Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Tuesday, January 12, 2010

தமி​ழ​கம் வந்த தமி​ழர்​கள் விரட்​டப்​பட்​டது ஏன்?

உலகம் முழு​வ​தி​லும் பல்​வேறு நாடு​க​ளில் தமி​ழர்​கள் பரவி வாழ்​கி​றார்​கள்.​ இன்று நேற்​றல்ல,​​ பல நூறாண்​டு​க​ளா​கத் தமி​ழர்​கள் பல நாடு​க​ளில் குடி​யேறி அந்​நா​டு​க​ளையே தங்​கள் சொந்த நாடு​க​ளாக ஏற்​றுக் கொண்டு வாழ்​கி​றார்​கள்.​ அதி​லும் ஏழா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்கு முன்பு இலங்​கை​யும் இந்​தி​யா​வும் கட​லால் பிரிக்​கப்​ப​டு​வ​தற்கு முற்​பட்ட காலத்​திற்கு முன்பே இரு​பு​றத்​தி​லும் வாழ்ந்த தமி​ழர்​கள் மொழி​யா​லும் பண்​பாட்​டா​லும் மிக நெருங்​கி​ய​வர்​க​ளாக இருந்​தார்​கள்.​

சங்க காலப் புல​வ​ரான ஈழத்து பூதந்​தே​வ​னார் காலத்தி​லி​ருந்து சென்ற நூற்​றாண்​டில் ஆறு​முக நாவ​லர் காலம் வரை​யி​லும்,​​ அதற்​குப் பிறகு இன்​று​வ​ரை​யி​லும் மட்​டு​மல்ல,​​ இனி எதிர்​கா​லத்​தி​லும் ஈழத் தமி​ழர்​க​ளுக்​கும் தமி​ழ​கத் தமி​ழர்​க​ளுக்​கும் உள்ள உறவு என்​பது தொப்​புள் கொடி உற​வா​கும்.​

ஈ​ழத் தமி​ழர்​கள் மட்​டு​மல்ல பிற​நா​டு​க​ளில் வாழ்​கிற தமி​ழர்​க​ளும் தங்​க​ளது பண்​பாட்​டுத் தாய​க​மா​கக் கரு​து​வது தமிழ்​நாட்​டையே ஆகும்.​ தமிழ்​நாட்​டுக்​கும் பிற நாடு​க​ளில் வாழ்​கிற தமி​ழர்​க​ளுக்​கும் இடையே உள்ள உறவு என்​பது தாய்-​சேய் உறவு ஆகும்.​

மொழி,​​ பண்​பாடு,​​ கலை ஆகி​ய​வற்​றின் அடிப்​ப​டை​யில் உல​கம் எங்​கும் நடை​பெ​றும் தமிழ் ஆய்​வு​களை ஒருங்​கி​ணைக்​க​வும் உல​கத் தமி​ழர்​களை ஒன்​று​ப​டுத்​த​வும் உல​கத் தமிழ் ஆராய்ச்சி மன்​றம் ஈழத் தமி​ழ​றி​ஞர் தனி​நா​ய​கம் அடி​கள்,​​ தமி​ழ​கத்து அறி​ஞர்​கள் வ.அய்.​ சுப்​பி​ர​ம​ணி​யம்,​​ சாலை இளந்​தி​ரை​யன் போன்ற பல​ரின் கூட்டு முயற்​சி​யால் உரு​வாக்​கப்​பட்​டது.​

மு​தல் உல​கத் தமி​ழ​ராய்ச்சி மாநாடு மலே​சி​யா​வில் 1966-ம் ஆண்டு ஏப்​ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மிகச்​சி​றப்​பாக நடை​பெற்​றது.​ உல​கெங்​கும் உள்ள பல்​வேறு நாடு​க​ளைச் சேர்ந்த தமி​ழ​றி​ஞர்​கள் இம்​மா​நாட்​டில் பங்கு பெற்​ற​னர்.​ அப்​போது தமி​ழ​கத்​தின் முத​ல​மைச்​ச​ராக இருந்த எம்.​ பக்​த​வத்​ச​லம் தலை​மை​யில் இரா.​ நெடுஞ்​செ​ழி​யன்,​​ பி.டி.ராஜன் உள்​பட பல​கட்​சித் தலை​வர்​கள் தமி​ழ​கக் குழு​வா​கச் சென்று கலந்து கொண்​ட​னர்.​

1968-ம் ஆண்டு ஜன​வரி 3 முதல் 10-ம் தேதி வரை சென்​னை​யில் 2-வது உல​கத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடை​பெற்​ற​போ​தும் அனைத்து நாடு​க​ளைச் சேர்ந்த தமி​ழ​றி​ஞர்​க​ளும் வேறு​பாடு இன்றி கலந்து கொண்​ட​னர்.​ ராஜாஜி,​​ பெரி​யார்,​​ காம​ரா​சர்,​​ ஜீவா,​​ ம.பொ.சி.​ போன்ற பல​வேறு கட்​சித் தலை​வர்​க​ளை​யும் முத​ல​மைச்​ச​ராக இருந்த அண்ணா,​நேரில் சென்று அழைத்து இம்​மா​நாட்​டில் சிறப்​பு​ரை​யாற்ற வைத்​தார்.​ அவர்​க​ளும் அவ​ரு​டன் ஒத்​து​ழைத்​த​னர்.​ அனை​வ​ரும் தமி​ழர்​கள் என்ற உணர்​வு​டன் அர​சி​யல் வேறு​பா​டு​களை மறந்து ஒன்​றி​ணைந்து உல​கத் தமி​ழர்​க​ளின் ஒற்​று​மைக்கு வலிமை சேர்த்​த​னர்.​

1970-ம் ஆண்டு 3-வது மாநாடு பாரி​சி​லும் 1974-ம் ஆண்டு நான்​கா​வது மாநாடு யாழ்ப்​பா​ணத்​தி​லும் ஒற்​றுமை குலை​யாத வகை​யில் நடை​பெற்​றது.​ யாழ்ப்​பாண மாநாட்​டில் சிங்​கள ராணு​வம் புகுந்து சுட்டு 9 தமி​ழர்​கள் உயிர் துறந்த துயர நிகழ்ச்​சி​யும் நடை​பெற்​றது.​

1981-ம் ஆண்டு ஜன​வரி 4 முதல் ​ 10-ம் தேதி வரை மது​ரை​யில் நடை​பெற்ற ஐந்​தா​வது உல​கத் தமிழ் மாநாட்​டின் போது முத​ல​மைச்​ச​ராக இருந்த எம்.ஜி.ஆர்.​ விடுத்த அழைப்பை அனைத்​துக்​கட்​சித் தலை​வர்​க​ளும் ஏற்று மாநாட்​டில் பங்கு கொண்​ட​னர்.​ ஆனால் தி.மு.க.​ தலை​வ​ரான கரு​ணா​நிதி மாநாட்​டில் கலந்து கொள்​வ​தைத் தவிர்த்​தார்.​ அன்றி​லி​ருந்து இந்த ஒற்​று​மை​யைச் சீர்​கு​லைக்​கும் நட​வ​டிக்​கை​கள் தொடங்​கின.​

1995-ம் ஆண்டு ஜன​வரி 1 முதல் 5-ம் தேதி வரை தஞ்​சா​வூ​ரில் நடை​பெற்ற 8-வது மாநாட்​டின் போது முத​ல​மைச்​சர் ஜெயல​லி​தா​வின் அழைப்பை ஏற்று பல கட்​சித் தலை​வர்​க​ளும் கலந்து கொண்​ட​னர்.​ அதி​லும் கரு​ணா​நிதி கலந்து கொள்​ள​வில்லை.​ இம்​மா​நாட்​டின் போது​தான் தமி​ழர்​களை அவ​ம​திக்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.​

சு​வீ​டன் நாட்​டுத் தமி​ழ​றி​ஞர் பீட்​டர் சால்க்,​​ ஈழத் தமி​ழ​றி​ஞர் சிவத்​தம்பி ஆகி​யோர் மாநாட்​டில் உரை​யாற்ற அழைக்​கப்​பட்டு,​​ இங்கு வந்த பிறகு அவர்​க​ளைக் கட்​டா​யப்​ப​டுத்தி வெளி​யேற்​றிய வெட்​க​க​ர​மான நிகழ்ச்சி நடை​பெற்​றது.​ உல​கத் தமி​ழர்​கள் அனை​வ​ரும் இதை வன்​மை​யா​கக் கண்​டித்​த​னர்.​

1998-ம் ஆண்டு தஞ்​சை​யில் நடை​பெற்ற ​ 6-வது உலக சைவ மாநாட்​டில் கலந்து கொள்ள வெளி​நா​டு​க​ளைச் சேர்ந்த தமி​ழர்​கள் பலர் வந்​தி​ருந்​த​னர்.​ ஆனால் தென்​னாப்​பி​ரிக்​கா​வில் இருந்து வந்​தி​ருந்த வீர​பத்​தி​ரன்,​​ இலங்​கை​யைச் சேர்ந்த மனோன்​மணி சண்​மு​க​தாஸ்,​​ பிரிட்​ட​னைச் சேர்ந்த டாக்​டர் சிவ​தா​சன் தம்​ப​தி​யி​னர் ஆகிய நால்​வர் வெளி​யேற்​றப்​பட்​ட​னர்.​ இதற்கு எதி​ராக மாநாட்​டுப் பிர​தி​நி​தி​கள் அற​வ​ழி​யில் போரா​டி​னர்.​ ஆனா​லும் எது​வும் நடக்​க​வில்லை.​ அப்​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த கரு​ணா​நிதி இதைத் தடுக்க எது​வும் செய்​ய​வில்லை.​

அ​தற்​குப் பிறகு 2002-ம் ஆண்டு ஜூலை 20,​ 21 ஆகிய நாட்​க​ளில் சென்​னை​யில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் தொடக்க விழா மாநாடு நடை​பெற்​ற​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த ஜெயல​லிதா அதற்​குத் தடை​வி​தித்​தார்.​ அர​சி​ய​லுக்கு அப்​பாற்​பட்ட மாநாடு என்று தெரிந்​தும் இந்​தத் தடை விதிக்​கப்​பட்​டது.​ உயர் நீதி​மன்​றம் தலை​யிட்டு அந்​தத் தடையை நீக்கி மாநாட்​டுக்கு அனு​மதி வழங்​கி​யது.​

÷2004-ம் ஆண்டு பெங்​க​ளூ​ரில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் மூன்​றாம் ஆண்டு நிறைவு மாநாட்​டின் போது மாநாட்​டைத் தொடங்​கி​வைப்​ப​தற்​காக அழைக்​கப்​பட்​டி​ருந்த இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் ஈழ​வேந்​தன்,​​ சென்னை விமான நிலை​யத்​தி​லேயே திருப்பி அனுப்​பப்​பட்​டார்.​ அதற்​கு​ரிய கார​ணம் எது​வும் அவ​ருக்கு அதி​கா​ரி​க​ளால் தெரி​விக்​கப்​ப​ட​வில்லை.​ தெற்​கா​சிய நாடு​க​ளின் கூட்​ட​மைப்​பான சார்க் நாடு​க​ளைச் சேர்ந்த நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் யாராக இருந்​தா​லும் இந்த நாடு​க​ளுக்​குள் சுற்​றுப்​ப​ய​ணம் செய்து வரு​வ​தற்கு விசா எது​வும் தேவை​யில்லை.​ இந்த விதி​யும் மீறப்​பட்​டது.​ இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​ன​ரான ஈழ​வேந்​த​னுக்கு உரிய விசா இருந்​தும் அவர் திருப்பி அனுப்​பப்​பட்ட அவ​லம் நேர்ந்​தது.​ அப்​போ​தும் முத​ல​மைச்​ச​ராக ஜெயல​லிதா இருந்​தார் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​

2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12,​ 13-ம் தேதி​க​ளில் சேலம் நக​ரில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் நான்​காம் ஆண்டு நிறைவு மாநாடு நடை​பெற்​ற​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த கரு​ணா​நிதி,​​ அதற்​குத் தடை​வி​தித்​தார்.​ இந்​தத் தடை​யும் உயர் நீதி​மன்​றத்​தால் நீக்​கப்​பட்டு மாநாடு வெற்​றி​க​ர​மாக நடை​பெற்​றது.​

2009-ம் ஆண்டு டிசம்​பர் 26,​ 27-ம் தேதி​க​ளில் தஞ்சை நக​ரில் நடை​பெற்ற உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் ​ ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக வந்த இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் சிவாஜி​லிங்​கம் சென்னை விமான நிலை​யத்தி​லி​ருந்து திருப்பி அனுப்​பப்​பட்​டார்.​ இது​வும் முத​ல​மைச்​சர் கரு​ணா​நி​தி​யின் ஆட்​சி​யின்​போ​து​தான் நடை​பெற்​றது.​

உ​ல​கத் தமி​ழர்​கள் ஒன்​று​கூடி தமது பிரச்​னை​கள் குறித்து கருத்​துப் பரி​மாற்​றம் செய்து கொள்​ளும் சுதந்​தி​ரம் தமிழ்​நாட்​டில் இல்லை என்​பதை இந்த வெளி​யேற்ற நிகழ்ச்​சி​கள் நமக்கு எடுத்​துக்​காட்​டு​கின்​றன.​ தமிழ்​நாட்​டைத் தங்​கள் தாய​க​மா​கக் கரு​து​கின்ற வெளி​நாட்​டுத் தமி​ழர்​கள்,​​ தமி​ழ​கம் வரும்​போ​தெல்​லாம் இப்​படி விரட்​டி​ய​டிக்​கப்​ப​டு​வது ஒட்​டு​மொத்த தமி​ழி​னத்​திற்கே அவ​மா​ன​மா​கும்.​

ஜெ​யல​லிதா அல்​லது கரு​ணா​நி​தி​யின் ஆட்​சிக் காலங்​க​ளில் தமிழ்​நாட்​டில் நடை​பெற்ற உல​கத் தமி​ழர் மாநா​டு​க​ளில் பங்​கேற்க வந்​த​வர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டி​ருந்​தால் பிர​ள​யம் எது​வும் நேர்ந்​தி​ருக்​காது.​ தமி​ழ​றி​ஞர்​களை அவ​ம​தித்த குற்​ற​மும் முத​ல​மைச்​சர்​கள் மீது படிந்​தி​ருக்​காது.​ வெளி​யேற்​றப்​பட்ட தமி​ழ​றி​ஞர்​கள் ஆனா​லும்,​​ நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் ஆனா​லும் அவர்​கள் அனை​வ​ரும் தமி​ழ​கத்​திற்​குப் புதி​ய​வர்​கள் அல்​லர்.​ எத்​த​னையோ முறை வந்து சென்​ற​வர்​கள்.​ ஜெயல​லிதா வேண்​டு​மா​னால் அவர்​க​ளைப் பற்றி அறி​யா​மல் இருக்​க​லாம்.​ ஆனால் கரு​ணா​நிதி அவர்​கள் குறித்து நன்கு அறிந்​த​வர்.​ என்​றா​லும் தில்​லி​யின் தமி​ழர் அவ​ம​திப்பு போக்​கி​னைத் தடுத்து நிறுத்தி தமி​ழர்​க​ளின் உரி​மையை நிலை​நாட்ட இரு​வ​ருமே தவ​றி​விட்​ட​னர்.​

இந்​தி​யா​வில் பிற மொழி பேசு​கி​ற​வர்​கள் நடத்​தும் உலக மாநா​டு​க​ளுக்கு வரு​கி​ற​வர்​கள் தாரா​ள​மாக வந்து சுதந்​தி​ர​மா​கப் பேசி​விட்​டுப் போகி​றார்​கள்.​ உல​கத் தெலுங்​கர் மாநாடு சில ஆண்​டு​க​ளுக்கு முன்​னால் ஹைத​ரா​பாத் நக​ரில் நடை​பெற்​ற​போது பிற​நா​டு​க​ளில் வாழும் தெலுங்​கர்​கள் அந்த மாநாட்​டில் கலந்​து​கொள்ள வந்​த​போது எவ்​வி​தத் தடை​யும் விதிக்​கப்​ப​ட​வில்லை.​ அவ்​வாறே பெங்​க​ளூ​ரில் நடந்த உலக கன்​னட மாநாட்​டி​லும் பிற நாடு​க​ளைச் சேர்ந்த கன்​ன​டர்​கள் தாரா​ள​மா​கக் கலந்​து​கொள்ள அனு​ம​திக்​கப்​பட்​ட​னர்.​

உ​ல​கப் பஞ்​சாபி மாநாடு சண்​டீ​க​ரில் நடை​பெற்​ற​போது கன​டா​வில் வாழ்ந்து கொண்​டி​ருந்த காலிஸ்​தான் இயக்க ஆத​ர​வா​ளர்​கள் இந்​தியா வர இந்​தி​யத் தூத​ர​கம் விசா தர மறுத்​து​விட்​ட​போது,​​ பஞ்​சாப் முத​ல​மைச்​சர் பிர​த​ம​ரி​டம் போராடி விசா வழங்​கச் செய்​தார்.​ இந்​திய அர​சால் தடை​செய்​யப்​பட்ட காலிஸ்​தான் அமைப்​பைச் சேர்ந்​த​வர்​கள் இந்​தி​யா​வுக்​குள் தாரா​ள​மாக வந்து தங்​கள் மொழி மாநாட்​டில் சுதந்​தி​ர​மா​கப் பேச​மு​டி​கி​றது.​ இதற்கு பஞ்​சாப் முத​ல​மைச்​ச​ரின் மொழி உணர்​வும் மத்​திய அர​சு​டன் போரா​டும் மன உறு​தி​யுமே கார​ண​மா​கும்.​

த​மிழ்​நாட்​டில் நடை​பெற்ற உல​கத் தமிழ் மாநாட்​டுக்கு வந்த பிற​நாட்​டுத் தமி​ழர்​கள் வெளி​யேற்​றப்​பட்​ட​தற்கு தான் பொறுப்​பல்ல மத்​திய அரசே பொறுப்பு என்று சொல்லி முத​ல​மைச்​சர் தப்​பித்​துக்​கொள்ள முடி​யாது.​ மத்​திய ஆட்​சி​யி​லும் இவ​ரது கட்சி ஓர் அங்​கம்.​ பிர​த​ம​ரி​டம் இவ​ருக்கு மதிப்பு நிறைந்த செல்​வாக்கு இருப்​ப​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் தமி​ழர்​க​ளுக்கு எதி​ரான மத்​திய அர​சின் நட​வ​டிக்​கை​களை இவர் தடுத்து நிறுத்த முன்​வ​ர​வில்லை என்று சொன்​னால் அது இவ​ரது சம்​ம​தத்​தோடு நடை​பெ​று​கி​றது என்​ப​து​தான் பொருள்.​

மு​த​ல​மைச்​சர் கரு​ணா​நிதி முன்​னின்று நடத்த இருக்​கும் உல​கத்​த​மிழ் செம்​மொழி மாநாட்​டில் பங்​கு​பெற உலக நாடு​களி​லி​ருந்து இத்​தனை இத்​தனை பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்ள இருக்​கி​றார்​கள் என்ற பட்​டி​யலை முத​ல​மைச்​சர் மிக்க பெரு​மி​தத்​து​டன் வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​ மற்​ற​வர்​கள் நடத்​தும் உல​கத்​த​மிழ் மாநா​டு​க​ளுக்கு வந்த பலரை வெளி​யேற்​றி​ய​வர் இப்​போது இவர் நடத்​தும் மாநாட்​டுக்​கா​வது உல​கத் தமி​ழர்​களை அனு​ம​திக்க முன்​வந்​தி​ருப்​பது மகிழ்ச்​சிக்​கு​ரி​யது.​ இவர்​க​ளில் யாரை​யே​னும் வெளி​யேற்​றா​மல் இருப்​பார் என நம்​பு​வோ​மாக.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

Monday, January 11, 2010

தமிழ் வெறும் துக்​க​டாவா...?

கடந்த ஒரு மாத​மாக நடந்​து​வ​ரும் சென்னை இசை விழா முடி​வ​டை​யும் நிலையை எட்​டி​விட்​டது.​ முக்​கி​ய​மான பழம்​பெ​ரும் சபாக்​க​ளின் நிகழ்​வு​கள் முடிந்​து​விட்​டன.​ சென்னை சங்​க​மத்​து​டன் இந்த ஆண்​டுக்​கான இசை​விழா நிறை​வு​பெ​றும்.​

உ​ல​கின் பல்​வேறு நாடு​க​ளி​லும் இது​போன்ற இசை,​​ நாட்​டி​யம் தொடர்​பான கலை விழாக்​கள் நடை​பெ​று​கின்​றன.​ ஆகஸ்ட் மாதம் எடின்​பரோ சர்​வ​தே​சக் கலை​விழா மிக​வும் விம​ரி​சை​யா​கக் கொண்​டா​டப்​ப​டும் விழா.​ 1947-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த இசை,​​ நாட்​டிய விழா​வில் பங்​கு​பெ​ற​வும்,​​ கலந்​து​கொள்​ள​வும் உல​கெங்​கி​லும் இருந்து கலை​ஞர்​க​ளும் ரசி​கர்​க​ளும் குவி​கி​றார்​கள்.​ ஆனால்,​​ இந்த இசை விழா நடப்​பது ஆறே ஆறு அரங்​கங்​க​ளில் மட்​டுமே.​

லண்​டன் நாட்​டிய விழா,​​ நியூ​யார்க் நாட்​டிய விழா,​​ ஐரோப்​பிய நாட்​டிய விழா என்று எத்​தனை எத்​த​னையோ இசை,​​ நாட்​டிய விழாக்​கள்.​ ஆனால்,​​ அவை அனைத்​துமே வியா​பா​ரக் கண்​ணோட்​டத்​து​டன்,​​ பல தொழில் நிறு​வ​னங்​க​ளும்,​​ அந்​தந்த நகர அமைப்​பு​க​ளும் சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர்ந்து தங்​க​ளது பொரு​ளா​தா​ரத்தை மேம்​ப​டுத்த இது​போன்ற கலை நிகழ்ச்​சி​களை விளம்​ப​ரப்​ப​டுத்​திக் குளிர்​காய முற்​ப​டு​கின்​ற​னவே தவிர,​​ கலைக்​காக நடத்​தப்​ப​டும் விழாக்​களா என்​றால் கிடை​யாது.​

ஆ​னால் நமது சென்​னை​யில் ஆண்​டு​தோ​றும் நடை​பெ​றும் இசை​விழா அப்​ப​டிப்​பட்​ட​தல்ல.​ இது வியா​பா​ரத்​துக்​காக நடத்​தப்​ப​டு​வது அல்ல.​ சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர வேண்​டும் என்​ப​தற்​காக ஏற்​பாடு செய்​யப்​ப​டு​வ​தும் அல்ல.​ கலைக்​கா​கக் கலா​ர​சி​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் நமது சென்னை இசை விழா​வின் பிர​மாண்​டம் உல​கில் வேறு எந்​தப் பகு​தி​யில் நடை​பெ​றும் விழாக்​க​ளுக்​கும் இல்லை என்​ப​தால்​தான்,​​ சென்னை மாந​க​ரம் இந்​தி​யா​வின் கலா​சார தலை​ந​க​ரம் என்று போற்​றப்​ப​டு​கி​றது.​

73 சபாக்​கள் ஏறத்​தாழ 2,850 இசை,​​ நாட்​டிய நிகழ்ச்​சி​களை நடத்தி நாலா​யி​ரத்​துக்​கும் மேற்​பட்ட கலை​ஞர்​க​ளின் திற​மையை ரசி​கர்​க​ளுக்கு விருந்து படைக்​கும் இந்த அதி​ச​யத்​தைப் பார்த்து வட​நாட்​ட​வ​ரும்,​​ வெளி​நாட்​ட​வ​ரும் வாய் பிளந்து ஆச்​ச​ரி​யப்​ப​டு​கி​றார்​கள்.​ ஆண்​டு​தோ​றும் சில நூறு புதிய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் அறி​மு​க​மா​கி​றார்​கள்.​ சொல்​லப்​போ​னால் இந்த இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளில் பலர் பணத்​துக்​காக இசை​யைத் தேர்ந்​தெ​டுக்​கா​மல்,​​ இசையை இசைக்​காக நேசிப்​ப​வர்​க​ளா​க​வும் இருக்​கி​றார்​கள்.​

கர்​நா​டக இசை என்​பதை நாம் தென்​னிந்​திய இசை அல்​லது திரா​விட இசை என்று சொல்​வ​து​தான் சரி.​ எப்​ப​டித் தமி​ழர்,​​ கேர​ளத்​த​வர்,​​ கன்​ன​டர்,​​ ஆந்​தி​ரர் ஆகிய அனை​வ​ரை​யும் வட​வர்​கள் "மத​ரா​சி​கள்' என்று குறிப்​பி​டு​கி​றார்​களோ அதைப்​போல,​​ நமது தஞ்​சைத் தர​ணி​யில் தோன்றி தென்​ன​க​மெங்​கும் பர​விய தென்​னக இசை​யைக் கர்​நா​டக இசை என்று குறிப்​பி​டு​கி​றார்​கள்,​​ ஆற்​காடு நவா​பு​கள் அப்​போது கர்​நா​டிக் நவாப் என்​றும் அழைக்​கப்​பட்​ட​னர்.​ இவர்​கள் கிருஷ்ணா நதிக்​கும் கொள்​ளி​டத்​துக்​கும் இடை​யி​லான பகு​தியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்​த​னர்.​ மைசூர் உள்​பட உள்ள பகு​தியை ஆண்ட கர்​நா​டிக் நவா​பு​க​ளின் நாட்டு இசை​யைக் கர்​நா​டக இசை என்று இந்​துஸ்​தா​னிய இசை மர​பி​னர் அழைக்க முற்​பட்​ட​னர்.​ இது​தான் வர​லாற்று உண்மை.​

சப்த ஸ்வ​ரங்​க​ளின் அடிப்​ப​டை​யில் அமைந்த இசை எப்​ப​டித் தமி​ழி​சை​யா​கும் என்று கேட்​ப​வர்​கள் மறந்​து​வி​டும் ஒன்று,​​ இந்த சப்த ஸ்வ​ரங்​கள் நமது பண்​க​ளின் பரி​ணா​மம்​தான் என்​பதை.​ இசை​யும்,​​ முழ​வும்,​​ தாள​மும்,​​ கூத்​தும்,​​ அபி​ந​ய​மும் ஆய இவை ஐந்​தும் பஞ்ச மரபு என்​பார்​கள்.​ "பஞ்ச மரபு' என்​கிற சங்க கால நூலில் இசை மர​பின் வங்​கிய மரபு என்​கிற உட்​பி​ரி​வில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் ​ சுத்த எழுத்​தால், ""வரி​ப​ரந்த கண்​ம​ட​வாய் வைக்​கத் தெரி​வ​ரிய ஏழி​சை​யும் தோன்​றும்.​ இத​னுள்ளே பண் பிறக்​கும்.​ சூழ் முத​லாம் சுத்​தத் துளை'' என்று வங்​கி​யம் ​(புல்​லாங்​கு​ழல்)​ வர்​ணிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​

ந​மக்கே உரித்​தான இந்த இசையை நாம் தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால் ​ முத​லில் அந்த இசை பாம​ர​னுக்​கும் புரி​யும் இசை​யாக இருக்க வேண்​டும்.​ அதற்கு அதி​க​மா​கத் தமிழ் சாகித்​யங்​கள் ​(பாடல்​கள்)​ கையா​ளப்​பட வேண்​டும்.​ பெய​ருக்​குத் துக்​க​டா​வாக ஒரு திருப்​பு​கழோ,​​ திருப்​பா​வையோ பாடு​வது என்​பது இசையை மட்​டு​மல்ல,​​ தமி​ழை​யும் கேவ​லப்​ப​டுத்​து​வ​தாக இருக்​கி​றது.​

இ​ளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் பலர் தமிழ் சாகித்​யங்​களை மட்​டு​மல்ல,​​ தெலுங்கு சாகித்​யங்​க​ளை​யும் ஆங்​கி​லத்​தில் எழுதி வைத்​துப் பாடும் அவ​ல​நிலை ஏற்​பட்​டி​ருப்​பது எத்​தனை பேருக்​குத் தெரி​யும்?​ தமி​ழில் பாடி​னால் மட்​டும் போதாது.​ தமிழ் படித்​துத் தமி​ழைச் சரி​யாக உச்​ச​ரித்​தும் பாட வேண்​டும்.​

க​லை​ஞர்​களை ஒப்​பந்​தம் செய்​யும்​போது,​​ நீங்​கள் தமி​ழில் பாடு​வ​தாக இருந்​தால்​தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்​கள் நிபந்​தனை விதிப்​ப​தில்லை என்​கிற நியா​ய​மான கேள்​வியை எழுப்பி இருக்​கி​றது "விடு​தலை' நாளி​தழ்.​ நாமும் அந்​தக் கருத்​தையே பிர​திப​லிக்​கி​றோம்.​

இசை பாம​ரர்​க​ளைப் போய்ச் சேர வேண்​டும்.​ இந்த நோக்​கம் சென்னை சங்​க​மத்​தால் ஓர​ள​வுக்கு செயல்​வ​டி​வம் கொள்​கி​றது என்​ப​தை​யும் இங்கே பதிவு செய்​தாக வேண்​டும்.​ பூங்​காக்​க​ளில் பாடும் பல கலை​ஞர்​கள் பாம​ரர்​கள் ரசிக்க வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தமி​ழில் பாடு​கி​றார்​கள்.​ இவர்​கள் சபாக்​க​ளில் பாடும்​போது தமி​ழில் பாடு​வ​தில்​லையே ஏன்?​ அங்கே கூடும் ரசி​கர்​கள் தமிழ் பாடக்​கூ​டாது என்று சொல்​வார்​களா என்ன?​ இல்லை அவர்​கள்,​வெளி​நாட்​ட​வர்​க​ளும் வெளி​மா​நி​லத்​தா​ருமா,​​ ​ தமி​ழர்​கள்​தானே?​

ப​ணக்​கார நிலச்​சு​வான்​தார்​கள் மற்​றும் ஜமீன்​தார்​க​ளின் ஏக​போக உரி​மை​யாக இருந்த இசை இன்று அனை​வ​ருக்​கும் பொது​வாகி இருக்​கி​றது.​ இனி அதைப் பாம​ர​னும் ரசிக்​கும் நிலை ஏற்​பட வேண்​டும்.​ அதற்​குப் பள்​ளி​க​ளில் ஐந்​தாம் வகுப்பு வரை இசை கட்​டா​ய​மா​கக் கற்​றுத்​த​ரப்​பட வேண்​டும்.​ நமது சபாக்​க​ளும்,​​ இசை​வா​ணர்​க​ளும் தமி​ழி​சைக்கு முன்​னு​ரிமை தர​வேண்​டும்.​ தமி​ழ​கத்​தில் தமி​ழில் பாடுங்​கள் என்று வேண்​டு​கோள் விடுக்​கும் கேவ​லம் இனி​யும் தொட​ரக்​கூ​டாது!
நன்றி : தினமணி