Monday, December 14, 2009

கொள்கையை மறந்த கூட்டணிகள்

இந்​திய அர​சிய​லில் தனிக்​கட்சி ஆட்சி என்​பது முடிந்​து​விட்​டது.​ கூட்​டணி ஆட்​சியே கோலோச்​சு​கி​றது.​ சுதந்​தி​ரம் வாங்​கித் தந்​த​தா​கக் கூறும் காங்​கி​ரஸ் கட்​சி​யா​கவே இருந்​தா​லும்,​​ பிர​தான எதிர்க்​கட்​சி​யான பா.ஜ.க.வாக இருந்​தா​லும் சரி,​​ அவை கூட்​டணி இல்​லா​மல் வெற்​றி​பெற முடி​யாது என்ற நிலை உரு​வா​கி​விட்​டது.​

நேற்​று​மு​தல் ​ பகை​வர்​க​ளாக இருந்​த​வர்​கள் இன்று முதல் நண்​பர்​க​ளாக மாறு​வ​தும்,​​ இன்று நண்​பர்​க​ளாக இருப்​ப​வர்​கள் நாளை எதி​ரி​க​ளாக ஆவ​தும் சாதா​ரண குடி​மக்​க​ளுக்கு வேடிக்​கை​யாக இருக்​க​லாம்.​ ஆனால்,​​ அர​சி​யல்​வா​தி​க​ளுக்கு இது வாடிக்​கை​யா​கி​விட்​டது.​

இந்​தச் சந்​தர்ப்​ப​வா​தத்​துக்கு ஒரு தத்​துவ விளக்​க​மும் ​ கூறு​கின்​ற​னர்.​ "அர​சிய​லில் நிரந்​த​ர​மான நண்​பர்​க​ளும் இல்லை;​ நிரந்​த​ர​மான பகை​வர்​க​ளும் இல்லை' என்னே அரு​மை​யான கொள்கை விளக்​கம்,​​ பாருங்​கள்!​

நல்​ல​வர்​கள் அர​சி​ய​லுக்கு வரா​மல் ஒதுங்கி ஓடும் கார​ணம் புரி​கி​றதா?​ க​டந்த காலங்​க​ளில் ஆட்​சி​பு​ரிந்த காங்​கி​ரஸ் மீதும்,​​ பாஜக மீதும் மக்​கள் நம்​பிக்கை இழந்து போனார்​கள்.​ அவர்​க​ளுக்கு ஒரு மூன்​றா​வது அணி தேவைப்​பட்​ட​போது,​​ அந்​தச் சூழ்​நி​லையை இட​து​சா​ரி​கள் பயன்​ப​டுத்​திக் கொள்​ளத் தவ​றி​விட்​ட​னர்.​ அப்​போது அவர்​கள் காங்​கி​ரஸ் கட்​சிக்​குத் துணை​யாக நின்​ற​னர்.​ மத​வா​தக் கட்​சி​யான பாஜக ஆட்​சிக்கு வந்​து​வி​டக்​கூ​டாது எனக் கார​ணம் கூறி​னர்.​

கா​லம் கடந்து அவர்​கள் மூன்​றா​வது அணியை உரு​வாக்​கி​ய​போது மக்​கள் நிரா​க​ரித்து விட்​ட​னர்.​ காங்​கி​ரஸ் கட்​சிக்​குக் கடை​சி​வரை முட்​டுக் கொடுத்​துக் கொண்​டி​ருந்த இட​து​சா​ரி​க​ளின் அர​சி​யல் மீது அவர்​க​ளுக்கு நம்​பிக்கை வர​வில்லை.​

மா​நி​லங்​க​ளி​லும் இது​தான் நிலைமை;​ தமிழ்​நாட்​டில் ஒவ்​வொரு தேர்த​லி​லும் மாறி​மாறி ​ திமுக அல்​லது அதி​முக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் இட​து​சா​ரி​க​ளின் மீது மக்​க​ளுக்கு எப்​படி நம்​பிக்கை வரும்?​ மத்​தி​யில் மூன்​றா​வது அணி​யின் தேவையை உணர்ந்​த​வர்​கள் மாநில அர​சி​ய​லுக்கு மூன்​றா​வது அணி தேவை​யில்லை என்று முடிவு செய்​து​விட்​ட​து​தான் மிகப்​பெ​ரிய வேடிக்கை!​

க​டந்த மக்​க​ள​வைத் தேர்த​லின்​போது ஈழத்​த​மி​ழர் பிரச்னை உச்​ச​கட்​டத்​தில் இருந்​தது.​ கடை​சி​நாள் வரை பத​வி​சு​கத்தை அனு​ப​வித்த பாட்​டாளி மக்​கள் கட்சி,​​ உறவை முறித்​துக் கொண்டு அதி​மு​க​வு​டன் கூட்​டணி சேர்ந்து கொண்​டதை மக்​கள் எப்​படி ஏற்​பார்​கள்?​ விடு​த​லைப்பு​லி​களை ஆத​ரித்​துக்​கொண்​டி​ருக்​கும் மதி​மு​க​வும்,​​ இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி மற்​றும் மார்க்​சிஸ்ட் கட்​சி​யும் எதிர்​மா​றான கொள்​கை​க​ளைக் கொண்ட அதி​மு​க​வு​டன் கூட்​டணி அமைத்​துக் கொண்​டன.​

தேர்​தல் முடி​வு​கள் எதிர்​பார்த்​த​படி அமை​யாத நிலை​யில் அதி​மு​க​வு​டன் கூட்​டணி முடிந்​து​விட்​டது என பாமக மற்​றும் இட​து​சா​ரிக் கட்​சி​கள் ஒரு​த​ரப்​பாக அறி​வித்​தன.​ இதற்கு முன் நடந்த இடைத்​தேர்த​லில் பாம​க​வைத் தொடர்ந்து அதி​மு​க​வும் தேர்​த​லைப் புறக்​க​ணிப்​ப​தாக அறி​வித்​தன.​ இட​து​சா​ரி​கள் தனி​யாக நின்று படு​தோல்​வி​ய​டைந்​த​னர்.​ ஆனால்,​​ பாடம் கற்​ற​னரா என்​பது தெரி​ய​வில்லை.​

இப்​போது திருச்​செந்​தூர்,​​ வந்​த​வாசி ​(தனி)​ சட்​டப்​பே​ரவை இடைத் தேர்த​லில் அதி​முக நிற்​ப​தாக அறி​வித்​த​வு​டன் இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யி​னர் அவ​ச​ரம் அவ​ச​ர​மாக அதன் தலை​வ​ரைச் சந்​தித்து ஆத​ரவு தெரி​வித்​துள்​ள​னர்.​ மார்க்​சிஸ்ட் கட்​சி​யி​னர் அதி​மு​க​வுக்கு ஆத​ரவு தெரி​வித்​து​விட்டு,​​ அவர்​கள் மேடை​யில் பேசப் போவ​தில்லை என்​றும் தனி​யா​கவே கூட்​டம் போட்டு ஆத​ரவு தேடப் போவ​தா​க​வும் அறி​வித்​துள்​ள​னர்.​

"ஈழத் தமி​ழர் பிரச்​னை​யில் எங்​கள் கோரிக்​கையை மத்​திய அரசு கேட்​க​வில்லை' என்று நீலிக்​கண்​ணீர் வடிக்​கும் திமுக ,​​ காங்​கி​ர​சின் உறவை உத​றித்​தள்ள முன்​வ​ர​வில்லை.​ அப்​படி ஒரு நிலை உரு​வா​னால்,​​ அந்​தக் காங்​கி​ரஸ் கட்​சி​யு​டன் கூட்​டணி அமைக்க அதி​முக காத்​துக்​கொண்​டி​ருக்​கி​றது.​ இது​தான் இங்கே அர​சி​யல் கட்​சி​க​ளின் கூட்​ட​ணிக் கொள்கை.​

த​மி​ழ​கத்​தில் மறு​ப​டி​யும் இடைத்​தேர்​தல் அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​ திருச்​செந்​தூர்,​​ வந்​த​வாசி ​(தனி)​ ஆகிய இரண்டு சட்​டப்​ பே​ர​வைத் தொகு​தி​க​ளுக்​கும் வரும் 19-ம் தேதி தேர்​தல் நடை​பெ​று​கி​றது.​ வாக்கு எண்​ணிக்கை டிசம்​பர் 23-ம் தேதி நடை​பெற்று அன்றே முடி​வு​கள் தெரிந்​து​வி​டும் என்று அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

வந்​த​வாசி ​(தனி)​ தொகு​திக்கு அந்​தத் தொகுதி திமுக உறுப்​பி​ன​ராக இருந்த ஜெய​ரா​மன் மறைவு கார​ண​மாக அத் தொகு​தி​யில் தேர்​தல் நடை​பெ​று​கி​றது.​ திருச்​செந்​தூர் தொகு​தி​யில் அத் தொகுதி அதி​முக உறுப்​பி​ன​ராக இருந்த அனிதா ராதா​கி​ருஷ்​ணன் அந்​தப் பத​வியை ராஜி​நாமா செய்​து​விட்டு அதி​மு​கவி​லி​ருந்து விலகி திமு​க​வில் சேர்ந்​து​விட்​டார்.​ இத​னால் இந்​தத் தொகு​தி​யில் இடைத்​தேர்​தல் நடை​பெ​று​கி​றது.​

தி​ருச்​செந்​தூர் தொகு​தி​யில் 25 பேரும்,​​ வந்​த​வாசி ​(தனி)​ தொகு​தி​யில் 14 பேரும் போட்​டி​யி​டு​கின்​ற​னர்.​ இதில் திமுக,​​ அதி​முக,​​ தேமு​திக ஆகிய மூன்று கட்​சி​க​ளும் ​ மோது​வ​தால் மும்​மு​னைப்​போட்டி ஏற்​பட்​டுள்​ளது.​

இ​டைத்​தேர்​தல் என்​றாலே ஒரு பர​ப​ரப்​பு​தான்.​ இப்​போது ஆட்​சி​யில் இருக்​கும் ஆளும் கட்​சி​யின் மதிப்​பீடு அந்​தத் தேர்​தல் மூலம் கணிக்​கப்​ப​டும்.​ அத்​து​டன் வரப்​போ​கும் தேர்​த​லுக்​கான முன்​னோட்​ட​மா​க​வும் இது அமை​யும் என்​ப​தால் இந்த முடி​வு​கள் மக்​க​ளால் பர​ப​ரப்​பாக எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​

ஆ​ளும் கட்சி எப்​ப​டி​யா​வது வெற்றி பெற்​று​விட வேண்​டும் என்று எண்​ணு​வ​தும்,​​ அதனை எதிர்க்​கட்​சி​கள் எப்​ப​டி​யா​வது முறி​ய​டித்​து​விட வேண்​டும் என்று திட்​ட​மி​டு​வ​தும் இயல்பு.​ இத​னால்​தான் இடைத்​தேர்​தல் முக்​கி​யத்​து​வம் பெற்​று​வி​டு​கி​றது.​ லஞ்​ச​மும் ஊழ​லும் தலை​வி​ரித்து ஆடு​கி​றது.​

இ​டைத்​தேர்த​லில் வாக்​கா​ளர்​க​ளுக்​குப் பணம் விநி​யோ​கிப்​ப​தைத் தடுக்க தீவிர கண்​கா​ணிப்பு நட​வ​டிக்கை மேற்​கொள்​ளப்​ப​டும் என்​றும்,​​ வீடு​க​ளுக்​குப் பால்,​​ பத்​தி​ரிகை வினி​யோ​கம் செய்​ப​வர்​கள் தீவி​ர​மா​கக் கண்​கா​ணிக்​கப்​ப​டு​வர் என்​றும்,​​ மேலும் சுய​உ​த​விக்​கு​ழுக்​கள் மூலம் பணம் பட்​டு​வாடா நடை​பெ​றா​மல் தடுக்க அவர்​கள் மீது கண்​கா​ணிப்பு நட​வ​டிக்கை மேற்​கொள்​ளப்​ப​டும் என்​றும் தமி​ழ​கத் தேர்​தல் அதி​காரி நரேஷ் குப்தா கூறி​யுள்​ளார்.​

தேர்​தல் நேரங்​க​ளில் வாக்​குச் சேக​ரிக்க வரும் வேட்​பா​ளர்​க​ளி​டம்,​​ "எங்​கள் தெரு​வுக்​குக் குடி​நீர் வசதி வேண்​டும்;​ சாலை வசதி தேவை' என்று கோரிக்​கை​களை முன்​னி​றுத்​து​வார்​கள்.​ ஆனால்,​​ இப்​போது மக்​கள் பணம்​கேட்க ஆரம்​பித்து விட்​டார்​கள் என்​றும் அவர் வருத்​தத்​து​டன் கூறி​யுள்​ளார்.​

இ​தற்​குக் கார​ணம் என்ன?​ அர​சி​யல் கட்​சி​கள் தானே!​ அவர்​கள் மீது இது​வரை ஏதே​னும் நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டி​ருக்​கி​றதா?​ பெய​ருக்கு வழக்​கு​கள் போடு​வார்​கள்.​ அது அடுத்த தேர்​தல்​வரை தொட​ரும்.​ அவர்​கள் ஆளும் கட்​சி​யா​னால்,​​ அந்த வழக்​கு​கள் கிடப்​பில் போடப்​ப​டும் அல்​லது திரும்​பப் பெறப்​ப​டும்.​

வெற்றி பெற்​ற​தாக அறி​விக்​கப்​பட்ட வேட்​பா​ளரை எதிர்த்து வழக்​குத் தொடர்ந்​தால் அதன் தீர்ப்பு வர​வும்,​​ அடுத்த தேர்​தல் வர​வும் சரி​யாக இருக்​கும்.​ "வெற்றி பெற்​றது செல்​லாது' என்று அறி​விக்​கப்​பட்ட ​ தகு​தி​யி​ழந்த அந்த உறுப்​பி​னர்,​​ முழு​ப​த​விக்​கா​லப் பய​னை​யும் அனு​ப​வித்து விட்டே வெளி​யே​று​கி​றார்.​ அவர் இது​வரை பெற்ற ஊதி​யம் மற்​றும் சலு​கை​க​ளைப் பறி​மு​தல் செய்ய சட்​டத்​தில் இடம் இருக்​கி​றதா?​ இத்​தனை காலம் வழக்​கா​டி​ய​வர் பெறப்​போ​கும் பயன்​என்ன?​

""அர​சி​யல் கட்​சி​கள் பணம் கொடுத்​தால் வாக்​கா​ளர்​கள் வாங்​கக்​கூ​டாது'' என்​னும் பிர​சா​ரம் மக்​க​ளி​டம் எடு​ப​ட​வில்லை.​ எந்​தக் கொள்​கை​யும் இல்​லா​மல் கூட்​டணி அமைத்​துக் கொண்டு வெற்​றி​பெற்று பத​விக்​கா​வும்,​​ பணத்​துக்​கா​க​வும் அலை​யும் அவர்​க​ளி​டம்,​​ ""வாங்​கி​யது வரை ஆதா​யம்'' என்றே மக்​கள் நினைக்​கின்​ற​னர்.​

"உங்​க​ளுக்​காக உழைக்க எங்​க​ளுக்கு உத்​த​ர​வி​டுங்​கள்' என்​பது கேட்​ப​தற்கு நன்​றாக இருக்​கி​றதே தவிர நடை​மு​றை​யில் நன்​றாக இல்​லையே!​ மக்​கள் சேவைக்​கா​கவே பத​வி​க​ளைத் துச்​ச​மா​கத் தூக்கி எறிந்த தூய தலை​வர்​களை நாடு மறந்​து​விட்​டது.​ இப்​போது,​​ "மக்​கள் சேவையே மகே​சன் சேவை' என்று கூறி​னால் ஏற்​கப்​ப​டுமா?​

இந்த இடைத்​தேர்​தல் வெற்றி தோல்​வி​யால் எவ்​வி​தப் பய​னும் ஏற்​ப​டப் போவ​தில்லை.​ தேசத்​தின் பணம் விர​யம் செய்​யப்​ப​டு​கி​றது.​

ஆந்​தி​ரத்​தின் முன்​னாள் முத​ல​மைச்​சர் ராஜ​சே​கர ரெட்​டி​யின் மனைவி விஜ​ய​லட்​சுமி சட்​டப்​பே​ரவை இடைத்​தேர்த​லில் போட்​டி​யின்​றித் தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​டி​ருக்​கி​றார்.​

அது​போல பொதுத் தேர்த​லில் வெற்​றி​பெற்ற கட்​சிக்கே அந்த இடத்தை அளித்து விடு​வ​தற்​கான தேர்​தல் திருத்​தங்​கள் கொண்​டு​வ​ரப்​பட வேண்​டும்.​

""இந்​தியா ஒரு பெரிய நாடாக இருப்​ப​தில் ஒரு விசே​ஷம் இருக்​கி​றது.​ கோல்​கத்​தா​வுக்​குப் போய் கம்​யூ​னி​சத்தை ஆத​ரித்​தும்,​​ அலா​கா​பாத்​துக்​குப் போய் முத​லா​ளித்​து​வத்தை ஆத​ரித்​தும்,​​ காரைக்​கு​டிக்​குப்​போய் வகுப்​பு​வா​தத்தை ஆத​ரித்​தும் பேச முடி​கி​ற​தல்​லவா?​'' என்று கவி​ஞர் கண்​ண​தா​சன் இந்​திய அர​சிய​லின் முரண்​பாட்​டைக் கேலி செய்​தார்.​ கொள்​கையை மறந்த கூட்​ட​ணி​க​ளுக்கு இது ஓர் ​ எச்​ச​ரிக்​கை​யா​கும்.
கட்டுரையாளர் : உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி

தண்ணீரை சுத்தப்படுத்தும் சாதனம்: டாடா நிறுவனம் அறிமுகம்

குடி தண்ணீரை வடிகட்டும் சாதனத்தை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுத்தமான குடிதண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு டாடா நிறுவனம் 'ஸ்வாச்' என்ற பெயரில் தண்ணீரை வடிகட்டும் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிலிப்ஸ், இந்துஸ்தான் லீவர், எம்.என்.சி.,போன்ற நிறுவனங்கள் தண்ணீர் வடிகட்டும் சாதனத்தை அறிமுகப்படுத்தி விட்டன.
இந்த வரிசையில் தற்போது டாடாவும் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக மும்பை, உத்தரபிரசேதம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சுத்தமான குடிநீரை வழங்கும் 10 லட்சம் 'ஸ்வாச்' சாதனங்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்த சாதனத்தை பயன்படுத்த மின்சாரம் தேவையில்லை. டாடா கன்சல்டன்சி நிறுவனமும், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனமும், டைட் டான் நிறுவனமும் ஒன்று சேர்ந்து ஸ்வாச் குடிநீர் சாதனத்தை வடிவமைத்துள்ளன. அரிசி தவிடு போன்ற பொருளால் நானோ தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட வடிகட்டும் பொருள் மூன்றாயிரம் லிட்டர் தண்ணீரை வடிகட்டும் திறன் வாய்ந்தது. அதன் பிறகு இந்த வடிகட்டும் சாதனம் தண்ணீரை வடிகட்டுவதை நிறுத்தி விடும். பிறகு வேறு ஒரு பில்டரை மாற்றி கொள்ளலாம். 'ஸ்வாச்' தண்ணீர் சுத்தப்படுத்தும் சாதனத்தின் ஆயுட்காலம் ஐந்து முதல் ஆறாண்டு காலம். மஞ்சள்காமாலை, டைபாய்டு, காலரா,போலியோ உள்ளிட்ட நோய்கள் தண்ணீர் மூலம் பரவுகின்றன. ஸ்வாச் தண்ணீர் வடிகட்டும் சாதனத்தின் மூலம் இந்த நோய்கள் பரவுவதை தடுக்க முடியும், என டாடா நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி : தினமலர்


விலை உயர்​வுக்​கு முன்பேர வர்த்தகம் காரணம் அல்ல

விலை உயர்​வுக்​கும் முன்​பேர வர்த்​த​கத்​துக்​கும் தொடர்​பில்லை என்று என்.​சி.​டி.​இ.​எக்ஸ் முன்பேர நிறு​வ​ன நிர்​வா​கத் தலை​வர் ஆர்.​ ராம​சே​ஷன் தெரி​வித்​தார். சென்​னை​யில் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் பேசிய அவர், அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​க​ளின் விலை உயர்​வைக் கட்​டுப்​ப​டுத்த அரசு உண​வுப் பொருள்​க​ளான பருப்பு,​​ சர்க்​கரை ஆகி​ய​வற்றை முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டுத்த தடை விதித்​தது.​ ஆனால் தடை விதிக்​கப்​பட்ட பிறகு இவற்றின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்​கி​யக் கார​ணமே தேவைக்​கேற்ப உற்​பத்தி இல்​லா​த​து​தான்.​ வெளி​நா​டு​க​ளில் முன்​பேர வர்த்​த​கத்​துக்கு ஒரு​போ​தும் தடை விதிப்​பது கிடை​யாது.​ அங்கு 100 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக முன்பேர வர்த்​தக நடை​முறை உள்​ளது.​ இத்​த​கைய சூழல் இந்​தி​யா​வில் உரு​வாக இன்​னும் பல ஆண்​டு​கள் ஆகும். முன்​பேர வர்த்​த​கம் தொடர்​பான விழிப்​பு​ணர்வை தொடர்ந்து என்​சி​டி​இ​எக்ஸ் ஈடுபட்டு வரு​கி​றது.​ இத​னால் முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டு​வோ​ரின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மாக உயர்ந்து வரு​கி​றது. முன்​பேர வர்த்​த​கத்​தால் நுகர்​வோ​ருக்கு மட்​டு மின்றி விவ​சா​யி​க​ளுக்​கும் கூடு​தல் விலை கிடைக்​கும் என்​றும் ராம​சே​ஷன் தெரிவித்தார்.
என்​சி​டி​இ​எக்ஸ் 2003ம் ஆண்டி​லி​ருந்து முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​பட்​டுள்​ளது.​ இதை கனரா வங்கி,​​ கிரி​சில்,​​ இஃப்கோ,​​ நபார்டு,​​ தேசிய பங்​குச் சந்தை,​​ எல்​ஐசி,​​ பஞ்​சாப் நேஷ​னல் வங்கி,​​ கோல்ட்​மேன் சாஷ்,​​ இன்​டர்​நே​ஷ​னல் எக்ஸ்​சேஞ்ச்,​​ ரேணுகா சுகர்ஸ் ஆகிய நிறு​வ​னங்​கள் இணைந்து தொடங்​கி​யுள்​ளன.​ இந்​நி​று​வ​னத்​தில் 5 லட்​சம் வாடிக்​கை​யா​ளர்​கள் உள்​ள​னர்.​ இந்​நி​று​வ​னம் 39 வேளாண் உற்பத்தி பொருட்​கள்,​ 6 உலோ​கங்​கள்,​​ 3 பாலி​மர்​கள்,​​ 4 எரி​சக்தி பொருள்​கள் உட்பட 59 பொருட்​க​ளின் முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​பட்​டுள்​ளது.​ நாடு முழு​வ​தும் 700 மையங்​க​ளில், இருபதாயிரம் டெர்​மி​னல்​க​ளு​டன் செயல்​ப​டு​கி​றது.​ ​
நன்றி : தினமலர்