ஓனம் பண்டிகையன்று கேரளாவில் காய்கறி மற்றும் பழங்கிள் அதிகமாக விற்பனையாவது வழக்கம். இந்நிலையில் பண்டிகையை முன்னிட்டு காய்கறி விலையை அதிகமாக வைத்து விற்க சில வியாபாரிகள் முற்படலாம் என்பதால், கேரள வேளாண் துறை சார்பில் மாநிலம் முழுவதும் 1000 காய்கறி ஸ்டால்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சந்தைகளில் விற்கப்படுவதை விட 30 சதவீதம் குறைவாக காய்கறி விலை இந்த சந்தைகளில் குறைவாக இருக்கும் என வேளாண் துறை கூறுகிறது. மாநகராட்சி பகுதிகளில் ஐந்து தினங்களுக்கும், கிராமப்புற பகுதிகளில் 4 நாட்களுக்கும் இந்த சந்தை நடைபெறுகிறது. இதற்காக காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறது கேரள அரசு. இது தவிர 700 மொபைல் காய்கறி ஸ்டால்களும் அமைக்கப்படுகின்றன.
நன்றி : தினமலர்
Tuesday, August 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment