Monday, October 12, 2009

5 முறைக்கு மேல் பிற ஏ.டி.எம்.,களில் பணம் ‌எடுத்தால் கட்டணம்

ஐந்து முறைக்கு மேல் பிற ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை வரும் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கட்டுப்பாடின்றி பணம் எடுக்கும் நடைமுறை வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு, 16ம் தேதி முதல் பிற வங்கி ஏ.டி.எம்.,களை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்தலாம்.ரூபாய் 10,000 ஒரே தடவையில் எடுக்க முடியும். ஆறாவது முறை பயன்படுத்தும் போது, ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்றக் கட்டணம் உயர்ந்திருப்பதாக வங்கிகளில் சங்கம் ரிசர்வ் வங்கியிடம் குற்றம் சாட்டின. இதனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டது.
நன்றி : தினமலர்


No comments: