Showing posts with label ம​னி​த​நேயம். Show all posts
Showing posts with label ம​னி​த​நேயம். Show all posts

Thursday, September 2, 2010

சதை ஆடுகிறதே...!

பாகிஸ்தானில் சிந்து நதியின் பெருவெள்ளத்தால் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ஆனாலும், போதுமான நிவாரணங்கள் இவர்களுக்குக் கிடைத்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம், பாகிஸ்தான் அரசுதான்.

வெள்ளத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஐரோப்பா பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் என்பதே, இந்த வெள்ளத்தையும் மக்கள் துயரத்தையும் பாகிஸ்தான் அரசு எப்படி அணுகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளப் போதுமானது.

இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள துயரினைப் போக்க குறைந்தபட்சம் 700 மில்லியன் டாலர் நிதி தேவை. இதில் பாதியை ஐக்கிய நாடுகள் மன்றம் உறுப்பு நாடுகளிடம் பெற்றுத்தரும். அமெரிக்கா 200 மில்லியன் டாலர் அளிக்கவுள்ளது. இந்தியா முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் அறிவித்தாலும், இப்போது மீண்டும் 20 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தமுறை ஏனைய உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி அதிகம் கிடைக்காது எனப்படுகிறது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் மிக மோசமான ஊழல் நாடு, கொடுத்த பணம் மக்களுக்குப் போய்ச்சேராது என்கிற கருத்தாக்கமும், தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கிறது என்கிற எண்ணமும் உலகம் முழுவதும் போய்ச் சேர்ந்திருப்பதுதான். பல நாடுகளும், தானம் செய்வதற்கென ஒதுக்கிய தொகையை ஆண்டுத் தொடக்கத்தில் ஹைதி நிலநடுக்கத்தின்போது செலவிட்டுவிட்டன என்பதும், உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நாடுகள் பல உள்ளன என்பதும் கூடக் காரணங்கள்.

ஆனால், பாகிஸ்தான் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அப்படி கவலைப்பட்டிருந்தால், இந்தியா தானே முன்வந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக அளித்தபோது, நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் அப்படிச் செய்யாமல் இன்னொரு ஏழு நாள்கள் கழித்து, இதனை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலமாகக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது.

இருப்பினும் இந்தியா இதைப் பெரிதுபடுத்தாமல், ஐநா மன்றத்தின் மூலமாக வழங்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. அடம்பிடித்து பாகப்பிரிவினை கேட்டுப் பிரிந்தாலும், ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத பெருவெள்ளம் சிந்து நதியில் பெருகியோடியுள்ளது. நகரங்களே மூழ்கிக் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் நிரம்பி வழிவதாகவும், போதுமான உணவோ உடையோ கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. போதுமான மருத்துவர்களும் இல்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து வரக்கூடிய தொற்றுநோயைச் சமாளிக்க தடுப்பு மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவுமே அந்நாட்டில் போதுமான அளவு இல்லை.

இப்போது வெள்ளம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவருமே விவசாயம் சார்ந்து வாழ்ந்தவர்கள். பணக்காரர்கள் அல்லர் என்றாலும் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்ந்துவந்தவர்கள். இப்போது இவர்களது வீடு, உடைமை, மாற்றுடைகள், மாடு, ஆடு, கோழி என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.

முகாம்களில் மாற்று உடைகூட இல்லாமல் தவிப்போர் பல ஆயிரம் பேர். இங்கே பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முகத்திரை அணிந்து, தங்கள் குடும்ப அங்கத்தினர்களை மட்டுமே அறிந்திருந்த பெண்களும் சிறுமியரும் இந்த முகாம்களில் கலாசார அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது பிபிசி செய்தி நிறுவனம். இந்தப் பெண்கள் மாற்றுடைகூட இல்லாமல், பொதுஇடத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க பெரும்பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பள்ளிகள் அனைத்துமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறக்கவும், குழந்தைகளுக்கு மீண்டும் பாடநூல்கள் கிடைக்கவும் குறைந்தது ஒருமாத காலம் ஆகும் என்கிறார்கள்.

இந்தத் துன்பங்கள் புனித மாதமாகிய ரமலான் நோன்பு காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களை தலிபான் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாகவே, நிவாரண சேவையில் ஈடுபட வரும் வெளிநாட்டு அமைப்புகளை தலிபான் தாக்கக்கூடும் என்கிற செய்தியைப் பரப்பி, யாரையும் வரவிடாமல் செய்து, மக்களைத் தங்கள் பக்கம் திருப்புகிறார்களோ என்றும்கூட எண்ணத் தோன்றுகிறது.

நிவாரணம் கிடைக்காத மக்கள் துயரத்தின் விளிம்பிற்குப் போய், தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி, மூளைச்சலவைக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய பெருங்கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது. இதைப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே... இதைப் பார்க்கும்போது நமது இந்திய அரசும், நிர்வாகமும் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது!
நன்றி : தினமணி

Friday, January 15, 2010

தொட​ரும் இன​வெ​றித் தாக்​கு​தல்

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் இந்​திய மாண​வர்​கள் மீது நடந்து வரும் இன​வெ​றித் தாக்​கு​தல் கவலை அளிக்​கி​றது.​ கடந்த ஓராண்​டுக்கு மேலாக ​ இத்​த​கைய தாக்​கு​தல்​கள் நடந்து வரு​வது கவ​னத்​தில் கொள்​ளத்​தக்​கது.​

க​டந்த ஒரு​வா​ரத்​துக்கு முன்​னர் ஆஸ்​தி​ரே​லி​யா​வின் மெல்​பர்ன் நக​ரில் பஞ்​சா​பைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது இளை​ஞர் அடை​யா​ளம் தெரி​யாத நபர்​க​ளால் கொடூ​ர​மா​கக் குத்​திக் கொல்​லப்​பட்​டுள்​ளார்.​ இதைத் தொடர்ந்து எரிந்த நிலை​யில் இந்​தி​ய​ரின் உடல் மீட்​கப்​பட்​டுள்​ளது.​ இச் சம்​ப​வங்​கள் பெரும் அதிர்ச்​சியை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளன.​ இந்த அதிர்ச்​சியி​லி​ருந்து நாம் மீள்​வ​தற்​குள் மற்​றொரு இந்​தி​யர் மீது மர்​மக் கும்​பல் ஆசிட் வீச்சு நடத்​தி​விட்டு தப்​பி​யோ​டி​யுள்​ளது.​

மெல்​பர்ன் நக​ரின் வட​மேற்​குப் பகு​தி​யில் வசித்து வரு​ப​வர் ​ ஜஸ்ப்​ரீத் சிங்.​ இந்​தி​ய​ரான இவர்,​​ தனது மனை​வி​யு​டன் ஒரு விருந்​துக்​குச் சென்​று​விட்டு வீடு திரும்​பு​கை​யில் மனை​வியை வீட்​டில் இறக்​கி​விட்டு,​​ காரை பக்​கத்​துத் தெரு​வில் நிறுத்​தி​விட்டு வெளியே வந்​த​போது மர்​மக் கும்​பல் அவரை கீழே தள்ளி அவர் மீது ஆசிட்டை வீசி,​​ தீவைத்​து​விட்​டுத் தப்​பி​யோ​டி​விட்​டது.​

இப்​படி இந்​தி​யர்​கள் மீதான தாக்​கு​தல் அடிக்​கடி நடக்​கின்ற போதி​லும் இதை ஆஸ்​தி​ரே​லிய அரசு தீவி​ரப் பிரச்​னை​யாக எடுத்​துக் கொண்​ட​தா​கத் தெரி​ய​வில்லை.​ இந்​தத் தாக்​கு​தலை இன​வெ​றித் தாக்​கு​தல் என்று சொல்​ல​மு​டி​யா​விட்​டா​லும்,​​ கடந்த ஓராண்​டுக்கு மேலாக இந்​தி​யர்​களை மட்​டும் குறி​வைத்து நடத்​தப்​ப​டும் தாக்​கு​தல்​க​ளைப் பார்த்​தால் இது இன​வெறி ஆதிக்​கச் செயலே என்​பது தெரி​ய​வ​ரும்.​

