Monday, December 7, 2009

துபாய் நெருக்கடியால் பாதிப்பில்லை : உலக வங்கித் தலைவர்

துபாய் நெருக்கடி சமாளிக்கக் கூடிய அளவு சாதாரணமானது தான் எனவும், இதனால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார் உலக வங்கி குழும தலைவர் ராபர்ட் சோயல்லிக். டில்லியில் திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவை சந்தித்த பிறகு அவர் கூறுகையில், 'நிதி நெருக்கடி காரணமாக துபாயில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சமாளிக்கக் கூடிய அளவுக்கு சாதாரண பிரச்சினை தான். இதில் இந்தியாவுக்கோ, அதன் தொழிலாளர்களுக்கோ பெரும் பாதிப்பு என்று சொல்ல முடியாது.'என கூறியுள்ளார். மேலும், 'உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாய் இருக்கும். சீனாவும் இந்தியாவும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, உலகின் முக்கிய சக்தியாகத் திகழ்ந்தவை. இப்போது மீண்டும் அவை தங்கள் பழைய ஆதிக்கத் தன்மையைப் பெறுவதில் ஆச்சரியமில்லை. இந்தியா தனது நிதியியல் கொள்கையை நிலைப்படுத்தினால் மேலும் பல பிரமிக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம்' என தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


No comments: