Tuesday, September 2, 2008

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : சென்செக்ஸ் 15 ஆயிரம் புள்ளிகளை எட்டியது


இந்திய பங்கு சந்தைக்கு இன்று ஒரு முக்கியமான நாளாக இருந்தது. ஏனென்றால் சென்செக்ஸ் 15 ஆயிரம் புள்ளிகளையும் நிப்டி 4500 புள்ளிகளையும் எட்டியிருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயரத் துவங்கிய சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 551.35 புள்ளிகள் ( 3.8 சதவீதம் ) உயர்ந்து 15,49.86 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 155.35 புள்ளிகள் ( 3.57 சதவீதம் ) உயர்ந்து 4,504.00 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய பங்கு சந்தை முன்னேற்றத்திற்கு கச்சா எண்ணெய் விலை குறைவு ஒரு முக்கிய பங்காற்றியது என்கிறார்கள். இதற்கு முந்தைய நாள் முடிவு விலையை விட இன்று பேரலுக்கு 8 டாலர் வரை குறைந்திருந்தது. நியுயார்க் மெக்கன்டைல் எக்ஸ்சேஞ் இல் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 105.46 டாலர் வரை குறைந்து பின்னர் 108.55 டாலராக இருந்தது. இதனால் ஐரோப்பிய சந்தையிலும் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், எஸ்.பி.ஐ., டி.எல்.எஃப்.,ஐ.சி.ஐ.சி.ஐ., எல் அண்ட் டி., பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் லாபம் சம்பாதித்தன.

நன்றி : தினமலர்


No comments: