Monday, October 12, 2009

ஆகஸ்ட் மாதம் உற்பத்தி துறையில் 10.2 சதவீத வளர்ச்சி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய தொழில்துறையின் வளர்ச்சி 10.4 சதவீதமாக உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப் பட்டுள்ள செய்தியில், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்திய ‌‌தொழில்துறை வளர்ச்சி 10.4 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும், உற்பத்தி துறையில் 10.2 சதவீதமாக வளர்ச்சி அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2007-08ம் ஆண்டில் 8.5ஆக இருந்த தொழில் துறை வளர்ச்சி 2008-09ம் ஆண்டிற்கான, ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் 2.6 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி தினமலர்


No comments: