Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Thursday, August 26, 2010

பாவம், கறவை மாடுகள்

இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு இலவசமாக அளித்துவிடலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. அதற்கு மத்திய அமைச்சர் சரத் பவார் மறுப்புத் தெரிவிக்கிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, இதை மனிதர்களுக்குக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் கறவை மாடுகளுக்காவது கொடுத்துவிடுங்களேன் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஏனென்றால், வைக்கோல் போன்ற உலர் தீவனங்களில் 40 விழுக்காடும், புல் போன்ற பசுந்தீவன வகைகளில் 36 விழுக்காடும், பிண்ணாக்கு போன்ற தீவன வகைகளில் 57 சதவீத விழுக்காடும் பற்றாக்குறை நிலவுகிறது என்று கால்நடைத் துறை தரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டனர். இந்தியாவில் உள்ள கறவை மாடுகளுக்குக் கிடைக்கும் தீவனம் போதுமானதாக இல்லை. மேலும், இவை தரமானதாகவும் இல்லை. ஆகவே, கறவைமாடுகள் குறைவாகப் பால் தருகின்றன என்பதுதான் அந்தக் கருத்து.

இந்தியாவில் பால் உற்பத்தி தற்போது ஆண்டுக்கு 10 கோடி டன்னாக உள்ளது. இந்த அளவினை 2022-ம் ஆண்டில் 17.2 கோடி டன்னாக உயர்த்த வேண்டும் என்று (அதாவது ஆண்டுதோறும் 4 விழுக்காடு வளர்ச்சி) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தீவனம் தொடர்பான எந்தவிதமான அக்கறையும் இல்லாததால், கறவை மாடுகள் பால் குறைவாக கொடுக்கும் நிலைதான் நீடிக்கிறது.

பால் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் 70 சதவீதம் தீவனத்துக்கே சென்றுவிடுகிறது என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், தீவனத்தின் விலையோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அண்மையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஈரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், போதுமான தீவனம் வழங்குவதுடன் பால் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

பால் ஒரு வணிகப் பொருளாக உருமாறும் முன்பு, வயல்களில் அறுவடை செய்தால், அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்பதாக இருந்தது. அதாவது தானியம் வீட்டுக்கு வரும். வைக்கோல் மாட்டுக்குப் போய், சாணமாக மீண்டும் உரமாகும். அறுப்புக்குப் பிறகு காட்டிலேயே இருக்கும் அடிப்பகுதி அடுத்த சாகுபடிக்கு மடக்கிப்போட்டு உழப்படும். இதனால் விவசாயிக்கு தீவனம் வாங்க வேண்டிய செலவு இல்லை. சாண உரமும் கிடைத்தது. வீட்டுக்குப் பாலும் கிடைத்தது.

பால் எப்போது வணிகப் பொருளாக மாறியதோ அப்போது செலவுகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணம் செலவிட்டு தீவனம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் தீவனம் விலை உயர்ந்துவிட்டதோடு, போதுமான அளவு கிடைப்பதும் இல்லை. இதற்கு அரசின் வர்த்தகக் கொள்கைகளும் காரணம்.

எண்ணெய் எடுக்கப்பட்ட பிண்ணாக்கில் 30 விழுக்காடு புரதம் இருக்கிறது. பசுக்களுக்கு இது போதுமானது. ஆனால், மத்திய அரசு எண்ணெய் பிழியப்பட்ட பிண்ணாக்கு ஏற்றுமதிக்கு 7 சதவீதம் ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிக்கிறது. 2009-ம் ஆண்டில் ஏறக்குறைய 5,000 கோடிக்கு பிண்ணாக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. பிறகு மாடுகளுக்கு பிண்ணாக்கு எப்படி கிடைக்கும்?

மாட்டுக்கு ஏற்ற உணவுதான் தவிடு. ஆனால், தவிட்டு எண்ணெய்க்காக அரிசி ஆலைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் பிழிவுக் கூடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன தவிடு மூட்டைகள். தவிட்டு எண்ணெய்க்கு மேற்கு வங்கம், சீனா, இந்திய தொழிற்சாலைகளில் வரவேற்பு அதிகம். ஆகவே, தவிடும் கிடைப்பதில்லை.

வைக்கோலை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ஏற்றிச் செல்வதற்கான கூலியே இதன் விலையை உயர்த்திவிடுகிறது. ஒரு லாரியில் 4 டன்னுக்கு மேலாக ஏற்ற முடிவதில்லை. இதை தொழில்நுட்பத் திறனுடன் செங்கல்போன்ற வில்லைகளாக அழுத்தி ஏற்றினால் 10 டன் வரை லாரியில் ஏற்ற முடியும். ஆனால், இதெல்லாம் கட்டுப்படியாகவில்லை.

ஒவ்வொரு மாநில அரசும் பசுக்களின் தீவனத்துக்கான தனி நிதிஒதுக்கீடு செய்து, இதில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கறவை மாடுகளுக்குப் போதுமான தீவனம் கிடைக்கிறதா என்பதை அறியவும், அதற்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப தீவனத்தைப் பரிந்துரை செய்யவும் பால்வளத் துறையில் ஊட்டச்சத்து அலுவலர்கள் இல்லை.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், தனது உறுப்பினர்களுக்காக தீவன உற்பத்தியைச் செய்கிறது என்றாலும் அது போதுமானதாக இல்லை. சுமார் 8000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் சங்கங்கள் இருக்கின்றன. அதன் தேவைக்கும், தீவன உற்பத்திக்கும் பெரும் இடைவெளி தமிழ்நாட்டிலும் இருக்கவே செய்கிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவுப் பால் உற்பத்திச் சங்கங்கள் மூலமாக நாளொன்றுக்கு 22.5 லட்சம் லிட்டர் பால் கிடைக்கிறது. இதுவே நல்ல தீவனம் கிடைக்கச் செய்தால், இதே எண்ணிக்கை கறவை மாடுகளிடம் இன்னும் கூடுதலாக பால் கிடைக்கும்.

இந்தியாவில் பால் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தீவனப் பற்றாக்குறையைப் போக்கி, குறைந்த விலையில் தீவனம் கிடைக்கச் செய்தால், இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதுடன் அதிகமாகவே பால் உற்பத்தி பெருகிட வழியுண்டு. விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். ஆனால், அரசு இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய 30 ஆயிரம் டன் பால் பவுடரை சுங்கவரி விலக்கு அளித்து இறக்குமதி செய்கிறது. அதேநேரத்தில், பிண்ணாக்குக்கு ஊக்கத்தொகை அளிப்பதோடு, எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் 4 விழுக்காடு ஊக்கத்தொகை தருகிறது.

என்னத்த சொல்ல! "மாட்டைக் கடிச்சி மனுஷனையும் கடித்த கதை' என்கிற பழமொழியைக் கொஞ்சம் மாற்றிப் போடத்தான் வேண்டியிருக்கிறது.
நன்றி : தினமணி

Tuesday, August 17, 2010

நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்...

சிறு,குறு விவசாயிகளின் பம்புசெட்டுகளில் உள்ள பழைய மின்மோட்டார்களை நீக்கிவிட்டு அரசின் சார்பில் புதிய மின்மோட்டார்கள் இலவசமாகப் பொருத்தித் தரப்படும் என்பதும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் புதிய பம்புசெட்டுகள் பொருத்தித் தரப்படும் என்பதும் தமிழக முதல்வரின் விடுதலை நாள் விழா அறிவிப்பு.

திறன் இல்லாத பழைய மோட்டார்களைப் பயன்படுத்துவதால், விவசாயத்துக்கான மின்சாரத்தில் 20 விழுக்காடு வீணாகிறது, இத்தகைய புதிய, தரமான மின்மோட்டார்களை இலவசமாகப் பொருத்தித் தருவதால் (இலவசமாக வழங்குவது மட்டுமல்ல, கிணற்றில் பொருத்தித் தருவதும்கூட இலவசம்தான்) இந்த மின்இழப்பைத் தவிர்த்துவிடலாம் என்பது முதல்வர் இதற்குக் கூறியிருக்கும் காரணம்.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 19 லட்சம் விவசாயிகள் தங்கள் கிணறுகளுக்கு மின்இணைப்புப் பெற்றுள்ளனர். இவர்களில் 15 லட்சம் பேர் சிறு, குறு விவசாயிகள். ஆக இப்போது முதல்வரின் அறிவிப்பின்படி 15 லட்சம் விவசாயிகளுக்கு மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் 4 லட்சம் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் பொருத்தித் தர வேண்டும். அதாவது மொத்தம் 19 லட்சம் மின்மோட்டர்களுக்கான செலவினத்தை தமிழக அரசு ஏற்றாக வேண்டும். ஒரு மின்மோட்டார் குறைந்தது 40 ஆயிரம் ஆகும். இந்தக் கணக்கின்படி இத்திட்டத்தின் மொத்த நிதித்தேவை ஏறக்குறைய 6,800 கோடி.

இந்தத் திட்டத்தை இத்தனை செலவில் அமல்படுத்தி, அனைத்து மின்மோட்டார்களையும் இலவசமாக மாற்றிப் பொருத்தினால், முதல்வர் கூறுவதைப்போல 20 விழுக்காடு வீணாகும் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுமா என்றால், அதுவும்கூட மிகப் பெரிய கேள்வியாகத்தான் இருக்கும். மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம் இலவச மின்சாரம் கூடாது என்று சொல்லி வந்தபோதிலும், பொதுவாக ஆண்டுக்கு 3,000 கோடி என்று மின்வாரியத்துக்கு அரசு ஒரு தொகையை மானியமாக வழங்கும் போதும், ஒவ்வொரு பம்புசெட்டில் உள்ள மீட்டரையும் ரீடிங் எடுத்து, அதன்படி உள்ள கட்டணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்த ஆணையம். ஆனால் தமிழக அரசோ, இலவசம் என்றான பின்பு எவ்வளவு மீட்டர் ரீடிங் இருந்தால் என்ன என்று சொல்வதோடு, ஆணையம் எதற்காக இதனை வலியுறுத்துகிறது என்கிற சிந்தனைக்கே திரும்பவில்லை. மின்வாரிய ஊழியர்கள் வயலுக்குப் போய், பம்புசெட்டுகளில் ரீடிங் எடுக்கும் வழக்கமே மறைந்தொழிந்துவிட்டது.

மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம், இலவச மின்சாரத்தையும் ரீடிங் செய்து கொடுக்க வேண்டும் என்கிற நடைமுறையானது, தமிழ்ப் பழமொழி சொல்வதைப்போல, "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பதைத் தவிர வேறில்லை.

ஒரு பம்புசெட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்பட்டிருக்கிறது என்பதை வைத்து, அந்த நிலத்தில் நடைபெற்ற விவசாயத்தின் வீச்சு, விளைச்சல் எல்லாவற்றையும் தோராயமாகக் கணக்கிட முடியும். மேலும், இந்த மின்சாரம் அந்த நிலத்தின் அளவுக்குத் தகுந்தபடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கணிப்பதன் மூலம், அவர்கள் தவறாக மின்சாரத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புகளும்கூட உண்டாகும். மேலும், ஒவ்வோராண்டும் இந்த மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் குறைதல் இருக்கிறதா என்பதைக் கொண்டு, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நல்லது கெட்டதுமான மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்க மறுத்துவிட்டது தமிழக அரசு.

இதனால், பம்புசெட் மின்சாரம் பல நேரங்களில் பண்ணை வீடுகளுக்கும் போகிறது. சில இடங்களில் கரும்பு பிழிவதற்கும் போகிறது. சில நேரங்களில் வெறுமனே லாரிகளில் தண்ணீர் நிரப்பவும் பயன்படுகிறது. வணிக ரீதியில் இவ்வாறு இலவச மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அரசியல் தலைவர்களை வரவேற்க சாலைகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் போடப்படும் குழல்விளக்குகளுக்கும்கூட, கட்சி பேதமின்றி, சாலையோரம் இருக்கும் பம்புசெட்டுகளிலிருந்து இலவசமாக மின்சாரத்தை இழுத்துக் கொள்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, தற்போது தரமான புதிய மின்மோட்டார்களை மாற்றிக் கொடுத்தால் அதனைப் பயன்படுத்தும் நேரம் அதிகரிப்பதுடன், மின்சாரத்தின் அளவும் அதிகரிக்குமே தவிர, குறையாது. அதாவது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாற்கர சாலைகள் அமைத்தால் வேகம் அதிகரித்து வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விபத்துகளும் அதிகரிப்பதைப் போலத்தான் இதுவும். நல்ல மின்மோட்டார்களை நன்றாகப் பயன்படுத்தி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சுவார்கள். வீணடிப்பார்கள், வேறென்ன?

கிணறுகளை ஆழப்படுத்துவதற்காக அண்மையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டது. அதேபோன்று மின்மோட்டார்களின் தரம் உயர்த்த மானியம் அளிக்கப்படுவது என அரசு முடிவு செய்திருந்தால் அதனைப் பாராட்டியிருக்கலாம்.

ஒரு டன் கரும்புக்கு மேலும் 500 அதிகரிக்கப்படும் என்றாலோ அல்லது நெல்லுக்கு விலை 500 அதிகம் என்றாலோ விவசாயிக்கு நன்மை கிடைக்கும். விவசாயத்துக்கு ஊக்கம் அளித்ததாகவும் அமையும்.

விதை நெல்லுக்கு மானியம் இல்லை என்று சொல்லும் அரசு, மின்மோட்டாரை இலவசமாக வழங்குவதால், மின்மோட்டார் உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சில நிறுவனங்கள் இதற்கான அனைத்து ஆர்டர்களையும் பெற்று வளம்பெறப் போகின்றன.

மக்கள் பணத்தை முறைப்படி செலவிடுவதில் தவறில்லை. காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி சாதாரண விவசாய மின்மோட்டார் வரை, திட்டங்கள் உண்மையான நோக்கத்தைத் தாண்டி, வீணாகின்றன என்பதும், யாரோ சிலர் அதனால் சில ஆயிரம் கோடி ரூபாய் பார்க்கிறார்கள் என்பதும் தான் நமது ஆதங்கம்.

"வயலுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்பது புரிகிறது. ஆனால் புல்லுக்கு மட்டுமே வாய்க்கால் நீர் ஓடி, நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றால்...
நன்றி : தினமணி

Saturday, January 23, 2010

நாம்தான் கிடைத்தோமா?

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் குழுதான் என்று வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூற, இல்லையில்லை இறுதி முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்று அடுத்த நாளே மறுத்து நமது வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

தேசியவாத காங்கிரஸ் என்ற தோழமைக் கட்சியின் தனிப்பெரும் தலைவர் சரத் பவார். அவருடைய சமீபகால அரசியல் நடவடிக்கைகள், மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள், நலன் சாராது கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அதிபர்கள், சர்க்கரை மொத்த வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் நலன் சார்ந்து இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு சாகுபடியாளர்களுக்குக் கட்டுபடியாகும் கொள்முதல் விலையை வாங்கித் தருவதில் அதிக ஆர்வம் காட்டாத சரத் பவார், இறக்குமதி கோதுமைக்குக் கூடுதல் விலை தருவதற்குத் தயக்கம் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து கோதுமை உற்பத்தியாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.

இதையெல்லாம் கூறக் காரணம், மரபணு மாற்றப்பட்ட கத்தரி விஷயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது என்று கூறி, இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கப்பட காரணமாக அவர் இருந்துவிடுவாரோ என்கிற அச்சம்தான். நல்லவேளை ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு அவருக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்.

பி.டி. கத்தரிக்காய் விதைகளை "மேகோ' (மகாராஷ்டிர உயர்விளைச்சல் விதை நிறுவனம்) என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்க பி.டி. நிறுவனம் தான் மகாராஷ்டிரத்தில் இப்படி ஒரு புதிய பெயரில் சில இந்தியர்களை முன்னிலைப்படுத்தி ஓர் இந்திய நிறுவனம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மரபணு மாற்றப்பட்ட இந்தக் கத்தரிக்காய் விதை உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை பெருமளவு நிலப்பரப்பில் விதைக்கப்பட்டு நேரடியாக சோதிக்கப்படவே இல்லை என்பதுதான்.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியாவது பரவாயில்லை. கத்தரிக்காய் என்பது நேரிடையாக மக்களால் உணவாகச் சாப்பிடப்படுவது. இதில் நச்சுக்கலப்பு இருந்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், அமெரிக்காவிலும் ஏனைய மேலைநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்கள் விவசாயத்துக்காக இருக்கும்போது, மரபணுப் பரிசோதனைகளை அங்கே நடத்தாமல் இந்தியா போன்ற ஏமாளி நாடுகளில் நடத்தி, நம்மைப் பரிசோதனைக் களமாக்குவதன் ராஜதந்திரம், சிறந்த அரசியல் ராஜதந்திரியான சரத் பவாருக்கு ஏன் தெரியவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.

இதே பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கி சாகுபடி செய்து, சாகுபடி பொய்த்ததால் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட இந்திய விவசாயிகள் எண்ணிக்கை சில ஆயிரம். அவர்களுக்கு இந்த நிறுவனம் எந்த நஷ்டஈட்டையும் அளித்ததாகத் தகவலே கிடையாது. ஆலைகளில் இந்தப் பருத்தியைக் கையாண்ட தொழிலாளர்களுக்கு ஒருவித அரிப்பும், இதர உடல் உபாதைகளும் ஏற்பட்டது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பசுமைப்புரட்சியை இந்த நாட்டில் கொண்டு வந்தபோது மிகவும் பெருமிதம் கொண்ட நமக்கு அதன் தீமைகள் புரிய பல ஆண்டுகள் பிடித்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மரபணு மாற்றிய கத்தரிக்காயைப் பன்னாட்டு நிறுவனம்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் நோக்கம் இந்தியர்கள் கத்தரிச் சாகுபடியில் அமோக லாபம் சம்பாதிக்க வேண்டும், பூச்சி அரிக்காத காய்கறிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும், ஓர் ஏக்கருக்கு இப்போது கிடைப்பதைவிட 3 மடங்கு 5 மடங்கு என்று கத்தரிக்காய் விளைய வேண்டும் என்பதெல்லாம் அல்ல. இவையெல்லாம் வியாபார உத்திக்காகக் கூறப்பட்டாலும் நம்முடைய பாரம்பரிய கத்தரிக்காய் ரகங்களைப் புழக்கத்திலிருந்து அகற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதன் பிறகு கத்தரிக்காய் என்றாலே நாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரித்துத்தரும் ரகத்தைத்தான் வாங்க வேண்டியிருக்கும். அப்போது அதற்குத் தரும் விலையும் அமோகமாக இருக்கும்.

அதைவிடுங்கள், அதனால் நிலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய கெடுதல்களை எப்படி முன்கூட்டியே அனுமானிப்பது? நாம் காரணம் இல்லாமலேயே சந்தேகப்படும் பத்தாம்பசலிகளாகவே கூட இருந்து தொலைப்போம், நாளை இதனால் கெடு விளைவுகள் ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றப் போவது யார்? போபாலில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரையும் வாழ்வையும் உறிஞ்சிய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனம் இன்று எங்கே? அதன் தலைவராக இருந்த ஆண்டர்சன் எங்கே? அவரைக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்த மன்மோகன் அரசு எடுத்த தீவிர முயற்சிகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் இப்போதும் முழுமையான நஷ்டஈடு கிடைக்காமல் தவிக்கிறார்களே, அவர்களுக்கு விடிவுதான் என்ன?

நாளை மரபணு கத்தரிக்காயால் அப்படியொரு கெடு பலன் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பிணை நிற்கப் போவது யார்? இந்தியாவில் அணு மின் நிலையம் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நேரிட்டால் மிகவும் குறைந்தபட்ச நஷ்ட ஈடு தந்தாலே போதும், வேறு எந்த ஜாமீனும் தேவையில்லை என்று ஒப்பந்தம் தயாரிக்கும் இந்த தேசபக்தர்களை நம்பியா நம் நாட்டு நிலங்களை புதிய மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு ஒப்படைப்பது?

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே கெல்லி எறிய தண்டியிலே ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்தார் அண்ணல் மகாத்மா காந்தி. நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா? என் செய்வது, ஐநூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பதற்குத்தான் வோட்டு என்றாகிவிட்ட பிறகு, விலைபேசுவது நம் நாட்டு சரத் பவாராக இருந்தால் என்ன, அமெரிக்க ஆண்டர்சனாக இருந்தால்தான் என்ன?
நன்றி : தினமணி

Saturday, January 16, 2010

அசல் அமிழ்கிறது... நகல் நர்த்தனமாடுகிறது...!

உழைப்பே உயர்வு தரும் என்று உழைப்புக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்கள் அடிக்கடி உரக்கக் குரல் கொடுப்பது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கவில்லை என்றால் உழைப்பவர்களும் ஒதுங்கிவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுவதும் புரிகிறது.

÷தமிழினம் தழைத்து ஓங்கியிருந்த காலத்தில் உழைப்பால் உயர்ந்தவர் என்று ஒருவரைச் சொல்லுகிறபோது, அவர் உடலுழைப்பால் உயர்ந்தவர் என்றே அறியப்பட்டார். சமீபகாலங்களில் அறிவியலின் அதீத வளர்ச்சியால் அமோக பலனடைந்து வருவோர் அறிவுழைப்பு என்று அறியப்படுகின்ற மூளை உழைப்பை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். மனித குலத்தின் உயிர்ப்புக்கே அடித்தளமாய் விளங்குகின்ற உடலுழைப்பை உதாசீனப்படுத்துவதில் அவர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.

÷ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிற காரணிகளில் முதலானதும் முக்கியமானதும் உழைப்பாகும். அந்த உழைப்பின் இரு கூறுகளான உடலுழைப்பையும் அறிவுழைப்பையும் இரு கண்களைப்போன்று சமநிலையில் வைத்துப் போற்றுகிற சமுதாயம்தான் வளம் பெற்றுப் பீடுநடை போடும் என்பது சமூக-பொருளியல் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் இருவித உழைப்புகளுக்கும் மதிப்பையும் விலையையும் நிர்ணயிக்கிற அதிகாரம் அறிவுழைப்பாளர்களுக்கே இருப்பதால், அவர்கள் இந்த இரு உழைப்பின் மதிப்புகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்திவிட்டனர்.

÷பங்குச் சந்தை, இணைய வர்த்தகம், மென்பொருள் உற்பத்தி என்று பட்டியல் நீளுகிற அறிவுசார் துறைகள், உடலுழைப்பை ஓரங்கட்டிவிட்டு கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. உடலுழைப்புக்கு ஐந்தரை அறிவே போதும் என்கிற அறிவுழைப்பாளர்களின் அஞ்ஞான மனப்பாங்கினை, வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல ஆட்சியாளர்களும் ஆமோதிக்கும் பேரவலத்தைக் கேட்பாரில்லை.

÷பாமர மக்களின் உடலுழைப்பால் உருப்பெற்ற விளைவிப்புகளையும் உற்பத்திகளையும் அறிவுழைப்பு என்கிற ஆயுதத்தின் துணையுடன் ஒருசாரார் மாத்திரம் அனுபவித்ததன் விளைவால் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பெரும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் பொருளாதாரச் சரிவின் மூலகாரணம் என்பதை ஓங்கிக் கூறலாம்.

÷பொருளாதார மந்தநிலை எப்போது சீராகும் என்று எதிர்பார்த்து நிற்கும் இந்த வேளையில், இருவித உழைப்புகளுக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாகுபாட்டினை மீள்பார்வை செய்வது, சமுதாயத்தின் மீட்சிக்குப் பேருதவியாக இருக்கும்.

÷100 நாள் வேலைத்திட்டத்தில் உடலுழைப்பை அளிப்பவர்களுக்கு தினக்கூலி 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 100 ரூபாயாகக் கொடுக்கப்படும் என்று, மனம் விசாலமாகிவிட்ட நிலச்சுவான்தார் போன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அறிவுழைப்பாளர்கள் மட்டும் எப்படி லகரங்களில் சம்பளம் வாங்குகின்றனர்.

÷அதன் சூட்சுமம் மிகவும் சுலபமானது. அசல் உழைப்பைத் தரும் உடலுழைப்பாளி அந்த உழைப்பை நகல் எடுக்க முடியாது. நகல் எடுக்கவல்ல உழைப்பைத் தரும் அறிவுழைப்பாளி அதை எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துப் பணமாக்கிக் கொள்ளலாம்.

÷100 அறிவுழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து 10 கோடி ரூபாய் செலவில் ஒரு மென்பொருளை உருவாக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதைக் குறுந்தகடாக்கி பல லட்சம் பிரதிகளை எடுத்துப் பலநூறு கோடிகளுக்கு அவற்றை விற்றுக்கொள்ளலாம்.

÷அவ்வாறு உருவாக்கிய மென்பொருளுக்கு அறிவுசார் சொத்துரிமை வாங்கிக்கொண்டு தொடர்ந்து பன்னெடுங்காலத்திற்கும், ஒருமுறை செய்த அறிவுழைப்பை மீண்டும் மீண்டும் விற்றுப் பணமாக்குகின்றனர். இப்படிச் சுலபமாகச் சேருகின்ற பணத்தில்தான் லகரங்களை சம்பளமாகக் கொடுத்து சமுதாயப் பிளவை உண்டாக்கி வருகின்றனர்.

÷உடலுழைப்பை நம்பி இருக்கின்றவன் பொருளீட்ட வேண்டுமென்றால் அவன் மீண்டும் மீண்டும் உழைத்தாக வேண்டும். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் மாட்சி இதுதான். தொடர்ந்து உடலால் உழைப்பவன் வறுமையிலேயே உழல வேண்டும், ஆனால் அறிவால் உழைப்பவன் அதை நகலெடுக்கும் அதிநவீன உத்தியைப் பயன்படுத்தி சட்டத்தின் துணையோடு பெரும் பொருளீட்டி வாழலாம்.

÷இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 45 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் புழுவினும் கீழாய் வாழ்ந்தபடி உடலுழைப்பை அர்ப்பணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 கோடி. அசல் அமிழ்ந்து கிடக்கிறது, நகல் நர்த்தனமாடுகிறது.

÷விவசாயமே சுவாசமாகிப் போய்விட்ட நம்நாட்டுக்குக் கட்டுப்பாடற்ற அறிவுசார் சொத்துரிமை எத்தகைய தீங்குகளை விளைவிக்கும் என்பது தெரிந்திருந்தும், இந்திய அரசு சர்வதேச அறிவுசார் சொத்துரிமை விதிமுறைகளுக்குத் தனது ஒப்புதல் முத்திரையைப் பதித்து வருகிறது.

÷இதிலே விந்தை என்னவென்றால், மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்தும் உடலுழைப்பின் உருவாக்கமாகவே இருக்கிறது. என்றாலும் இவற்றையெல்லாம் சுலபமாகக் கிடைக்கும் பணத்தால் அறிவுழைப்பாளர்கள் கூடுதல் விலைகொடுத்து எளிதாகப் பெற்றுவிடுவதால் உழைத்து உருவாக்கிய வர்க்கத்தினருக்கேகூட அவை கிடைப்பதில்லை. வழிப்போக்கர்களுக்கும் விருந்தோம்பல் செய்து அவர்கள் இளைப்பாற திண்ணைகட்டி வாழ்ந்தவர்கள் இன்று இலவசங்களுக்காக வரிசைகட்டி நின்றே காலத்தைக் கழிக்கின்றனர்.

÷உடலுழைப்பின் மாண்பினை உலகுக்கு உணர்த்திய முதல் இனம் நம் தமிழினம் என்பதுதான் எஞ்சியிருக்கும் பெருமை. உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்களித்த ஐயன் வள்ளுவர் இதைப் பிரகடனம் செய்கிறார். "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் - தொழுதுண்டு பின்செல் பவர்' என்று. உடலை வருத்தி உழைக்கின்ற உழவனுக்கு முதல் மரியாதை செய்து, உலகிலேயே உடலுழைப்பை உயர்த்திப் பிடித்த பெருமகன் திருவள்ளுவர்தான் என்பதில் நெஞ்சம் நெகிழ்கிறது.

÷அதற்கும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த யுகக் கவிஞர் பாரதியார், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று பின்வரவான தொழிலையும் சேர்த்து வணங்கிப் போற்றுகிறார்.

÷காந்தியடிகள் தமது சத்திய சோதனையில் உடலுழைப்பு பற்றிய சில தீர்க்கமான கருத்துகளை முன்வைக்கிறார். உழைப்பில் உயர்வு தாழ்வு கிடையாது என்கிற சத்தியவாக்குக்கு சாட்சியம் சொல்லிவிட்டு, ஒரு வழக்கறிஞரின் உழைப்பும் ஒரு சிகை அலங்காரத் தொழிலாளியின் உழைப்பும் ஒரே பெறுமானம் உள்ளவைதான் என்கிற ஆங்கில அறிஞர் ஜான் ரஸ்கின் கருத்தை அவர் அப்படியே ஆமோதிக்கிறார். மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லி இன்று அரசியல் நடத்துகிறவர்கள் காந்தி ஜயந்தியன்றும், குடியரசு தினத்தன்றும் குல்லாய் போட்டுக் கொண்டு பேட்டி கொடுப்பதே காந்தியம் என்று எண்ணிக்கொள்வது காலத்தின் கோலம்.

÷முன்பெல்லாம் வேளாண் நிலங்கள் பொன்விளையும் பூமி என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டன. அதன் விளைபொருள்களை விற்றுப் பொன்வாங்கும் சக்தி விவசாயிகளிடம் அன்று இருந்தது. இன்று நிலத்தையே விற்றால்தான் பொன்வாங்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறது.

÷விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மாத்திரமல்லாது, தொழிற்சாலைகளில் தொய்வின்றி உழைத்துவரும் தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், மீனவர்கள், இன்னபிற உடலுழைப்பாளர்கள் அனைவரும் தங்கள் இதயத்தின் ஒரு மூலையில் இன்னும் கசிகின்ற நம்பிக்கையால் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

÷லாபமும், சமூக மாண்பும் இல்லாத உடலுழைப்பை விடுத்து, இளைஞர்கள் விரக்தியின் விளிம்புக்குச் சென்று கொண்டிருப்பது சமுதாயத்துக்கு உகந்ததல்ல. உடலுழைப்புக்கு உரிய மதிப்பை, முதல் மரியாதையை விரைந்து மீட்டுத் தருகின்ற கடமையும் கடப்பாடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

÷பிரெஞ்சுப் புரட்சியின்போது பாஸ்டில் சிறையை உடைத்து சமச்சீர் சமுதாயத்துக்கு வித்திட்டதும், ரஷியாவில் சார் மன்னர் ஆட்சிக்கு சாவுமணி அடித்து சோஷலிச சமுதாயம் அமைய அடித்தளமாக இருந்ததும், சீனத்தின் கூன்களை நிமிர்த்தி அதை செஞ்சீனமாக்கியதும் உடலுழைப்பாளர்களின் பெரும் பங்களிப்பே என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
கட்டுரையாளர் :தில்லை நாகசாமி
நன்றி : தினமணி

Saturday, December 26, 2009

குறைந்து வரும் விவசாய நிலங்கள்

அரிசி இறக்குமதி செய்ய,​​ நீண்டகா​ லத்​திற்​குப் பின்​னர் மத்​திய அரசு சமீ​பத்​தில் அனு​மதி வழங்​கி​யுள்ளது.​ இந்தியாவின் உயிர்நாடித் ​ தொழில் விவசாயம்.​ அதிலும்,​​ அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக உள்ள நிலையில் இத்தகைய இறக்குமதிக்கான அனுமதி நாட்டில் ​ விவசாயம் தேய்ந்து வருவதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் ​(2009,​ ஜூலை 24-ம் தேதி)​ மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்படி,​​ இந்தியாவின் ​ அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ளது.​ அதாவது 1 கோடியே 45 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் ​ பயிரீடு 1 கோடியே 10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம்,​​ பிகார்,​​ மேற்கு வங்கம்,​​ சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் ​ பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.​ ​

தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது.​ மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.​ ஆனால்,​​ இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது.​ தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.​ ஆம்,​​ காவிரிப் படுகைப் ​ பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன.​ இதனால்,​​ வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் ​ மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.​ ​ ​

கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி,​​ மருத்துவமனை,​​ தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் ​ உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.​ இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த ​ வேண்டும்.

2005}06-ம் ஆண்டு தகவல்படி அரிசி உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.​ இம்மாவட்டத்தில் 1,68,435 ஹெக்டேர் ​ நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது என்று தமிழக அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.​ ​(நாகை மாவட்டம் இரண்டாமிடத்திலும்,​​ தஞ்சை ​ மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளன.)​ நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி ​ பெற்று வருகிற நிலையில்,​​ தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம்,​​ காஞ்சிபுரம்,​​ திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.​ ​

செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும்,​​ இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் ​ இருக்கிறது.​ சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.​ இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.

குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம்,​​ கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது.​ ஆனால்,​​ தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது.​ 1974-ல் ​ தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன.​ ஆனால்,​​ தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம்.​ இதனால் ஆற்றுப் படுகைகளில் ​ நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன.​ இதனால்,​​ தண்ணீர் இல்லாத நிலையில் -​ வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் -​ விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.​ இதனால் ​ விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.

தமிழகத்தில் 2004}2005-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி 61,46,044 டன்கள் ஆகும்.​ ஆனால்,​​ 2005}06-ல் 61,16,145 ​ டன்கள் தான்.​ இது முந்தைய ஆண்டைவிட 29,899 டன்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால்,​​ விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும்,​​ தொழிற்சாலைகளாகவும்,​​ சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய ​ காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

கிராமப்புற வங்கிகள்,​​ விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட,​​ வர்த்தக வங்கிகள் ​ தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.​

இந்நிலை மாறி ​ விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த ​ விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

இந்தியாவின் 75 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் ​ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய,​​ மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்.​ கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த ​ குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.​ அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் ​ நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.​ ​

இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.​​
கட்டுரையாளர் : மணிஷ்
நன்றி : தினமணி

Monday, December 21, 2009

காலில் அணி​வ​தைக் கழுத்​தில் மாட்டும் விஞ்​ஞா​னம்

வேளாண்​மை​யும் மனி​த​நல வாழ்​வும் சீர்​மிகு சிறப்​பு​டன் விளங்க வேண்​டு​மென்று எண்​ணிய முன்​னோ​டி​கள் ஆயி​ரம் பேர் இருந்​தா​லும்,​​ இரண்டு மாபெ​ரும் விஞ்​ஞா​னி​க​ளின் சேவை​களை எண்​ணி​னால்,​​ இன்று வாழும் வேளாண்​மைப் பேரா​சி​ரி​யர்​கள் வெட்​கப்​பட வேண்​டும்.​ அந்த இரு​வர்​க​ளில் ஒரு​வர் ஆல்​பர்ட் ஹோவார்டு.​ மற்​றொ​ரு​வர் ஆல்​பர்ட் ஷாட்ஸ்.​ ஒரு​வர் இந்​தி​யா​வில் வாழ்ந்த இங்​கி​லாந்​துப் பேரா​சி​ரி​யர்.​ மற்​றொ​ரு​வர் அமெ​ரிக்​கா​வில் வாழ்ந்த யூத-​ரஷிய விஞ்​ஞானி.​

யாருக்கு யாரி​டம் பாடம் என்ற தின​மணி ​(24-8-09) கட்​டுரை மூலம்,​​ ஆல்​பர்ட் ஹோவார்டு அறி​மு​க​மா​கி​விட்​டார்.​ ரசா​யன விவ​சா​யத்​தால் எதிர்​கா​லத்​தில் நிக​ழப்​போ​கும் ஆபத்​து​க​ளைக் குறிப்​பாக மண்​வ​ளம் இழப்பு,​​ மனி​த​வ​ளம் இழப்பு-​அதா​வது நோய் எதிர்ப்பு சக்​தி​யில்​லா​மல் மருந்து மாத்​தி​ரை​க​ளுக்கு அடி​மை​யா​கப் போகும் மனி​த​கு​லம் பற்​றி​யெல்​லாம் 1920-களில் சுமார் 100 ஆண்​டு​க​ளுக்கு முன்பே எச்​ச​ரித்​த​வர்,​​ ஆல்​பர்ட் ஹோவார்டு.​

இந்​திய விவ​சா​யத்​தில் ரசா​யன உரம் இல்​லா​ம​லேயே உற்​பத்​தியை உயர்த்த மண்​ணில் கரிய விழு​து​க​ளைப் பதிக்க-​அதா​வது ஹு​மஸ் பற்​றிய ஆய்​வு​க​ளுக்கு வித்​திட்​டார்.​ பிரிட்​டிஷ் ஆட்​சி​யில் வேளாண்மை ஆலோ​ச​க​ரா​கப் பணி​பு​ரிந்த ஹோவார்​டுக்கு எதிர்ப்​பு​கள் விளைந்​தன.

​ ""வேளாண்​மைக்கு உயில்'' எழு​தி​ய​வர் ரசா​யன உரங்​க​ளை​யும் பூச்​சி​ம​ருந்து விஷங்​க​ளை​யும் அவற்​றின் தொடக்க காலத்தி​லி​ருந்து எதிர்த்​த​வர்.​ இவர் வழங்​கிய மாற்​றுத்​திட்​டம் அதா​வது மண்​வ​ளத்​து​டன் இயற்கை வழி​யி​லேயே உயர்ந்த விளைச்​சல் பெறும் ஆராய்ச்​சி​க​ளுக்​குப் புசா​வில் வாய்ப்பு இல்லை.​ இந்​தி​யா​வின் வேளாண்மை ஆராய்ச்​சிக் கழ​கத்​தின் முதன்மை வேளாண் ஆலோ​ச​க​ருக்கு நெருக்​கடி வந்​தது.​ உர நிறு​வ​னங்​க​ளுக்கு ஒரு கைப்​பா​வை​யாக விவ​சாய ஆராய்ச்​சி​கள் திசை​தி​ரும்​பி​ய​தால்,​​ ஹோவார்​டுக்கு சோதனை வந்​தது.​ புசாவி​லி​ருந்து ஹோவார்டு வெளி​யே​றி​னாரா,​​ வெளி​யேற்​றப்​பட்​டாரா என்​ப​தில் தெளிவு இல்லை.​

வே​ளாண்மை உயி​லைப் புரட்​டிப் பார்த்​தால்,​​ புசாவி​லி​ருந்து ஏன் இந்​தூர் தர்​பா​ருக்கு வந்​தார் என்​ப​தற்கு இவ்​வாறு ஹோவார்டு நொந்​து​கொண்ட வரி​கள்:​ ""ஒரு பயிர் நோயின்றி நல்​ல​படி வளர்ந்து திட​மாக வாழ்ந்து உயர்ந்த அள​வில் உற்​பத்தி பெற அப் பயி​ரின் கீழ் வள​மான கரிம விழு​து​கள் மண்​ணில் பர​வ​லாக வேண்​டும்.​ அதற்​கேற்ற வகை​யில்,​​ நாம் வழங்க வேண்​டிய குண​ப​எரு நிலை,​​ நைட்​ர​ஜன் கார்​பன் விகி​தம் 1 :​ 10 என்ற அள​வில் நிலவ வேண்​டும்.​ முறை​யான அளவு அவ​சி​யம்.​ புசா​வில் வேளாண்மை ஆராய்ச்சி என்​றால் அதை மண்​ணோடு தொடர்பு செய்​யா​மல்,​​ விதைப்​பெ​ருக்​கம்,​​ பூச்​சி​யி​யல்,​​ பூச​ண​யி​யல்,​​ பயி​ரி​யல் என்று பல​வி​த​மான துறைப் பிரி​வு​கள் முளைத்​து​விட்​டன.​ மண்​வ​ளம் பற்​றிய யோச​னையோ ஆய்வோ...​ இல்லை...'' பின்​னர் இவர் மண்​ணில் கரிம விழு​து​கள் பற்​றிய ஆராய்ச்​சி​யைத் தொடர,​​ விதர்​பா​வில் உள்ள காட்​டன் கமிட்டி முன்​வந்து,​​ இந்​தூர் சமஸ்​தான ஆத​ர​வு​டன் 100 ஏக்​கர் நிலம் 100 ஆண்டு குத்​தகை என்ற அடிப்​ப​டை​யில் பெற்று,​​ ஆராய்ச்​சியை அன்று தொடங்கி மண்​வ​ளத்தை உயர்த்​தி​ய​தால்​தான்,​​ இன்​று​வரை மத்​திய மாகா​ணங்​க​ளில் பருத்தி உற்​பத்​தித்​தி​றன் கூடி​யது.​

மண்​வ​ளம் வேறு,​​ மண்​ணில் ஹு​மஸ் என்​பது வேறு.​ இன்​றைய விஞ்​ஞா​னி​கள் ஹு​மஸ் என்​றால் இயற்கை உரம் இடு​வது என்று பொருள்​ப​டப் புரிந்து கொள்​கின்​ற​னர்.​ சுருக்​க​மா​கச் சொல்​வ​தா​னால் பத்​தாம் நூற்​றாண்​டில் சுர​பா​லர் எழு​திய விருட்​சா​யுர்​வே​தம் திருக்​கு​ற​ளைப்​போல் ஈரடி வெண்​பா​வைப்​போல் பாடப்​பட்​டது.

தி​ருக்​கு​ற​ளுக்​குப் பரி​மே​ல​ழ​கர் உரை எழு​தி​ய​தைப்​போல்,​​ ஆல்​பர்ட் ஹோவார்டு எழு​தி​யுள்ள ""வேளாண்மை உயில்'' படிக்​கப் படிக்​கப் புதிய பொருள்​க​ளைத் தரு​கி​றது.​ குண​ப​ஜ​லமே ஹு​மஸ் என்று பொருள்​பட இவ​ரு​டைய இந்​தூர் கம்​போஸ்​டிங் உள்​ளது.​ நாற்​பது பக்​கங்​க​ளில் ஹோவார்டு கூறி​யதை நாலு வரி​க​ளில் சொல்​வது இய​லாது என்​றா​லும் அடிப்​படை இதுவே.​

ஹோவார்டு இந்​தி​யா​வில் பணி​பு​ரிந்த கால​கட்​டத்​தில் ​(1906-32) விவ​சா​யி​க​ளி​டம் மாடு இருந்​தது.​ மாட்​டுக்​கொட்டி​லில் சிமெண்​டுத்​த​ளம் இல்லை.​ மண்​த​ரை​யில் கட்​டு​வார்​கள்.​ மண்​த​ரை​யில் மாட்​டின் சாண​மும் கோம​ய​மும் விழா​மல் இருக்க தின​மும் மாட்​டுக்கு ஒரு படுக்கை போட வேண்​டும்.​ அது அறு​வ​டைக்​க​ழி​வாக இருக்க வேண்​டும்.​ பெரும்​பா​லும் தட்​டைப்​புல்-​வைக்​கோல்,​​ துவ​ரைக்​கொடி,​​ கட​லைக்​கொடி,​​ கரும்​புச்​சோகை,​​ வாழைச்​சோகை அவற்​றின்​மீது மரத்​தூள்-​இப்​ப​டிப்​பட்ட படுக்கை இந்​தூர் பண்​ணை​யில் அமைக்​கப்​பட்​டது.​ அதன் நைட்​ர​ஜன்:​ கார்​பன் ரேஷியோ 1 :​ 33.​ அப்​ப​டுக்​கை​யின் மீது இரவு மாடு​கள் கழிக்​கும் கோம​யம்,​​ சாணம் சேர்ந்து ஒரு பயி​ருக்​குத் தேவை​யான ஹு​மûஸ அதா​வது 1 :​ 10 என்ற அள​வில் தழைச்​சத்து உயர்ந்து கார்​பன் சத்து குறைந்து மக்​கும் நிலை உருப்​பெ​று​கி​றது.​ தினம் மாட்​டுத் தொழு​வத்​தைக் கூட்ட வேண்​டாம்.​ அப்​ப​டியே வாரிச்​சு​ருட்டி தோட்​டத் தரி​சில் போட்டு விட வேண்​டும்.​ மாடு​க​ளின் அள​வைப் பொருத்து 1 மாதத்​தில் 50 செண்டு நிலத்​தில் உரத்​தையே உலர்​மூ​டாக்கு செய்து சற்று மக்​கிய பின்பு உழுது விதைத்​து​வி​ட​லாம்.​ அவ​ர​வர் வச​திப்​படி முட்​டுப்​ப​டுக்​கை​யா​கப் போட​லாம்.​ குவி​ய​லா​கப் போட்​டும் மக்க மக்க அள்​ள​லாம்..​ 1935-க்குப் பின் இங்​கி​லாந்து திரும்​பிய ஹோவார்டு இம்​மு​றைக்கு இந்​தூர் கம்​போஸ்​டிங் என்று பெய​ரிட்​டுத் தன் தாய்​நாட்​டை​யும் வளப்​ப​டுத்​தி​யுள்​ளார்.​ ஆயி​ரக்​க​ணக்​கான இங்​கி​லாந்து விவ​சா​யி​களை இயற்கை விவ​சா​யத்​துக்கு மாற்​றிய பெருமை இவ​ருக்கு உண்டு.​

இக்​கால ரசா​யன விஞ்​ஞா​னி​கள் இயற்கை விவ​சா​யத்தை எதிர்த்து என்ன பேசி​னார்​களோ ஹோவார்டு வாழ்ந்த அந்​தக் காலத்​தி​லும் பேசி​யுள்​ளார்​கள்.​ 1920-30 கால​கட்​டத்​தில் ரசா​யன உரம் விலை மலிவு.​ அதைக் கார​ணம் காட்டி மரத்​தூள்,​​ சாணம்,​​ வைக்​கோல் எல்​லாம் விலை அதி​கம் என்று ரசா​ய​ன​வா​தி​கள் கூறி​ய​தற்கு அவர் வழங்​கிய ஒரே பதில் இதுவே:​ ""இயற்கை எரு​வைப் பெறும் உரிமை மண்​ணுக்கு உள்​ளது.​ இந்த மண் உரி​மை​யைத் தட்​டிப் பறித்​தால் மண் இறந்​து​வி​டும்...'' மண் இறந்​து​வி​டும் என்​றால் அம்​மண்​ணில் நுண்​ணு​யி​ரி​கள் பூண்​டோடு அழி​யும் என்று பொருள்.​

ஹோ​வார்டை இத்​து​டன் நிறுத்​திக் கொண்டு ஷாட்​சின் கதை​யைத் தொடங்​கு​வோம்.​

ஆல்​பர்ட் ஷாட்ஸ் ஹோவார்டு காலத்​தில் வாழ்ந்த யூத-​ரஷிய விஞ்​ஞானி.​ நிற​வெ​றி​யால் இவர் தாத்தா ரஷி​யாவி​லி​ருந்து விரட்​டப்​பட்​டார்.​ அவர் அமெ​ரிக்​கா​வில் கனக்​டிக்​கட் மாநி​லத்​தில் போஸ்ரா என்ற சிற்​றூ​ரில் 140 ஏக்​க​ரில் ஒரு சிறு விவ​சா​யப் பண்​ணையை உரு​வாக்​கி​னார்.​ அமெ​ரிக்​கா​வில் 140 ஏக்​கர் நில​முள்​ள​வர் சிறு விவ​சாயி.​ அப்​போது சின்​னப்​பை​ய​னாக இருந்த ஷாட்​சுக்கு விவ​சா​யத்​தின்​மீது கொள்ளை ஆசை.​ விவ​சா​யம் என்​றால் அது மண்​ணைப் பற்​றிய படிப்பு என்று அச்​சி​று​வன் புரிந்​து​கொண்டு ராணு​வத்​தில் சேர்ந்து புளோ​ரிடா ராணுவ மருத்​து​வ​ம​னை​யில் பணி​பு​ரிந்​து​கொண்டே மண்​ணு​யி​ரி​யல்,​​ நுண்​ணு​யி​ரி​யல் ஆகிய துறை​க​ளில் ரட்​கர்ஸ் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பிற்​கா​லத்​தில் முனை​வர் பட்​டம் பெறும் முன்பே,​​ ஸ்ட்​ரப்​டோ​மை​சீ​னைக் கண்​டு​பி​டித்​த​வர்.​ இவர் ஸ்ட்​ரப்​டோ​மை​சீ​னைக் கண்​டு​பி​டிப்​ப​தற்கு முன்பு உல​கில் அது​வரை காச​நோய்க்கு மருந்து இல்​லா​மல் கோடிக்​க​ணக்​கான மக்​கள் காச​நோய் வந்து இறந்​த​தாக வர​லாறு கூறும்.​ இவர் புளோ​ரிடா ராணுவ மருத்​து​வ​ம​னை​யில் பணி​பு​ரிந்து கொண்டே பல வகை​யான மண்​களை-​ ஏரி​மண்,​​ சேற்று மண்,​​ தோட்ட மண்,​​ ஆற்​றோர மண்,​​ அலை​யாத்தி மண் என்று சேக​ரித்து ஆராய்ந்​த​வண்​ணம் இருந்​த​போது ஒரு​வ​கை​யான குண​ப​நுண்​ணு​யி​ரி​க​ளைக் கண்​டு​பி​டித்​தார்.​ அது காச​நோய்க் கிரு​மி​யைக் கொல்​லுமா என்ற கேள்​வி​யு​டன்,​​ டூபர்​கு​ளோ​சிஸ் என்ற பாக்​டீ​ரி​யாக்​க​ளைப் பெற விரும்​பி​னார்.​ அப்​போது எந்த மருத்​து​வ​ரும் துணி​வு​டன் காச​நோய்க் கிரு​மியை ஆராய முன்​வ​ர​வில்லை.​ இவ​ருக்கு ஒரு​பா​தாள அறை ஒதுக்​கப்​பட்​டது.​ இரவு பக​லாக அந்​தப் பாதாள இருட்​ட​றை​யில் டூபர்​கு​ளோ​சிஸ் பாக்​டீ​ரியா காச​நோய்க் கிரு​மி​யைக் கையாண்டு,​​ அதைத்​தான் கண்​டு​பி​டித்த ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் காச​நோய் பாக்​டீ​ரி​யா​வைக் கொல்​வ​தை​யும் கண்​டு​பி​டித்து,​​ இந்த விஷ​யத்தை இவ​ருக்கு உத​வி​யாக இருந்த பேரா​சி​ரி​ய​ரி​டம் கூறி​னார்.​ அப்​போது ஷாட்ஸ் 23 வயது இளை​ஞர்.​ உல​கம் அறி​யா​த​வர்.​ இவர் யூதர்,​​ ரஷி​யர்,​​ மாண​வர் என்​றெல்​லாம் குறை கூறி ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் மருந்​தை​யும் அதன் விருத்​திக்​கான நுட்​பத்​தை​யும் மருந்து நிறு​வ​னத்​துக்கு அப்​பே​ரா​சி​ரி​யர் விற்​றுப்​ப​ணம் சம்​பா​தித்​தது மட்​டு​மல்ல,​​ நோபல் பரி​சை​யும் தட்​டிப் பறித்​தார்.​ பின்​னர் மிக​வும் போரா​டிய ஷாட்ஸ் குறைந்​த​பட்​சம் ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் தனது கண்​டு​பி​டிப்பு என்​ப​தைச் சான்​று​றுதி செய்​தார்.​ ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் என்​றால் "பின்​ன​லான காளான் நுண்​ணு​யிர்' என்று பொருள்.​ கோழி​யின் தொண்​டை​யில் இருந்த ஒரு பாக்​டீ​ரி​யாவை மண்ணி​லி​ருந்து பெற்ற காளான் நுண்​ணு​யி​ரி​யைக் கலந்து உரு​வான குண​பமே ஸ்ட்​ரப்​டோ​மை​சீன்.​ இவர் இந்த நுண்​ணு​யி​ரி​யைப் பெருக்​கிப் பயிர்​கள் மீது தெளித்​துப் பயிர்​க​ளுக்கு ​ வரும் பூசண நோய்,​​ பூச்சி நோய் ஆகி​ய​வற்​றை​யும் குணப்​ப​டுத்​தி​னார்.​

பிற்​கா​லத்​தில் ஷாட்ஸ் மண்​ணில் உள்ள கரி​ம​வி​ழு​தா​கிய ஹு​மஸ் பற்​றிய ஆய்​வி​லேயே முழுக்​க​வ​னத்​தை​யும் செலுத்​தி​னார்.​ ரசா​யன உரங்​கள் அறி​மு​க​மா​வ​தற்கு முன்பு மண்​ணில் உள்ள நுண்​ணு​யி​ரி​கள் பற்​றிய ஆராய்ச்​சியை ரஷி​யா​வின் பல்​க​லைக்​க​ழ​கங்​கள் மட்​டுமே மேற்​கொண்​டது.​ ஒரு பயி​ரைப் பற்​றிப் படிப்​ப​தற்கு முன் ​ ​

வேரின் கீழுள்ள மண்​ணைப் பற்​றிப் படிக்க வேண்​டும் என்​பது ரஷிய விஞ்​ஞா​னி​க​ளின் கருத்து.​ பெடா​லஜி என்ற துறை ரஷி​யா​வில் மட்​டுமே இருந்​தது.​ ஆனால் அவை ரஷிய மொழி​யில் இருந்​தன.​ ஷாட்ஸ் ரஷிய மொழி கற்று அத்​து​றை​யின் ஆய்​வு​க​ளை​யெல்​லாம் கரைத்​துக் குடித்து அமெ​ரிக்​கா​வில் இயற்கை விவ​சா​யம் பர​வக் கார​ண​மா​னார்.​

இவர் கூறிய ஒரு கருத்து இன்​றைய விஞ்​ஞா​னி​க​ளுக்​குப் பாடம் புகட்​டும்.​ ஆனால் ஷாட்ஸ் அன்​றைய வேளாண் விஞ்​ஞா​னி​க​ளைப் பற்றி இவ்​வாறு கூறி​யுள்​ளார்:​

""இன்று மண்​விஞ்​ஞா​னி​கள் என்று கூறும் பேரா​சி​ரி​யர்​க​ளின் செயல்​பா​டு​கள் வெட்​கக்​கே​டா​னது.​ நான் என்னை ஒரு மண்​விஞ்​ஞானி என்று கூறவே வெட்​க​மா​யுள்​ளது.​ மண்​ணில் ரசா​ய​னங்​களை இட்டு அந்த விளை​வைப் பயிர்​க​ளில் எடுத்​துக்​காட்​டும் செயற்​கைக்கு விவ​சா​யம் விலை​போய் விட்​டது.​ ஒரு மண்​விஞ்​ஞா​னிக்​கும் உழ​வி​யல் விளைச்​சலை மட்​டும் கணக்​குப் பார்க்​கும் பண்ணை நிர்​வா​கிக்​கும் என்ன வித்​தி​யா​சம்?​ மண் ஆய்வு என்​பது ரசா​யன உர நிறு​வ​னங்​கள் வழங்​கும் ஒரு பாடத்​திட்​ட​மா​கி​விட்​டது.​ ரசா​யன உர நிறு​வ​னங்​க​ளின் கொழுத்த லாபத்​துக்​கா​கவே வேளாண்​மைப் பல்​க​லைக்​க​ழ​கப் பேரா​சி​ரி​யர்​கள்,​​ விஞ்​ஞா​னி​கள் உழைக்​கின்​ற​னர்.​ மண் ஆராய்ச்​சிப் பட்​டப்​ப​டிப்​பு​கள் மண்​ணுக்கு உத​வா​மல் ரசா​யன உர நிறு​வ​னங்​க​ளின் வரு​மா​னத்​துக்கு உத​வு​கின்​றன.​ மண் விஞ்​ஞா​னி​க​ளுக்கு ரசா​யன உரக் கம்​பெ​னி​கள் கொழுத்த சம்​ப​ளம் தரு​கின்​றன.​ தேனில் விழுந்த ஈக்​க​ளைப்​போல் வேளாண்​மைப் பட்​டம் பெற்ற பேரா​சி​ரி​யர்​க​ளும் மாண​வர்​க​ளும் ரசா​யன உர ஊறல்​க​ளில் விழுந்​து​விட்​ட​னர்.​ ஆண்​டுக்கு ஆண்டு தலை​முறை தலை​மு​றை​யாக காலம் செல்​லச் செல்ல மண்​ணில் உள்ள குண​ப​ரச ஆய்வு-​மண்​வி​ழு​து​க​ளைப் பற்​றிய ஆய்வு மண்​ணில் உள்ள நுண்​ணு​யி​ரி​கள் பற்​றிய ஆய்வு ஆகிய அற்​புத விஷ​யங்​கள் கிடப்​பில் போடப்​பட்​டு​விட்​டன'' பிற்​கா​லத்​தில் ஷாட்ஸ் மண்​ணில் இருக்க வேண்​டிய லைகன் என்ற ஒரு​வ​கைப் பாசி உயி​ரி​யின் கரைக்​கும் ஆற்​றலை அறிந்து,​​ அது​போன்ற நுண்​ணு​யி​ரி​களே மண்​ணில் உள்ள உலோ​கச் சத்​தைக் கரைத்து உயர்ந்த விளைச்​சலை ஏற்​ப​டுத்​து​கின்​றன என்​றார்.​ மண்​ணில் நுண்​ணு​யி​ரி​கள் இருக்க வேண்​டும்.​ ரசா​ய​னம் இருக்க வேண்​டும் என்று கூறும் மண்​விஞ்​ஞா​னி​களை என்ன செய்​வது?​ இந்​தி​யா​வில் எல்லா மாநி​லங்​க​ளும் மர​பணு மாற்ற விதை​க​ளைப் புறக்​க​ணித்​துள்​ளன.​ கேரள அரசு மர​பணு மாற்ற விதைக்​குத் தடை விதித்து விட்​டது.​ எனி​னும்​கூட தமிழ்​நாடு பல்​க​லைக்​க​ழ​கப் பேரா​சி​ரி​யர் மாலிக்​யூ​லர் பயா​லஜி கற்​ற​வர்,​​ பி.ட்டி கத்​த​ரிக்​காய் விஷ​மில்லை என்​றும்,​​ அதில் உள்ள ஒரு பாக்​டீ​ரியா மண்ணி​லி​ருந்து எடுக்​கப்​பட்​டது என்​றும் கூறு​கி​றார்.

​ இன்று ஹோவார்டோ,​​ ஷாட்சோ உயி​ரு​டன் இருந்​தால் அந்​தப்ó பேரா​சி​ரி​ய​ருக்கு இவ்​வாறு பதில் வழங்​கி​யி​ருப்​பார்:​ ""மண்​ணுக்​குள் செய்ய வேண்​டிய உயிர் விஞ்​ஞா​னம் உயி​ரித்​தொ​ழில்​நுட்​பம்.​ அதை மண்​ணில்​தான் செய்ய வேண்​டும்.​ அதற்கு மர​பணு மாற்​றம் என்று மகு​டம் சூட்​டிப் பயிர் மீதும் விதை​மீ​தும் திணிக்​கக்​கூ​டாது.​ மண்​ணில் உள்ள நுண்​ணு​யி​ரி​கள் மண்​ணில்​தான் இருக்க வேண்​டும்.​ காலில் அணிய வேண்​டிய ஒன்றை யாரா​வது கழுத்​தில் மாலை​யா​கப் போட்​டுக் கொள்​வார்​களா?​...''
கட்டுரையாளர் : ஆர்.எஸ்.​ நாரா​ய​ணன்
நன்றி : தினமணி

Tuesday, December 1, 2009

அறிவார்ந்த முடிவெடுக்க பல்கலை. உதவுமா?

பி.டி. கத்தரி அனுமதி மீதான முடிவு மக்களைக் கேட்டபின் இறுதி செய்யப்படும்; டிசம்பர் மாதம் முடிய ஆதரவு, எதிர் கருத்துகளைத் தெரிவிக்கலாம். ஜனவரி அல்லது பிப்ரவரியில் நாடு தழுவிய அளவில் பொதுக்கருத்து கேட்கப்பட்ட பின்னரே அனுமதி குறித்த முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வரும், நுகர்வோர், விவசாயிகளின் கருத்தைக் கேட்டபின் முடிவெடுங்கள் என்று பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பி.டி. கத்தரி நல்லதே; விளைச்சல் கூடும்; மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்து இல்லாதது என்று எழுதியும் பேசியும் வருகிறார்.

மறுபக்கம் பரவலாக பி.டி. கத்தரி பற்றி கடுமையான விமர்சனங்கள் நெடுங்காலமாகவே வைக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பு விவரங்களையும் மக்கள் அறிந்தால்தான் அவர்கள் தெளிவுடன் பி.டி. கத்தரி தேவையா இல்லையா என முடிவெடுப்பார்கள். பல்கலை. விஞ்ஞானிகள் எல்லாமே நன்றாக உள்ளது, பி.டி. கத்தரி வந்துவிட்டால் கத்தரி விளைவிப்பதில் உள்ள பிரச்னைகள் பறந்தோடும் என்கிறார்கள்.
உண்மை தான் என்ன?

இங்கே நடப்பது மரபணு மாற்றம் அல்ல; திணிப்பு. மரபணு வலிந்து திணிக்கப்படுகிறது. திணிக்கப்படுவது மண்ணில் வாழும் நுண்ணுயிரியின் ஒரே ஒரு மரபணு மட்டுமல்ல, அதனுடன் ஆண்டிபயாடிக்கைத் தாங்கிடும் மரபணுவும், ஒரு வைரசின் மரபணுவும், ஏஏடி என்ற மரபணுவும் (மொத்தம் 4 மரபணுக்கள்) சேர்த்துக் கூட்டாக ஜீன் துப்பாக்கி என்ற கருவியால் வேகமாகச் சுடப்படுகிறது. அப்போது அத் தாவரத்திற்கேயுரிய மரபணுக் கூட்டத்தில் சிதைவுகள், மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுகிறதா, அந்த மரபணுக்கள் முன்போலவே இயல்பாக உள்ளதா அல்லது அதனால் தூங்க வைக்கப்பட்டிருக்கும் அல்லது செயல்பட்டுக் கொண்டிருக்கும் மரபணுக்களின் செயல்பாடுகள் மாறி உள்ளதா போன்ற ஆய்வுகள் செய்யப்பட்டதா என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை. தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் மட்டுமல்ல, ஆதரவு விஞ்ஞானிகள் எவரும் விளக்க மறுக்கிறார்கள்.

விளைச்சலை அதிகப்படுத்தவே இத்திணிப்பு என்று எவராவது கூறினால் அது அப்பட்டமான பொய்யாகும். இத்திணிப்பு பயிரைத் தாக்கும் பல பூச்சிகளில் ஒன்றிரண்டை மட்டும் கொல்லவே. பருத்தியிலும் கத்தரியிலும் காய்ப்புழுக்களைக் கொல்லவே. இவைகளை பூச்சிக்கொல்லிகள் கொண்டு கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே தான் மரபணுத் திணிப்பு என்கிறார்கள். மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவைகளுக்கு பூச்சிக்கொல்லிகள் தான் வழி என்கிறார்கள்.

பருத்தி,கத்தரி,நெல்,ராகி,கம்பு,சோளம்,மக்காச்சோளம், பப்பாளி,தக்காளி,கோதுமை,முட்டைகோசு,காலிபிளவர்,நிலக்கடலை, சுண்டல்கடலை, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட தற்போது மரபணு திணிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள 56 வகை உணவுப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை மூலம் காப்பாற்றலாம் என்று இந்திய வேளாண் அறிவியல் கழகம் கூறுகிறது.

நெல்,பருத்தி,கத்தரியில் வரும் பூச்சி மற்றும் நோய்களை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை மூலம் கட்டுப்படுத்த முடியும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளால் பூச்சிக் கொல்லியின் எஞ்சிய நஞ்சு குறைகிறது. பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பூச்சிகள் பெறுவதைத் தடுக்கிறது - மீண்டும் உச்சநிலை அடைவதைத் தடுக்கிறது. மேலும் பூச்சித் தாக்குதல் தன்மை, பாதிப்பின் அளவு, சரியான காலத்தில் பயன்படுத்துவது ஆகியவற்றால் ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறை மூலம் 20 முதல் 30 சதம் அதிக விளைச்சல் கிடைக்கிறது.

இது தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற விவரம்.

இருப்பினும் துணைவேந்தரும் விஞ்ஞானிகளும் மரபணுத் திணிப்பு முறை தான் உள்ள ஒரே வழி என்கிற தொனியில் கருத்துத் தெரிவிக்கிறார்கள். எது உண்மை? துணைவேந்தரும் விஞ்ஞானிகளும் இப்போது சொல்வதா அல்லது முன்பு பல்கலை தெரிவித்ததா?

ஒரு விவசாயி பி.டி. கத்தரி பயிரிட்டால் அதிலிருக்கும் மகரந்தம் பக்கத்து விவசாயியின் கத்தரிச்செடிக்கு காற்று, தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மூலம் சேராதா? அப்படி மரபணுக் கலப்படம் நடப்பதை எப்படித் தடுப்பது? ஒரு வேளை மரபணுக் கலப்படம் நடந்துவிட்டால் பாதிக்கப்பட்ட விவசாயியின் பாதிப்பைச் சரிசெய்ய என்ன வழிகளை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பிற ரகத்தைப் பயிரிடுபவர்கள் 50-60 மீட்டர் தள்ளிப் பயிரிட்டுக் கொள்ள வேண்டுமாம்.

இதுபோன்ற மரபணுக் கலப்படத்தால் அமெரிக்காவிலும், கனடாவிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது மான்சான்டோ திருட்டுப் பட்டம் சுமத்தி பல லட்சம் டாலர்கள் ஈடு கேட்கும் வழக்குச் சம்பவங்கள் அவ்விரு நாடுகளிலும் பரவலான ஒன்று.

பதப்படுத்திய மரபணுத் திணிப்பு உணவுப்பண்டங்கள் (எ.கா-சிப்ஸ்) அனுமதிக்கப்பட்ட பின், அமெரிக்காவில் உணவு சார்ந்த அலர்ஜியும், பிற நோய்களும் 50 சதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வகை அலர்ஜிக்கெனவே இப்போது மருந்துகளும் உள்ளன. அமெரிக்க சுற்றுச்சூழல் மருத்துவக் கல்வியகம், தங்களிடம் வரும் நோயாளிகளை மரபணுத் திணிப்பற்ற உணவுப் பண்டங்களை உண்ண அறிவுரைக்கும்படி பரிந்துரைத்துடன் அவைகளைத் தடை செய்யவும் கேட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்டவைகளிலேயே இப்படிப்பட்ட பிரச்னைகள். இந்த நிலையில் நேரடியாக உண்ணப்படும் கத்தரி போன்றவை மனிதரைப் பாதிக்காது என்றும் மனித இரைப்பையில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு அந்த நஞ்சு உற்பத்தி செய்யும் மரபணு இடம்பெயராது என்றும் எந்த ஆய்வுகளின் அடிப்படையில் கூறுகிறார்கள் என்பது சிறிதும் புரியவில்லை. இவர்கள் கூறுவதில் உண்மை எவ்வளவு என்று ஆராயலாம் எனில் அதிலும் வில்லங்கம்.

மரபணுத் திணிப்பு பயிர்கள், கம்பெனிகளால் காப்புரிமை செய்யப்பட்டவை. அக் கம்பெனிகளின் அனுமதியின்றி எவரும் ஆராய முடியாது. இரு வகை பி.டி. பருத்தியை ஒப்பிட்டு ஆராயக்கூட முடியாது.

காப்புரிமைக் கட்டுப்பாடுகள் காரணமாக மரபணுத் திணிப்பு பயிர்களில் பூச்சித்தாக்குதல் பற்றிய ஆராய்ச்சிகளைச் சுதந்திரமாகச் செய்ய முடிவதில்லை, தங்களுக்கு எதிர்ப்பாக எழுதாதவர்களுக்கு அல்லது தங்களிடம் நிதி உதவி பெறும் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே கம்பெனிகள் அனுமதி தருகின்றன. கம்பெனிகள் ஆராய்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன, ஆய்வுகளைத் தடை செய்கின்றன என அமெரிக்காவின் பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க அரசிடம் புகார் செய்துள்ளனர்.

பி.டி. பருத்தி, பி.டி. கத்தரி மற்றும் சாதா ரகப் பயிர்கள் கொண்டு ரசாயன வழி, இயற்கை வழி, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை என பல வகைகளை ஒப்பீட்டு ஆய்வு செய்வது மிக முக்கியம். இந்த ஆய்வுகளை வேளாண்மைப் பல்கலை ஏன் செய்யவில்லை? இயலாமையா? முடியுமெனில் இத்தகைய ஆய்வுகளை பல்கலை உடனே செய்யட்டும். வெளிப்படையான ஆய்வாகச் செய்யட்டும். உண்மை அப்போது தெரியும். ஆனால் செய்யாது, செய்ய முடியாது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை இவ்வகையில் ஓர் அடிமை.

இதுவரை உலகில் நடந்த ஓரிரு சுதந்திரமான ஆய்வுகள், அனுமதிக்காக அமெரிக்க விவசாயத்துறையிடம் கம்பெனிகள் சமர்ப்பித்த ஆய்வுக்குறிப்புகள்,கம்பெனிகள் அனுமதியளித்து பாதிப்பு தெரிந்ததும் நிறுத்தப்பட்ட ஆய்வுகள் ஆகியவற்றால் அறியப்பட்ட பாதிப்புகளை ஜெனிடிக் ரெüலெட் என்ற பெயரில் நூலாகவே வெளியிட்டார் ஜெப்ரே சிமித் என்ற பத்திரிகையாளர்.

அனுமதிக்கப்பட்டு நடந்த கொஞ்ச நஞ்ச ஆய்வுகள் மரபணுத் திணிப்புப் பயிர்களால் ஆய்வு விலங்குகளுக்கு ஏற்பட்ட 65 உடற்பாதிப்புகளை இந்நூலில் பட்டியலிட்டுள்ளார்.

இத்தகு பாதிப்புகள் திணிக்கப்பட்ட மரபணுவால், அது சுரக்கும் நஞ்சால் மட்டுமல்ல. பயிரின், ஆய்வு விலங்கின் உடலில் இந்த மரபணுக்கள் ஏற்படுத்திய விளைவுகளாலும் இருக்கலாம். எதனால் என்பதை அறிய நீண்ட கால ஆய்வுகள் தேவை என்கின்றனர் நடுநிலை விஞ்ஞானிகள். மிகக் குறைந்தபட்சம் 2-3 ஆண்டு கால ஆய்வுகள் தேவை என்கிறார்கள். ஆனால் மகிகோ நிறுவனம் 90 நாள்கள் ஆய்வையே செய்துள்ளது.

மகிகோ அனுமதிக்காக சமர்ப்பித்த ஆய்வறிக்கை மீது இத்துறையில் சிறந்த வல்லுநரான பேரா.செராலினி மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர். முடிவுகள் நன்றாக இருப்பதற்காக பல புள்ளிவிவரங்கள் மாற்றி மாற்றி எழுதப்பட்டுள்ளன. ஆய்வு விலங்குகளில் ரத்தம் உறைவதற்கு நீண்ட நேரமாவது, ஈரல் கெட்டுப்போய் இருப்பதும், எலிகளில் வயிற்றுப் போக்கு, ஈரல் எடை குறைந்திருப்பது போன்றவற்றை அந்த ஆய்வு அறிக்கை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு விஞ்ஞானியான ஜீடி கார்மன் இத்தகு பரிசோதனைகளில் பொதுவாக 18-20 வகையான ரத்த சோதனைகள் செய்வது வழக்கம். ஆனால் இங்கோ வெறும் 7 சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்கிறார்.
மேலும் பல ஆய்வுகளில் மரபணுத் திணிப்புக் கத்தரியில் அந்த மரபணு உருவாக்கிய நஞ்சைப் பயன்படுத்தவில்லை. மாறாக செயற்கை நஞ்சையே பயன்படுத்தியுள்ளதைச் சுட்டியுள்ளார். இவ்விருவரும் தத்தமது அரசுகளுக்கு (பிரான்சு, ஆஸ்திரேலியா) திணிப்புப் பயிர்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குபவர்கள். இவர்களின் கருத்துகளுக்கு நம் பல்கலை விஞ்ஞானிகள் பதில் சொல்ல மாட்டார்கள். நாங்கள் அதையெல்லாம் ஆராயத் தேவையில்லை என்பார்கள்.

8-4-2008-ல் ஈரோட்டில் தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய விவாத அரங்கிற்கிற்காக அன்றைய துணை வேந்தர் முனைவர் இராமசாமி தலைமையில் வந்த விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறினர். அவ்விஞ்ஞானிகளின் ஆய்வுக்கருத்தை மரபணு அங்கீகாரக்குழு சொன்னதுபோல உப்புச்சப்பில்லாதவை என ஒதுக்கிக்கூடத் தள்ளுவர்.
÷ஆறு கோடி தமிழர்களின் உடல் நலன் குறித்த பிரச்னையை ஒட்டி எழுந்துள்ள சந்தேகங்கள், கேள்விகளைத் துணிச்சலுடன் விளக்க நம் விஞ்ஞானிகள் முன்வர வேண்டும். அப்போது தான் தமிழக மக்களும், விவசாயிகளும் பி.டி. கத்தரி தேவையா தேவையில்லையா தடை செய்ய வேண்டுமா என்கிற முடிவைப் பகுத்தறிந்து அறிவார்ந்து சீர்தூக்கி முடிவெடுக்க முடியும்.

அதற்கு உதவும் பெரும் பொறுப்பு எதிர்க்கின்ற, ஆதரிக்கின்ற இரு தரப்புக்கும் உள்ளது. எதிர் தரப்புடன் சேர்ந்து விளக்கம் தர பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்.
கட்டுரையாளர் : செல்வம்
நன்றி : தினமணி

Wednesday, November 25, 2009

மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்

தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.

இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.

தமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.

அதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.

2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.

இந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.

வேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.

நீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.

தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.

திறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.

மழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.

திறந்தவெளிக் கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றில் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.

நிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.

கிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.

இதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.

இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.

நிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.

(கட்டுரையாளர்: எம். பாண்டியன், மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்).
நன்றி : தினமணி

Tuesday, November 17, 2009

உணவின் தேவையும் நீரில் சிக்கனமும்

நாளுக்கு நாள் உணவின் தேவை உயர்ந்து வருகிறது. உணவின் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை என்பதால் அரிசி விலையும் பருப்பு விலையும் ஆகாயத்தைத் தொடுவதாக உள்ளன. நல்லவேளையாக தமிழ்நாட்டுக்குத் தேவையான வடகிழக்குப் பருவமழை தாமதமானாலும் தொடங்கியுள்ளது.

நீடிக்குமா? வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரப்பிரதேசத்திலும் ஒரிசாவிலும் வெள்ளத்தை ஏற்படுத்துமா? போகப் போகத் தெரியும். இங்கு பெய்யாமல் அங்கு பெய்தாலும் சரி. ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அரிசி வருவது நின்றுவிடாது. தென்மேற்குப் பருவமழை பொய்த்தது பொய்த்ததுதான்.

அரிசி, கோதுமை இறக்குமதியுடன் பருப்பு இறக்குமதியும் தொடர்வது உண்மைதான். உணவுக்கும் நீருக்கும் பற்றாக்குறை இருப்பது உண்மை. இதற்கு நதிநீர் இணைப்பு சரியான தீர்வு என்று பலர் கருதுகிறார்கள். அப்படியே இணைத்தாலும், ஆந்திர அரசு நமக்குத் தேவையான நீரைத் தருமா? குறுக்கே குறுக்கே கர்நாடகம் அணைக்கட்டுகளைக் கட்டிக் காவிரிப் பிரச்னை நாற்பது ஆண்டுகளாக சந்தி சிரிக்கிறது. கிருஷ்ணர் வேஷம் போட்டு மக்களை மயக்கிய என்.டி.ஆர். சென்னைக்கு கிருஷ்ணா தீர்த்தம் தருவதாக ஒப்பந்தம் செய்தார்.

தமிழ்நாடு அரசு தந்த பணத்தைக் கொண்டு ஆந்திர மாவட்டங்களில் கால்வாய் வெட்டினார்கள். இன்று வெட்டிய கால்வாய்கள் தூர்ந்துவிட்டன. பெருமாள் கோயிலில் வழங்கும் துளசி தீர்த்தம்போல் வந்தது சிறுதுளிகள். இன்று பாலாறில் அணை ஒரு பிரச்னை. எதிர்க்கட்சிகள் சிலநாள் தூக்கிப் பிடித்தன. இலங்கைத் தமிழர் பிரச்னை வந்ததும் காவிரிப் பிரச்னை, பாலாறு பிரச்னைகளையெல்லாம் ஓசை இல்லாமல் அடங்கிவிட்டன.

இந்தியாவில் உள்ள நதிகளை எல்லாம் இணைப்பது இயலாத காரியம் என்று ராகுல் காந்தி கைவிரித்துவிட்டதும் ஒருவிதத்தில் நல்லது. நதி இணைப்பில் எச்சரிக்கை தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆமோதித்து விட்டார். ஒரு காவிரிப் பிரச்னையைத் தீர்த்து வைக்க முடியாத சூழ்நிலையில், இருபது மாநிலங்களிலும் இருபது காவிரிப் பிரச்னைகள் - ஒவ்வொரு நதியும் அடுத்த மாநிலத்துக்கு வரும்போது - யார் குடுமி யாரிடம் இருக்கும், என்று பாரதப் பிரதமர் யோசித்துத்தான் இப்படிச் சொல்லியிருப்பார். அதற்குப் பின் சுற்றுச்சூழல், வன அழிப்பு, புதிய வாழ்விடம் என்ற பிரச்னைகள் ஏழைகளை மிகவும் பாதிக்கலாம். அதிகம் தண்ணீர் என்றால் அதிகம் உணவு. அதிகம் உணவுக்கு நதிநீர் இணைப்பு என்று ஒரு சுலபமான செய்தியைச் சொல்லும் அரசியல்வாதிகளும், பெரும்பாலான பொதுமக்கள் கருத்தும் ஒன்றாயுள்ளன. வேறு மாற்று யோசனைகளை நாம் சிந்திக்க மறுப்பது ஏன்?

முதலில் நீரில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறோமா? விவசாயத் தேவைக்குப் பயன்பட்ட தண்ணீர் முக்கிய அணைகள் அல்லது நீர்நிலைகளிலிருந்து குடிநீருக்காகத் தொலைதூரங்களுக்குக் கொண்டு வரப்படுகிறது. இடையில் எத்தனை உடைப்புகள் என்ற கணக்கு ஒருவரைத் தலை சுற்ற வைக்கும். பல இடங்களில் புதிய குளங்களே தேவையில்லாத பாழ்நிலத்தில் உருவாகியுள்ளது.

தோராயமாக இப்படி உடைப்பு எடுத்து ஓடும் தண்ணீரை ஸ்ப்ரிங்க்ளர் அல்லது "ரெயின்கன்'
மூலம் 2 லட்சம் டன் மக்சாச்சோளம் அல்லது 2 லட்சம் டன் கேழ்வரகு அல்லது 1.5 லட்சம் டன் வெள்ளைச்சோளம் உற்பத்தி செய்யலாம். கோ - 3 தீவனப்புல் சாகுபடி செய்தால் 10,000 பசுமாடுகள் (கலப்பினம்) மூலம் 50,000 டன் பால் உற்பத்தி செய்யலாம். பொது இடங்களில் குழாய் இருக்கும்; டேப் இருக்காது. டேப் இல்லாமல் தினம் வழிந்தோடும் தண்ணீரைக் கொண்டு பார் அமைத்துத் துவரையோ, உளுந்தோ போட்டால் ஒவ்வொரு வழிந்தோடும் குழாய்களைச் சுற்றியுள்ள இடத்திலும் 10 மூட்டை விளைச்சல் எடுக்கலாம்.