இந்​தத் தாக்​கு​தல் சம்​ப​வங்​கள் சாதா​ரண குற்​றச் சம்​ப​வங்​கள்​தான் என்​பது போல் ஆஸ்​தி​ரே​லி​யத் தூதர் தாமஸ் வர்​கீஸ் பேசி​யுள்​ளார்.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் மேற்​ப​டிப்​புக்கு விண்​ணப்​பிக்​கும் இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை குறைந்து வரு​வ​தற்கு சர்​வ​தேச அள​வில் ஏற்​பட்​டுள்ள பொரு​ளா​தா​ரச் சரிவே கார​ணம் என்​றும் அவர் கூறி​யுள்​ளார்.​ ஆனால்,​​ ஊட​கங்​கள் மூலம் கிடைக்​கும் தக​வல்​க​ளைப் பார்த்​தால் பாது​காப்பு இல்​லாத கார​ணத்​தால்​தான் இந்த எண்​ணிக்கை குறைந்து வரு​வது புரி​யும்.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் படிக்​கும் ஆசி​யர் அல்​லா​த​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யு​டன் ஒப்​பிட்​டால் அங்கு படித்து வரும் இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை குறை​வு​தான்.​ ஆனால்,​​ ஆசி​யர்​கள் எண்​ணிக்​கை​யில் இந்​தியா இரண்​டா​வது இடம் வகிக்​கி​றது.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் பட்​ட​மேற்​ப​டிப்பு படிக்​கும் மாண​வர்​கள்,​​ பகு​தி​நேர ஊழி​யர்​க​ளாக வேலை​செய்து தங்​கள் செல​வி​னங்​க​ளைச் சமா​ளித்து வரு​கின்​ற​னர்.​ குறிப்​பாக மெல்​பர்ன் நக​ரில் இந்​தி​யர்​கள் எங்கு சென்​றா​லும் குழு​வா​கவே செல்​கின்​ற​னர்.​ தனி​யா​கச் செல்​வ​தில்லை.​ மேலும் விலை​ம​திப்பு மிக்க பொருள்​கள் எதை​யும் அவர்​கள் கையி​லெ​டுத்​துச் செல்​வ​தில்லை.​ இந்​நி​லை​யில் இது​போன்று நடத்​தப்​ப​டும் தாக்​கு​தலை வழிப்​பறி என்ற சாதா​ரண குற்​ற​மாக யாரும் சொல்​லி​விட முடி​யாது.​

இந்​தி​யர்​கள் மீது குறிப்​பாக மாண​வர்​கள் மீது நடத்​தப்​பட்டு வரும் கொலை​வெ​றித் தாக்​கு​த​லுக்கு இந்​தியா ​ கடும் கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளதை ஆஸ்​தி​ரே​லிய அர​சால் தாங்​கிக் கொள்ள முடி​ய​வில்லை.​ இந்​தி​யர்​க​ளின் பாது​காப்பை உறுதி செய்​வ​தா​கக் கூறு​வ​தற்​குப் பதி​லாக உல​கம் எங்​கும் இது​போன்ற குற்​றங்​கள் நடக்​கத்​தான் செய்​கின்​றன.​ ஏன் தில்லி,​​ மும்பை போன்ற நக​ரங்​க​ளி​லும் இவை நடக்​கத்​தான் செய்​கின்​றன.​ எனவே இதைப் பெரி​து​ப​டுத்த வேண்​டாம் என்று அந்த நாட்​டின் வெளி​யு​றவு அமைச்​சர் பேசி​யுள்​ளது அவ​ரது பொறுப்​பற்ற தன்​மை​யையே காட்​டு​கி​றது.​

இத்​த​கைய சம்​ப​வங்​கள் தற்​செ​ய​லாக நடந்​தி​ருந்​தா​லும் சரி...இன​வெ​றித் தாக்​கு​த​லாக இருந்​தா​லும் சரி...​ வெளி​நாட்​டி​னரை,​​ குறிப்​பாக இந்​தி​யர்​க​ளைப் பாது​காக்​கும் பொறுப்பு ஆஸ்​தி​ரே​லிய அர​சுக்கு உள்​ளது.​

இந்​தி​யர்​கள் மீது இன​வெ​றித் தாக்​கு​தல் நடந்து வரும் நிலை​யில்,​​ மத்​திய வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.கிருஷ்ணா,​​ "ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு படிக்​கச் செல்​லும் மாண​வர்​கள் ஒரு​மு​றைக்கு இரு​முறை யோசித்​துப் படிக்​கச் செல்​ல​வேண்​டும்.​ இன்​னும் சொல்​லப்​போ​னால் ஆஸ்​தி​ரே​லியா சென்று படிப்​ப​தைத் தவிர்க்க வேண்​டும்.​ வேறு​நா​டு​க​ளில் உள்ள பட்ட மேற்​ப​டிப்​பு​க​ளைத் தேர்ந்​தெ​டுத்​துப் படிக்​க​லாம்' என்​றும் யோசனை கூறி​யி​ருக்​கி​றார்.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் இந்​தி​யர்​கள் மீதான தாக்​கு​தலை உட​ன​டி​யாக நிறுத்த அந்த நாட்டு அர​சு​டன் பேச்சு நடத்தி சுமு​கத் தீர்​வு​காண முன்​வ​ரா​மல்,​​ மாண​வர்​களை அங்கு சென்று படிக்க வேண்​டாம் என்று கூறு​வது புத்​தி​சா​லித்​த​னம் அல்ல.​ ஆஸ்​தி​ரே​லிய பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் பட்​ட​மேற்​ப​டிப்​புக் கல்வி நன்​றாக இருப்​ப​தால்​தான் அங்கு சேர்​வ​தில் மாண​வர்​கள் ஆர்​வம் காட்​டு​கின்​ற​னர்.​ மேலும் திற​மை​யுள்ள மாண​வர்​க​ளும்,​​ அதிக மதிப்​பெண் பெறும் வாய்ப்​புள்ள,​​ வன்​மு​றைச் செயல்​க​ளில் ஈடு​ப​டாத மாண​வர்​கள்​தான் அங்கு செல்​கின்​ற​னர்.​ எங்கு சென்று படிக்க வேண்​டும்,​​ என்ன படிப்பு படிக்க வேண்​டும் என்​ப​தைத் தீர்​மா​னிக்க வேண்​டி​யது மாண​வ​ரும் அவ​ரு​டைய பெற்​றோ​ரும் தான்.​ கல்வி ஆலோ​ச​கர்​க​ளா​கச் செயல்​ப​டும் சில​ரு​டைய தவ​றான வழி​காட்​டு​தல்​க​ளாலே தவ​று​கள் ஏற்​ப​டு​கின்​றன.​ வெளி​நாடு சென்று படிக்​கும் மாண​வர்​க​ளுக்​குச் சில எச்​ச​ரிக்​கை​களை அமைச்​சர் தெரி​விக்​க​லாமே தவிர அவர்​களை இங்கு படிக்​காதே,​​ அங்கு படிக்​காதே என்று தீர்ப்​புச் சொல்​லக்​கூ​டாது.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் படிக்​கும் இந்​திய மாண​வர்​கள்,​​ தங்​க​ளின் திற​மை​யான படிப்​பின் மூல​மும்,​​ செயல்​பாட்​டின் மூல​மும் அந்த நாட்​டுக்​குப் பெருமை தேடித் தரு​கின்​ற​னர்.​

இதை ஆஸ்​தி​ரே​லிய அரசு உணர்ந்​து​கொண்டு நடந்த சம்​ப​வத்​துக்கு வருத்​தம் தெரி​விப்​ப​து​டன் நில்​லா​மல்,​​ இந்​தி​யர்​க​ளின் பாது​காப்​பில் கவ​னம் செலுத்த வேண்​டும்.​ அது​மட்​டு​மல்ல,​​ இது​போன்ற இன​வெ​றித் தாக்​கு​த​லுக்கு முற்​றுப்​புள்ளி வைப்​ப​து​டன் இதற்​குக் கார​ண​மான குற்​ற​வா​ளி​க​ளைக் கண்​டு​பி​டித்து நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​

அன்​னிய நாட்​டில் இந்​தி​யர்​க​ளின் விலை​ம​திக்க முடி​யாத உயிர் பறி​போ​வதை பார்த்​துக்​கொண்டு நாம் சும்மா இருக்க முடி​யாது.​ இந்​திய மாண​வர்​க​ளின் பாது​காப்பை உறுதி செய்​வ​தில் ஆஸ்​தி​ரே​லிய அர​சுக்கு முழு பொறுப்பு உள்​ளது.​ அதை வலி​யு​றுத்​தும் கடமை இந்​திய அர​சுக்கு உள்​ளது.
கட்டுரையாளர் :ஜெ.ராக​வன்
நன்றி : தினமணி

Saturday, December 12, 2009

வாய்​மூடி மெüனி​க​ளாக...

கட​லை​வி​டப் பெரிது "கருணை' மனம் ​ என்​பர்.​ இந்த அவ​சர உல​கில் சுய​ந​லம்,​​ லாப நோக்கு,​​ நமக்​கென்ன வந்​தது என்ற ஒரு​மு​கச் சிந்​தனை...​ போன்​றவை நாலா​பக்​க​மும் பர​விக் கிடப்​பதை நாம் கவ​லை​யு​டன் உற்​று​நோக்க வேண்​டி​யுள்​ளது.​

ந​வ​நா​க​ரி​கச் சிந்​த​னை​யில் சிக்​கி​யுள்ள இன்​றைய மனி​தர்​கள் பலர்,​​ தங்​கள் கண்​முன் நடக்​கும் எந்​தச் சம்​ப​வங்​க​ளை​யும் கண்​டு​கொள்​வ​தா​கத் தெரி​ய​வில்லை.​ "நமக்​கேன் வம்பு' என்ற மனப்​பான்​மை​யில் அவ​ர​வர் வேலை​யைப் பார்த்​து​விட்​டுச் செல்​லும் வழக்​கம் இன்​றைய சூழ​லில் அதி​க​ரித்து வரு​கி​றது.​

தள்​ளாத வய​தி​லும்,​​ முக்​கி​யப் பணி நிமித்​த​மாக அவ​ச​ர​மா​கப் பஸ்​ஸில் ஏறும் வயோ​தி​கர்​கள்​கூட சிறப்​புக் கட்​டண பஸ்ஸô,​​ எல்.எஸ்.எஸ்.​ பஸ்ஸô,​​ சாதா​ரண பஸ்ஸô என பார்த்​துத்​தான் ஏற​வேண்​டும் என்று நடத்​து​நர்​கள்,​​ ஓட்​டு​நர்​கள் நினைக்​கின்​ற​னர்.​
அப்​ப​டியே ஒரு​வர் அவ​ச​ரத்​தில் பஸ்​ஸில் ஏறி​விட்​டால் அந்​தப் பய​ணிக்கு ஒரு​சில நடத்​து​நர்​க​ளால் கொடுக்​கப்​ப​டும் "அர்ச்​சனை' சொல்​லில் அடங்​காது.​ அந்​தப் ​ பய​ணி​யைக் குறிப்​பிட்ட பஸ் நிறுத்​தத்​தில் இறக்​கி​வி​டு​வ​தற்​குப் பதி​லாக வேறொரு நிறுத்​தத்​தில் வேண்​டு​மென்றே இறக்​கி​வி​டும் செயல்​க​ளை​யும் நாம் பார்க்க முடி​கி​றது.​
ஒரு பய​ணிக்கு இப்​படி நேர்ந்​து​விட்​டதே என நினைத்​துத் திரைப்​ப​டங்​க​ளில் வேண்​டு​மா​னால் "ஹீரோ' தட்​டிக்​கேட்​பதை ஆவ​லோடு நாம் எதிர்​பார்ப்​போம்;​ ஏற்​றுக்​கொள்​வோம்.​ ஆனால்,​​ இது​போன்ற உண்​மைக் காட்​சியை பஸ்​ஸில் நேர​டி​யா​கப் ​ பார்க்​கும் பய​ணி​க​ளில் ஒரு​வ​ருக்​குக்​கூ​டத் தட்​டிக்​கேட்​கும் மனப்​பான்மை இல்​லா​மல் வாய்​மூடி மெüனி​க​ளா​கி​வி​டு​கின்​ற​னர்.​

ப​ய​ணி​க​ளி​டம் அன்​பும்,​​ பரி​வும் காட்​டு​வேன் என அவர்​கள் ​(ஓட்​டு​நர்,​​ நடத்​து​நர்)​ பணி​யில் சேர்ந்​த​போது எடுத்​துக்​கொண்ட உறு​தி​மொழி எங்கே போனது?​

"வரு​மா​னம் ஈட்​டி​வந்த குடும்​பத் தலை​வர் திடீ​ரென மர​ண​ம​டைய நேரி​டு​கி​றது.​ 3 பெண் குழந்​தை​களை வைத்​துக்​கொண்டு 35 வயதே ஆன அவ​ரது மனைவி,​​ அர​சின் சமூ​க​ந​லப் பாது​காப்​புத் திட்​டத்​தில் உத​வித் தொகைக்​காக விண்​ணப்​பித்து காத்​துக்​கி​டக்​கி​றார்.​

அ​வ​ருக்​குச் சம்​பந்​தப்​பட்ட தாலுகா அலு​வ​ல​கத்​தில் இருந்து அழைப்பு வரு​கி​றது.​ உங்​க​ளுக்​கான உத​வித்​தொகை ரூ.10,000}க்கான காசோலை தயா​ராக உள்​ளது.​ ரூ.3 ஆயி​ரம் லஞ்​சம் கொடுத்​தால் காசோ​லை​யைப் பெற்​றுக்​கொள்​ள​லாம் என அரசு ஊழி​யர் ஒரு​வர் அந்த பெண்​ணி​டம் "பேரம்' பேசு​கி​றார்.​ அந்​தப் பெண்​மணி லஞ்ச ஒழிப்பு போலீ​ஸô​ரை​நாடி தனது உரி​மை​யைப் ​(உத​வித்​தொ​கையை)​ பெற்​றுக்​கொண்​டார்' என்று பத்​தி​ரி​கைச் செய்தி தெரி​விக்​கி​றது.​

இச்​சம்​ப​வத்​தில்,​​ வாழ​வேண்​டிய வய​தில் கண​வனை இழந்து,​​ 3 பெண் குழந்​தை​களை வைத்​துக்​கொண்டு சமு​தா​யத்​தில் போராட வேண்​டிய பெண்​ணுக்கு,​​ ஆறு​த​லாக அரசு அளிக்​கும் உத​வித்​தொ​கைக்​கு​கூட ஈவு​இ​ரக்​கமே இல்​லா​மல் லஞ்​சம் கேட்​கும் அதி​கா​ரி​யின் மனப்​போக்கை நாம் என்​ன​வென்று சொல்​வது!​
க​ண​வனை இழந்து மனம் நொந்து தவிக்​கும் இது​போன்ற ஒரு பெண்​ணி​டம் இத​யமே இல்​லா​மல் கொள்​ளை​ய​டிக்​கும் இது​போன்ற ஒரு​சில அதி​கா​ரி​க​ளின் "ஈர​மில்லா' எண்​ணங்​களை எப்​படி,​​ யாரால் மாற்​று​வது?​

அண்​மை​யில் மது​ரை​யில் நடந்த சம்​ப​வம் இது }​ ஒரு இளம் போலீஸ்​கா​ரர் மனைவி ஒரு​வர் தீயிட்​டுத் தற்​கொ​லைக்கு முயன்​றுள்​ளார்.​ அவ​ரைக் காப்​பாற்​றச் சென்​ற​போது அந்த போலீஸ்​கா​ர​ரும் தீக்​கா​ய​ம​டைந்​தார்.​
இரு​வ​ருமே ஒரு பிர​பல மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்​ட​னர்.​ 30 சத​வி​கி​தமே தீக்​கா​ய​ம​டைந்த அந்​தப் பெண்,​​ சுமார் 50 தினங்​கள் வரை அந்த மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்​சை​யில் இருந்து உயி​ரி​ழந்​தார்.​ இதில்,​​ மன​தைப் பத​ற​வைக்​கும் விஷ​யம் என்​ன​வென்​றால்,​​ மருந்து,​​ மாத்​திரை,​​ சிகிச்​சைக்​கான கட்​ட​ணங்​கள் முழு​வ​தை​யும் வசூல் செய்த பின்​னரே அந்​தப் பெண் உயி​ரி​ழந்​து​விட்​ட​தாக உற​ வி​னர்​க​ளுக்​குத் தெரி​விக்​கப்​பட்​டது.​

ம​னி​த​நே​ய​மற்ற இது​போன்ற செயல் இப்​பூ​வு​ல​கில் வேறெங்​கும் நடக்​குமா என்​பதை நாம் கற்​பனை செய்​து​கூ​டப் பார்க்க முடி​ய​வில்லை.​
மர​ணப் படுக்​கை​யில் உள்ள மனித உயிர்​க​ளுக்கு விலை வைத்து,​​ பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தி​ன​ருக்கு உலை​யும் வைத்து பணம் சம்​பாத்​தி​யமே ஒரே குறிக்​கோள் என்ற நோக்​கத்​தில் பய​ணிக்​கும் ஒரு​சில மருத்​து​வ​ம​னை​க​ளின் போக்​கால் ஏற்​ப​டும் விப​ரீ​தத்தை நாம் நினைத்​துப் பார்க்​கக்​கூட முடி​ய​வில்லை.​

பார்ப்​ப​தற்கே அரு​வெ​றுப்​பான தோற்​றத்​து​டன்,​​ ஈ மொய்க்​கும் நிலை​யில் இருந்த தொழு​நோ​யா​ளி​க​ளை​யும் தனது கரு​ணைக் கண்​ணால் உற்​று​நோக்கி,​​ அவர்​க​ளி​டத்​தில் மனதை மட்​டும் ​ பார்த்​துப் பேசி,​​ அர​வ​ணைத்து,​​ தாய்மை போற்​றிய அன்னை தெரஸô வாழ்ந்​த​தும் இப்​பூ​வு​ல​கில்​தானே.​

க​ட​வு​ளுக்கு இணை​யாக மதிக்​கப்​ப​டும் மருத்​துவ உல​கமே இப்​ப​டித் திசை​மா​றிச் செல்​லத் தொடங்​கி​யுள்ள இந்த பேரா​பத்து எங்கு போய் முடி​யும்?​

து​ளி​யும் கரு​ணை​யில்​லாத கல் நெஞ்​சக்​கா​ரர்​க​ளின் இது போன்ற தவ​று​கள்,​​ சமு​தா​யத்​தில் எதிர்​வி​ளை​வு​களை ஏற்​ப​டுத்​தும் என்​பது சமூக ஆர்​வ​லர்​க​ளின் கவலை.​

எ​னவே,​​ இது​போன்ற மனி​தர்​க​ளின் தவ​று​கள் உரிய நேரத்​தில் தண்​டிக்​கப்​ப​ட​வேண்​டும்.​ ஆனால்,​​ பண​ப​லம்,​​ அதி​கா​ர​ப​லம் உள்​ளிட்​ட​வற்​றால் அவர்​கள் காப்​பற்​றப்​பட்​டு​வி​டு​வது சமு​தா​யத்​தின் சாபக்​கேடே.​

இ​த​னால்,​​ கோபம் கொள்​ளும் சமூக அக்​க​றை​யுள்ள சிந்​த​னை​யா​ளர்​கள் கிளர்ந்​தெழ வேண்​டிய சூழ்​நிலை உரு​வா​கும்.​ இது​போன்ற கிளர்ச்​சி​களை ஆரம்​பத்​தி​லேயே தடுக்க ஆட்​சி​யா​ளர்​கள் முன்​வ​ர​வேண்​டும்.​ இல்​லை​யென்​றால் வழக்​கம்​போல் "தும்பை விட்டு வாலைப் பிடித்த' கதை​யா​கி​வி​டும்.
கட்டுரையாளர் : கொ.காளீஸ்​வ​ரன்
நன்றி : தினமணி