Friday, August 1, 2008

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : நிப்டி 4400 புள்ளிகளுக்கு மேல் சென்றது


மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 322.88 புள்ளிகள் குறைந்து போய், பகல் 12.30 வரை சரிவு நிலையிலேயே இருந்தது. பின்னர்தான் லேசாக முன்னேறி வந்தது. பின்னர் வேகமாக உயரத்துவங்கிய சென்செக்ஸ் மாலை வர்த்தக முடிவில் 300.94 புள்ளிகள் ( 2.10 சதவீதம் ) உயர்ந்து 14,656.69 புள்ளிகளில் முடிந்தது. அதேபோல் தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 80.60 புள்ளிகள் ( 1.86 சதவீதம் ) உயர்ந்து 4,413.55 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவது அதிகமாக இருந்தது. கேப்பிட்டல் குட்ஸ், பவர், ஆயில் அண்ட் கேஸ், பேங்கிங், மெட்டல், ரியால்டி மற்றும் டெக்னாலஜி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்றைய வர்த்தகத்தக முடிவில் நிப்டி 4,400 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 14,650 புள்ளிகளுக்கு மேலும் சென்றது வர்த்தகர்களிடையே புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. காலை வர்த்தக ஆரம்பத்தில் சர்வதேச அளவில் பங்கு சந்தையில் நிலவிய மந்த நிலை காரணமாக டல் ஆக இருந்த பங்கு சந்தையில் அதன் பின் வேகமாக பங்குகள் வாங்கப்பட்டதால் ( குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் ) சென்செக்ஸ் வேகமாக உயர துவங்கி விட்டது. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 8.67 சதவீதம், பி.என்.பி.7.07 சதவீதம், சுஸ்லான் எனர்ஜி 7.04 சதவீதம், எஸ்.பி.ஐ.6.05 சதவீதம், ஹெச்.டி.எஃப்.சி. 5.51 சதவீதம், சீமன்ஸ் 5.02 சதவீதம், ரிலையன்ஸ் இன்ஃப்ரா 4.71 சதவீதம் மற்றும் பெல் 4.61 சதவீதம் உயர்ந்திருந்தது. இருந்தாலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - 12.65 சதவீதம், டாடா பவர் - 3.76 சதவீதம், மாருதி சுசுகி - 2.50 சதவீதம், டாடா மோட்டார்ஸ் - 2.04 சதவீதம், ஹெச் யு எல் - 1.90 சதவீதம் மற்றும் ஏ.சி.சி. - 1.33 சதவீதம் குறைந்திருந்தது

ஏர் - இந்தியாவும் விமான கட்டணத்தை உயர்த்தியது


தனியார் விமான கம்பெனிகளான கிங்ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் ஆகியவை கட்டணத்தை உயர்த்தி இருப்பதை அடுத்து ஏர் - இந்தியாவும் விமான கட்டணத்தை உயர்த்துகிறது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று சொன்ன ஏர் - இந்தியா, எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து, இந்திய எண்ணெய் நிறுவனங்களும் விமானங்கள் பயன்படுத்தும் எரிபொருளின் விலையை 2.8 சதவீதம் உயர்த்தி விட்டது. இதையடுத்து தனியார் விமான கம்பெனிகளான கிங்ஃபிஷர், டெக்கான் மற்றும் ஜெட் ஏர்வேஸ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்து விட்டது. நாங்களும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து விட்டோம் என்று ஏர் - இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் இன்று மும்பையில் தெரிவித்தார். ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் மற்றும் டெக்கான் வெள்ளிக்கிழமையில் இருந்து கட்டணத்தை உயர்த்துகின்றன. கிங்ஃபிஷரும் டெக்கானும் அதன் எல்லா கிளாஸ்களிலும் 10 சதவீத கட்டணத்தை உயர்த்துகிறது. ஜெட் ஏர்வேஸ், எக்கனாமி கிளாசில் 10 சதவீதமும் பிசினஸ் கிளாசில் 5 சதவீதமும் உள்நாட்டு சர்வீசில் மட்டும் உயர்த்துகிறது.

நன்றி : தினமலர்


வீட்டு கடன் வட்டியை உயர்த்திய தனியார் வங்கிகள்


நாட்டின் மிக பெரிய வீட்டு கடன் வழங்கும் வங்கிகளான எச்.டி.எப்.சி.,மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.,ஆகிய வங்கிகள் தங்கள் வீட்டு கடனுக்கான மாறுபட்ட வட்டி வீதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியுள்ளன.இதன் மூலம், வாடிக்கையாளர்கள் திரும்ப செலுத்த வேண்டிய தொகை 12சதவீதமாக அதிகரிக்கும். நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி வைப்பு தொகைக்கான வட்டி வீதத்தை 0.75 லிருந்து ஒரு சதவீதமாக உயர்த்தியுள்ளது.இதை தவிர வீட்டு கடனுக்கான மாறுபட்ட (புளோட்டிங்)வட்டி வீதத்தை நேற்று முதல் அதிகரித்துள்ளது. இந்த உயர்வின் மூலம் எச்.டி.எப்.சி.,வங்கியின் புதிய வாடிக்கையாளர்களுக்கான மாறுபட்ட வீட்டு கடன் குறைந்தபட்சம் 11.75 சதவீதமாக இருக்கும். நிரந்தர வட்டி வீதமான 14 சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த உயர்வின் மூலம் வீட்டு கடனுக்கான மாறுபட்ட வட்டி வீதம் தற்போதைய 13.5 சதவீதத்திலிருந்து 14.25 சதவீதமாக உயரும் என ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர்


ஜூலை 19ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 11.98 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.இது இதற்கு முந்தைய வாரத்தில் 11.89 சதவீதமாக இருந்தது. சில


ஜூலை 19ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 11.98 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.இது இதற்கு முந்தைய வாரத்தில் 11.89 சதவீதமாக இருந்தது. சில உணவுப்பொருட்கள், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி அறிவித்தி நிதி கொள்கையும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. பருப்பு வகைகள், பழங்கள், வாசனை பொருட்கள் மற்றும் சில உற்பத்தி பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. ஜூன் 5ம் தேதி பெட்ரோல் விலையை அரசு உயர்த்தியதை அடுத்து மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இதே வாரத்தில் பணவீக்கம் 4.65 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது.

நன்றி : தினமலர்


வங்காளதேசத்தில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தை கைவிட்டது டாடா


வங்காள தேசத்தில் 3 பில்லியன் டாலர் முதலீட்டில் தொழில் துவங்குவதாக இருந்த திட்டத்தை டாடா நிறுவனம் கைவிட்டு விட்டது. ஃபெர்டிலைசர், ஸ்டீல், பவர் மற்றும் இன்ஃப்ராஸ்டெரச்சர் துறை போன்றவைகரில் 3 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் தொழில் துவங்குவதாக ஏற்கனவே டாடா அறிவித்திருந்தது.அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டும் வங்காள தேச அரசிடம் இருந்து இதற்கான ஒப்புதல் பெறுவதில் சிக்கல் இருப்பதால் இந்த திட்டத்தை டாடா கைவிட்டு விட்டதாக சொல்கிறது. இனிமேலும் அங்கு முதலீடு செய்யும் திட்டம் இல்லை என்று டாடா அறிவித்து விட்டது. 2004ம் ஆண்டிலேயே அங்கு நான்கு பெரிய திட்டங்களை செயல்படுத்த டாடா நிறுவனம், வங்காள தேசத்திடம் விருப்பம் தெரிவித்து திட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால் 2006ம் வருடம் வரை இது பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முக்கிய சில விஷயங்களில் அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால் டாடா, அந்த திட்டத்தை கைவிட்டு விட்டது. டாடா நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவித்தபோது, நாங்கள் அங்கு வேறு துறைகளில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறோம் என்றனர்.


நன்றி : தினமலர்