மழைநீர் சேமிப்பு என்பது கருத்தரங்கிலும் மேடைப் பேச்சுகளிலும் உள்ள வேகம் செயலில் இல்லை. இந்தியாவின் சராசரி மழை அளவு 115 செ.மீ. தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 90 செ.மீ. உலக சராசரி மழை அளவு 70 செ.மீ. ஆகவே இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டின் மழை அளவு உலக சராசரியைவிட அதிகமே.

மழைப்பொழிவு அதிகமுள்ள பல மாநிலங்களில் நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் - காவிரி டெல்டாப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 1000 அடிக்குக் கீழே தண்ணீர் சென்றுவிட்டது. பல மாநிலங்களில் இதே பிரச்னை.

நீர்ச்சிக்கனப் பயிர் சாகுபடிக்கு திட்டமிடப்படுகிறது. இதில் மிகவும் வியப்பான விஷயம், ராலிகன் சித்தி, ஹிவாரே பாசார் போன்ற வறட்சியான மகாராஷ்டிர மாநிலப் பகுதியில் மழை அளவு 46 செ.மீ. தான்.

உலக சராசரி - இந்திய சராசரியைவிடக் குறைவான தக்காண பீடபூமிப் பிரதேசம் இப்பகுதிகளில் இப்போதெல்லாம் 30, 40 அடியில் ஊற்று இருந்துகொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் அண்ணா ஹசாரே வழிகாட்டி, மக்கள் சேர்ந்து சிறப்பாக மழைநீரைச் சேமிப்பதுவே. இதுபோல் ஒவ்வொரு கிராமங்களிலும் ராலிகன் சித்தியின் உதாரணம் பின்பற்றப்படுமானால் நதிநீர் இணைப்பு என்ற பேச்சுக்கே அவசியமில்லை. கிடைக்கும் மழைநீரில் ஐந்தில் ஒரு பங்கைத்தான் பயன்படுத்துகிறோம். 50 சதவீதம் பயன்படுத்தத் திட்டமிட்டாலே போதும். பத்தில் 1 பங்கு இயல்பாகவே பூமிக்கடியில் செல்கிறது. பத்தில் 1 பங்கு ஏரி, குளங்களுக்கும் செல்கிறது. மீதி 8 பங்கு - பெய்யும் மழையில் 80 சதவீதம் பாழாகிறது.

ராலிகான் சித்தியிலும் ஹிவாரே பாசாரிலும் நிகழ்ந்தது என்ன? வனத்துறையின் துணையுடன் கிராமத்தின் மேற்கட்டில் இருந்த மலைகளில் ஏராளமாக மரங்களை நட்டார்கள். வனம் உருவானது. ஆங்காங்கே நீண்ட வரப்புகளை வெட்டினார்கள். பல்வேறு நீர்த்தடுப்பு - கசிவுநீர்க் குட்டைகள் - குறுக்கணைகள் கட்டினார்கள். தீவனப்புல், வெங்காயம் சாகுபடி செய்தனர். கிராமத்தைவிட்டு மும்பைக்குப் பிழைக்கச் சென்ற விவசாயிகள் கிராமத்துக்கு வந்து லட்சக்கணக்கில் சம்பாதித்தனர். சிறப்பாகக் கால்நடை - கறவைப்பசு வளர்த்தார்கள். "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்ற கண்ணதாசன் பாட்டுக்கு இலக்கணம் வகுத்தனர், வறட்சிப்பகுதி விவசாயிகள்.

உணவுக்குத் தேவை உள்ளது, சரி. ஆனால் ரேஷனில் வழங்கப்படும் அரிசி தேவையில்லாமல் வீணாவது ஒருபுறம். அரிசிச் சோறு உண்டு பழக்கமில்லாத மலைவாழ் மக்கள் ஒரு ரூபாய் அரிசியால் கேப்பை, வரகு, பொட்டுக்கம்பு போன்றவற்றைச் சொந்த உணவுத் தேவைக்கு என்று சாகுபடி செய்த வழக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். அரிசி உண்ணும் வழக்கம் இல்லாதவர்களிடம் அரிசி நுகர்வைத் திணிப்பது சரியா? கொஞ்சநஞ்சம் எஞ்சியுள்ள புஞ்சை தானிய சாகுபடியையும் அழித்துவிட்டு நீர்ச்செலவுள்ள அரிசி போன்ற உணவு சாகுபடியை ஊக்குவிப்பதும் சரிதானா?

1 டன் அரிசி உற்பத்தியாவதற்குச் செலவாகும் நீரிலிருந்து 10 டன் புஞ்சை தானியங்களையோ 10 டன் பருப்பு வகை தானியங்களையோ உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய ஸ்ப்ரிங்க்ளர் அல்லது ரெயின்கன் அமைத்துக் கொள்ளலாம். நீர்ச்சிக்கனம் பற்றி மீண்டும் விவாதிக்கும் முன்பு பொது வினியோக அரிசியானாலும், அதிக விலை கொடுத்து வெளி அங்காடி அரிசியானாலும், வேறு பயனாவதும் வீணாவதும் தொடர்கதை. பொதுவினியோக அரிசி வெளி அங்காடிக்குக் கடத்தப்படும் கதை ஒருபுறம். 1 ரூபாய் அரிசியைப் பயனீட்டாளர்களே, 5 ரூபாய்க்கு விற்பது ஒருபுறம். தமிழ்நாட்டு கிராமங்களில் 1 ரூபாய் ரேஷன் அரிசி மாவாக அரைக்கப்பட்டுக் கறவைப் பசுக்களுக்கு அடர்தீவனமாக வழங்கப்படுகிறது. ஏனெனில் புஞ்சை தானியங்களைவிட அரிசி மலிவாக உள்ளது. மனித உணவாக புஞ்சை தானியங்கள் பயன்படுவதற்கு அரிசி நுகர்வு குறுக்கே நின்றது சரி. இப்போது கால்நடை உணவாகவும் அரிசி மாறிவிட்டதால், புஞ்சை தானிய சாகுபடி எவ்வாறு ஊக்கம் பெறும் என்று புரியவில்லை.

""ஒருபக்கம் உண்ணச் சோறில்லை'' என்று புலம்பல். எனினும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் இன்று ரேஷன் அரிசி சாப்பிட்டால் வயிறு வலிக்கிறது என்று காரணம் சொல்லி வெளி அங்காடியில் நல்ல விலை கொடுத்து நல்ல அரிசி வாங்கி உண்பது இல்லையா? குப்பையில் நாள்தோறும் கொட்டும் அரிசிச்சோறை விளைவிக்கத் தமிழ்நாட்டுக்கு கங்கையே வந்தாலும் பத்தாது.

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக முனைவர்கள் அரிசியைச் சற்று மறந்துவிட்டு வேறு உணவு தானியங்களின் உற்பத்தியை உயர்த்துவதில் கவனம் செலுத்தக்கூடாதா? 1964 - 68 காலகட்டத்தில் பொன்னையா என்பவர், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது, புஞ்சை தானியப் பயிர் சாகுபடிக்கும், பருப்புவகைப் பயிர் சாகுபடிக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கித் தேர்வு விதைகளை விநியோகம் செய்யும் திட்டம் அவரால் செயலானது. தமிழ்நாட்டில் விளையக்கூடிய சம்பா கோதுமைக்கும் அன்றே சான்று விதை உற்பத்தித் திட்டம் வகுத்தவர். இன்று பருப்பு விலைகள் எல்லாம் கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 என்று உயர்ந்துள்ளன. பருவகாலத்துக்கு முன்பே சரியான நேரத்தில் உணவு தானியம், பருப்பு வகை விதை விநியோகம் செய்யாமல், இம்மாநில அரசின் வேளாண்மைத்துறை முனைவர்கள் பி.ட்டி கத்தரிக்காய் விற்பனைக்கு வந்துவிட்டால் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று எண்ணும் காரணம் என்னவென்று புரியவில்லை. உண்ட விஷம் போதாதா? மரபணு மாற்ற மலட்டு விதைகளைக் கொண்டு வந்து பாரம்பரிய விதைகளையும் வீரிய விதைகளையும் அழித்துவிட நினைக்கும் மடமையை என்னென்பது? காலநிலை மாற்றத்தினால் பெய்யும் மழை ஒரே சீராக இல்லை. ஒரே இடத்தில் மழைகொட்டி, பருவமழை பரவலாகப் பெய்யாமல், இந்திய மாநிலங்களில் நிலத்தடி நீர் எட்டாக்கனியாகி வருவதால், மேல்மட்ட ஊற்றுக்களை மீண்டும் உயிர் பெறச் செய்து, நீர்ச்சிக்கன உணவு தானியப் பயிர்களை ஊக்கப்படுத்த வேண்டிய அவசரத்தை வேளாண்மை அமைச்சரகம் உணர்ந்து உரிய நடவடிக்கை எடுத்தால், நாடு நன்மை பெறும்.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி

Tuesday, November 10, 2009

பயன்படாத பயிர்க் காப்பீடு

நாட்டின் 100 சதவீத உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், கிட்டத்தட்ட 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குவது விவசாயம். இத்தகைய பெருமைமிகு விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. ஆனால், விவசாயத்தைக் காக்கும் திட்டங்கள் எதுவும் ஆக்கப்பூர்வமானதாகவோ போதுமானதாகவோ இல்லை.

ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகள் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டன. காரீப் பருவத்தில் பயிரிடப்பட்ட பெருமளவு பயிர்கள் மடிந்தன. நஷ்டமடைந்த விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பித்தனர். பல மாதங்களாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை. முதல்வர் ரோசய்யாவும், வேளாண் அமைச்சரும் பலமுறை கடிதம் எழுதிய பிறகும்கூட எதுவும் நடக்கவில்லை. இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசின் பங்குத் தொகை இன்னும் கிடைக்காததே இதற்குக் காரணம்.

மத்திய அரசு தர வேண்டிய ரூ.358.58 கோடியால் மட்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பெரிய நிவாரணம் கிடைத்துவிடப்போவதில்லை. எனினும், விவசாயிகளின் பிரச்னையில் மத்திய அரசுக்கு உரிய அக்கறையில்லை என்பதைத் தெரிந்து கொள்ள இது ஓர் உதாரணமாக அமைந்துவிட்டது.

ஆந்திர விவசாயிகள் கோரியிருக்கும் மொத்த இழப்பீட்டுத் தொகையே ரூ. 806.07 கோடிதான். நஷ்டத்தில் சிறு துரும்புதான் இது. இதற்குக் காரணம் விவசாயிகள் அனைவரும் பயிர்க்காப்பீடு என்கிற பாதுகாப்பின்கீழ் வராததுதான்.

பயிர்க்காப்பீடு செய்தவர்கள்கூட, அவர்களாக முன்வந்து அதைச் செய்யவில்லை. அவர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதன் விளைவாக, வேறு வழியில்லாமல் இந்தத் திட்டத்தில் அவர்கள் சேர்ந்தார்கள்.

நடைமுறையில் சிறு விவசாயிகளும், குத்தகைக்கு விவசாயம் செய்வோரும் வங்கிகள் மூலமாகக் கடன் பெறுவதில்லை. இதனால், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த விகிதத்தில் இருக்கிறது. அதுவும், தானாக முன்வந்து காப்பீடு செய்வோர் மிகச் சொற்பம்.

காப்பீடு செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பிரீமியத் தொகை அதிகமாக இருக்கிறது. பருவத்தையும், பயிரையும் பொறுத்து 2 முதல் 20 சதவீதம் வரை பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. கடன்களுக்கு அரசு வழங்கும் வட்டித் தள்ளுபடியைக் காட்டிலும் இது அதிகமானது என்பது வருந்தத்தக்க விஷயம்.

நாடு விடுதலையடைந்த காலத்திலேயே பயிர்க்காப்பீட்டின் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள். 1947-48-ல் இதுபற்றி ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. இரண்டுவிதமான காப்பீட்டு மாதிரிகளை இந்தக் குழு ஆய்வு செய்தது. பயிர்கள் நாசமாகும்போது, ஒவ்வொரு விவசாயியின் நஷ்டத்தையும் தனித்தனியே கணக்கிட்டு அதன்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முதலாவது மாதிரி. அப்படியில்லாமல், ஒரே மாதிரியான பருவநிலை கொண்ட கிராமம், யூனியன், தாலுகா போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் மொத்த நஷ்டத்தைக் கணக்கிட்டு, அதற்கேற்ப விவசாயிகளுக்கு இழப்பீடு தரலாம் என்பது இரண்டாவது மாதிரி.

ஒவ்வொரு விவசாயியின் தனித்தனி இழப்பீட்டைக் கணக்கிடுவதில் சிரமம் ஏற்படும் எனக் கருதப்பட்டது. தவறான நஷ்டக் கணக்கு காட்டப்படலாம், வேறு மாதிரியான முறைகேடுகளும் சாத்தியம் என்பதால், இந்தியாவில் முதலாவது மாதிரி, நடைமுறைக்கு ஒத்துவராது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இரண்டாவது காப்பீட்டு மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலங்களின் ஒப்புதல் கோரி மத்திய அரசு அனுப்பியது. எனினும், இந்தத் திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் காரணம் காட்டி பல மாநிலங்கள் இதை ஏற்க மறுத்தன.

1965-ம் ஆண்டில் மீண்டும் இதே திட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இதே கதைதான். மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டும் வகையில், மறுகாப்பீடு செய்யும் பணியை மத்திய அரசே செய்யும் எனக் கூறியபிறகும், எந்த மாநிலமும் திட்டத்தை ஏற்க முன்வரவில்லை.

1970-ல் எச்-4 பருத்திக்கு மட்டும் பிரத்யேகமான காப்பீட்டுத் திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியது. அந்தச் சூழலில் 1972-ம் ஆண்டு காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்டது. இதனால், ஜிஐசி எனப்படும் பொதுக்காப்பீட்டு நிறுவனம் எச்-4 பருத்திக்குக் காப்பீடு வழங்கும் பணியை ஏற்றது. இதன்பிறகு, நிலக்கடலை, கோதுமை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. எனினும், தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது. 1978-79 வரை அமலில் இருந்த இந்தத் திட்டத்தில், ரூ. 3,110 விவசாயிகள் மட்டுமே சேர்ந்திருந்தனர். மொத்தம் வசூலான பிரீமியத் தொகை ரூ. 4.54 லட்சம். காப்பீட்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 37.88 லட்சம்.

இதன் பிறகு, 1979-ல் விவசாயக் கடன் பெறுவோர் கட்டாயமாகப் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என்கிற திட்டம் அறிமுகமானது. 1984-85 வரை ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 6.23 லட்சம் விவசாயிகள் சேர்ந்தனர். இந்தத் திட்டத்தில் ரூ.1 கோடியே 97 லட்சம் பிரீமியத் தொகை வசூலானது. ரூ. 1 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எனப்படும் புதிய திட்டம் 1985-ம் ஆண்டில் அறிமுகமானது. 1999-வரை இந்தத் திட்டத்தில் 7.62 கோடி விவசாயிகள் சேர்ந்தனர். ரூ. 24 ஆயிரத்து 922 கோடி மதிப்பிலான பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் ரூ. 403 கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டது. ரூ. 2,365 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

இந்த இழப்பீட்டுத் தொகையில் ரூ. 803 கோடியை மாநிலங்களும் மீதியை மத்திய அரசும் வழங்கின. பிரீமியத் தொகையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை மிக அதிகமாக இருந்ததால், பிரீமியத் தொகையை மாற்றியமைக்கத் திட்டக்குழு முடிவு செய்தது.

இதையடுத்து, 1999-ல் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்கிற புதிய திட்டம் அறிமுகமானது. முன்பிருந்த காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீட்டுத் தொகையின் மூன்றில் ஒருபகுதியை காப்பீட்டு நிறுவனம் வழங்கியது. புதிய திட்டத்தில் காப்பீட்டு நிறுவனத்தின் பங்களிப்பு நீக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசும் மாநில அரசும் சரிபாதியாகப் பகிர்ந்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதன் பிறகு வேளாண் காப்பீட்டு நிறுவனம் 2002-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பொதுக் காப்பீட்டு நிறுவனம், நேஷனல், ஓரியண்டல், யுனைடெட் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் நபார்டும் சேர்ந்து இந்த அமைப்பை நிறுவின. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதே இதன் பணி.

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 19 பருவங்கள் முடிந்திருக்கின்றன. இழப்பீடு கோருவதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. ஆந்திரப் பிரதேசத்துக்கு இதுவரை ரூ.1,762.46 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் ரூ.801.20 கோடி நிலுவையில் உள்ளது. அதேபோல், தமிழகத்துக்கு ரூ.436.5 கோடி இழப்பீடு கிடைத்திருக்கிறது. இன்னும் ரூ.663.82 கோடி வர வேண்டியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த ஆண்டின் இழப்பீட்டுத் தொகை மட்டும் ரூ.663.82 கோடியாக இருக்கிறது.

இது இந்தியா முழுவதுமான ஒட்டுமொத்த இழப்பீட்டுத் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். ஆனால் பலன் பெறுவது என்னவோ வெறும் 11 லட்சம் விவசாயிகள் மட்டுமே. மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவு.

காப்பீட்டுத் திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைச் சென்றடையவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்குக் முழுக் காரணம் அரசின் வணிக ரீதியான அணுகுமுறைதான்.

தற்போதைய அனுபவத்தின் மூலமாவது, விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். பயிர்கள் மடிந்த பிறகு, மிகத் தாமதமாக இழப்பீடு வழங்குவது நடைமுறைக்கு ஒவ்வாதது. உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கி, தொடர்ந்து பயிரிடுவதற்கான வழியை ஏற்படுத்தித் தரவேண்டும். விவசாயத்தின் உண்மையான பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ கணக்கீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவதால் மட்டும் இந்தச் சிக்கல்கள் தீர்ந்துவிடாது.
கட்டுரையாளர் :பி.எஸ்.எம்.ராவ்
நன்றி : தினமணி

நீரோக்களும், லூயிக்களும்...

விலைவாசி உயர்ந்துவிட்டதாக அன்றாடம் செய்தி வெளியிட்டு பத்திரிகைகள் பரபரப்பை ஊட்டுகின்றன; உண்மையில் விலைவாசி உயர்ந்தால் அதன் பலன் விவசாயிகளுக்கும்தான் சென்று சேருகிறது என்று பேசியிருக்கிறார் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா.

இதை உடனடியாக வன்மையாகக் கண்டித்திருப்பதுடன் விலைவாசி உயரவில்லையா, மக்கள் அதனால் பாதிக்கப்படவில்லையா, அதன் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கிறதா, அப்படி என்றால் எத்தனை சதவீதம் அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது என்று நியாயமான கோபத்துடன் கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன்.

உருளைக்கிழங்கு 100.82%-ம், வெங்காயம் 49.91%-ம், பருப்பு வகைகள் 23%-ம், அரிசி 12.19%-ம், கோதுமை 7.47%-ம் விலை உயர்ந்துள்ளது. பால், சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை பற்றிச் சொல்லவே வேண்டாம் என்றும் பரதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வறுமைக்கோடு எது என்பதை நிர்ணயிக்க பிரதமர் தலைமையில் குழு அமைத்திருப்பதையும் அவர் சாடியிருக்கிறார்.
வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறவர்கள் 28% பேர்தான் என்று மத்திய திட்டக்குழுவும், 40% பேர் என்று சாம்பிள் சர்வே நடத்தும் மத்திய அரசின் புள்ளிவிவரத்துறையும், 50% என்று ஊரக வளர்ச்சித்துறையும் தெரிவிக்கின்றன. இவை மூன்றுமே மத்திய அரசின் அங்கங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பணியை மேற்கொண்ட அர்ஜுன் சென் குப்தா தலைமையிலான குழுவோ வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 77% என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் தலைமையிலான குழு எந்த அடிப்படையைக் கையாளப் போகிறது என்று தெரியவில்லை.

மொத்தவிலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் குறைந்துவிட்டது, மைனஸôகிவிட்டது, கட்டுக்குள் வந்துவிட்டது என்றெல்லாம் கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் வெவ்வேறு துறைகள் சார்பில் மாற்றிமாற்றி அறிவித்துக் கொண்டிருந்தார்கள். உண்மையில் மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் பண்டங்களின் விலை எதுவும் இறங்கு முகமாக அல்ல, நிலையாக அதே விலையில்கூட விற்கப்படவில்லை. எனவே மான்டேக் சிங் அலுவாலியாவை, கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் கண்டித்திருப்பதில் நியாயம் இருக்கிறது.

அடுத்து விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க, பரதன் பயனுள்ள யோசனை ஒன்றையும் சொல்லியிருக்கிறார். அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 14 அவசியப் பண்டங்களை ரேஷன் கடைகள் மூலம், வருவாய் வரம்பு ஏதும் விதிக்காமல் அனைவருக்கும் நியாய விலையில் விற்க வேண்டும் என்பதுதான் அது. இதன் மூலம், கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளை வழிக்குக்கொண்டுவர முடியும். அத்துடன் விவரம் தெரிந்தவர்கள் ரேஷன் கடைகளுக்குப் போகிறார்கள் என்றால்தான் அங்கு வேலையும் ஓரளவுக்கு நடக்கும்.

உள்நாட்டு, வெளிநாட்டு பெரு வர்த்தக நிறுவனங்களின் சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பச்சைக் கொடி காட்டும் மத்திய அரசு, இந்த யோசனைகளைப் பரிசீலிக்கக்கூட முன்வருமா என்பது சந்தேகமே.
மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த காலத்திலிருந்து மத்திய பட்ஜெட்டுகளில் இடைவிடாமல் மக்களுக்குக் கூறப்படும் மற்றொரு உறுதிமொழி, நாடு முழுக்க உணவு தானியங்களையும், காய்கறி, பழங்களையும் சேமித்து விநியோகிக்க சங்கிலித் தொடராக உணவு தானியக் கிடங்குகளும், குளிர்பதனக் கிடங்குகளும் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டித்தரப்படும் என்பதாகும். இதுவும் உதட்டளவிலேயே இருக்கும் வாக்குறுதியாகும்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள உணவுப் பாதுகாப்பு மசோதா நன்மையைத் தராது. மாறாக, இந்திய விவசாயிகளுக்கு துரோகத்தை இழைக்கும் என்று எச்சரித்திருக்கிறார் பரதன். உணவு தானிய பற்றாக்குறையை எப்படிச் சமாளிப்பது என்று நடத்திய ஆலோசனையில் வெளிநாடுகளிலிருந்து குவிண்டால் ரூ.1,600 விலையில் கோதுமையை இறக்குமதி செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. உள்நாட்டு விவசாயிகளுக்கு இப்போது குவிண்டாலுக்கு ரூ.1,100 தருவதற்குக்கூட தாராளம் காட்டாத அரசு, இறக்குமதிக்கு அதிக விலை தருவதன் ரகசியத்துக்கும், சுவிஸ் வங்கி சேமிப்புக்கும் சம்பந்தம் இருக்காது என்று நம்புவோமாக!

கோதுமை சாகுபடிக்கு ஊக்குவிப்புக் கிடைக்க, குவிண்டாலுக்கு ரூ.1,500 கொள்முதல் விலை நிர்ணயிக்கலாம் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அரசுக்கு யோசனை கூறியிருப்பதையும் பரதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வேளாண் பொருள்களுக்குக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய நியமிக்கப்படும் குழுவில் (ஏ.பி.சி.) தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். அதிகார வர்க்கமும், மக்களிடமிருந்து அன்னியப்பட்டுவிட்ட ஆட்சியாளர்களும் நியாயங்களை யார் சொன்னாலும் ஏற்கும் பக்குவம் பெற்றாலே இந்த நாட்டின் பிரச்னைகளில் பெரும்பாலானவை தீர்ந்துவிடும்.
""ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடுவதுதானே?'' என்று பிரெஞ்சுப் புரட்சியின்போது கேட்ட பிரெஞ்சு மகாராணியின் மனப் போக்கிலேயே மான்டேக் சிங் அலுவாலியாக்கள் இருந்தால் வறுமை ஒழிவது எப்போது? நீரோக்களும், லூயிக்களும் ஆட்சியாளர்களாக இருந்தால், இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்!
நன்றி : தினமணி

Saturday, November 7, 2009

பஞ்சம் போக்கும் புன்செய் தானியங்கள்

வீரத்தமிழனை எடுத்துக்காட்டும் புறநானூறு பாடல்களில் சிறப்பாகப் போற்றப்பட்ட வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு, கருஞ்சோளம், அரிசிக்கம்பு, செந்தினை, கருந்தினை, பைந்தினை, பெருந்தினை, சிறுதினை, காடைக்கண்ணி, கேப்பை, வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற தானியங்களுக்குரிய பொதுவான தமிழ்ப்பெயர் புன்செய் தானியங்கள். நன்மை என்றால் சிறந்தவை. புன்மை என்றால் அற்பம், சிறுமை, இழிவு என்று பொருள் உண்டு. நெல், வாழை, கரும்பு எல்லாம் நன்செய். மற்றவை புன்செய். நல்ல சுவையான உணவு தானியங்களுக்கு ""புன்மை'' என்று பட்டம் கட்டினர்.

உண்மையில் அரிசிச் சோறு உண்டவர்கள் தாம் பூஞ்சையாக இருந்தனர். புஞ்சை உணவாகிய கம்பு உருண்டையையும், உளுத்தங்களியையும், கேப்பைக் களியையும் உண்டவர்கள் நோய்நொடியின்றி வலுவாக இருந்தனர். வீரம் விளைத்தனர்.

எட்டாண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு மாபெரும் இயற்கை விவசாயக் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டிருந்தேன். நான் பேச வேண்டிய ""பசுமைப்புரட்சி'' என்ற தலைப்பு எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையில் பணிபுரிந்த முன்னாள் கோவை விவசாயப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு வழங்கப்பட்டது. பேச்சு ஒருகட்டத்தில் நான் ஏற்கெனவே தொட்டிருந்த புன்செய் தானிய விஷயத்துக்கு வந்தது. அப்போது அவர் எனது புள்ளிவிவரங்களை அள்ளித் தந்தார். அதாவது 1950 - 51 புள்ளிவிவரத்துடன், 2000 - 01 புள்ளிவிவரத்தை (2009 - 10 - புள்ளிவிவரமானாலும்) ஒப்பிட்டால் அரிசி உற்பத்தி 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் பெருவகை புன்செய் தானியங்களான சோளம், கம்பு, கேப்பை சுமார் 300 சதவீதம் உற்பத்தி குறைந்துவிட்டதுடன், தினை, சாமை, வரகு முதலிய சிறு தானியங்கள் காணாமல் போய்விட்டன என்றும் குறிப்பிட்டு, உணவு தானியங்கள் உற்பத்தியில் உள்ள சமனற்ற போக்கை வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் எழுந்து சில கேள்விகளைக் கேட்க அனுமதிக்கப்பட்டேன். ""புன்செய் தானிய உற்பத்தி குறைந்தது தெரிந்த விஷயம். அதற்குக் காரணமானவரே நீங்கள்தானே? புன்செய் தானிய உற்பத்தியை உயர்த்தும் முயற்சிகளைச் செய்வதில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பொறுப்பு இல்லையா?'' என்று கேட்டேன்.

""பஞ்சத்தையும் பசியையும் போக்குவதற்கு அரிசி உற்பத்தி மட்டுமே வழிவகுக்கும் என்று நெல் சாகுபடிக்கு மட்டுமே பேக்கேஜ் திட்டம், மானியம் வழங்கப்பட்டது'' என்று அவர் கூறிய விளக்கம் யாரையும் கவரவில்லை. மீண்டும் நான் எழுந்து, ""புஞ்சை தானியங்களுக்குத்தான் பஞ்சம் தீர்க்கும் பஞ்சை தானியம் என்று பெயருண்டு. அரிசியை 2 மாதம் சேமிக்கலாம். நெல்லை ஓராண்டு சேமிக்கலாம். ஆனால் புஞ்சை தானியங்களை 5,6 ஆண்டுகளுக்குச் சேமிக்கலாம். ஆகவே ஆண்டுதோறும் பல்லாயிரம் டன்கள் அளவில் வீணான அரிசி சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் ஏலம் விடப்பட்டு பசை உற்பத்தி நிறுவனங்களுக்குச் செல்கிறது. வீணாகி விஷமான ரேஷன் அரிசி ஏழை மக்களின் வயிற்றுக்கும் செல்வதால், வீரத்தமிழன் நோய் தொற்றி நோஞ்சானாகி விட்டான் என்றேன்.

அதை அவர் ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; எவ்வாறு அந்த மாஜி துணைவேந்தரின் பாட்டி அவர் கிராமத்தில் கம்பைக் குத்திப் புடைத்துக் குடித்ததை ஒரு மலரும் நினைவாக எடுத்துக் கூறினார்.

இந்தியாவிலேயே புன்செய் தானிய உணவை கிராமங்களில் இன்னமும் விட்டுக் கொடுக்காதவர்கள் வீரமராட்டியர்களே. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே மானாவாரி புன்செய் தானிய சாகுபடி விரிந்த அளவில் எஞ்சியுள்ளதுடன் அவ்வளவையும் சொந்த உணவு உபயோகத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் காணாமல்போன பல வகையான சாமை, குதிரை வாலி, தினை வகைகள், வரகு எல்லாவற்றையும் மராட்டிய மாநிலத்தில் கண்டுபிடித்து விடலாம். கிருஷ்ணராஜசாகரம், கபினி அணைகள் கட்டி, புஞ்சை நிலங்கள் சதுப்பு நிலமாக மாற்றப்பட்டு, கர்நாடகத்தில் நெல்லும் கரும்பும் ஆக்கிரமித்துக் கொண்டன.

இதனால் புன்செய் தானியம் உண்டு வீரமாக வாழ்ந்த திப்புசுல்தான் படைவீரர்களின் வாரிசுகள் இன்று கர்நாடகத்தில் நோயாளிகளாகிவிட்டனர். ஏனெனில் புன்செய் தானிய சாகுபடியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடமாகவும் கர்நாடக மாநிலம் இரண்டாவது இடமாகவும் விளங்கி வந்தது.

கர்நாடக மாநிலச் சூழ்நிலை எல்லா மாநிலங்களிலுமே ஏற்பட்டுள்ளதால் இந்திய அளவிலும் எந்த வளர்ச்சி வீதத்தில் நெல், கோதுமை சாகுபடி உயர்ந்துள்ளதோ அந்த வளர்ச்சி வீதத்துக்குமேல் பன்மடங்காக புன்செய் தானிய சாகுபடி குறைந்துவிட்டது. மராட்டிய மாநிலம் மட்டுமே சற்று விதிவிலக்கு.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் "பழைய குருடி கதவைத் திறடி' என்ற பழமொழிக்கு ஏற்ப ஹரியாணா, மேற்கு உ.பி. பஞ்சாப் பகுதியில் சில விவசாயிகளும் ஆந்திரப் பிரதேசத்திலும் அரிசி, கோதுமையை விதைக்காமல் புன்செய் தானியங்களையும், பருப்புவகைப் பயிர்களையும் சாகுபடி செய்துள்ளனர். இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் நெல் சாகுபடி 1960-க்குப் பின் அறிமுகமானது. அதற்கு முன்பு, கரீஃப் பருவத்தில் புன்செய் தானியங்களுடன் மக்காச்சோளம், பருப்பு வகை, கரும்பு, எண்ணெய்வித்து சாகுபடி செய்வர். பிறகு ரஃபி பருவத்தில் கோதுமை சாகுபடி செய்வது மரபு. நிலத்தடி நீர் கீழே செல்லச் செல்ல நெல் சாகுபடி செலவுமிக்கதாகவும், நீர்ப்பற்றாக்குறை காரணமாக நெற்பயிர் காய்ந்துவிடும் அபாயமும் உள்ளதால், சில விவசாயிகள் பழைய நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்புவதாகத் தகவல்.

ஆந்திர மாநிலத்திலும் இம்மாற்றம் தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் கடற்கரை மாவட்டங்கள் தவிர மையப்பகுதி மாவட்டங்களில் மழைப்பொழிவும் குறைவு. நிலத்தடி நீரும் வற்றிவிட்ட சூழ்நிலையில் பழையபடி புன்செய் தானியம் மற்றும் துவரை சாகுபடி துளிர்விடுகிறது.

இரண்டாவது போகமாக உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக்கடலை சாகுபடி செய்யவும் அம்மாநில அரசு, மத்திய அரசின் வறட்சிப் பயிர் சாகுபடித் திட்டம் மூலமும் தக்காண சமூக வளர்ச்சி மையம் போன்ற சில தொண்டு நிறுவனங்கள் மூலமும் ஊக்கம் அளித்தாலும்கூட, அடிப்படையான கொள்கை மாற்றம் இல்லாத ஒரு சூழ்நிலையில் புன்செய் தானியம் - பருப்பு வகை சாகுபடி உகந்த அளவில் வளர்ச்சி பெறுமா என்பது ஒரு கேள்விக்குறி.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் வறட்சிப் பயிர் சாகுபடி முயற்சியில் ஒரு துரும்புகூட அசைவு இல்லை. ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கும்போது 12 ரூபாய்க்கு யார் சோளமோ கம்போ வாங்கி உண்பார்கள்? இதர மாநிலங்களில் இரண்டு ரூபாய் அரிசித் திட்டம் உள்ளது. தமிழ்நாட்டைவிட இதர மாநிலங்களில் புன்செய் தானிய விலை சற்று மலிவாக இருந்தாலும், மகாராஷ்டிர மாநில மக்களைத் தவிர இதர மாநிலங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் புன்செய் தானியங்களுக்கு உகந்த கிராக்கி வருமா என்பது ஒரு கேள்விக்குறி.

எனினும் இந்த விஷயத்தில் உணவு அமைச்சரகத்தைச் சார்ந்த ஊட்ட உணவுக் குழுமம் செய்ய வேண்டிய விழிப்புணர்வுப் பிரசாரமும் பொது விநியோகத்தில் சோளம், கம்பு, ராகி, சாமை, தினை, வரகு போன்றவை வழங்குதலும் விவசாயிகளுக்கு நல்ல விலையும், தாராளமான அளவில் புன்செய் தானிய உற்பத்திக்கு மானியமும் வழங்க வேண்டும். புன்செய் தானியங்களை நன்கு சுத்தப்படுத்தி ரவாவாகவும், மாவாகவும் நல்ல முறையில் பேக் செய்து வழங்கலாம்.

தமிழ்நாட்டில் ஒரு தனிநபராக புன்செய் தானியங்களிலிருந்து விதம்விதமான உணவுகளை இன்சுவையுடன் ராமசுப்பிரமணியம் என்பவர் வழங்குகிறார். வறட்சி நிலப் பயிர்களான தானியங்களில் குறிப்பாக அழிந்து வரும் வரகு, தினை, பனிவரகு, சாமை, குதிரைவாலி போன்றவற்றைத் தேடிப்பிடித்து அவற்றைக் கொள்முதல் செய்வதுடன் அவற்றிலிருந்து நறுமணமுள்ள உணவுகளைச் சமைக்கவும் காலத்துக்கு ஏற்ப புதுமையாகவும் வழங்குகிறார்.

பல்வேறு கண்காட்சிகளில் உணவகங்களை நடத்தித் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளைப் புதுமையான முறையில் அவர் மீட்டுயிர்த்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த அவர் புன்செய் தானியங்களை இன்சுவை உணவாகப் படைத்து வழங்கிய காட்சிகளை ""கைமணம்'' என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சி மதியப் பொழுதில் தொகுத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பசுமைப்புரட்சியின் கரிய விளைவுகளுக்குப் பின் மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்று நிலவிவரும் நீர்ப்பற்றாக்குறையை அனுசரித்து முன்போல் மானாவாரி - வறட்சி நில சாகுபடிக்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். புன்செய் தானியங்களையும் பருப்பு வகைகளையும் முன்பு கலப்புப் பயிர்களாக சாகுபடி செய்த மரபு மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். இவ்வாறு கலப்புப் பயிர் செய்வதன் மூலம் மண்ணும் வளம் பெறும். நீர்ச் செலவும் குறையும்.

புறநானூறு பாடல்களில் விவரிக்கப்பட்ட வீர ரத்தமுள்ள தமிழர்களை மீண்டும் உருவாக்க புன்செய் தானிய உற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்தி, அவற்றைத் தமிழர்களுக்கு ஊட்ட வேண்டும். புன்செய் தானியங்களில் சோளம், கம்பு, கேப்பை, துவரை, உளுந்து பயிரிடுவோருக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 மானியமும் அழிந்து வரும் சிறுதானியங்களான சாமை, தினை, வரகு, குதிரைவாலி பயிரிடுவோருக்கு ரூ. 2,000 மானியமும் வழங்க வேண்டும். அவற்றை அரசு கொள்முதல் செய்து, பொதுவிநியோகத்தில் அரிசியுடன் புன்செய் தானியங்களையும் மாதம் 5 கிலோ வீதம் ரேஷன் வழங்கலாமே.

வீரமராட்டியர்களைப் போல் ஊட்டம்மிக்க புன்செய் தானியங்களால் வீரத்தமிழர்களை உருவாக்கும் ஒரு கடமையை நமது முதல்வரும், முத்தமிழ் வித்தகருமான கலைஞரைத் தவிர வேறு யாரால்தான் நிறைவேற்ற முடியும்?
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி

Tuesday, October 13, 2009

குறுக்குச் சால் ஓட்டலாமா?

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூலி குறைவாக வழங்கப்படுவதாகக் கூறி, தமிழகத்தின் பல இடங்களிலும் சாலை மறியல் நடப்பதும், அப்பகுதியின் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்வதும் வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது.

கூலியைக் குறைத்துக் கொடுத்தார்கள் என்ற பேச்சு எழுந்தவுடனே, தொடர்புடைய அலுவலர் அல்லது உள்ளாட்சிப் பதவியில் உள்ள மக்கள் தலைவர் இந்தப் பணத்தில் கை வைத்துவிட்டார் என்பதுதான் எல்லாருக்கும் மனதில் தோன்றும். ஆனாலும், பல இடங்களில், பல வேலைகளில், முறைகேடாகக் கூலி கேட்டு பிரச்னை செய்பவர்கள் கிராமத்து மக்களே என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

பல இடங்களில் இத்தகைய எதிர்ப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில் நடப்பது இதுதான்:

இத்திட்டத்தின் கீழ் கிராமத்தில் ஏரி, குளம், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் அல்லது ஏரிக் கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளும்போது, கிராமத்தில் உள்ள ஏழை விவசாயக் கூலிகள் மட்டுமன்றி, கிராமத்தில் உள்ள மற்றவர்களும் வேலைக்கு வருகிறார்கள். இவர்களில் பாதிப்பேர் வெட்டிக் கதைகள் பேசி உட்கார்ந்து கொண்டிருக்க, சிலர் மட்டும் உழைக்கிறார்கள்.

பகல் 2 மணிக்கெல்லாம் "கூலி கொடு போகணும்' என்கிற குரல் எழுந்துவிடுகிறது. இத்தனை பேர் ஈடுபடும் வேலையில் இந்தப் பரப்பளவுக்கு இத்தனை அடி ஆழத்துக்குத் தூர் வாரப்பட்டிருக்க வேண்டும் என்று பணியின் தன்மையை அரசு நிர்ணயிக்கிறது. அதை ஓரளவாகிலும் ஈடுசெய்ய வேண்டும் என்று அலுவலர்கள் வலியுறுத்தினால், ரகளை தொடங்குகிறது. "உனக்கென்ன! அரசுப் பணம்தானே! கணக்கெழுதிட்டுப் போய்யா' என்கிற அதிகாரம் அதிகமாக இருக்கிறது.

அரசு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, மக்களே இப்படியாகப் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது எந்த வகையில் நியாயம்? அதிலும், கிராமத்திற்கு வளம் சேர்க்கும் நீர்ஆதாரத் திட்டங்களில் இத்தகைய முறைகேடுகளில் மக்களே ஈடுபடலாமா?

சில மாதங்களுக்கு முன்பு, இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்திய ஒரு தன்னார்வ அமைப்பு, அரசுக்கு அளித்த பரிந்துரையில், 100 நாள் வேலைத் திட்டத்தை 120 நாள்களாக அதிகரிப்பதோடு, உண்மையான ஏழைகளை மட்டுமே வேலைக்கு ஈர்க்கும் வகையில், ஊதியத்தில் 20 சதவீதத்தைக் குறைத்து வழங்கினால், ஏழைகள் மட்டுமே இந்த வேலைக்கு வருவார்கள். ஏழைகள் மட்டுமே பயன்பெறுவார்கள் என்று கூறியிருந்தது.

அந்தச் செய்தியைப் படித்த நேரத்தில் முட்டாள்தனமான பரிந்துரை என்று தோன்றினாலும், இப்போது, கிராமத்தில் ஏழைகள் அல்லாதவர்களும் இதில் வந்து உட்கார்ந்துகொண்டு, வேலையையும் கெடுத்து, கூலியையும் கேட்கிறார்கள் என்பதைக் கேட்கும்போது, அந்த அறிக்கையில் அர்த்தம் இருப்பதை உணர முடிகிறது. பல மாநிலங்களிலும் மக்களிடம் இத்தகைய மனப்போக்கு இருப்பதால்தான் இந்த அறிக்கை அவ்வாறு தரப்பட்டுள்ளது என்று புரிகிறது.

கிராமங்களில் விவசாயப் பணிகள் நடைபெறாத காலத்தில் அந்த மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில், ஏழை விவசாயக் கூலிகளுக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் கிராம மக்களுக்கு குறைந்தபட்ச வேலை கிடைப்பதுடன் ஓரளவு பணமும் கிடைக்கிறது என்பதால்தான், மத்திய அரசு இத்திட்டத்துக்கு 2009-10-ம் நிதியாண்டில் ரூ.39,100 கோடியை ஒதுக்கியுள்ளது. (சென்ற நிதியாண்டைக் காட்டிலும் 144 சதவீதம் அதிகம்). குறைந்தபட்சக் கூலி ரூ.84 என்றும் நிர்ணயித்துள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 75 சதவீதப் பணிகள் வாய்க்கால் வெட்டுதல், தூர் வாருதல், ஏரி, குளத்தை ஆழப்படுத்துதல் ஆகியன. ஆனால், இதில் ஒரு பணி நடந்தது என்பதன் அளவு, விரிவு, ஆழம் ஆகியவற்றை உறுதிப்படுத்தி, அதற்குப் பொறுப்பேற்கவும், தொடர்ந்து கண்காணிக்கவுமான பொறுப்புகள் யாருக்கு என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

மேலும், இத்திட்டத்தில் இன்னொரு ஆபத்தும் நடந்துகொண்டிருக்கிறது. விவசாயப் பணிகள் நடைபெறாத நாள்களில் மட்டுமே இத்திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், கிராமத்தில் அறுவடை நடைபெறும் வேளையிலும் இத்தகைய தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும்போது, அறுவடைக்குப் போகாமல் இப்பணிக்கு வருவதையே விரும்புகிறார்கள். காரணம், உழைக்காமல் கூலி கிடைக்குமே!

விவசாயக் கூலிகளுக்கு வேலை உறுதியாகக் கிடைக்கக் கூடிய நாள்களில் அரசே இவ்வாறு குறுக்குச் சால் ஓட்டினால், திட்டத்தின் நோக்கமே- விவசாய வேலை இல்லாத நாளில் ஏழை விவசாயிக்கு வேலைவாய்ப்பு என்பது- பாழ்பட்டுப்போவதுடன், விவசாயமும் பாழ்படும். இதனால் உணவுப் பொருள் உற்பத்தி பாதிக்கப்படும். இறக்குமதி செய்ய எந்தவொரு அமைச்சரும் ஆர்வமுடன் முன்வந்து நிற்க "காரணங்கள்' உண்டு. ஆனால், நஷ்டப்படுவது நாடுதானே!

அக்டோபர் 2-ம் தேதி முதலாக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன். காந்தி பெயருக்கு மாறியது என்பதற்காக, உழைக்காமலேயே கூலியை "காந்தி கணக்கில் எழுதும்' திட்டமாக இது அமைந்துவிடக் கூடாது!
நன்றி : தினமணி

Wednesday, September 9, 2009

விலைக்கு வாங்கும் விபரீதம்!

கூட்டணி ஆட்சியால் ஏற்படுகிற ஒரு முக்கியமான நன்மை, ஆளும் கட்சி தன்னிச்சையாக விவாதமோ, எதிர்ப்போ இல்லாமல் எல்லா முடிவுகளையும் எடுத்துவிட முடியாது என்பது. அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம், மத்திய அமைச்சரவை நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி இருப்பது. இதற்குக் காரணம் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவியும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜியின் எதிர்ப்பும் பிடிவாதமும்.

மம்தா பானர்ஜியின் எதிர்ப்புக்குக் காரணம் அரசியல்தான் என்றும், தீர்க்கதரிசனமான கண்ணோட்டம் அல்ல என்றும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் விமர்சித்தாலும், அவரது வாதங்களில் இருக்கும் உண்மையும், நிலம் கையகப்படுத்தப்படும்போது விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும், விவசாயமும் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றன என்பதும் மறுக்க இயலாத உண்மை.

வியாபார நோக்கிலும், தொழிற்சாலை அமைப்பதற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் செயலுக்கு அரசு துணை போகக்கூடாது என்கிற மம்தா பானர்ஜியின் கருத்தில் நியாயம் நிறையவே இருக்கிறது. சிங்கூரில் நடந்த போராட்டத்தால் டாடாவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைவிட மேற்கு வங்கத்துக்குத்தான் அதிக நஷ்டம் என்று வரிந்து கட்டிக்கொண்டு முழங்குபவர்கள், சிங்கூரில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தனிமனிதர்களைப் பற்றிக் கவலைப்படத் தயாராக இல்லை. அதேபோல, மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காகப் பல நூறு ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்படுவது விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், 70 சதவீத நிலத்தைத் தனியார் விலைக்கு வாங்கி இருந்தால், மீதமுள்ள 30 சதவீத நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொடுக்க வழிசெய்யும் மசோதா ஒன்று மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு வந்தது. மேலே குறிப்பிட்ட 70 : 30 என்கிற விகிதாசாரம், தொழிலதிபர்களும், அரசு அதிகாரிகளும் கலந்துபேசி எடுத்த முடிவே தவிர, விவசாயிகளின் ஒப்புதலுடன் செய்யப்பட்டதல்ல என்பது மம்தாவின் வாதம். மேலும், ஒரு போகம் மட்டுமே விளையும் வானம் பார்த்த பூமியும், விவசாயத்துக்குப் பயன்படாத தரிசு நிலங்களும் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குக் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மம்தாவின் கருத்து.

எதற்காகக் கையகப்படுத்தப்படுகிறதோ, அந்தக் காரணத்துக்காக அல்லாமல் நிலம் வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும், அப்படிப் பயன்படுத்தப்பட்டால், நில உரிமையாளருக்கு அந்த நிலம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும்கூட மம்தா பானர்ஜியின் கோரிக்கை. சிறப்புப் பொருளாதார மண்டலம், தொழிற்சாலை என்கிற பெயரில் அதிக அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, பிறகு அதில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை.

அரசின் வளர்ச்சித் திட்டங்களான சாலை அமைப்பது, புதிய குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்துவது, கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவை நிறுவுவது ஆகியவற்றுக்காக விவசாய நிலங்கள் தகுந்த நஷ்டஈடு தரப்பட்டுக் கையகப்படுத்தப்படுவதை யாருமே எதிர்க்கவில்லை. ஆனால், விவசாயிகளிடமிருந்து அரசின் உதவியுடன் குறைந்த விலைக்கு நல்ல விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வணிக வளாகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டி ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

விவசாயி தானாக நிலத்தை விற்கவில்லை. அரசின் உதவியுடன் வலுக்கட்டாயமாக நிலம் குறைந்த விலைக்குக் கையகப்படுத்தப்படுகிறது. அப்படியானால், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விவசாயிக்குக் கிடைக்க இருக்கும் அதிகரித்த விலை தரப்பட வேண்டியது நியாயம்தானே? விவசாயி தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த தனது வாழ்வாதாரத்தை இழக்கிறார். அவருக்கு மாற்று வேலையும், மாற்று இருப்பிடமும், லாபத்தில் பங்கும் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளில் என்ன தவறு?

விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாறுவதில் இன்னோர் ஆபத்தும் இருக்கிறது. அந்த இடங்கள் மறுபடியும் விவசாயத்துக்குப் பயன்படாத நிலங்களாகி விடுகின்றன. போதிய நீர்ப்பாசன வசதிகள் இல்லை என்கிற காரணம் காட்டி, விவசாயம் லாபகரமாக இல்லை என்கிற சாக்கில் நிலங்களைக் குறைந்த விலைக்குத் தனியாருக்காக அரசே முன்னின்று கையகப்படுத்தும்போது ஒரு விஷயம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

ஏற்கெனவே விவசாயம் லாபகரமாக இல்லை என்பதாலும், கடின உழைப்புக்கு நாம் தயாராக இல்லாததாலும் கிராமப்புறங்களில் விவசாயம் புறக்கணிக்கப்படுகிறது. இதனால், உணவு உற்பத்தி கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், வரைமுறையே இல்லாமல் நிலங்களைக் கையகப்படுத்தித் தனியாருக்குத் தாரை வார்ப்பது தற்கொலை முயற்சி அல்லாமல் என்ன?

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. உலகில் உள்ள அத்தனை தட்பவெப்ப நிலைகளையும் உள்ளடக்கிய ஒரே நாடு இந்தியா மட்டுமே. இங்கே விளையாத பொருள்களே கிடையாது. விவசாயத்தை லாபகரமாக்கவும், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் வழி காண்பதை விட்டுவிட்டு, உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று கருதினால், விபரீதத்தை விலைக்கு வாங்குகிறோம் என்று பொருள். அது பாதுகாப்பு அச்சுறுத்தலாகிவிடும்...

நன்றி : தினமணி

Friday, September 4, 2009

முடிவு முதல்வரிடம்!

விவசாயம் செய்பவர்கள் பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளிடம் மட்டுமே தங்களுக்கு வேண்டிய அறிவை இனிமேல் பெற வேண்டும். தந்தையின் அனுபவ அறிவைப் பெறுவதுகூட சட்டவிரோதம். அதற்கு அத் தந்தை இனி தண்டிக்கப்படுவார்.

""இனி இவர்கள் சொல்வதை மட்டுமே தமிழக விவசாயிகள் கேட்க வேண்டும்...'' என்ற சட்ட மசோதாவை முதலமைச்சர் எப்படி அனுமதித்தார் என்பது இன்னமும் வியப்பாகவே உள்ளது.

தாத்தாவின் விரல் பிடித்து, தந்தையுடன் வயலில் நடந்து சென்று, விவசாய அறிவை சிறுவயது முதல் சுவீகரித்து வளர்ந்தது தான் விவசாய சமூகம். முன்னோர்களிடமிருந்து, பெற்ற அறிவை தலைமுறைக்குத் தலைமுறை மேம்படுத்தி வந்ததன் விளைவே நிலவள மேம்பாடு, கால்நடைகள் மேம்பாடு, விதை உற்பத்தி, புதிய ரகங்களை உருவாக்குதல், பூச்சிக் கட்டுப்பாடு, பருவத்திற்கேற்ற, மண்ணின் தன்மைக்கேற்ற ரகங்கள் உருவாக்கம் எனப் பலதும் நடந்தது. பச்சைப் புரட்(டு)சிக்கு முன் இந்தியாவில் இருந்த 4 லட்சத்துக்கும் அதிகமான நெல் ரகங்கள் எல்லாம் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பயிலாத "பாமர' விவசாயிகள் இப்படி மேம்படுத்திய அறிவின் விளைவால் உருவானதே.

பல்கலைக்கழகங்கள், பச்சைப்புரட்சி என்றுகூறி இந்த விதைவளத்தையும், விவசாயியின் அறிவையும் சிதைத்து, பண்ணையில் பயிரிடப்பட்ட பயிர்களின் வகைகளைக் குறைத்தது. ஒவ்வொரு பயிரிலும் இருந்த ரகங்களின் எண்ணிக்கையையும் அழித்தது. 10,000 ஆண்டுகள் சிதையாதிருந்த இந்திய வேளாண்மையை தனது உலக வணிக மேலாதிக்கத்துக்காக ஆங்கில அரசு சிதைத்திருந்தது. அமெரிக்காவின் ரசாயன விவசாய மாதிரியை விவசாயக் கல்வியாக்கிக் கொண்ட விவசாயப் பல்கலைக்கழகங்கள் மூலம் ஏற்கெனவே சிதைவுற்றிருந்தது, மேலும் சிதிலம் அடைந்தது. கடன் வாங்குவதே கேவலம் என்றிருந்த சமூகத்தை ""கடன் தள்ளுபடி செய், இல்லாவிடில் வாழ முடியாது'' என்ற நிலைக்குத் தள்ளி மானமிழக்கச் செய்தது இந்த விவசாயமுறை.

அறுபதுகளின் கடைசிவரையில், ஆங்கிலேயரின் கொள்கைகளால் சிதைவுற்றிருந்த பின்னரும், ஒரு விவசாயி தன் மகனுக்குப் படிப்பு ஏறாவிட்டாலும் "மாடும் காடும் உள்ளது, பிழைத்துக் கொள்வான்' என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், இன்றோ எல்லா தந்தையருமே விவசாயத்தை விட்டு ஓடிவிட முயல்கின்றனர். ""எங்கள் கிராமம் விற்பனைக்கு'' என்று வார்தா அருகே டோர்லி கிராமம் தன்னையே விற்க விளம்பரம் செய்த அவலம், திணிக்கப்பட்ட விவசாய முறையின் விளைவு. அரசின் கொள்கைகள் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றும் விதமாகவே உள்ளது. கம்பெனிகள் ஆயிரமாயிரம் ஏக்கர்களில் நிலம் வாங்குகின்றன. இந்தியாவில் மட்டுமன்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியக் கம்பெனிகள் விவசாயக் கம்பெனிகள் தொடங்கி பல்லாயிரம் ஏக்கர்களை வளைத்துப் புதிய காலனி ஆதிக்கத்துக்கு இந்திய அரசின் உதவியோடு அச்சாரம் போடுகின்றன.

நிறைய விளைந்து தள்ளிய விவசாயம் இங்கிருந்தது என்பதற்கும், ஆங்கிலேய அரசால் அது சிதைக்கப்பட்டது என்பதற்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவுகள் பல இன்னமும் அழியாமல் உள்ளன.

பச்சைப் புரட்சியையும் அமெரிக்க மாதிரி விவசாய முறையையும் ஆதரிப்பவர்கள் 1940-களில் நிகழ்ந்த வங்க பஞ்சத்தையே காரணம் காட்டுகின்றனர், ஓர் உண்மையை மறைத்து. 30 லட்சம் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த அதே காலத்தில் கோல்கத்தா துறைமுகத்திலிருந்து உலக வர்க்கத்துக்காக கப்பல் கப்பலாக அரிசியையும், சர்க்கரையையும் ஏற்றுமதி செய்தது ஆங்கில அரசு. பஞ்சத்துக்கான உண்மையான காரணம் விளையாததல்ல, விளைந்ததைப் பிடுங்கியதும் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததுமே.

விவசாயம் என்பது வெறும் பயிர் வளர்ப்பதல்ல. அற்புதமான வாழ்வு முறை. எந்தவொரு அரசனின், அரசின் கையையும் எதிர்பார்க்காது வாழ்ந்த உன்னத வாழ்வு முறை. அதை கம்பெனிகள் நலனுக்காக வளர்த்தெடுக்கப்பட்டு இந்திய விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட இரவல் அறிவு வெறும் வணிகத்திற்கு சுருக்கியது.

இதனுடைய விளைவு 10,000 ஆண்டுகால நம்பிக்கை சிதைந்தது மட்டுமன்றி நீர் கெட்டது, கிணறுகள் வறண்டன, நிலம் மலடானது.

இந்தச் சிதைவையும் இதற்கான காரணத்தையும் அறிந்த சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகிழ்த்தனர். கிராமத்து மக்களின் கதைகளிலும், பழமொழிகளிலும் விடுகதைகளிலும், நாட்டுப்புற இலக்கியங்களிலும் புதைந்து கிடக்கும் விவசாய அறிவை மீட்டெடுத்து அதை அறிவியல் விளக்கங்களுக்கு உட்படுத்தி விவசாயிகளிடமே திரும்பத் தந்தனர். இது அவர்களுக்கு புதிய அறிவைக் கொடுப்பதாக அல்லாமல் அவர்தம் அறிவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் "விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்காக' இயக்கமாகத் தொடங்கியது இன்று தமிழகத்தின் எல்லா வட்டங்களுக்குமாகப் பரவியுள்ளது. இவர்கள் இத்துடன் நிற்கவில்லை. உலகில் உள்ள பலவகையான இயற்கை விவசாய முறைகளையும் அறிந்து தத்தமது பண்ணைச் சூழலுக்கும், கிராமச் சூழலுக்கும் ஏற்ப தன்மயப்படுத்தி பரப்பினர். வேளாண் பல்கலைக்கழகம் அறிவதற்கு முன்பே முதலமைச்சர் கருணாநிதி செம்மை நெல் சாகுபடி என்று பெயரிடப்பட்ட சாகுபடி முறையை 1999-லேயே தமிழக விவசாயிகள் கடைப்பிடித்து ஒற்றை நாற்று நடவு என்று பெயரிட்டுப் பரப்பினர். இவையனைத்தும் அரசின் உதவியோ, வேறு வெளி உதவிகளோ இன்றி நடந்தேறியது.

இயற்கை வழியில் விவசாயிகள் பெற்ற தன்னம்பிக்கையும், சுயசார்பையும் கண்ணுற்ற பிற விவசாயிகளும் பல்கலை அறிவியல் மீது நம்பிக்கையற்றுப் போயினர். இவ்விரு பிரிவினரும் பல்கலைக்கழகத்தின் அறிவைக் கேள்விக்குறியாக்குகின்றனர். பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைக்கின்றனர். கம்பெனிகளுக்குத் தன்னை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மரபணு மாற்றுப் பருத்தியை ஆதரிக்கத் தொடங்கிய பின் வேளாண்மைப் பல்கலை எத்தனை பருத்தி ரகங்களை வெளியிட்டுள்ளது என்று வினா தொடுக்கின்றனர். செலவுமிக்க பி.டி. பருத்தி மூலம் அதிகம் விளைகிறதா, புழு கட்டுப்படுகிறதா அல்லது பல்கலைக்கழகமே பாராட்டிப் பரப்பிய எளிய ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் அதிகம் விளைகிறதா, புழுக்கள் கட்டுப்படுகிறதா என்று ஒப்பீட்டாய்வை ஏன் செய்யவில்லை என்கின்றனர். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் எல்லா வணிகப் பயிர்களிலும் 30 - 50 சதவீதம்வரை விளைச்சலை அதிகப்படுத்த முடியும் என்று சொன்ன பல்கலைக்கழகம் இப்போது ஏன் அம்முறைகளைப் பற்றிப் பேசுவதில்லை, அதை ஏன் அமுக்கிவிட்டது என்று கேட்கின்றனர்.

இப்படி விவசாயிகளும், விவசாய சங்கத் தலைவர்களும் கேள்விகள் கேட்பது பல்கலைக்கழகத்திற்கு மட்டும் நெருடலாக இருக்கவில்லை. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கையை 70 சதத்திலிருந்து 20 - 25 சதமாகக் குறைக்க வேண்டும், கம்பெனிகள் விவசாயத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற உலகமய, உலக வங்கிப் போக்குகளுக்கு எதிராக இருக்கிறது.

ஒவ்வொரு விவசாயியும் நடமாடும் விவசாயக் களஞ்சியமாக மாறுவதும் இரவல் அறிவின் அர்ச்சகர்களுக்கு நெருடலாக இருக்கிறது. இவை அடுத்த 10 - 20 ஆண்டுகளில் நடந்தேற வேண்டிய "சில' திட்டங்களை நடந்திடாது தடுத்துவிடும் என்பதால் தமிழக அரசைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதன் வெளிப்பாடே பட்ஜெட் தொடரின் கடைசி நாளன்று எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்ட 30 சட்ட மசோதாக்களில் ஒன்றான இச்சட்டம். தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் - 2009 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்ட இம் மசோதாவை ஆதரித்து வாக்களித்த உறுப்பினர்கள் ஆற அமர அதைப் படிக்கும்போது, ஓர் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையைப் பறிக்கக்கூடிய ஒரு மோசமான சட்டத்திற்கு வாக்களித்தோம் என்பதை உணர்வார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் முன் இப்போது இரு வழிகள் உள்ளன. தனக்கும் தம் ஆட்சிக்கும் பழியைச் சேர்க்க இருக்கும் இந்தச் சட்டத்தை முற்றாக ரத்து செய்வது. ஏனெனில் இத்தகு மன்றத்திற்கு எவ்விதத் தேவையும் இல்லை. மற்றொன்று தமது அரசு கம்பெனிகளின் போக்கில் போகிறது என்பதைக் காட்டும்விதமாக இம்மசோதாவை உடனே சட்டமாக்குவது.

முடிவு முதல்வரிடம்!


கட்டுரையாளர் : ஆர். செல்வம்

நன்றி : தினமணி


Thursday, September 3, 2009

விவசாயி கடன் வட்டி விகிதத்தை குறைந்தது ஸ்டேட் வங்கி

விவசாயிகளுக்கான கடன் வட்டி விகிதத்தை ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ.,) குறைத்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் வங்கி விவசாய தொழில் பிரிவு பொது மேலாளர் நிரஞ்சன் பார்ஷா தெரிவிக்கும் ‌போது, பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடுமையான மழை உள்ளிட்ட இயற்கை பேரழிவு காரணமாக, விவசாயிகள் அடைய வேண்டிய லாபம் கிடைக்க பெறாமல் அல்லல்பட்டு வருகின்றனர். இதனை ஸ்டேட் வங்கி கவனத்தில் கொண்டு, விவசாயிகளின் இன்னல்களை போக்கும் விதமாக, கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, சிறு விவசாயிகளின் 25 லட்சம் வரையிலான கடன்களுக்கு முதல் வருடத்தில் 8 சதவீதமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வருடத்தில் 9 சதவீத வட்டி விகிதம் குறைக்கப் பட உள்ளது என தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Wednesday, September 2, 2009

சர்க்கரை விலை கிலோ 40 வரை அதிகரிக்கும் அபாயம்

சர்க்கரை விலை கிலோ 40 வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் மாதங்கள் விஷேச பண்டிகைகள் அதிகம் வரும் மாதங்கள் என்பதால், சர்க்கரை உபயோகம் அதிகமாகும். இந்தியாவில் விவசாயிகள் கரும்புகள் பயிரிடுவதை குறைத்து விட்டதால், சர்க்‌கரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கியூபா உள்ளிட்ட நாடுகளின் இருந்து இந்தியாவிற்கு சர்க்கரை இறக்குமதி செய்யப் பட உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை விலை கி‌லோவிற்கு ரூ. 40 வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கோதுமைக்கு கொள்முதல் விலை அதிகம் கொடுக்கப் படுவதால், விவசாயிகள் கோதுமை பயிரிடுவதை அதிகரித்து, கருப்பு பயிரிடுவதை குறைந்துள்ளதும் இதற்கு காரணம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Wednesday, August 26, 2009

யாரிடம் யார் பாடம் கேட்பது!

விவசாயத்தில் தலையாய பிரச்னைகள் நிறைய உள்ளன. இன்று விவசாயிகளே அழிந்து வருகின்றனர். விவசாயமே தெரியாத பல தொழிலதிபர்கள், லகரத்தில் சம்பளம் வாங்கும் மென்பொருள் கணினிப் பொறியாளர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பன்னாட்டுத் தொழில் நிறுவனத்தினர் இத்தகையோர் தமிழ்நாட்டு கிராமங்களில் விவசாய நிலங்களை என்ன விலை கொடுத்தாவது வாங்கி அவற்றை அப்படியே அசையாச் சொத்தாக வளைத்துப் போட்டுவைக்கும் போக்கு நாளுக்குநாள் அதிகமாகிறது.

பாரம்பரியமாக விவசாயம் செய்து வருபவர்கள் இதனால் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். இன்று விவசாயம் வருமானம் தரக்கூடியதாக இல்லை. இன்னமும் விவசாயிகள் கடனில்தான் வாழ்கின்றனர். பெரும் வருமானத்தில் கணிசமான பகுதி வட்டிகட்டவே செலவாகிறது. கள் / பதனீர் இறக்கும் அனுமதிக்கு விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதற்கு எதுவும் சட்டம் கொண்டுவரப்படவில்லை.

விளைவித்த பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ""தின்பதற்கு அவல் கேட்டால் உரலை இடி'' என்ற கதையாக விவசாயத்தை மேலும் நஷ்டப்படுத்த, இந்தத் தமிழ்நாடு வேளாண்மை தொழில் ஆலோசகர் ஒழுங்காற்று சட்டம் என்ற மசோதாவை 23}6}2009ல் அறிமுகம் செய்து மறுநாளே எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றியுள்ளனர். வேளாண்மைத் தொழிலை முறைப்படுத்த விவசாய அனுபவமே இல்லாத ஏட்டுச்சுரைக்காய் பட்டதாரிகள் - அதாவது வேளாண்மையைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பட்டதாரிகளை வேளாண்மை நிபுணர்களாகப் பதிவு செய்து கொண்டு, அவர்களுக்கு மட்டுமே விவசாயிகளுக்குக் கற்றுத்தரும் உரிமையை வழங்க, இம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

""பதிவுபெறாத எந்த ஒரு நபரும் தமிழ்நாட்டுக்குள் வேளாண்மை ஆலோசகராகத் தொழில் செய்வதோ அல்லது வேளாண்மைப் பணிகளை ஆற்றுவதோ கூடாது. பதிவுபெற்ற பட்டதாரிகள் மட்டுமே விவசாயம் தொடர்பாக எல்லா தொழில்நுட்பங்கள், உழவியல் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.''

இச்சட்ட திட்டங்களை மீறுவோர்கள், அதாவது பதிவுபெறாதவர்கள், விவசாயிகளிடம் ஆலோசனைகூறி முதல்முறை குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம். இரண்டாவது முறை குற்றவாளிக்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம்.

எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டும் நம்மாழ்வார், சுந்தரராமன், அந்தோணிசாமி, கோமதிநாயகம், கோ. சித்தர், உடுமலை செல்வராஜ், கட்டுரையாசிரியர் ஆர்.எஸ். நாராயணன் போன்ற நூற்றுக்கணக்கான முன்னோடிகளுக்குச் சிறைத்தண்டனை காத்திருக்கிறது. அபராதங்கள் காத்திருக்கின்றன.

மசோதாவின்படி விவசாயிகளுக்கு ஆலோசனை கூற தகுதியுள்ள தமிழ்நாடு வேளாண்மை மன்றம் மொத்தம் 29 உறுப்பினர்களைக் கொண்டது. பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளில் 20, த.நா. வேளாண்மை பல்கலையிலிருந்து 5 பேராசிரியர்கள், அரசு நியமன உறுப்பினர்கள் 4. அது என்ன 29 என்ற கணக்கு? பாட்டா செருப்பு விலை மாதிரியா? முப்பதோ அல்லது நாற்பதோ வைத்துக் கொள்ளுங்கள். இந்த மன்றம் யோசனைகூறி அதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்போது இப்படித் தவறான யோசனை கூறிய பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளுக்கு வழங்கவேண்டிய தண்டனைபற்றி இந்தச் சட்டத்தில் இடம் இல்லாதது ஒரு பெருங்குறைதான். இனிமேல் விவசாயத்தைக் கெடுக்க என்ன மிஞ்சியுள்ளது?

இந்த வேளாண்மை மன்றத்தை இயக்கப்போகும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும், வேளாண் துறையும் கடந்த 40 ஆண்டுகளில் செய்துவந்த கொடுமை, துரோகம் ஆகியவற்றுக்குத் தண்டனை உள்ளதா? பசுமைப்புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்களை மண்ணில் இட்டு மண்ணில் உள்ள கோடிக்கணக்கான மண் புழுக்களையும், பில்லியன் பில்லியன் அளவில் நுண்ணுயிரிகளையும் கொன்று குவித்துள்ளனர்.

உண்ணும் விளைபொருள்கள் மீது விஷமான பூச்சி மருந்துகளை அடித்து உண்ணும் உணவு விஷம்; தண்ணீர் விஷம்; மூச்சுக்காற்று விஷம்; இப்படியெல்லாம் சூழலைக் கெடுத்துப் போதிய விளைச்சல் இல்லாமல் கடனில் மூழ்கி, வாழ வழி இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழ் விவசாயிகளைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய பல்கலைக்கழக வேளாண் போதகர்களுக்கு என்ன தண்டனை தருவது? இவையெல்லாம் போதவில்லையா? இவர்கள் செய்துள்ள வேளாண் கொடுமைகளுக்கு ஒரு பரிசாக தமிழ்நாடு அரசு "வேளாண்மை மன்றத்தை' வழங்கியுள்ளதை விவசாயிகள் நிராகரிப்பது நிச்சயமான உண்மை.

அனுபவம் வாய்ந்த விவசாயிகளுக்கு இந்த மன்றத்தில் இடமில்லை. விவசாய சங்கத் தலைவர்களுக்கு இந்த மன்றத்தில் இடமில்லை. இந்த மன்றத்தின் யோசனையைக் கேட்டு எந்த விவசாயியும் பயிரேற்றப் போவதில்லை. ஏனெனில் விவசாயத்தைப் பொறுத்தவரை ஏட்டுச்சுரைக்காய்ப் பட்டதாரிகளால் எதையும் சாதிக்க முடியாது. பட்டறிவு, பாரம்பரிய அறிவு, விவசாயிகளின் அறிவுப் பரிமாற்றங்கள் சாதிக்கக்கூடியதை இந்த மன்றத்தால் சாதிக்க இயலுமா?

வேளாண்மை செழிக்க யார் யாரிடம், எவ்வாறு பாடம் கேட்பது; எவ்வாறு கற்பிப்பது என்ற கேள்விகள் வரும்போது இரண்டு மறைந்த மகாமேதைகள் நினைவுக்கு வருகின்றனர். ஒருவர் இந்தியர். மற்றொருவர் இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர். யார் அந்த இந்தியர்? அவர்தான் எஸ்.ஏ. தபோல்கர். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காந்தியவாதி. கணிதப் பேராசிரியர். விவசாயத்தில் பட்டதாரி இல்லை. மண்ணியலில் இவர் பெற்ற நிபுணத்துவம், இவரை ஒரு நர்ண்ப் இட்ங்ம்ண்ள்ற் என்று கூற வைத்தது. இவர் படைத்தது டகஉசபவ ஊஞத அகக. சூரிய அறுவடையை ஒழுங்காகச் செய்தால் எல்லோருக்கும் எல்லாமும் உண்டு என்றவர். காந்தி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.

இவருடைய தாரக மந்திரம் ""விஸ்வம் புஷ்டம் கிராமே அஸ்மின் அனாதுரம்'' இது ரிக் வேதத்தில் உள்ளது. இதன் பொருள், ""உலக மக்கள் நலமாய் வாழ நாம் வாழும் இடங்களில் (கிராமங்களில்) ஏராளமாக உணவைப் பெற முடியும்''.

வேளாண் கல்விக்கு தபோல்கர் மூன்று வழிகளைக் கூறுகிறார்.

1. ஸ்வாத்யாயம்: அதாவது தன்னறிவு, தன்னைத்தானே தயார் செய்துகொள்ளும் கல்வி, 2. ஸ்வாஸ்ரேயம்: அதாவது தன் கையே தனக்குதவி. தற்சார்பு நிலை. 3. பிரயோக்பரிவார்: பலர் ஒன்று சேர்ந்தும் சேராமலும், பெற்ற கல்வியைப் பகிர்ந்து கொண்டு பயன்பெறுதல். இந்தப் பிரயோக்பரிவார் அமைப்பில் பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் தாங்கள் பெற்ற தன்னறிவை மற்றவர்கள் பயனுக்காக எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும். ஒரு விவசாயி ஒரு குறிப்பிட்ட உழவியல் நுட்பத்தினால் கூடுதல் மகசூல் பெற்றால் அதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

இந்த அடிப்படையில் மகாராஷ்டிர மாநிலத்தில் பல நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர். மாடித் தோட்டங்களை உருவாக்கியவர். பழத்தோட்டங்களை உருவாக்கியவர். மண்ணில் உள்ள விஷத்தைப் போக்கி நுண்ணூட்டங்களை மண்ணில் உருவாக்கி வளப்படுத்த பல தானிய விதைகளை விதைத்துப் பசுந்தழைகளை மடித்து உழும் ஒரு தொழில்நுட்பம் விவசாயிகளின் கருத்துப் பரிமாற்றத்தால் விளைந்ததுவே, இதற்குத் தபோல்கரின் பிரயோக் பரிவார் காரணம்.

கற்பதிலும் கற்பிப்பதிலும் தலைசிறந்த முன்னுதாரணம் ""வேளாண்மை உயில்'' என்ற காவியத்தைப் படைத்த ஆல்பர்ட் ஹோவார்ட் ஆவார். இவர் அன்று இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர். இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் கர்சான் கேட்டுக்கொண்டதன் விளைவால் லண்டன் ராயல் கமிஷன் ஆஃப் அக்ரிகல்ச்சர் அமைப்பு, இந்திய விவசாயத்தை நவீனப்படுத்தும் பொருட்டு, 1905-ம் ஆண்டு ஆல்பர்ட் ஹோவார்டை இந்தியாவுக்கு அனுப்பியது. புசா என்ற இடத்தில் அவருக்குப் பதவியும், சோதனை இடமாக 90 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.

எவ்விதமான ரசாயனமும் இல்லாமல் இந்திய விவசாயிகள் கடைப்பிடிக்கும் உழவியல் நுட்பங்களைக் கண்டு ஹோவார்ட் வியந்தார். இந்திய விவசாயிகளிடம் பாடங்கள் கற்க விரும்பினார். விவசாயிகளைப் புசாவுக்கு அழைத்து, விவசாயிகளை ஆசான்களாக கௌரவித்து ஆசிரியர்கள் அமர வேண்டிய நாற்காலிகளில் உட்கார வைத்து, தான் தரையில் அமர்ந்துகொண்டு துபாஷி (மொழி பெயர்ப்பாளர்) உதவியுடன் குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.

"வேளாண்மை உயில்' என்ற தனது நூலில் ஹோவார்டு இவ்வாறு குறிப்பிடுகிறார்: ""இந்திய விவசாயிகள் செய்வதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த யாரும் ஸ்ப்ரேயரைப் பயன்படுத்தவில்லை. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பினேன். பூச்சிக்கோ நோய்க்கோ விவசாயிகள் நஞ்சு தெளிக்காமல் இருப்பதைக் கண்டு வியப்புற்றேன். பொருத்தம் இல்லாத பயிர் ரகம், சாகுபடி முறை எவை என்பதைப் பூச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. நோய் இயல் நிபுணர், பூச்சியியல் நிபுணர், பாக்டீரியா நிபுணர், வேதியியல் நிபுணர், புள்ளியியல் நிபுணர் உதவியில்லாமல் ஆரோக்கியமாக விவசாயம் செய்வது எப்படி என்று விவசாயிகளிடம் கற்றுக்கொண்டேன்''

1935-ல் ஹோவார்டு இங்கிலாந்து திரும்பி ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் இயற்கை விவசாயத்துக்கு வித்திட்டவர். பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் இவரைக் குருவாக மதித்துப் பின்பற்றினர்.

""காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்' என்ற கவிஞரின் பாட்டுக்கு ஏற்ப இந்தியாவுக்கு நவீன விவசாயம் கற்றுக் கொடுக்க வந்தவர் இங்குள்ள விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொண்டு ""வேளாண் உயில்'' என்ற நூலைப் படைத்தார். அது வேளாண்மைக்கே உயிர். அந்த நூலில் ஒரு பொன்னான வரி உண்டு: ""பூமியின் வளம் என்பது வங்கிக்கணக்குப் புத்தகம் அல்ல. எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் கணக்கு வைக்க முடியாது...'' மண்ணிலிருந்து நாம் சுரண்டி எடுத்தது அதிகம். கொடுத்தது குறைவு. எடுக்கப்பட்டவை உலக வங்கிக்கடனை விடவும் அதிகம். எடுத்தவற்றை ஈடு செய்யப் பஞ்சகவ்யம், மண்புழு எரு, பல்வேறு குணபங்கள், உலர் மூடாக்கு, பசுந்தாள் உரம் கொண்டுதான் இழந்த வளத்தை மீட்க வேண்டும். அன்று இயற்கை விவசாயத்திற்குச் சோதனைக்கூடமாக விளங்கிய புசா, இன்று நவீன ரசாயனம் போதிக்கும் ஐய்க்ண்ஹய் அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ஹப் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ஆக வளர்ந்துள்ளது. இன்று இந்தியாவில் செம்மை நெல் சாகுபடி என்ற பெயரில் ""ஒற்றை நாற்று நடவு'' பிரபலமாகிவிட்டது. ஆனால் இதைக் கண்டுபிடித்தது பிரயோக் பரிவார் முறையில் மடகாஸ்கர் விவசாயிகளின் கூட்டுமுயற்சி ஆகும்.

கடந்த 40 ஆண்டுகளாக பசுமைப்புரட்சி என்ற பெயரில் மண்வளத்தைக் கெடுத்து, உணவு உற்பத்தியைக் குறைத்து, இன்று உணவு இறக்குமதி செய்யும் அளவில் விவசாயத்தையே கேவலமாக்கி, பன்னாட்டு விதை நிறுவனங்களுக்குக் காட்டிக் கொடுத்து விவசாயத்தை மானம் இழக்கச் செய்த எட்டப்ப ஏட்டுச்சுரைக்காய் விவசாயப் பட்டதாரிகளுக்கு இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தான் கற்காத ஒன்றை விவசாயிகளுக்கு கற்பிக்கும் தகுதி உள்ளதா? என்று அவர்கள் தங்களின் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துச் சொல்லட்டும்.

மண்ணை வளப்படுத்தும் ஒரு விவசாயத்தை, வளங்குன்றா வேளாண்மையைக் கற்றுக்கொடுக்கும் ஒரு தகுதி இயற்கை விவசாய முன்னோடிகளுக்கு மட்டுமே உண்டு. தொல்சிறப்புள்ள இந்திய விவசாயத்தை அழிக்க முயலும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள், தமிழ்நாட்டை ஒரு சோதனைக்கூட எலியாகப் பயன்படுத்த இந்த வேளாண்மைச் சட்டத்தைத் திணிக்க முயல்வதை, வேரோடு களைவோம்.

கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி