
தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய செல்போன் நிறுவனமான எம்.டி.எம்.,உடன் இணைவது குறித்து நாங்கள் புதிதாக பேச்சவார்த்தை ஏதுவும் நடத்தவில்லை என்று பார்தி ஏர்டெல்லின் சேர்மன் சுனில் மிட்டல் தெரிவித்தார். ஆனால் அதை அவர் மறுக்கவும் இல்லை. மேலும் இது குறித்து நாங்கள் இந்திய மற்றும் ஆப்பிரிக்க அரசாங்கத்துடனும் இதுவரை பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை என்றார். ஆனால் எப்போது நாங்கள் அவர்களை அனுகுகிறோமோ, அப்போது அவர்களிடமிருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று சொன்னார் மிட்டல். லண்டனில் நடக்கும் சர்வதேச தொழில் அதிபர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருக்கும் அவர் இதனை தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான பார்தி ஏர்டெல்லும் தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான எம்.டி.எம்.,மும் இணைந்து, உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய மொபைல் நிறுவனமாக உருவாக முடிவு செய்து, அதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை யை நடத்தியிருக்கின்றன. இந்த இருவரும் இணைந்தால் அவர்களுக்கு மொத்தம் 20 கோடி சந்தாதாரர்கள் இருப்பார்கள். அவர்களது மொத்த வருமானமும் 20 பில்லியன் டாலராக இருக்கும்.
நன்றி : தினமலர்