும். கள்ளநோட்டுகளில் பச்சைக் கோடு இருக்கும். ஆனால் அதில் 'ஆர்.பி.ஐ., பாரத்' என்று பொறிக்கப்பட்டிருக்காது. வெளிச்சத்தில் பார்க்கும் போது பச்சைக் கோடு பச்சையாகவே

தெரியும். வேறு நிறங்களுக்கு மாறாது.

Saturday, October 17, 2009

ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்தாலும் மாற்றலாம் : விதிமுறைகளை எளிதாக்கி ஆர்.பி.ஐ., அறிவிப்பு


ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, ரிசர்வ் வங்கியால் திருத்தப்பட்ட விதிமுறைகள், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமலாக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்திருந்தாலும், அது அழுக்கடைந்த நோட்டுகளாக கருதி, வேறு ரூபாய் நோட்டு மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழுக்கான மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றுவதற்கான விதிமுறைகள், ரிசர்வ் வங்கியால் 1975ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1985ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட இவ்விதிமுறைகள், பொதுமக்களின் வசதிக்காக தற்போது மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளன.இது குறித்து, சென்னை ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கும் துறையின் துணைப் பொது மேலாளர் ரங்கநாதன் கூறியதாவது:ரூபாய் நோட்டுகளின் வரிசை எண் பகுதியில் கிழிந்திருந்தால், முன்பு அவை செல்லாத நோட்டுகளாக கருதப்படும். இவற்றை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப் பட்ட, பண கருவூலங்கள் உள்ள வங்கிகளின் கிளைகளில் மட்டும் தான் மாற்ற முடியும்.தற்போதைய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகளின் எந்த பகுதியிலும் (வரிசை எண் பகுதி உட்பட) இரு துண்டுகளாக கிழிந்திருக்கும் பட்சத்தில், அவை அழுக்கடைந்த நோட்டுகளாகவே கருதப்படும். இவற்றை இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும், அவற்றின் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, புதிய விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டில், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டு 50 சதவீத பரப்பளவிற்கு மேல் இருந்தால், அதற்கு முழுத்தொகை வழங்கப்படும்.இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு ஒரு ரூபாய்க்கு 31 ச.செமீ, இரண்டு ரூபாய்க்கு 34 ச.செ.மீ., ஐந்து ரூபாய்க்கு 38 ச.செ.மீ., 10 ரூபாய்க்கு 44 ச.செ.மீ., மற்றும் 20 ரூபாய்க்கு 47 ச.செ.மீ., ஆகவும் இருக்க வேண்டும்.கிழிந்த நோட்டின்,கிழியாத மிகப்பெரிய துண்டின் பரப்பளவு 50 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அதன் மதிப்பு முழுவதும் நிராகரிக்கப்படும்.பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின் (50 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை), கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 65 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அதற்கு முழுதொகை தரப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 70 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 75 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 80 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 84 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 40 சதவீதத்திற்கு மேலும், 65 சதவீதம் வரையிலும் இருந்தால், அவற்றுக்கு பாதி தொகை வழங்கப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 43 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 46 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 49 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 52 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.கிழியாத மிகப்பெரிய ரூபாய் துண்டின் பரப்பளவு 40 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அவற்றின் மதிப்பு முழுவதுமாக நிராகரிக்கப்படும். இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிலும், ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இதர வணிக வங்கிகளின் 303 பண கருவூலங்கள் உள்ள கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ரங்கநாதன் கூறினார்.
நன்றி : தினமலர்