நன்றி : தினமலர்
Tuesday, September 2, 2008
கச்சா எண்ணெய் விலை குறைந்தது : பேரலுக்கு 111 டாலர்தான்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ வளைகுடா பகுதியை தாக்கிய குஸ்டவ் புயல், செயல் இழந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சொல்கிறார்கள். ஏனென்றால் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில்தான் பெரும்பாலான அமெரிக்க எண்ணெய் நிறுவன கிணறுகள் இருக்கின்றன. புயல் தாக்கும் என்ற அச்சம் கடந்த சில நாட்களாக இருந்ததால் அங்குள்ள எண்ணெய் கிணறுகளில் பணியாற்றிய ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.15 பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் உள்ள ஃபோர்சான் துறைமுகத்தை தாக்கியபின் குஸ்டவ் புயல் செயலழிந்துவிட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டது. நேற்று அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 4.24 டாலர் குறைந்து 111.20 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 4.64 டாலர் குறைந்து 109.41 டாலராக இருந்தது.
Labels:
கச்சா எண்ணெய் விலை,
தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment