Monday, December 7, 2009

கூவம் நதி​யா​கி​றது...

சென்​னைப் பெரு​ந​க​ரின் அகண்ட சாக்​க​டை​க​ளாக உள்ள கூவம் ஆறு, அடை​யாறு,​ பக்​கிங்​காம் கால்​வாய் மூன்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்தி,​ சிங்​கா​ரச் சென்​னையை உரு​வாக்​கு​வ​தற்​காக சென்னை நதி​கள் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு,​ அதன் தலை​வர் பொறுப்​பை​யும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார் துணை முதல்​வர் மு.க. ஸ்டா​லின்.

​ ​ 1967-ல் முதன்​மு​த​லா​கத் தமி​ழ​கத்​தில் திமுக ஆட்சி அமைத்​த​போதே,​ கூவத்​தில் பட​கு​வி​டும் திட்​டத்​தைத் தொடங்​கி​னார் அன்று பொதுப்​ப​ணித்​துறை அமைச்​ச​ராக இருந்த இன்​றைய முதல்​வர் மு. கரு​ணா​நிதி. அதற்​கா​கக் கட்​டப்​பட்ட பட​குத்​து​றை​க​ளின் சிதைந்த மிச்​சங்​களை இப்​போ​தும் சில இடங்​க​ளில் காண முடி​கி​றது. அப்​போது அவ​ரால் அத்​திட்​டத்தை செய்​து​மு​டிக்க முடி​ய​வில்லை. "மகன் தந்​தைக்​காற்​றும் உதவி' அவர் தொடங்​கிய பணியை நிறைவு செய்​வ​து​தான்.

​ ​ இந்த ஆணை​யம் எத்​த​கைய பணி​களை முத​லில் செய்​யப்​போ​கி​றது;​ இதற்​கான மதிப்​பீடு என்ன,​ இச்​செ​ல​வுக்​கான நிதியை எங்​கி​ருந்து பெறப்​போ​கி​றார்​கள் என்ற விவ​ரங்​கள் விரை​வில் இது​பற்​றிய அறி​விப்​பு​க​ளாக வெளி​யா​கும். முத​லில் கூவத்​தைத்​தான் எடுத்​துக்​கொள்ள இருக்​கின்​ற​னர்.

​ ​ கூவம் மிக​மிக மோச​மாக மாச​டைந்து,​ கழி​வு​கள் நக​ர​வும் முடி​யா​த​படி தேங்​கிக் கிடக்​கி​றது. கூவத்​தில் உள்ள தண்​ணீரை எடுத்து,​ தெளி​ய​வைத்து,​ வடி​கட்​டிய நீரில் மீன்​களை விட்​டால்,​ 4 மணி நேரத்​தில் மீன்​கள் செத்​து​வி​டு​கின்​றன என்​ப​து​தான் கூவம் குறித்து ஆய்​வு​மு​டி​வு​கள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்​ஸி​ஜன் இல்லை. வெறும் நச்சு உலோ​கக் கலப்​பும்,​ சேறும் சக​தி​யும்​தான் உள்​ளன. அடை​யா​றும் அந்​த​வி​த​மா​கவே படு​மோ​ச​மாக மாச​டைந்து கிடக்​கி​றது. மணப்​பாக்​கம் தடுப்​பணை வரை அடை​யாறு கொஞ்​சம் தூய்​மை​யாக இருந்​தா​லும்,​ சென்னை பெரு​ந​க​ரத்​தில் நுழைந்​த​வு​டன் அதன் மேனி​யில் வெறும் குப்​பை​க​ளும் நச்​சுக் கழி​வு​க​ளும்​தான் கொட்​டப்​ப​டு​கின்​றன. "அடை​யாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்​தது,​ இப்​போ​தும் இருக்​கி​றது ​ என்​பதே நம்ப முடி​யாத விஷ​ய​மாக ஆகி​விட்​டது.

