நன்றி : தினமலர்
Monday, July 6, 2009
பட்ஜெட் எதிரொலி : பங்கு சந்தையில் கடும் சரிவு
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிறைய எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டதால் பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. பேங்கிங் மற்றும் நிதித்துறையில் எந்த வித ஊக்குவிப்பு திட்டமும் அறிவிக்கப்படாததால் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டதாக சொல்கிறார்கள். இன்று காலை பட்ஜெட் வாசிக்கப்படாத வரை உயர்ந்திருந்த சந்தை குறியீட்டு எண்கள், பட்ஜெட் வாசிக்கப்பட்டதும் மழமழவென சரிய ஆரம்பித்து விட்டது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 869.65 புள்ளிகள் குறைந்து 14,043.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 258.55 புள்ளிகள் குறைந்து 4,165.70 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. பங்கு சந்தை சரிவு குறித்து கருத்து சொன்ன நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இது அதிகப்படியான எதிர்பார்ப்பினால் வந்த விழைவு என்றார். மேலும் கார்பரேட் உலகம் இந்த பட்ஜெட்டால் விரக்தி அடையவில்லை என்றும் சொன்னார். தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. கம்மாடிடிஸ் டிரான்ஸ்சாக்ஷன் டாக்ஸ் நீக்கப்பட்டிருக்கிறது. மினிமம் ஆல்டர்நேட்டிவ் டாக்ஸ் உயர்த்தப்பட்டிருக் கிறது என்றார் முகர்ஜி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment