நன்றி : தினமலர்
Monday, October 12, 2009
முகேஷ் அம்பானிக்கு அனில் அம்பானி வெள்ளைக்கொடி: இந்திய தொழில் துறையில் புதிய திருப்பம்
அண்ணன் முகேஷ் அம்பானிக்கு, அவரது சகோதரர் அனில் அம்பானி வெள்ளைக் கொடி காட்டியுள்ளார். இந்திய தொழில் துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம், சகோதரர்களும் தொழிலதிபர்களுமான அம்பானி சகோதரர்கள் பிரிந்ததே. தற்போது நல்ல விஷயமாக, இருவரும் மீண்டும் இணைவதற்கு தம்பி அனில் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார். தனது அண்ணனுடன் உள்ள அனைத்து பிரச்னைகளையும் கலைந்து சுமூகமான உறவு ஏற்பட விரும்புவதாக அனில் அம்பானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனில் அம்பானி வெளியிட்டுள்ள செய்தியில், இருதரப்பும் இணைந்து செயல்பட்டால், நிச்சயம் பிரச்னைகளை சமாளிக்க முடியும். இது அண்ணன் முகேஷ் நினைத்தால் நிச்சயம் நடக்கும். பிரச்னைகளை பேசி தீர்க்க முடியும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சுரண்டலென்றாலே கொள்ளைக்காரர்கள் ஒண்ணு சேர்ந்து கொள்வார்கள், அரசியலிலும் நடப்பது இது தான். உதாரணத்திற்கு மாறன் சகோ மற்றும் திமுக குடும்பத்தைச் சொல்லலாம். அம்பாணிகள் அண்ணன் தம்பிகள் ஆகிற்றே அவர்களுக்குள் போட்டி என்பது பிறர் தொழிலுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்கே. நாமதான் வெள்ளைக் கொடி கருப்புக் கொடி என்று பேசிக் கொண்டு இருக்கிறோம்
உண்மையான வார்த்தை கோவி.கண்ணன் சார்.........
கோவி.கண்ணன் வருகைக்கு நன்றி
kanavugalkalam வருகைக்கு நன்றி
Post a Comment