Monday, February 9, 2009

இன்னும் மூன்று ஆண்டுகளில் 10,000 பேருக்கு வேலை : எல் அண்ட் டி ஏற்பாடு

இஞ்சினியரிங் மற்றும் கட்டுமான தொழிலில் புகழ்பெற்ற நிறுவனமான எல் அண்ட் டி, அதன் வெவ்வேறு திட்டங்களில் பணியாற்ற இன்னும் மூன்று ஆண்டுகளில் 10,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது. ஹசிரா என்று இடத்தில் எல் அண்ட் டி அமைக்கும் இஞ்சினியரிங் உற்பத்தி தொழிற்சாலையில் ரூ.4,500 கோடியை முதலீடு செய்யவும், அங்கு பணியாற்ற 5,000 பேரை வேலைக்கு எடுக்கவும் அது முடிவு செய்திருக்கிறது. இது தவிர அதன் மோனோ ரயில் திட்டம், பவர் ரியாக்டர்ஸ் மற்றும் டர்பைன் போன்ற வெவ்வேறு தொழில்களுக்கு தேவையான வேலையாட்களை எடுக்கவும் முடிவு செய்திருக்கிறது. சுமார் 7 பில்லியன் மதிப்புள்ள எல் அண்ட் டி நிறுவனம், அதன் ஏற்றுமதி மூலம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ரூ.2,000 கோடி வருவாய் ஈட்டவும், அணுசக்தி மூலம் 700 மெ.வா.மின்சாரம் தயாரிக்கும் இரண்டு திட்டங்களையும் எடுத்து அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது. குஜராத்தில் இருக்கும் வதோதரா நகரை எல் அண்ட் டி யின் பவர், ஹைட்ரோகார்பன் மற்றும் இஞ்சினியரிங் தொழிலுக்கான மையமாக வைத்துக்கொள்ளவும் அது திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் ஏ.எம்.நாயக் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: