நன்றி: தினமலர்
Friday, June 12, 2009
பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து : ஸ்விஸ் கம்பெனி நோவார்டிஸ் தயாரித்தது
உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் பன்றி காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து ஒன்றை சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான நோவார்டிஸ் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த மருந்து, செல்களில் இருந்து உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் அந்த மருந்து இன்னும் சோதனை அடிப்படையில்தான் இருக்கிறதாம். உலகம் முழுவதும் இது ஒழிக்கப்பட வேண்டிய நோய் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததற்கு பின்னர்தான், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை நோவார்டிஸ் வெளியே சொல்லியிருக்கிறது.
Labels:
தகவல்
அல்ட்ரா டெக் நிறுவனத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறியது எல் அண்ட் டி
அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியில் தனக்கு இருந்த 11.49 சதவீத பங்குகளை முழுவதுமாக எல் அண்ட் டி நிறுவனம் விற்று விட்டது. இந்த விற்பனை மூலம் கிடைத்த சுமார் ரூ.1,037 கோடி பணத்தை வேறு சில புதிய திட்டங்களில் முதலீடு செய்ய மற்றும் செலவு செய்ய எல் அண்ட் டி., முடிவு செய்திருக்கிறது. எல் அண்ட் டி.,யிடம் இருந்த அல்ட்ரா டெக்கின் 14.3 மில்லியன் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு சராசரியாக ரூ.175 என்று விலை வைத்து எல் அண்ட் டி., விற்றிருக்கிறது. அவைகள் 12 இந்திய மற்றும் 13 வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு விற்கப்பட்டிருக் கிறது. இந்த விற்பனை மூலம் கிடைத்த சுமார் ரூ.1,037 கோடி பணத்தில், பாதியை புதிய திட்டங்களில், குறிப்பாக கப்பல் கட்டும் தொழில், அணுமின் நிலையம், பாய்லர் மற்றும் டர்பைன் தயாரிப்பு மற்றும் ராணுவ தளவாட தொழில்களில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக எல் அண்ட் டி.,யின் தலைமை நிதி அதிகாரி தியோஸ்தலே தெரிவித்தார். அவர் இது பற்றி மேலும் தெரிவித்தபோது, இந்த நிதி ஆண்டில் எங்களுக்கு ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய திட்டம் இருக்கிறது என்றார். எங்களுக்கு இந்த விலை ஒரு நல்ல விலைதான். ஏனென்றால் நாங்கள் டெக் மகேந்திராவில் முதலீடு செய்தது மிக மிக குறைவு. எங்களது கணக்கு புத்தகத்தில் அந்த பங்குகளின் மதிப்பு ரூ.14 கோடி என்றுதான் இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்,
பங்கு சந்தை
Subscribe to:
Posts (Atom)