Monday, October 12, 2009

மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்; முதலீட்டாளர்கள் குஷி

கடந்த நாட்களாக இறக்கு முகத்துடன் இருந்த இந்திய பங்குச்சந்தை, இன்று காலை தொடங்கிய போதே ஏறு முகத்துடனேயே தொடங்கியது. நண்பகலில் சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளை தாண்டி, 400 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது. இதனால், முதலீட்டாளர்கள் ஏக குஷியாகினர்.
வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 384.01 புள்ளிகள் அதிகரித்து 17026.67 புள்ளிகளோடு முடிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 109.05 புள்ளிகள் அதிகரித்து 5054.25 புள்ளி‌களோடு முடிந்தது.
நன்றி : தினமலர்


No comments: