Tuesday, September 2, 2008

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : சென்செக்ஸ் 15 ஆயிரம் புள்ளிகளை எட்டியது


இந்திய பங்கு சந்தைக்கு இன்று ஒரு முக்கியமான நாளாக இருந்தது. ஏனென்றால் சென்செக்ஸ் 15 ஆயிரம் புள்ளிகளையும் நிப்டி 4500 புள்ளிகளையும் எட்டியிருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயரத் துவங்கிய சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 551.35 புள்ளிகள் ( 3.8 சதவீதம் ) உயர்ந்து 15,49.86 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 155.35 புள்ளிகள் ( 3.57 சதவீதம் ) உயர்ந்து 4,504.00 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய பங்கு சந்தை முன்னேற்றத்திற்கு கச்சா எண்ணெய் விலை குறைவு ஒரு முக்கிய பங்காற்றியது என்கிறார்கள். இதற்கு முந்தைய நாள் முடிவு விலையை விட இன்று பேரலுக்கு 8 டாலர் வரை குறைந்திருந்தது. நியுயார்க் மெக்கன்டைல் எக்ஸ்சேஞ் இல் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 105.46 டாலர் வரை குறைந்து பின்னர் 108.55 டாலராக இருந்தது. இதனால் ஐரோப்பிய சந்தையிலும் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், எஸ்.பி.ஐ., டி.எல்.எஃப்.,ஐ.சி.ஐ.சி.ஐ., எல் அண்ட் டி., பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் லாபம் சம்பாதித்தன.

நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை குறைந்தது : பேரலுக்கு 108 டாலர்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ வளைகுடா பகுதியை தாக்கிய குஸ்டவ் புயல், செயல் இழந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சொல்கிறார்கள். ஏனென்றால் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில்தான் பெரும்பாலான அமெரிக்க எண்ணெய் நிறுவன கிணறுகள் இருக்கின்றன. புயல் தாக்கும் என்ற அச்சம் கடந்த சில நாட்களாக இருந்ததால் அங்குள்ள எண்ணெய் கிணறுகளில் பணியாற்றிய ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.15 பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் உள்ள ஃபோர்சான் துறைமுகத்தை தாக்கியபின் குஸ்டவ் புயல் செயலழிந்துவிட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டது. இன்று கிரீன்விச் நேரம் 6.47 படி அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை,வெள்ளிக்கிழமையின் விலையை விட பேரலுக்கு 7 டாலர் வரை குறைந்து 108.55 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 107.55 டாலராக இருந்தது.

கச்சா எண்ணெய் விலை குறைந்தது : பேரலுக்கு 111 டாலர்தான்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ வளைகுடா பகுதியை தாக்கிய குஸ்டவ் புயல், செயல் இழந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சொல்கிறார்கள். ஏனென்றால் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில்தான் பெரும்பாலான அமெரிக்க எண்ணெய் நிறுவன கிணறுகள் இருக்கின்றன. புயல் தாக்கும் என்ற அச்சம் கடந்த சில நாட்களாக இருந்ததால் அங்குள்ள எண்ணெய் கிணறுகளில் பணியாற்றிய ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.15 பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் உள்ள ஃபோர்சான் துறைமுகத்தை தாக்கியபின் குஸ்டவ் புயல் செயலழிந்துவிட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டது. நேற்று அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 4.24 டாலர் குறைந்து 111.20 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 4.64 டாலர் குறைந்து 109.41 டாலராக இருந்தது.
நன்றி : தினமலர்


பர்சனல் லோன் 'நோ' டிபாசிட் இருந்தால் 'ஓகே!'

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பர்சனல் லோன் தர, கெடுபிடி அதிகமாகி விட்டது; சில வங்கி
களில், பிக்சட் டிபாசிட்டில் பணம் போட்டிருந்தால், அதற்கு ஈடாக கடன் தரப்படுகிறது.
பணவீக்கம் அதிகரித்ததை அடுத்து, வங்கி கடன்கள் மீதான வட்டி வீதம் வானளாவ உயர்ந்து விட்டது. பர்சனல் லோனுக்கு வட்டி வீதம் 18 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் வரை வசூலிக்கப்படு
கிறது. வீட்டு லோன் மீதான ப்ளோட்டிங் கடனுக்கு வட்டி வீதம் 12 சதவீதம் வரை போடப்படுகிறது.
வீட்டு லோனுக்கு, வீட்டு பத்திரம் அடமானமாக வைக்கப்படுவதால், கடனைக் கட்டாமல் டிமிக்கி கொடுத்தாலும், வீட்டை ஜப்தி செய்ய முடியும். ஆனால், பர்சனல் லோன், எந்த அடமானம் இல்லாமல் தரப்படுகிறது. அப்படி தந்த கடன்களில், பல வங்கிகளில் 25 சதவீதத்துக்கு மேல் திரும்ப வரவில்லை என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, பர்சனல் லோன் தருவதை பல வங்கிகள் நிறுத்தி விட்டன; சில வங்கிகள், வாடிக்கையாளர்களின் தொந்தரவு காரணமாக, மாதக்கணக்கில் இழுத்தடிக்கின்றன. அப்படியே முடியாவிட்டாலும், மிகக் குறைந்த அளவில் கடன் தருகின்றன. அதையும் சம்பளக்கணக்கில் பிடித்தம் செய்யும் வகையில் தருகின்றன.தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, கொஞ்சம் கூட பரிவு காட்டாமல், பர்சனல் லோன் தருவதை மறுத்து வருகின்றன. சில வங்கிகள், பிக்சட் டிபாசிட்டில் பணம் இருந்தால், அதை ஈடாக வைத்து, கடன் தர ஒப்புக் கொள்கின்றன.
வட்டி வீதம் பல மடங்கு உயர்ந்து விட்டதை அடுத்து, வங்கிகளில், வீட்டு லோன் தவிர, வாகன, பர்சனல் லோன் மீதான கடன் பாக்கித் தொகை தவணைகள் திடீரென குறைந்து வருகின்றன. கடன் பாக்கி தவணையை ஒழுங்காக கட்டி வந்த பலரும் இப்போது நிறுத்தி விட்டனர். இதனால், பர்சனல் லோன் கடன் பாக்கி அதிகரித்து வருகிறது.
நன்றி : தினமலர்