இதனால், அந்த தொழிலில் உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் பிழைப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு தான் அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள், தங்கள் இறக்குமதி அளவை குறைத்துக்கொண்டதை அடுத்து, இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதம் முதல், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறைந்து வருகிறது. இதனால், பல நகரங்களில் செயல்பட்டுவந்த ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பூர், சென்னை மற்றும் பெங்களூரு, ஜெய்ப்பூர், பிவாண்டி ஆகிய நகரங் களில் 70 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஒன்றே கால் லட்சம் தொழிலாளர்கள் வேலை பறிபோகும் நிலை ஏற்படும் என்று அஞ்சுகிறோம்.
கடந்த ஜனவரி-செப்டம்பர் மாதங்கள் இடையே ஒன்பதாயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி நடந் துள்ளது; இதன் பின், நவம்பரில் 30 சதவீதம் ஏற்றுமதி சரிந்து விட்டது. இந்தாண்டு இறுதிக்குள் 50 சதவீதம் குறையும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறை மட்டும் 4 சதவீதத்தை நிரப்பி வருகிறது. இப்போது இதில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இவ்வாறு கூட்டமைப்பு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இந்தாண்டு 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியை செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போதுள்ள நிலையில், அதற்கு நெருங்கவே வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment