Tuesday, August 25, 2009

மொபைல் போனில் லைப் பார்‌ட்னர் தேடலாம் : ஏர்டெல் அறிமுகம்

மொபைல் போனில் லைப் பார்ட்னரை தேடும் புது சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எம். ஷாதி என்ற இந்த சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஏர்டெல் சி.இ.ஓ., ராஜிவ் ராஜகோபால் அத்தகவலை தெரிவித்தார். இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் *321*11’, என்ற டோல் ப்ரீ எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். பின்பு சேவையை பெற்றதும் பொருத்தமான மணப்பெண்/ மாப்பிள்ளை குறித்த முழு தகவல்கள்கள் மொபைலில் வரும். ஒரு முறை இந்த சேவைக்கு சப்ஸ்க்ரைப் செய்தால், 5 நாட்களுக்கு தொடர்ந்து இச்சேவையை பெறலாம். பின்பு இதை புதுப்பிக்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க சென்னையில் புதிய மருத்துவமனை

கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் இனி அந்த கொடிய நோயை மூன்றே ஊசிகளில் குணமாக்கிக் கொள்ள முடியும் என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. கருப்பை புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்ச‌ை அளிப்பதற்காக சென்னை வேளச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஹீலியாஸ் மருத்துவமனை . இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக டாக்டர் மஞ்சுளா தேவியும் தலைவராக டாக்டர் நந்தகுமாரும் பொறுப்பேற்றுள்ளனர். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை கூடுதல் ஆணையர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஊசியை ஒருமுறை போட்டுக் கொண்டால் பின்னர் வாழ்நாள் முழுக்க கருப்பை புற்றுநோய் தாக்காது, பக்க விளைவுகளும் கிடையாது என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


அமெரிக்காவுக்கு ஏன் இந்த வீண் வேலை?

சமீபத்தில் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டுக்கான (2009) கண்காணிப்புப் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மதச் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல; மதச் சுதந்திரத்தைப் பற்றி அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் விவாதிக்க இந்தியா வர இருப்பதாகவும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால், நல்லவேளையாக இந்திய அரசு அதற்கு விசா அளிக்க முன்வரவில்லை.

2007 டிசம்பரில் ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைக் கலவரம் வெடித்தது. இதில் 40 பேர் பலியாயினர்; 60 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர். ஆனால், மாநில அரசு அதைத் தடுக்கவோ கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவோ போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது அக்கமிஷன்.

இதேபோல 2002-ல் குஜராத்தில் ஹிந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. ஏராளமானோர் இதில் கொல்லப்பட்டனர். ஆனால், வன்முறைக்குக் காரணமானவர்களைக் கைது செய்து தண்டனையளிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கமிஷன் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் வகுப்பு மோதலைத் தடுத்து நிறுத்தி மனிதநேயத்தைக் கடைபிடிக்குமாறு இந்தியாவை நிர்பந்திக்குமாறு அதிபர் பராக் ஒபாமாவை அமெரிக்க கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், பெலாரஸ், கியூபா, எகிப்து, இந்தோனேசியா, லாவோஸ், ரஷியக் குடியரசு, சோமாலியா, தாஜிகிஸ்தான், துருக்கி, வெனிசுலா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க கமிஷனின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

இராக் விவகாரத்தில் எப்படி நடந்துகொண்டோம் என்பதை அமெரிக்கா முதலில் தன்னைத்தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளட்டும். முன்னாள் அதிபர் புஷ், முஸ்லிம்களுக்கு எதிராக எப்படிச் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆப்கானிஸ்தான் மீதும், இராக் மீதும் அமெரிக்கப் படைகள் எப்படி குண்டுமழை பொழிந்தன? அங்குள்ள சாமானியர்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதும், போர்க் கைதிகள் குவான்டமானோ சிறையில் என்ன சித்தரவதைக்குள்ளானார்கள் என்பதும் உலக மக்கள் அறிந்ததே. அமெரிக்காவின் பல பகுதிகளில் இனவெறி தாக்குதல் அதிகரித்து வருவதும், பள்ளிகளில் குழந்தைகள் துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொலை செய்யும் அளவுக்கு அங்கு ஆயுதக் கலாசாரம் தலைதூக்கி வருவதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த நிலையில் அமைதி, மனித நேயம் குறித்துப் பேசவோ விவாதிக்கவோ அமெரிக்காவுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்டு பிறநாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எந்தவகையில் நியாயமானது?

அமெரிக்க கண்காணிப்புப் பட்டியலில் இஸ்ரேலும் பாகிஸ்தானும் இடம்பெறாதது ஏனோ? இரண்டும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள் என்ற காரணத்தினால்தானே?

ஆப்பிரிக்க-அமெரிக்கரான பராக் ஒபாமா, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வேண்டுமானால் அமெரிக்காவுக்கு புதுமையாக இருக்கலாம். இந்தியாவில் குடியரசுத் தலைவர் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகிய இருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அமெரிக்கச் சமுதாயத்தில் நடைபெறும் இனவெறித் தாக்குதலை இந்தியா சுட்டிக்காட்டினால் என்னவாகும்?

பாகிஸ்தானில்கூட அந்த நாட்டு அரசு சிறுபான்மையினருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறது. முஸ்லிம்களை தீவிரவாதிகளைப் போல் சித்திரித்து வரும் அமெரிக்கா பாகிஸ்தானை கண்டுகொள்ளாதது ஏன்?

110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல்வேறு மதத்தினரும், பல்வேறு இனத்தவர்களும் வாழ்கின்றனர். தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் அதைச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு எதிர்கொள்ள நீதித்துறையும் நிர்வாகத்துறையும் இருக்கிறது. மேலும் சம்பவங்களைத் தோலுரித்துக் காட்ட பத்திரிகைகளும் தகவல் சாதனங்களும் உள்ளன.

மதச்சார்பின்மை பற்றியும், மதசகிப்புத்தன்மை பற்றியும் அமெரிக்கா நமக்குக் கற்றுத்தர வேண்டியதில்லை. சகோதரத்துவம், அமைதி ஆகியவற்றை நாம் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறோம்.

அமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ளட்டும். அதற்கு ஏன் இந்த வீண் வேலை?

கட்டுரையாளர் : ஜெ. ராகவன்
நன்றி : தினமணி

ஓக்ஹார்ட் ஹாஸ்பிடல்சிடம் இருந்து 10 மருத்துவமனைகள் வாங்குகிறது போர்டிஸ் ஹெல்த் கேர்

ஓக்ஹார்ட் நிறுவனத்தின் 10 மருத்துவமனைகளை டில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் போர்டிஸ் நிறுவனம் ரூ.909 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மும்பையில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், கோல்கட்டாவில் உள்ள மூன்று மருத்துவமனைகள் மற்றும் பெங்களூருவில் உள்ள 5 மருத்துவமனைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும். இவற்றின் மொத்த படுக்கைகள் எண்ணிக்கை 1902 ஆகும். இந்த எட்டு மருத்துவமனைகளுடன், தற்போது கட்டப்பட்டு வரும் இரு மருத்துவமனைகளையும் சேர்த்து வாங்கியுள்ளது போர்டிஸ். இந்த ஒப்பந்தத்துக்கான பணத்தில் ரூ.350 கோடியை பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டுகிறது போர்டிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓக்ஹார்ட் நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளாக இந்த மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது. இவற்றை வாங்க கடந்த ஆண்டிலிருந்தே அப்பல்லோ மற்றும் மணிப்பால் மருத்துவமனை நிர்வாகங்கள் முயன்று வந்தன. ஆனால் இறுதியில் இந்த டீல் போர்டிஸுக்கே சாதகமாக முடிந்தது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கிடையே நடந்துள்ள மிகப் பெரிய மருத்துவமனை விற்பனை ஒப்பந்தம் இதுவே. இதற்கு முன்னதாக போர்டிஸ் நிறுவனம் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டை கடந்த 2005ம் ஆண்டு வாங்கியது தான் மிகப்பெரிய ஒப்பந்தமாக இருந்தது. இணைப்பு மூலம் நாட்டின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனை நெட்வொர்க்காக வொக்கார்ட்
நன்றி : தினமலர்


கேரளாவில் காய்கறி விலையை கண்காணிக்க 1000 காய்கறி ஸ்டால்கள்

ஓனம் பண்டிகையன்று கேரளாவில் காய்கறி மற்றும் பழங்கிள் அதிகமாக விற்பனையாவது வழக்கம். இந்நிலையில் பண்டிகைய‌ை முன்னிட்டு காய்கறி விலையை அதிகமாக வைத்து விற்க சில வியாபாரிகள் முற்படலாம் என்பதால், கேரள வேளாண் துறை சார்பில் மாநிலம் முழுவதும் 1000 காய்கறி ஸ்டால்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சந்தைகளில் விற்கப்படுவதை விட 30 சதவீதம் குறைவாக காய்கறி விலை இந்த சந்தைகளில் குறைவாக இருக்கும் என வேளாண் துறை கூறுகிறது. மாநகராட்சி பகுதிகளில் ஐந்து தினங்களுக்கும், கிராமப்புற பகுதிகளில் 4 நாட்களுக்கும் இந்த சந்தை நடைபெறுகிறது. இதற்காக காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறது கேரள அரசு. இது தவிர 700 மொபைல் காய்கறி ஸ்டால்களும் அமைக்கப்படுகின்றன.
நன்றி : தினமலர்

விரைவில் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்‌ட்வேர்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க துவங்கியுள்ளது. மேக் ஓ.எஸண., எக்ஸ் வெர்சன் (10.6) ஆப்பிள் ரீட்டெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமை செப்டம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்துவோம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் இறுதியிலேயே இதை வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த வெர்சன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7ஐ அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ‌வெளியிடுகிறது. இதற்கு முன்னர் ஆப்பிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது. ஆப்பிளின் புதிய வெர்சன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இ- மெயிலிங், காலண்டர் மற்றும் தொடர்புகள் குறித்த தகவல் ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கு பேருதவியாக இருக்கும் ‌என கூறப்படுகிறது. ஆப்பிளின் இந்தி புதிய வெர்சன் ஸ்நோ லெபர்ட் இதற்கு முந்தைய வெர்சனை விட பாதி அளவு தான். இதை இன்ஸ்டால் செய்ய 1 கிகாபைட் ரேம் ஸ்‌டோரேஜ் கெபாசிட்டி தான் தேவைப்படுமாம்.
நன்றி : தினமலர்


எடை குறைத்தும் விலை குறைக்காத பன்னாட்டு நிறுவனங்கள்: நுகர்பொருட்களில் நடக்கும் நூதன மோசடி

இலவசம், விலை குறைப்பு என்ற போர்வையில், பொருட்களின் எடையைக் குறைத்து, நுகர்வோரை பல பன்னாட்டு நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன. இரண்டு வாங்கினால் மூன்று இலவசம், இது வாங்கினால் அது இலவசம் என, இலவசங்களைக் கண்டு பழகிப்போன மக்கள், இலவசம் என்றாலே அந்த பொருளை வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். இந்த பேராசை தான், தற்போது, பெரும் நஷ்டத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இலவசங்களை கொடுத்து, பல பன்னாட்டு நிறுவனங்கள், நம் நாட்டு தயாரிப்புப் பொருட்களை அண்ட விடாமல் செய்து வருகின்றன. உள்நாட்டு நிறுவனங்கள் ஒரு பொருளின் விலையைக் குறைத்தால், பன்னாட்டு நிறுவனங்கள் சில நேரங்களில், விலையைக் குறைக்கின்றன; பல நேரங்களில் பொருளின் எடையை குறைக்கின்றன. பொருளை மட்டும் பார்க்கும் பொதுமக்கள் கண்ணுக்கு, எடை குறைப்பு தெரிவதில்லை.
தற்போது, நுகர்வோர் சந்தையில், அதிகளவில் வெளிவரும் குளியல் சோப்பு, வாஷிங் பவுடர், சலவை சோப்பு மற்றும் சில உணவுப் பொருட்களில், பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, பொருட்கள் அளவு இருப்பதில்லை. பொருளின் எடையைக் குறைக்கும் நிறுவனங்கள், விலையில் எந்த குறைப்பும் செய்வதில்லை; மாறாக, சமயம் பார்த்து உயர்த்தவே செய்கின்றன. விளம்பரம் என்ற வியாபார யுக்தி, மக்களின் கண்ணை முழுவதுமாக மறைத்துவிடுகிறது. குளியல் சோப்புகளான ஹமாம், ரெக்சோனா, லக்ஸ், லைபாய் மற்றும் சலவை சோப்பான ரின் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனம் விலையை நிலை நிறுத்தி, எடையைக் குறைத்துள் ளது. 400 கிராம் விம் பார் 365 கிராம் தான் உள்ளது. இதன் விலை பல காலமாக 19 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல, 200 கிராம் என்பது 192 கிராம் தான் உள்ளது. இவ்வாறாக நுகர்வோர் அதிகளவில் வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் 8 முதல் 150 கிராம் வரையில் எடை குறைப்பு உள்ளது.
எடை குறைவு குறித்து, இந்நிறுவனங்கள் பாக்கெட்களின் மீது அறிவிப்பு எதையும் தருவதில்லை. ஒரு கிலோ டைடு சலவை பவுடர் பாக்கெட்டை எடை போட்டு பார்க்கும்போது 900 கிராம் மட்டுமே உள்ளது; 100 கிராம் குறைவாக உள்ளது. நுகர்வோர் எடை போட்டு பார்த்தால், தங்கள் பெயர் தான் கெடுகிறது என, வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சோப்பு, சலவைத்தூள் போன்றவற்றை தயாரிக்கப் பயன்படும் கச்சா பொருட்கள் விலை குறைந்துள்ள சூழலில், இந்திய தயாரிப்புகள் விலை குறைந்துள்ளன. குறிப்பாக, உள்ளூரில் தயாரிக்கப்படும் சலவை சோப்பு, பவுடர்கள் விலையில் கடும் இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதே மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் மற்ற பன்னாட்டு நிறுவனங்கள், ஒப்புக்கு கூட விலையை குறைக்கவில்லை. மாறாக, எடை குறைப்பை செய்துள்ளன.
இதுகுறித்து, தமிழக அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை குறைவு, மூலப்பொருட்கள் விலை குறைவு என்பது அனைவருக்கும் தெரியும். சுதேசி தயாரிப்புகள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டும் குறையவில்லை. மாறாக, எடையை கணிசமாக குறைத்துள்ளன. விலையைக் குறைக்காமல், தங்கள் நிறுவனத்தின் துணை தயாரிப்புகளை இலவசமாக கொடுக்கும் தந்திரத்தைக் கையாள் கின்றன. உதாரணமாக, ஹமாம் சோப் வாங்கினால், தற்போது, இரண்டு ரூபாய் மதிப்புள்ள புரூ காபி தூள் பாக்கெட் இலவசம். நுகர்வோர் இலவசத்தை கண்டு ஏமாறுகின்றனர். இவ்வாறு சொரூபன் கூறினார்.
நன்றி : தினமலர்