​ ​ அடை​யாறு,​ கூவம்,​ பக்​கிங்​காம் கால்​வாய் ஆகி​ய​வற்​றில் 1950 களில் இருந்த நிலை உரு​வா​க​வும்,​ பட​கு​கள் ஓட​வும்,​ நீர்​வாழ் உயி​ரி​னங்​கள் அவற்​றில் காணப்​ப​டும் சூழல் மீண்​டும் வர​வேண்​டும். இது முக்​கி​ய​மான பணி என்​ப​தி​லும்,​ இதை எப்​பாடு பட்​டா​கி​லும் செய்​தாக வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்​து​கள் இருக்க முடி​யாது. இருப்​பி​னும்,​ இத்​திட்​டம் வெற்றி பெற வேண்​டு​மா​னால்,​ இது தேர்​தல் கால அர​சி​யல் பிர​சா​ர​மாக மாறு​வ​தைத் தவிர்க்க வேண்​டும். இப்​ப​டிச் சொல்​லக் கார​ணம் இருக்​கி​றது. ​

சென்​னை​யின் நதி​க​ளைத் தூய்​மைப்​ப​டுத்​தும் பணிக்கு குறைந்​த​பட்​சம் 10 ஆண்​டு​கள் தேவை. இதற்​குள் 3 சட்​டப்​பே​ரவை தேர்​தல்​க​ளை​யும் 2 உள்​ளாட்​சித் தேர்​தல்​க​ளை​யும் சென்னை சந்​திக்க நேர​லாம். இத்​திட்​டம் அர​சி​யல் கட்​சி​யின் சாத​னை​யாக முன்​வைக்​கப்​ப​டு​மா​னால்,​ இத்​திட்​டத்தை எதிர்க்​கட்​சி​கள் குறை​கூ​றும்,​ விமர்​சிக்​கும் என்​ப​தோடு,​ ஆட்சி மாற்​றம் ஏற்​ப​டு​மே​யா​னால்,​ இத்​திட்​டத்தை முற்​றி​லு​மா​கப் புறக்​க​ணிப்​பார்​கள்,​ கிடப்​பில் போடு​வார்​கள். இத​னால் மக்​க​ளுக்​கும் இழப்பு,​ சென்னை நக​ருக்​கும் இழப்பு.

சிங்​கப்​பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்​தான். இந்த நதி கூவம் போல மிக​மிக மோச​மா​காத நிலை​யி​லேயே,​ 1977-ம் ஆண்​டில்,​ "சிங்​கப்​பூர் நதி மற்​றும் கலாங் கழி​மு​கத் தூய்​மைத் திட்​டம்' தொடங்​கப்​பட்டு 10 ஆண்டு கால அவ​கா​சத்​தில் முடிக்​கத் திட்​ட​மி​டப்​பட்டு,​ அதன்​படி சிறப்​பா​கச் செய்து முடிக்​கப்​பட்​ட​தன் முழு​மு​தற் கார​ணம்-​ அது அர​சி​யல் வெற்​றி​யாக ஆக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான். சிங்​கப்​பூர் நதி​யின் கரை​யி​லும் கழி​மு​கப் பகு​தி​யி​லும் குடி​யி​ருந்த 26,000 ஏழைக் குடும்​பங்​கள் பார​பட்​ச​மின்றி ஊருக்கு வெளியே குடி​ய​மர்த்​தப்​பட்​ட​னர். 2,800 குடி​சைத்​தொ​ழில் மற்​றும் சிறு​தொ​ழில்​கூ​டங்​க​ளும் ஊருக்கு வெளியே அனுப்​பப்​பட்​டன. நடை​பாதை வணி​கர்​கள்,​ தெரு​வோர உண​வ​கங்​கள் எல்​லா​மும் கழி​வு​நீர் போக்​கி​கள் கொண்ட தனி​யி​டங்​க​ளுக்கு மாற்​றப்​பட்​டன. பிளாஸ்​டிக் பொருள் போன்ற திடக்​க​ழி​வு​கள் சிங்​கப்​பூர் நதி​யில் கலக்​கா​த​படி சிறப்​புத் தடுப்பு அமைப்​பு​கள் கரை​யோ​ரங்​க​ளில் ஏற்​ப​டுத்​தப்​பட்​டன. இதற்​கான திட்​டச் செலவு 20 கோடி டாலர்​கள்.

​ ​ கூவத்தை அதன் உற்​பத்தி இடத்தி​லி​ருந்து கழி​மு​கம் வரை சுமார் 65 கி.மீ. தொலை​வுக்​குத் தூய்​மைப்​ப​டுத்​த​வும்,​ அடை​யாறு ​(சுமார் 48 கி.மீ.), பக்​கிங்​காம் கால்​வாய் எல்​லா​வற்​றி​லும் உள்ள ஆக்​கி​ர​மிப்​பை​யும் குடி​சைப் பகு​தி​க​ளை​யும் நீக்க வேண்​டு​மா​னால் மிகக் குறைந்​த​பட்​சம் ஒரு லட்​சம் குடி​சை​களை அகற்றி,​ புற​ந​கர்ப் பகு​தி​யில் மாற்​றி​டம் தந்​தாக வேண்​டும். பல்​வேறு ஆக்​கி​ர​மிப்​பு​கள் அகற்​றப்​பட வேண்​டும். தொழில்​நி​று​வ​னம் மற்​றும் மருத்​து​வ​ம​னைக் கழி​வு​கள் இதில் கலப்​ப​தைத் தடுக்க வேண்​டும். இத்​த​னை​யும் செய்ய வேண்​டு​மா​னால்,​ அர​சி​யல் சாய்வு இல்​லாத அர​சின் உறு​திப்​பாடு தேவை. வாக்கு வங்​கி​கள் பற்​றிய எந்த நினைப்​பும் இல்​லா​மல்,​ கட​மை​யைச் செய்​யும் உணர்வு மட்​டுமே இருந்​தால்​தான் இத்​திட்​டம் வெற்றி அடை​யும்.

​ ​ மேலும்,​ தமி​ழ​கத்​தின் தலை​ந​க​ர​மா​கிய சென்னை பெரு​ந​க​ரின் நதி​க​ளுக்கு மட்​டும் ஆணை​யம் அமைத்​தி​ருப்​ப​தைக் காட்​டி​லும்,​ ஏன் தமி​ழக நதி​கள் ஆணை​யம் என ​ அமைக்​க​வில்லை என்​பது சற்று வருத்​தம் தரு​கி​றது. தமி​ழ​கத்​தின் நதி​கள் அனைத்​துமே ஏறக்​கு​றைய கூவம்,​ அடை​யாறு போல தூய்மை கெட்​டுப்​போய் கிடக்​கின்​றன. மணல்​கொள்​ளை​யா​லும் தொழில்​து​றைக் கழி​வு​க​ளா​லும் மேனி மெலிந்து,​ நோயுற்​றுக் கிடக்​கின்​றன. இவற்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்​து​வது தமி​ழக அர​சின் பணி​தானே?​

​ ​ வாஷிங்​ட​னுக்கு ஒரு பொட்​டோ​மேக். லண்​ட​னுக்கு ஒரு தேம்ஸ். பாரீ​சுக்கு ​ ஒரு ரைன். சென்​னைக்கு ஒரு கூவம் என்​கிற நிலை ஏற்​பட வேண்​டும் என்​பது முதல்​வர் கரு​ணா​நி​தி​யு​டைய கனவு மட்​டு​மல்ல. ஒவ்​வொரு சென்​னை​வா​சி​யின் கன​வும்​கூட. நல்​ல​தொரு முயற்சி துணை முதல்​வர் தலை​மை​யில் செயல்​ப​டத் தயா​ரா​கி​றது. இந்த ஆக்​க​பூர்​வ​மான திட்​டம் அர​சி​ய​லாக்​கப்​ப​டக் கூடாது!
நன்றி : தினமணி

1 comment:

Theervukal kandasamy said...

கூவம் நதி சுத்தமாக என்னுடைய யோசனையை இத்துடன் இணைத்துள்ளேன் . என்னுடைய பதிவுகள்
http://www.theervukal.blogspot.com/