Thursday, December 10, 2009

இணை​யத்​தில் செய்​திச் சண்டை

காசு கொடுத்​தால்​தான் செய்தி கிடைக்​கும் என்​கிற நிலை இப்​போது இல்லை.​ இணை​யம் வந்த பிறகு செய்​தி​களை இல​வ​ச​மா​கத் தெரிந்​து​கொள்ள முடி​வ​து​டன் செய்​தி​களை பல்​வேறு ஊட​கங்​கள் எந்​தெந்​தக் கோணத்​தில் வெளி​யி​டு​கின்​றன என்​பதை ஒப்​பிட்​டுப் பார்க்​க​வும் வழி இருக்​கி​றது.​ செய்​தி​கள் திரட்​டப்​பட்டு திறந்​த​வெ​ளி​யில் கொட்​டப்​ப​டு​கின்​றன.​ யாருக்கு என்ன விருப்​பமோ அதை எடுத்​துக் கொள்ள வேண்​டி​ய​து​தான்.​

பெ​ரும்​பா​லான செய்தி இணைய தளங்​க​ளில் உல​வு​வ​தற்கு எந்​தக் கட்​ட​ண​மும் கிடை​யாது.​ அச்​சில் வரும் செய்​தித்​தாள்​கள் ​ இது​போன்ற இணைய தளங்​களை நடத்​தும்​போது,​​ விளம்​பர வரு​வாய் என்​பது யானைப் பசிக்​குச் சோளப்​பொறி போன்​ற​து​தான்.​ இத​னால் சில இணைய தளங்​கள் செய்​தி​க​ளைப் படிப்​ப​தற்கு சந்தா வசூ​லிக்​கின்​றன.​ சில இணைய தளங்​க​ளில் பிரத்​யே​கச் செய்​தி​க​ளுக்கு மட்​டும் சந்தா செலுத்​தி​னால் போதும்.​ ஆனால்,​​ இணை​யச் செய்​தித் திரட்​டி​கள் இதற்​கெல்​லாம் வெடி வைக்​கின்​றன.​ செய்தி இணைய தளங்​க​ளில் உள்ள செய்​தி​க​ளைத் திரட்​டி​கள் இல​வ​ச​மாக வெளி​யிட்​டு​வி​டு​வ​தால்,​​ சந்தா வசூ​லிப்​பது என்​பதே அர்த்​த​மில்​லா​த​தா​கி​வி​டு​கி​றது.​

பெ​ரும்​பா​லான இணை​யச் சேவை​க​ளைப் போன்றே,​​ செய்​தித் திரட்​டி​க​ளி​லும் முத​லி​டத்​தில் இருப்​பது கூகுள் நிறு​வ​னம்​தான்.​ செய்​தி​க​ளைத் தேடு​வ​தற்​காக இணை​யத்​தில் மேய்​ப​வர்​கள் பெரும்​பா​லும் பயன்​ப​டுத்​து​வது கூகுள் நியூஸ் எனப்​ப​டும் கூகு​ளின் செய்​தித் திரட்டி சேவை​தான்.​ இந்​தச் சேவை​யில் இணைத்​துக் கொள்​ளும்​படி செய்தி இணைய தளங்​கள் விண்​ணப்​பித்​து​விட்​டால்,​​ முக்​கி​யச் செய்​தி​க​ளின் பட்​டிய​லில் அந்​தக் குறிப்​பிட்ட இணை​ய​த​ளத்​தில் வெளி​யி​டப்​ப​டும் செய்​தி​யும் பட்டிய​லி​டப்​ப​டும்.​ அதன் மூலம் இணை​ய​த​ளத்​தைப் பார்ப்​ப​வர்​க​ளின் எண்​ணிக்கை அதி​க​ரிக்​கும்.​ அது விளம்​பர வரு​வாய்க்கு உத​வும்.​ பொது​வாக,​​ இந்​தத் திரட்​டி​கள் வழி​யாக இணைய தளங்​க​ளுக்கு வரு​வோ​ரின் விகி​தம் கிட்​டத்​தட்ட பாதி அள​வுக்கு இருப்​ப​தால்,​​ இவற்​றில் இணைத்​துக் கொள்​ளாத செய்தி இணைய தளங்​களே இல்லை என​லாம்.​
÷அ​தே​போல்,​​ எல்லா இணைய தளங்​க​ளி​லு​முள்ள செய்​தி​க​ளை​யும் ஒரே இடத்​தில் பார்க்க முடி​யும் என்​ப​தால் நேர​டி​யாக இணைய தளங்​க​ளுக்​குச் செல்​வ​தை​விட திரட்​டி​க​ளைப் பார்​வை​யி​டு​வ​தையே இன்​றைய இணைய வாச​கர்​கள் வழக்​க​மாக வைத்​தி​ருக்​கின்​ற​னர்.​ இத​னால்,​​ திரட்​டி​க​ளும் வரு​வாய் ஈட்​டிக்​கொள்​கின்​றன.​ ஒட்​டு​மொத்​த​மா​கப் பார்த்​தால்,​​ செய்தி இணைய தளங்​க​ளும் செய்​தித் திரட்​டி​க​ளும் ஒன்​றை​யொன்று சார்ந்​தவை.​ இந்​தச் சார்​புத் தன்​மை​யில் சம​நிலை எப்​போ​தெல்​லாம் தவ​றிப்​போ​கி​றதோ,​​ அப்​போ​தெல்​லாம் இரு தரப்​புக்​கும் இடையே மோதல்​கள் ஏற்​ப​டு​கின்​றன.​

ஊ​டக பெரும்​புள்​ளி​யான ரூபர்ட் முர்​டாக் அண்​மை​யில் கூகுள் நிறு​வ​னத்​து​டன் மோதி​ய​தால்,​​ விவ​கா​ரம் வெளிச்​சத்​துக்கு வந்​தது.​ அவ​ருக்​குச் சொந்​த​மான சில இணைய தளங்​க​ளி​லுள்ள சந்தா செலுத்​திப் பார்க்க வேண்​டிய பங்​கங்​களை கூகுள் இல​வ​ச​மாக வெளி​யிட்டு வந்​த​தால் இந்​தப் பிரச்னை உரு​வா​னது.​ முர்​டாக்​கின் கோரிக்​கை​களை கூகுள் கண்​டு​கொள்​ள​வில்லை.​ இத​னால் அதி​ருப்​தி​ய​டைந்த அவர்,​​ தனது முக்​கிய செய்தி இணைய தளங்​களை கூகுள் செய்​தித் திரட்​டி​யின் பட்​டியலி​லி​ருந்து எடுத்​து​வி​டப்​போ​வ​தாக அறி​வித்​தார்.​ ஆனா​லும் கூகுள் அசைந்து கொடுக்​க​வில்லை.​ எங்​கள் வளர்ச்​சிக்கு யாரும் தேவை​யில்லை என இரு​த​ரப்​புமே பிடி​வா​த​​மாக இருந்து வந்​தன.​

இப்​ப​டி​யொரு சூழ்​நி​லை​யைப் பயன்​ப​டுத்தி,​​ கூகு​ளில் இருந்து இணைய தளச் செய்தி வெளி​யீட்​டா​ளர்​க​ளைப் பிரிப்​ப​தற்கு வியூ​கம் வகுத்​தது மைக்​ரோ​சா​ஃப்ட்.​ கூகு​ளில் இருந்து வெளி​யேறி தனது பிங் திரட்​டி​யில் இணைத்​துக் கொள்​வ​தற்​காக செய்தி வெளி​யீட்​டா​ளர்​க​ளு​டன் அந்த நிறு​வ​னம் பேரம் பேசி வரு​வ​தா​க​வும் செய்தி வெளி​யா​னது.​ முக்​கி​யச் செய்தி இணைய தளங்​க​ளிலி​ருந்து பிரத்​யே​கச் செய்​தி​க​ளைப் பெற்று அவற்றை பிங் திரட்​டி​யில் இணைத்​துக் கொள்ள மைக்​ரோ​சா​ஃப்ட் முயன்று வரு​வ​தா​கக் கூறப்​பட்​டது.​ பிங் தேடு​பொ​றியை அறி​மு​கம் செய்த பிறகு தேடல் மற்​றும் விளம்​ப​ரச் சந்​தை​யில் மைக்​ரோ​சா​ஃப்ட் வேக​மாக முன்​னே​றி​யி​ருப்​ப​தா​க​வும் புள்ளி விவ​ரங்​கள் வெளி​யி​டப்​பட்​டன.​

மைக்​ரோ​சா​ஃப்​டின் காய் நகர்த்​தல்​கள் கூகுள் செய்​தித் திரட்​டியை பெரு​ம​ளவு பாதிக்​கச் செய்​யும் என்று கரு​தப்​பட்​டது.​

இ​தற்கு மேல் பிடி​வா​த​மாக இருந்​தால்,​​ வரு​வாயை இழக்க வேண்​டி​யி​ருக்​கும் என்​பதை உணர்ந்த கூகுள்,​​ தற்​போது புதிய திட்​டத்தை வெளி​யிட்​டி​ருக்​கி​றது.​ இதன்​படி,​​ சந்தா செலுத்​திப் பார்க்​க​வேண்​டிய இணை​ய​ த​ளங்​க​ளில் 5 பக்​கங்​களை மட்​டுமே இல​வ​ச​மா​கப் பார்க்க அனு​ம​திக்​கும் வகை​யில் திரட்​டியை மாற்றி அமைத்​தி​ருக்​கி​றது.​ ​ அதற்கு மேல் பார்க்க முயன்​றால் சம்​பந்​தப்​பட்ட இணைய தளத்​தின் சந்தா செலுத்​து​வ​தற்​கான பக்​கம் காட்​டப்​ப​டும்.​ இதற்​காக "ஃபர்ஸ்ட் க்ளிக் ஃப்ரீ' என்​கிற சேவையை கூகுள் தொடங்​கி​யி​ருக்​கி​றது.​

ஆ​யி​னும் இதெல்​லாம் இணைய தளச் செய்தி வெளி​யீட்​டா​ளர்​க​ளைச் திருப்​தி​ய​டைச் செய்​யாது என்றே கரு​தப்​ப​டு​கி​றது.​ ஒரு​வர் ஓர் இணைய தளத்​தில் 5 பக்​கங்​க​ளுக்கு மேல் பார்ப்​பது என்​பதே அரி​து​தான்.

​ அப்​ப​டிப் பார்க்க வேண்​டிய தேவை ஏற்​பட்​டால்,​​ வேறு இணைய தளத்​துக்​குச் சென்று அங்கு இல​வ​ச​மா​கக் கிடைக்​கக்​கூ​டிய 5 பக்​கங்​க​ளைப் பார்க்க முடி​யும்.​ இத​னால்,​​ இல​வ​ச​மாக 5 பங்​கங்​களை அனு​ம​திப்​ப​தென்​பது இந்த விவ​கா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைத்​த​தா​கி​வி​டாது.​

ஊட​கங்​க​ளுக்கு எதி​ரான மோத​லில் தனது நிலையி​லி​ருந்து கூகுள் இறங்கி வந்​தி​ருப்​ப​தற்கு முக்​கி​யக் கார​ணம்,​​ இந்​தப் போட்​டி​யில் மைக்​ரோ​சா​ஃப்ட் நுழைந்​து​வி​டக்​கூ​டாது என்​ப​து​தான்.​ அதன் நோக்​க​மும் கிட்​டத்​தட்ட நிறை​வே​றி​விட்​டது.​ ஆனால்,​​ சண்டை முடிந்​து​வி​ட​வில்லை;​ சமா​தா​னம் பேச​வும் ஆளில்லை.​
கட்டுரையாளர் : எம்.​ மணி​கண்​டன்
நன்றி : தினமணி

பெற்றோர்க்கும் பொறுப்பு உண்டு

அதிக எண்​ணிக்​கை​யில் பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​றிச் செல்​லும் வேன்​க​ளின் பர்​மிட் ரத்து ​ செய்​யப்​ப​டும் என்று தமி​ழ​கப் போக்​கு​வ​ரத்​துத் துறை அறி​வித்​துள்​ளது.​ சில இடங்​க​ளில் நட​வ​டிக்​கை​யி​லும் இறங்​கி​யுள்​ளது.​ ​

இது ஏதோ புதிய நட​வ​டிக்கை அல்​லது புதிய அர​சாணை போல தோற்​றம் தந்​தா​லும்,​​ அழு​கிற குழந்​தைக்​குப் பழைய கிலு​கி​லுப்​பை​யைக் காட்டி சமா​தா​னம் செய்​வ​தைப் போன்று,​​ வேதா​ரண்​யம் விபத்​தில் பள்​ளிக் குழந்​தை​கள் பலி​யான சம்​ப​வத்​தால் கொதித்​துப் போயி​ருக்​கும் சமூக மன​இ​றுக்​கத்​தைத் தளர்த்​தும் உத்​தி​யாக இந்த அறி​விப்​பைச் செய்​துள்​ளார்​கள்.​ அனு​ம​திக்​கப்​பட்ட எண்​ணிக்​கை​யைக் காட்​டி​லும் அதி​க​மான பய​ணி​களை ஏற்​றிச் செல்​லும் எந்​த​வொரு வாக​னத்​தின் பர்​மிட்​டை​யும் ரத்து செய்து,​​ வாகன ஓட்​டு​நர் மீது நட​வ​டிக்கை எடுக்​கச் சட்​டத்​தில் ஏற்​கெ​னவே இட​மி​ருந்​தா​லும் இத்​தனை கால​மாக ஏன் நட​வ​டிக்கை எடுக்​க​வில்லை என்ற கேள்வி எழும் முன்​பா​கவே,​​ இது​போன்ற ஓர் அறி​விப்​பின் மூலம்,​​ இனி​மேல் எல்​லாம் சரி​யா​கி​வி​டும் என்ற எண்​ணத்​தைத் தோற்​று​விப்​ப​து​தான் இந்த அறி​விப்​பின் நோக்​கம்.​

பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​றிச் செல்​லும் பள்ளி பஸ்​கள்,​​ தனி​யார் வேன்​கள்,​​ ஆட்​டோக்​கள் எல்​லா​மும் இத்​தனை நாளும் அள​வுக்கு அதி​க​மான எண்​ணிக்​கை​யில் குழந்​தை​களை ஏற்​றிச் சென்று கொண்​டி​ருந்​தா​லும்,​​ போக்​கு​வ​ரத்​துத் துறையோ அல்​லது காவல்​து​றையோ எந்த நட​வ​டிக்​கை​யும் எடுக்​கா​த​தற்​குக் கார​ணம் எல்​லா​ரும் அறிந்​த​து​தான்.​

இத்​த​கைய நிகழ்​வு​க​ளில் மிகப்​பெ​ரும் மெüனக் குற்​ற​வா​ளி​கள் பெற்​றோர்​கள்​தான் என்​பதை நாம் மறந்​து​வி​டு​கி​றோம்.​ பூக்​களை கூடை​யில் அள்​ளிப்​போ​டு​வ​தைப் போல ஆட்​டோக்​க​ளி​லும் வேன்​க​ளி​லும் ஏற்​றி​விட்டு வரும் பெற்​றோரை எந்த வகை​யில் குற்​ற​வா​ளி​கள் அல்ல என்று சொல்ல முடி​யும்?​ ஆட்டோ அல்​லது வேன் சாதா​ர​ண​மாக சாய்ந்​தா​லும்​கூட எத்​தனை குழந்​தை​கள் நெரிச​லில் சிக்கி எலும்பு முறி​யும்,​​ உயிரை இழக்​கும் என்​பது தெரிந்​தி​ருந்​தும்​கூட,​​ அந்த வாக​னங்​க​ளில் ஏற்றி அனுப்​பும் பெற்​றோ​ரின் அறி​யா​மையை எப்​ப​டிப் பொறுத்​துக்​கொள்​வது?​

"பள்ளி வெகு​தொ​லை​வில் உள்​ளது,​​ எங்​க​ளால் குழந்​தை​க​ளைக் கொண்​டு​போய் விட்​டு​விட்டு வேலைக்​குச் செல்ல இய​லாது' என்​ப​தும்,​​ "அள​வான எண்​ணிக்​கை​யில் குழந்​தை​களை ஏற்​றிச் செல்​லும் ஆட்டோ அல்​லது வேன்​க​ளில் மாதக் கட்​ட​ணம் அதி​கம்' என்​ப​தும்​தான் அவர்​கள் கூறும் கார​ணம்.​ தனி​யார் பள்​ளி​க​ளுக்கு கொட்​டி​ய​ழும் கல்​விக் கட்​ட​ணத்​தில் ஒப்​பி​டும்​போது,​​ குழந்​தை​க​ளின் பாது​காப்​புக்​கா​கச் ​ செல​வி​டும் கூடு​தல் தொகை மிகச் சிறி​து​தான் என்​ப​தைப் பெற்​றோர்​கள் உணர்​வ​தில்லை.​ ​

இது​போன்ற வாக​னங்​க​ளில் மட்​டு​மல்ல,​​ தங்​கள் குழந்​தை​களை ஸ்கூட்​ட​ரி​லும்,​​ மோட்​டார் சைக்​கி​ளி​லும் ஏற்​றிக்​கொண்டு பள்​ளிக் கதவை மூடும்​முன்​பா​கப் போய்ச் சேரு​வ​தற்​காக சாலை விதி​களை மீறும் பெற்​றோ​ரும் இருக்​கி​றார்​கள்.​ இவர்​கள் விபத்​துக்​குள்​ளா​கி​ற​போது,​​ பள்​ளிக் குழந்தை விபத்​தில் சாவு என்​கிற பச்​சா​தா​பச் செய்​தி​யாக மாறு​கி​றதே தவிர,​​ பள்​ளிக்கு நேர​மா​கி​விட்​ட​தால் சாலை விதி​களை காற்​றில் பறக்​க​விட்ட ஒரு தந்​தை​யின் அறி​யாமை பேசப்​ப​டு​வ​தில்லை.​ அண்​மை​யில்,​​ சாலை விபத்​தில் சிக்​கி​யும் ஸ்டி​ரெச்​ச​ரில் வந்து,​​ சிறப்பு அனு​ம​தி​யு​டன் தேர்வு எழு​திய மாணவி படத்​து​டன் செய்​தி​யாக்​கப்​பட்​டார்.​ ஆனால்,​​ அந்த விபத்​தின் தன்மை குறித்து யாருமே பேச​வில்லை.​

கல்​விக் கூடத்​தின் அரு​கி​லேயே குழந்​தை​கள் வசிக்க வேண்​டும் என்​பது நகர்ப்​பு​றங்​க​ளில் சாத்​தி​ய​மில்லை.​ ஆனால்,​​ இத்​த​கைய சிக்​க​லைத் தீர்க்க வெறு​மனே வாக​னச் சோதனை என்​கிற கண்​து​டைப்​பைக் காட்​டி​லும் வேறு நல்ல நட​வ​டிக்​கை​களை அரசு மேற்​கொள்​ள​லாம்.​

தனி​யார் பள்​ளி​க​ளில் பஸ் வசதி இருந்​தும்​கூட,​​ வேன்​க​ளி​லும் ஆட்​டோக்​க​ளி​லும் குழந்​தை​களை அனுப்​பக் கார​ணம் பள்ளி பஸ்​க​ளின் கட்​ட​ணம் மிக​அ​தி​க​மாக இருப்​ப​து​தான்.​ மாதம் ரூ.300,​ ரூ.400 மிச்​சம்​பி​டித்​து​வி​ட​லாம் என்ற நடுத்​த​ரக் குடும்ப மன​நி​லை​தான் இத்​த​கைய பாது​காப்​பாற்ற சூழ​லுக்கு உடன்​பட வைக்​கி​றது.​

தனி​யார் பள்​ளி​க​ளில் படிக்​கும் மாண​வர்​கள் எண்​ணிக்கை,​​ வெகு தொலைவி​லி​ருந்து வரும் மாண​வர்​கள் எண்​ணிக்கை ஆகி​ய​வற்றை கல்​வித் துறை கணக்​கெ​டுத்து,​​ ஒவ்​வொரு தனி​யார் பள்​ளி​க​ளும் கட்​டா​ய​மாக வைத்​தி​ருக்க வேண்​டிய பஸ்​க​ளின் எண்​ணிக்​கை​யைத் தீர்​மா​னிப்​ப​தும்,​​ அர​சுப் போக்​கு​வ​ரத்​துக் கழக பஸ்​க​ளுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட அதே கட்​ட​ணத்தை இக் குழந்​தை​க​ளி​டம் வசூ​லிக்க வேண்​டும் என்று கட்​டா​ய​மாக்​கு​வ​தும்​தான் இப்​பி​ரச்​னைக்கு குறைந்​த​பட்​சத் தீர்​வாக அமை​யும்.​

அரசு போக்​கு​வ​ரத்​துக் கழ​கங்​களே இந்​தப் பள்ளி வாக​னச் சேவை​யில் ஈடு​ப​ட​லாம் என்று பரிந்​து​ரைக்​கத் தோன்​றி​னா​லும்,​​ இல​வச பஸ் பாஸ் பெற்ற பள்ளி மாண​வர்​களை,​​ அர​சுப் போக்​கு​வ​ரத்​துக் கழக பஸ் நடத்​து​நர்​க​ளும் ஓட்​டு​நர்​க​ளும் அலைக்​க​ழிப்​ப​தைப் பார்த்​தால் ​ அத்​த​கைய பரிந்​து​ரை​க​ளைச் சொல்ல மனம் வரு​வ​தில்லை.​ இந்​தப் பள்​ளிக் குழந்​தை​களை இந்த நடத்​து​நர்​க​ளும் ஓட்​டு​நர்​க​ளும் ஓசி​யில் ஏற்​றிச் செல்​லப் போவ​தில்லை.​ இவர்​க​ளுக்​கான முழு கட்​ட​ணத்​தை​யும் மானி​ய​மாக பல கோடி ரூபாயை அரசு செலுத்​து​கி​றது.​ ஆனா​லும்,​​ இந்​தக் குழந்​தை​க​ளைக் கண்​ட​வு​டன் பஸ்ûஸ நிறுத்​தா​மல் கடந்​து​செல்​வ​தும்,​​ தள்​ளிப்​போய் நிறுத்​து​வ​தும்,​​ குழந்​தை​கள் தங்​கள் பாடப்​புத்​தக மூட்​டை​யு​டன் ஓடிப்​போய் ஏறு​வ​தும் எல்லா நக​ரங்​க​ளி​லும் வெட்​க​மில்​லா​மல் நடந்​து​கொண்டே இருக்​கி​றது.​ ஒரு பெற்​றோர்​கூட தட்​டிக் கேட்​ப​தில்லை.​ இந்த ஓட்​டு​நர் நடத்​து​நர்​க​ளும்,​​ தங்​க​ளுக்​கும் ஒரு குழந்தை இருக்​கி​றது என்​பதை நினைப்​ப​தில்லை.
நன்றி : தினமணி

டாடா ஆலைக்கு 900 ஹெக்டேர் நிலம்: வியட்நாம் அரசு ஒப்புதல்

டாடா ஆலை இரும்புத் தொழிற்சாலை அமைக்க வியட்நாம் அரசு 900 ஹெக்டேர் நிலத்தை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டில் கூட்டு நிறுவனமாக ஆலை தொடங்க டாடா நிறுவனம் முன் வந்துள்ளதாகவும், அங்குள்ள ஹடின்ஸ் மாகாணத்தில் 725 ஹெக்டேர் நிலம் ஆலைக்காக ஒதுக்கப்படும் எனவும், 150 ஹெக்டேர் நிலம் குடியிருப்பு பகுதிகளுக்காக ஒதுக்கப்படும் எனவும், இது தவிர துணை நிலையங்களுக்கு 37 ஹெக்டேர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலை, ஆண்டுக்கு 4.5 கோடி டன் இரும்பு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த கூட்டு நிறுவனத்தில் 65 சதவீத பங்குகள் டாடா நிறுவனம் வசம் இருக்கும். ஏற்கெனவே ஆலைக்கென டாடா நிறுவனம் கண்டறிந்த இடத்தை தைவான் நிறுவனத்துக்கு ஒதுக்கியதால் புதிய இடத்தை முடிவு செய்து அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

வியட்நாம் ஸ்டீல் கார்ப்பரேஷன், வியட்நாம் சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆலையில் 35 சதவீதம் முதலீடு செய்ய உள்ளன. கடந்த 2007ம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்குள்ள இரும்பு கனிம சுரங்கத்தில் 30 சதவீத பங்கு டாடா நிறுவனம் வசம் இருக்கும். இந்த பகுதியில் குளிர் உருட்டாலை அமைக்கவும் டாடா ஸ்டீல் திட்டமிட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது புதிய ஆலையை 2010ல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது நிலம் ஒதுக்குவதற்கு கால தாமதம் ஆனதால் இத்திட்டப் பணி 2012ல் முடிவடைந்து உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்

'டல்' அடிக்குது பங்குச் சந்தை: டபாய்க்குமா, பறக்குமா?

உலகளவில் பிரச்னைகள் இல்லாததால் சந்தையிலும் பெரிய மாற்றம் இல்லை. சரிவில் வாங்கியவர்கள் லாபமடைந்தனர்; விற்றவர்களும் மறுபடி ஒரு சரிவுக்காக காத்திருக்கின்றனர். திங்களும், நேற்றும் சிறிய சரிவைச் சந்தித்தன. ஆனால், நேற்று முன்தினம் சந்தை, 'ஜம்'மென பயணித்தது. பெரிய துபாய் புயலுக்கு பிறகும், சந்தை 17,000 புள்ளிகளுக்கும் மேலே தான் இருக்கிறது. திங்களன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, நேற்று முன் தினம், பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை தான், சந்தை யை 244 புள்ளிகளுக்கு மேல் தூக்கிச் சென்றது. அதாவது, 'வரும் மார்ச் மாதம், அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் அதிகப்படியாக செலவழிக்கும். அதற்காக பார்லிமென் டின் அனுமதியை கோரும். சில மாதங்களுக்குள் அரசு நிறுவன பங்குகள் விற்பனை நடக்கும்' எனக் கூறினார். இது, சந்தையை மேலே தூக்கிச் சென்றது. நேற்று முன்தினம், 'நிப்டி' 18 மாத உச்சத்திற்கு போனது ஒரு சாதனை. கடந்த ஆண்டு சோதனை படைத்த சந்தை, தற்போது சாதனை படைப்பது, ஆறுதல். நேற்று சந்தை மதிப்பு உலகளவில் குறைந்திருந்ததால், இங்கும் குறைந்தது. மெட்டல் மற்றும் வங்கிப் பங்குகள், சரிவுக்கு காரணமாக இருந்தன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 102 புள்ளிகள் குறைந்து 17,125 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை 35 புள்ளிகள் குறந்து 5,112 புள்ளிகளுடனும் முடிந்தது.

புதிய வெளியீடுகள் : ஜே.எஸ்.டபிள்யூ., எனர்ஜி (ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் கம் பெனியின் ஒரு அங்கம்) தனது புதிய வெளியீட்டை டிச., 7ம் தேதி முதல் கொண்டு வந் தது. நேற்றைய இறுதியில் 1.67 தடவை செலுத்தப்பட்டிருந்தது. வெளியீடு முடிந்தது.கோத்ரெஜ் பிராபர்டீசின் புதிய வெளியீடு நேற்று வரை 1.23 தடவை வரை செலுத்தப்பட்டிருந்தது. வெளியீடு நாளை வரை திறந்திருக்கும்.

மியூச்சுவல் பண்ட்கள் : கடந்த ஆண்டு சந்தை குறைவாக இருந்த போது, மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் கோடிகளுக்கும் கீழே சென்றிந்தது. தற்போது, மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு எட்டு லட்சம் கோடிகளுக்கும் மேலே சென் றிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு கூடியுள்ளது; அதே சமயம் முதலீட்டாளர் களும் அதிகளவில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்துள்ளனர்.

தற்போது, பங்குச் சந்தைகள் டெர்மினல்கள் மூலமாகவே, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவைகள் மூலமாக மியூச்சுவல் பண்ட்களின் யூனிட்டுகளை வாங்கலாம். சில மியூச்சுல் பண்ட்கள் தங்களை பங்குச் சந்தைகள் இணைத்துக் கொண்டுள்ளன. இன்னும் பல மியூச்சுவல் பண்ட்கள் சேரவும் உள்ளன. மதியம் 3 மணி வரை அன்றைய விலையிலேயே வாங்கலாம் என்பது தான் இதில் விசேஷம். தற்சமயம் மறுபடி பல மியூச்சுவல் பண்ட்கள் தங்களது புதிய வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளன. காற் றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டுமே?

வீட்டுக் கடன் சந்தையில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. ஆதலால், வீட்டுக்கடன் 8 சதவீதத்தை தொட்டு விட்டது. கடன் கொடுப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி வேறு. கடன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். ஆனால், வீடு விலை குறைய வேண்டுமே? கனவு இல்லத்தை நனவு இல்லமாக ஆக்க வாருங்கள் என்று, கூவிக் கூவி வீட்டுக் கடன் கம்பெனிகள் அழைக் கின்றன. பணப் புழக்கம் அதிகமாக இருப்பதால், ரிசர்வ் வங்கி அதைக் குறைப்பதற்காக சி.ஆர்.ஆர்., சதவீதத்தை கூட்டி விடுமா என்ற பேச்சு வேறு அடிபடுகிறது.

நவம்பர் கார் விற்பனைகார் விற்பனை சூடு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே சமயம் விற்பனையை விட, 46 சதவீதம் கூடியுள்ளது. கார் கம்பெனிகளின் பங்குகளுக்கு கொண்டாட்டம் தான். கடந்த ஆண்டு அதிகம் அடிபட்ட பங்குகள் கார் கம்பெனிகள். தற்போது ஜம்மென சுகமான சாலையில் வழுக்கிக் கொண்டு செல்லும் கார் போல அந்தக் கம்பெனிகளின் பங்குகள் பயணிக்கின்றன.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? : சந்தை சிறிய ஏற்ற, இறக்கங்களுடன் தான் இருக்கும். நல்ல வாய்ப்புகளுக்கு காத்திருங்கள். தற்போது வாங்குவதாக இருந்தால் ப்ளூ சிப் பங்குகளாக பார்த்து வாங்குகள். குறுகிய காலத்தில் நஷ்டம் இருந்தாலும் நீண்டகாலத்தில் லாபம் இருக்கும். இந்த வாரத்தில் பொதுவாக பார்த்தால், மேலேயும் போகமால் கீழேயும் வராமல், 'டல்' அடித்து கொண்டிருக்கிறது. மேலே பறக்குமா அல்லது டபாயக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5,200க்கு மேல் நிப்டி நான்கு நாட்களுக்கு நிலை பெற்றால், பலரும் உள்ளே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. லாபம் இருந்தால் கையில் காசு பார்ப்பதே உத்தமம்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்